Advertisment

மிட்நைட் மசாலா! கிறங்கடிக்கும் பாண்டிச்சேரி!

midnightmasala

மிழ்நாட்டில் சரக்கை அடித்தால்தான் தமிழர்களுக்கு‘கிக்’ ஏறும். ஆனால், பாண்டிச்சேரி என்கிற பெயரைக் கேட்டாலே தமிழக குடிமகன்களுக்கு… கிக்குதான். உண்மையான புதுச்சேரி என்பது அதையும் தாண்டிய உண்மையான பெருமை கொண்டது. பிரெஞ்சு -இந்திய -தமிழ்க் கலாச்சாரத்தின் புகலிடம், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம், மணக்குள விநாயகர் ஆலயம், வில்லியனூர் மாதா ஆலயம், காந்தி சிலையுடனான கடற்கரை என சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும் அற்புதப் பகுதிகளைக் கொண்ட அமைதியான அழகிய நிலம் புதுச்சேரி.

Advertisment

இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகளை புதுச்சேரி மாநிலம் புதுசாக பெற்றிருந்தாலும்…"புதுச்சேரிக்கு போறேன்' என்றால் போதும்...…"அப்போ… செம ஜாலிதான்...… வரும்போது ஒரு "ஆஃப்' வாங்கிட்டு வந்துடு'’ என்று ஒரு நொடியில் புதுச்சேரியின் அத்தனை புகழையும் மண்ணில் போட்டு புதைத்துவிடுவார்கள் நம்ம ஆட்கள்.

Advertisment

midnightmasaala

மிட்நைட் ரவுண்ட்-அப் என்ற தும் அந்த ரவுண்ட் என்று நினைத்து விடவேண்டாம். நக்கீரனின் "மிட் நைட் மசாலா' பகுதிக்காக மிட்

மிழ்நாட்டில் சரக்கை அடித்தால்தான் தமிழர்களுக்கு‘கிக்’ ஏறும். ஆனால், பாண்டிச்சேரி என்கிற பெயரைக் கேட்டாலே தமிழக குடிமகன்களுக்கு… கிக்குதான். உண்மையான புதுச்சேரி என்பது அதையும் தாண்டிய உண்மையான பெருமை கொண்டது. பிரெஞ்சு -இந்திய -தமிழ்க் கலாச்சாரத்தின் புகலிடம், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம், மணக்குள விநாயகர் ஆலயம், வில்லியனூர் மாதா ஆலயம், காந்தி சிலையுடனான கடற்கரை என சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும் அற்புதப் பகுதிகளைக் கொண்ட அமைதியான அழகிய நிலம் புதுச்சேரி.

Advertisment

இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகளை புதுச்சேரி மாநிலம் புதுசாக பெற்றிருந்தாலும்…"புதுச்சேரிக்கு போறேன்' என்றால் போதும்...…"அப்போ… செம ஜாலிதான்...… வரும்போது ஒரு "ஆஃப்' வாங்கிட்டு வந்துடு'’ என்று ஒரு நொடியில் புதுச்சேரியின் அத்தனை புகழையும் மண்ணில் போட்டு புதைத்துவிடுவார்கள் நம்ம ஆட்கள்.

Advertisment

midnightmasaala

மிட்நைட் ரவுண்ட்-அப் என்ற தும் அந்த ரவுண்ட் என்று நினைத்து விடவேண்டாம். நக்கீரனின் "மிட் நைட் மசாலா' பகுதிக்காக மிட்நைட்டில் நமது டூவீலரில் ரவுண்ட்-அப் அடிக்க ஆரம்பித்தோம்.… அண்டை மாநிலம் என்றாலும் நம் மாநிலத்தோடு ஒப்பிடும்போது மாவட்ட அளவில் இருக்கும் சிறுநிலம் புதுச்சேரி. ஆனால், இரவுநேரங்களில் ஃப்ரான்ஸைப்போல ஜொலி ஜொலிக்கிறது...… ஜொள்ளிளிக் கிறது.

யூனியன் பிரதேசம் என்பதால் தனக்கான வருவாயை உயர்த்திக் கொள்ள மது, சாராயம், கள் வகைகளுக்கான விற்பனை வரியை குறைவாக வைத்திருப்பதால், வீக் எண்ட் கொண்டாட்டங்களுக்கு பீக்கில் இருக்கும் பிரதேசம் இது. வெள்ளிக் கிழமை மாலையிலிருந்தே சென்னை- பெங்களூரு மாநகரங்களிலிருந்தெல்லாம் பார்ட்டிக்காக பார்ட்டிகள் பறந்து வருகிறார்கள். குறிப்பாக, வெளி மாநிலங்களிலிருந்து ட்ரெயினில் பார்ட்னர் பார்ட்ன ராக கிறங்கியபடி வருகிறார்கள். அருகிலுள்ள, வாடகை டூவீலர்களை எடுத்துக்கொண்டு "ரன்' படத்தில் வரும் "காதல் பிசாசே'…பாடலில் செல்வதுபோல் கடற்கரையை நோக்கி ரன்னுகிறார்கள். நாமும் கூட்டத்தோடு கூட்டமாக காதல் பிசாசே பாடலை உச்சரித்தபடி பின்தொடர்ந்தோம்… சொந்த டூவீலரில். அங்குள்ள, கும்மாள லாட்ஜுகளுக்குள் அவர்கள் நுழைய...…அதற்குமேல் பின்தொடர்வது நாகரிகமல்ல என்பதால் நமது டூவீலர் ஸ்டாப் ஆனது.

