இருள்தானே சதிகளும் சாகசங்களும் வேட்டையாடி விளையாடிக்கொண்டிருக்கும் நேரம். களைகட்டும் குற்றாலத்தை நோக்கி நமது டூவீலர் அருவியாய் பாய்ந்தது. சலசலவென அருவிகளிலிருந்து கொட்டும் நீரில் மிதக்க ஆரம்பித்தது நமது டிஜிட்டல் கேமராவின் க்ளிக் ஃப்ளாஷ். நேரம் இரவு 11 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
கும்மாள நகரம் குற்றாலம் எனலாம். உடலிலுள்ள நோய்களை விரட்டும் மூலிகைச் செடிகளையெல்லாம் கட்டியணைத்து முத்தமிட்டு ஓடிவரும் அருவிநீர் விழும் குற்றால நீரில் நனைந்தால் போதும். உடலிலும் மன திலும் இருக்கும் நோய்களும் தண்ணீரோடு தண்ணீராக அடித்துக்கொண்டு ஓடிவிடும். சோம்பல் பின்னங்கால் பிடரியில் அடித்துக் கொண்டு ஓட.. உற்சாகம் உற்சவம் ஆடும். "அடடா மழைடா அட மழைடா'…’ என்று துள்ளிக்குதித்து குத்தாட்டம் போடத் தோன் றும். நினைக்கும்போதே இதயம் ஜில்லிட அருவியின் பக்கம் சென்றோம். நிஜத்தை விட நினைவுகளும் கற்பனைகளும் மிக அழகாக இருக்கும். ஆனால், நாம் நினைத்ததைவிட கற்பனை செய்ததைவிட நிஜத்தில் மிகஅழகாகக் காட்சியளித்தது குற்றால அருவியின் கும்மாளம். ஷங்கர் பட ஷூட்டிங் போல் இரவையும் பகலாக்குகின்ற விளக்குகள் மின்னிக்கொண்டிருக்கின்றன. பொம்மைக் கடைகளும் சாப்பாட்டு அங்காடி களும்... அருவியின் சலசலப்பிற்கேற்ப தாளம் போடும் கொத்து புரோட்டா மாஸ்டர்கள் என குதூகலத்தில் கும்மியடித்துக்கொண்டிருக்கிறது. பார்டர் சிக்கன்தான் குற்றால ஸ்பெஷல்.
ஜட்டியுடன் குளித்தால் லத்தி அடி என்ற போலீசின் எச்சரிக்கைப் பலகையால் பலரும் துண்டு கட்டிக்கொண்டு டீசன்ட்டாக குற்றால அருவியில் குளித்து மகிழ்ச்சியில் ‘களித்துக்கொண்டி ருக்கிறார்கள். "போன சீசன்களில் ஓரளவுக்குத்தான் குளிக்க முடிஞ்சது... ஆனா, ’இப்போதான் உண் மையான குற்றால நீரையே பார்க்க முடியுது'’ என்று உற்சாகமாய் துள்ளிக்குதிக்கிறார்கள் சுற்றுலா வந்தவர்கள்.
ஏழைகளின் அருவி குற்றாலம் என்பது போய்… பணக்காரர்களின் அருவியாக மாறிவிட்டது என்ற சலசலப்பு புலம்பல்களும் கேட்கின்றன. அருவியில் குளிக்கத்தான் கட்டணம் இல்லை. ஆனால், மற்ற எல்லா வற்றிற்கும் கட்டவேண்டும் பணம். சாப்பாடா, தோசையா, இட்லியா எதுவா இருந்தாலும் ரேட் அதிகம் என்பது நம்மைப் போன்றவர்களுக்கு முகச்சுளிப்பை உண்டாக்குகிறது. ஆனால், அதற்கு அங்குள்ள வியாபாரிகள் சொல்லும் காரணமோ, ’"ஒம்போது மாசமா சரியான வருமானமே இல்ல. இப்போ, மூணுமாச சீசன்ல சம்பாதிச்சாதான் உண்டு. டவுன்ஷிப் நிர்வாகம் கடை வாடகைய வேற பல மடங்கு உயர்த்திடுச்சு. மாமூல் வேற எல்லாத்துக்கும் கொடுக்கவேண்டியிருக்குல்ல' என்கிற வியாபாரிகளின் மாமூலான பதில்களை சுற்றுலாப்பயணிகளின் பாயிண்ட் ஆஃப் வியூவி லிருந்து நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அருவியோரம் மசாஜ் மாஸ்டர்கள் குளியல் போட வருகிறவர்களுக்கு உடம்பு முழுக்க வழிய வழிய எண்ணெய் தடவி சுளுக்கெடுத்துக்கொண்டி ருப்பதையும் பாடி பில்டர்கள்போல அவர்கள் அங்க அசைவுகளைக் காண்பித்துக் கெத்து காட்டிக் கொண்டிருப்பதையும் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும். ஆனால், மசாஜ் கூடாரமே காலியாகி வெறிச்சோடிக் கிடக்கிறது. "எண்ணெய் சிகைக் காய், சோப்பு, ஷாம்பு போட்டுவிட்டு அந்தந்த கவர்களை அப்படியே வீசிவிடுவதால் தண்ணீர் கெட்டுப்போகிறது' என்ற நீதிமன்ற உத்தரவால்... 150-க்கும் மேற்பட்ட திறந்தவெளி மசாஜ்காரர் களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.
அருவிக்குளியல் உண்டாக்கிய பசியைப் போக்க கரையோரங்களில் விற்கும் பலாப்பழங் களை சாப்பிட்டு பசியாற்றிக்கொள்கிறார்கள். வாழ்க்கையில் வருடத்துக்கொருமுறை வந்து சந்தோஷமாக போகவேண்டும் என்றுதான் கடனை உடனை வாங்கி குற்றாலம் வருகிறார்கள். ஆனால், ரூம்வாடகை ஓவர் ரேட். மலையில் விளை யிற துரியன் பழங்கள்… ‘"அந்த'’ பலத்தைக் கூட்டு கிறது என்று கிலோ 700 ரூபாய்க்கு விற்கிறார்கள். நள்ளிரவு தாண்டி பழைய குற்றால சாலையில் இயல்பாக திரும்பியது நமது பைக். ஆளரவ மற்ற தனிமைச்சாலை. காக்கிச்சட்டை களின் தொந்தரவு இல்லாத பசுமைச்சாலையில் அந்த நேரத்திலும் சரக்கை விரித்து பட்டைக் கச்சேரியில் ஜமாய்த்துக்கொண்டிருந்தது ஒரு கம்பெனி. நின்று நிதானித்தோம். உள்ளே சென்றால்தானே தெரியும்.
உள்ளே, சென்றபோதுதான் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது.
""இந்த சரக்கு என்ன சரக்கு தெரியுமா?''’’
""கடையில விக்குற சரக்குதானே?''’’
""பார்க்குறதுக்கு அப்படித் தானே தெரியுது. ஆனா, பட்ட சரக்குடே... இந்த பாட்டில் ஒண்ணு 16 ரூபாதான். இதுல ஒரிஜினல் மூடி, கலால் சீல், கம்பெனி பேரு, பேட்ச் நம்பர் எல்லாத்தையும் மாத்திப்புடு வாங்க. இந்த பாட்டிலுதான் 60 ரூபா ரேட்டுக்கு பார்களுக்கு சப்ளை பண்றோம். இந்த சரக்குதாம்லே இங்க உள்ள பார்கள்ல 110 ரூபாவுக்கு விற்குதுடே''’’ என்று சொல்ல நம் தூக்கக்கலக்கம் ஓடிப்போனது. நாமும் அந்த இடத்தைவிட்டு எஸ்கேப் ஆனோம். அதிகாரி களுக்கு பணமுடிப்பு போவதால் யாரும் கண்டுகொள்வதில்லை. 10 மணிக்குமேல் இந்த சரக்குத்தான் அதிக விற்பனை. ப்ளாக்கில் கிடைப்பதால் கிடைத்த சரக்கை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
குற்றாலநீரால் கும்மாளமிட வைத்தாலும் இதுபோன்ற உண்மைகள் இருளில் உலாவும்போதுதான் தெரிந்து கொள்ள முடிகிறது என்ற எண்ண ஓட்டத்தோடு வீட்டுக்குப் பய ணித்தோம்.
(பயணிப்போம்)
-ரவுண்ட் அப்: பரமசிவம்
தொகுப்பு: -மனோ