எம்.ஜி.ஆர். பெயர்! ஏழுபேர் விடுதலை! -மோடி வியூகம்!

bjp

ன்னியாகுமரியில் கடந்த 01-ஆம் தேதி நடந்த மத்திய அரசின் நலத்திட்டங்களின் தொடக்க விழாவை தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக மாற்றினார் பிரதமர் மோடி. அதே பாணியில் கடந்த 06-ஆம் தேதி சென்னையின் புறநகர்ப் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்திலும் தனி மேடையில் மத்திய அரசின் திட்டங்களைத் துவக்கி வைத்துவிட்டு, அதன் அருகே போடப்பட்ட மேடையில் இரண்டாவது பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் மோடி.

bjp

bjp

கூட்டத்தை பிரம்மாண்டப்படுத்த ரொம்பவே உழைத்திருந்தது எடப்பாடி அரசு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறைகளை விரட்டி விரட்டி வேலை வாங்கினார் அமைச்சர் பெஞ்சமின். கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்ல மூன்று மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், தனியார் கல்லூரி மற்றும் கம்பெனிகளின

ன்னியாகுமரியில் கடந்த 01-ஆம் தேதி நடந்த மத்திய அரசின் நலத்திட்டங்களின் தொடக்க விழாவை தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக மாற்றினார் பிரதமர் மோடி. அதே பாணியில் கடந்த 06-ஆம் தேதி சென்னையின் புறநகர்ப் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்திலும் தனி மேடையில் மத்திய அரசின் திட்டங்களைத் துவக்கி வைத்துவிட்டு, அதன் அருகே போடப்பட்ட மேடையில் இரண்டாவது பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் மோடி.

bjp

bjp

கூட்டத்தை பிரம்மாண்டப்படுத்த ரொம்பவே உழைத்திருந்தது எடப்பாடி அரசு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறைகளை விரட்டி விரட்டி வேலை வாங்கினார் அமைச்சர் பெஞ்சமின். கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்ல மூன்று மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், தனியார் கல்லூரி மற்றும் கம்பெனிகளின் வாகனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. செய்யாறு என போர்டு மாட்டியிருந்த காஞ்சிபுரம் டெப்போ பஸ்கள், சென்னை முகப்பேர், அம்பத்தூர், நொளம்பூர் பகுதிகளில் டிரிப் அடித்து ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தன.

பத்து மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் தலைமையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அனலாய் கொதித்த மதியம் 12 மணி உச்சிவெயிலில் பொதுக்கூட்ட மைதானத்தில் ஆட்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். வெயில் போட்ட போடால், இறக்கிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் பஸ்ஸுக்குள் ஏறுவதும் சிறிது நேரத்தில் இறங்குவதுமாய் இருந்தார்கள் மகா ஜனங்கள். குடிதண்ணீர் நிரப்பிய 100 சிண்டெக்ஸ் டேங்குகள், 50-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கழிவறைகள் என பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

"அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வந்துட்டாரு' என மேடையில் விஜயகாந்த் போட்டோவை வைப்பதும், "இன்னும் வரல' என போட்டோவை எடுப்பதுமான காட்சிகளெல்லால் காட்சி ஊடகங்களில் லைவ்வாகவே வந்தன. கூட்ட மைதானத்தில் 10 ஆயிரம் சேர்கள் போடப்பட்டிருந்தாலும், திரட்டிய கூட்டத்துக்குப் பிறகும் காலி சேர்கள் நிறைந்திருந்தன. பா.ஜ.க. வி.ஐ.பி.க்களுக்காக முன் வரிசையில் போடப்பட்டிருந்த சோபாக்களும் வெயிலின் தாக்கத்தால் காலியாகவே இருந்ததைப் பார்த்து, அதில் ர.ர.க்களையும் பாட்டாளி சொந்தங்களையும் அமர வைத்தனர். அ.தி.மு.க. கொடிகளுக்கு இணையாக பா.ம.க. கொடியும் பட்டொளி வீசிப் பறந்ததில் இருந்தே, பா.ம.க.வினர் அதிகளவில் திரண்டிருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. வழக்கமா அ.தி.மு.க. கூட்டங்களுக்கு அதிகளவில் வரும் பெண்கள் இந்தக் கூட்டத்தில் குறைவாகவே ஆஜராகியிருந்தனர்.

மாலை 3.45 மணிக்கு மோடியின் ஹெலிகாப்டர் வந்திறங்கியது. சம்பிரதாய வரவேற்புக்குப் பின், நலத்திட்ட உதவி மேடைக்கு வந்தார் மோடி. 4 மணிக்கு பொதுக்கூட்ட மேடையேறிய மோடியை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., டாக்டர் ராமதாஸ் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஒகி புயல், கஜா புயல் நிவாரணத் தொகையை முழுமையாக வழங்காதது, ஜி.எஸ்.டியால் பாதிப்பு இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ்.சும் பாராளுமன்றத்தில் துணை சபா தம்பிதுரையும் பேசியிருக்கிறார்கள். இதைப்பற்றியெல்லாம் எதுவும் பேசாத பிரதமர் மோடி, கும்பகோணம் மகாமகத்திற்காக ரோடு போட்டது, தஞ்சை-சென்னை விரைவுச் சாலை அமைக்கப் போவது, விமானத்தில் தமிழில் அறிவிப்பு இதைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு "150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.பெயர் சூட்டப்படும்' எனச் சொல்லி அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தினார். நீண்ட நெடுங்காலமாக சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலை குறித்த கோரிக்கை மனுவை மோடியிடம் அளித்தார் ராமதாஸ். மார்ச் 9 அன்று 7 பேர் விடுதலைக்கான பேரணி நடைபெறும் நிலையில், அதனையொட்டி விடுதலை அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு கூட்டணியினரிடம் மிகுந்துள்ளது. மோடியின் தேர்தல் வியூகமாக இது அமையும் என்கிறார்கள். ஒன்றரை மணி நேரத்தில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டுக் கிளம்பிய மோடியை ஹெலிபேட் வரை சென்று வழியனுப்பினார்கள் அமைச்சர்கள்.

மதியம் 12 மணியிலிருந்து மாலை 5:30 வரை நெருக்கடியால் சென்னை புறநகரமே ஸ்தம்பித்தது. சிங்கப்பெருமாள் கோவில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னைக்கு பஸ்களை திருப்பிவிட்டனர். இதனால் பெருங்களத்தூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் சோர்வுடன் தூங்கிவிட்டனர். மாலை 6 மணிக்கு மேல்தான் அவர்களால் சென்னைக்குள் நுழைய முடிந்தது.

-அரவிந்த்

படங்கள்: ஸ்டாலின்

nkn120319
இதையும் படியுங்கள்
Subscribe