நாம் கடற்கரையை நோக்கி சென்றோம். பகல் நகர்ந்து இரவு அரவணைக்க ஆரம்பித்தது. காந்திமண்டபம் அருகில் குடும்பம் குடும்பமாக புதுவைவாசிகளும் அருகிலுள்ள ஊர்க்காரர்களும் கடல் அலையோடு விளையாடி…கற்பாறைகளில் அமர்ந்து கடல் அலையை ரசித்து அகமகிழ்ந்து கொண்டிருந் தார்கள். அந்த மகிழ்ச்சியை செல்ஃபிகளால் நிஜங்களை நிழற் படங்களாக்கிக் கொண்டிருந்தது மற்றொரு கூட்டம். அந்த நிழற்படங்களில் தமது நிஜப்படங்கள் சிக்கிவிடக் கூடாது என்று அலர்ட்டாக அமர்ந்திருக்கின்றன லீகல் காதல் ஜோடிகள் அண்ட் இல்லீகல் காதல் ஜோடிகள்.

அங்கிருந்து கடைவீதிப் பக்கம் நாம் ரவுண்ட் அடிக்க...…இரவுக் கொண்டாட்டங்களுக்காக மதுக்கடைகளில் இளைஞர்களின் கூட்டம் கும்மி யடித்துக்கொண்டிருக்கின்றன. அதில், பெங்களூரு ஜோடிகள் அரைகுறை ஆடைகளுடன் மதுப்புட்டிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வாடகை டூவீலர்களில் ஏறி பீச்சை நோக்கிச் செல்கின்றன. மறுபடியும் கடற்கரை நோக்கிச் சென்றது நமது டூவீலர். காந்தி சிலையே கையை வைத்து கண்ணை மூடிக் கொள்ளும் அளவுக்கு இளசுகள் எல்லைமீறிக் கொண்டிருக்கிறார்கள். கடல் நீரின் ஈரக்காற்று மட்டும் வீசவில்லை என்றால், இவர்களது உரசல்களால் கடற்கரையே தீப்பற்றிக்கொள்ளும் அபாயம்கூட ஏற்படலாம்.

அங்கிருந்து நகரத்துக்குள் நுழைந்தபோது இரவு 12 மணி. அண்ணாசாலை, ரத்னா தியேட்டர் எதிரே திருவிழாபோல் கூட்டம். குடிப்பதற்கு பதிலாக மதுவில் குளித்தவர்கள்,… நள்ளிரவு சினிமா முடித்துவிட்டு வந்தவர்கள் என சுடச்சுட நான்வெஜ் அயிட்டங்களை ராஜ்கிரண் ரேஞ்சுக்கு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பார் அகவாசல் மூடப்பட்டு விட்டாலும் பா.ஜ.க. தமிழகத்தில் நுழைந்திருப்பதுபோல புதுச்சேரியில் புறவாசல் வழியாக மது கிடைக்கிறது. பேருந்து நிலைய பார்களிலும் சேம் ப்ளட்.

மாநிலத் தலைநகர் என்றாலும் பயணிகள் பாதுகாப்பாக தங்குவதற்கென வசதிகள் கிடையாது. உறங்க முடியாத பயணிகளை வைத்தே கொசுக்களை ஒழித்து விடலாம் என்று அரசு முடிவு செய்திருப் பதைப் பார்க்க முடிந்தது. துப்புரவுத் தொழிலாளர்கள் குப்பைகளை அள்ளிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களி டம் பேச்சு கொடுத்தபோது, “""குடிச்சோமா போனோமான்னா இருக்கிறதில்ல. நடு சாமத்துல வந்து படுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்டை நாறடிச்சிடுறாங்க. குடிகாரர் களை குறிவைத்து திருடன்களும் வந்துடு றானுங்க''’’என்கிறார்கள் குப்பைகளை அள்ளிக்கொட்டிக்கொண்டே.

அங்கிருந்து, விழுப்புரம் மாவட்ட எல்லையான கோட்டைக்குப்பம் சென்ற போது கார்கள் மற்றும் லாரிகளை மடக்கி இறங்க வைத்துக்கொண்டிருந்தார்கள் போலீஸார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜிடம் விசாரித்தபோது, “""வார இறுதிநாட்களில் ஈ.சி.ஆர். சாலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம். மிட்நைட்டுலதான் சென்னை திரும்புறாங்க. 3 டூ 4 மணிக்குள்ளதான் தூக்கம் சொக்கும். இதனால, நிறைய விபத்துகள் நடக்குது. அதான், அவங்களை நிறுத்தி தண்ணீர் கொடுத்து முகம் கழுவ வைத்து டீ குடிக்க வைக்கிறோம்''’’ என்று சொல்ல... “""அடடா… அந்தக் குடி, விபத்தை ஏற்படுத்தும். இந்தக் குடி, விபத்தை தடுக்கும்''’என்று பாராட்டி விட்டு நாமும் ஒரு டீயை குடித்துவிட்டு நல்ல குடிமகனாக வீடு திரும்பினோம்!

-ரவுண்ட்-அப்: சுந்தரபாண்டியன்

தொகுப்பு: மனோ

Midnight masala nkn26.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe