Advertisment

தமிழகத்தில் மெத்தபெட்டமைன் நெட்வொர்க்! அருப்புக்கோட்டை வரை ஊடுருவல்!

ss

ர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க், அருப்புக்கோட்டை வரையிலும் பரவியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட, போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே பரப்பிவரும் நிலையில், போதைப் பொருள் கடத்தலைத் தாண்டி உற்பத்தியும்கூட கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

ss

"தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்துவருவது என் மனதை வலிக்கச் செய்கிறது'’என்று பிரதமர் நரேந்திர மோடி ஒருபுறம் குற்றம்சாட்ட, பதிலடியாக அமைச்சர் ரகுபதி ‘"போதைப்பொருள்களின் தலைநகரே குஜராத்தான்'’ எனக் கூற, இவ்விவகாரத்தில் அரசியல் ரீதியாகப் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது?

தமிழ்நாடு காவல்துறையின் போதைப் பொருளுக்கு எதிரான நுண்ணறிவுப் பிரிவானது (Anti Narcotic Intelligence Unit # ANIU) சென்னையில் போதைப்பொருட்கள் வைத் திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. போதைப்பொருட்கள் தொடர்பான குற்றவாளிகள

ர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க், அருப்புக்கோட்டை வரையிலும் பரவியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட, போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே பரப்பிவரும் நிலையில், போதைப் பொருள் கடத்தலைத் தாண்டி உற்பத்தியும்கூட கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

ss

"தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்துவருவது என் மனதை வலிக்கச் செய்கிறது'’என்று பிரதமர் நரேந்திர மோடி ஒருபுறம் குற்றம்சாட்ட, பதிலடியாக அமைச்சர் ரகுபதி ‘"போதைப்பொருள்களின் தலைநகரே குஜராத்தான்'’ எனக் கூற, இவ்விவகாரத்தில் அரசியல் ரீதியாகப் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது?

தமிழ்நாடு காவல்துறையின் போதைப் பொருளுக்கு எதிரான நுண்ணறிவுப் பிரிவானது (Anti Narcotic Intelligence Unit # ANIU) சென்னையில் போதைப்பொருட்கள் வைத் திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. போதைப்பொருட்கள் தொடர்பான குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை போதைப்பொருள் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 50 நெட்வொர்க் குற்றக் குழுவினரைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது சென்னை, மாதவரம், ரோஜா நகரில் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பதுக்கிவைத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துவருவதாக நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சென்னையில் காரில் கடத்திய ரூ.17 கோடி பெறுமான மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, வெங்க டேசன், கார்த்திக், கொடுங்கை யூரைச் சேர்ந்த பிரபு, ஊரப்பாக் கத்தைச் சேர்ந்த சண்முகம், சாகுல் ஹமீத், லாரன்ஸ், ஜாவச மெரிடா, சரத்குமார், லட்சுமி நரசிம்மன் மற்றும் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ss

வெங்கடேசன் நெட்வொர்க் பிடிபட்டது எப்படி?

போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெங்கடேசன், பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத் தில் கைதானபோது, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட் டது. 7 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு, 2021ல் வெளியே வந்தான். தன்னுடைய உறவினரான பிரபுவையும், சண்முகத்தையும் இத்தொழிலில் இணைத்துக்கொண்டான். ஹரியானா மற்றும் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக மெத்தபெட்டமைன், அதனைத் தயாரிக்கும் மூலப்பொருளான சூடோபெட்ரின் ஆகியவற்றை சென்னைக்குக் கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டான். இத்தொழிலில் வெங்கடேசனுக்கு உடந்தையாக அவனுடைய மனைவி ஜாவச மெரிடாவும் செயல்பட்டாள்.

இந்திய லிமியான்மர் நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் வெங்கடேச னுக்குத் தொடர்பு இருந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் மெத்த பெட்டமைனை பல மாநிலங்கள் வழியாக சென்னைக்குக் கொண்டு வந்தான். நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கேளிக்கை விருந்துகளில் கலந்துகொள்வோருக்கும், போதைக்கு அடிமையானவர்களுக் கும் மெத்தபெட்டமைன் விற்று, கோடிகளில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான்.

ss

வெங்கடேசனின் நடவடிக் கையை மோப்பம் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினர், கடந்த 21-12-2024 அன்று வெங்கடேசனையும் கார்த்திக்கையும் கைதுசெய்து, அவர் களிடமிருந்து 1.5 கிலோ மெத்த பெட்டமைன், 2 கார்கள் மற்றும் ஒரு டூவீலரை கைப்பற்றினர். இவ்விரு வரும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக் கப்பட்டனர். இந்த நெட்வொர்க்கில் உள்ளவர்களை முழுவதுமாகப் பிடிப்பதற்குத் திட்டமிட்ட காவல் துறை, சிறையில் இருந்த வெங்கடேசனையும் கார்த்திக்கையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. இதனைத் தொடர்ந்து, இவர்களின் செல்போன் தொடர்புகளை வைத்து டெல்லி, மும்பை, ஹரியானா, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததைக் கண்டு பிடித்தனர். மலேசியாவிலிருந்தே போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளனர். விசா ரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மற்ற 8 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.17 கோடி ஆகும். இந்த நடவடிக்கையின்போதுதான், தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிகப்படியான மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கைதானவர்களில் முருகனும், லட்சுமி நரசிம்மனும் மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டு வைத்தியரான முருகன், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத் தில், ஆள் அரவமற்ற, முள்புதர்கள் சூழ்ந்த, ஒதுக்குப்புறமான வீட்டில் ஆய்வகம் நடத்தி, மெத்தபெட்டமைனை சரியான அளவில் மிக்ஸ் பண்ணி, கூட்டாளிகளுக்குக் கொடுத்து வந்துள்ளான். வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அப்பகுதி மக்களுக்கு நாட்டு வைத்தியம் பார்த்துள்ளான். அந்த வீட்டை மதுவிலக்கு காவல்துறையினருடன் அருப்புக் கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் மதிவாணன் ஆய்வு செய்தபோது வேடிக்கை பார்த்த அந்த ஏரியாவாசிகள், "முருகன் டாக்டர் ரொம்ப நல்லவரு. தீராத நோயையும் தீர்த்து வச்சிருவாரு. அவருகிட்ட வைத்தியம் பார்க்க நெறய ஜனங்க வருவாங்க. அவரு இங்க வச்சு போதைப்பொருள் தயாரிச்சாருன்னு சொல்லுறத நம்பமுடியல. எந்தப் புற்றுல எந்தப் பாம்போன்னு சொல்லுறது சரியாத்தான் இருக்கு''’என்று வியந்தார்கள்.

போதைப்பொருள் தொழில் மூலம் இக்கும்பல் சம்பாதித்த ரூ.5 கோடி மதிப்பிலான வீடுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. தனிப்படையினர் டெல்லிவரை சென்று விசார ணை நடத்தி, ஹரியானாவில் இருந்தபடியே தமிழ்நாட்டுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துவந்த முக்கிய குற்றவாளியான சண்முகத்தைப் பிடித்துவந்துள்ளனர்.

விசாரணைப் பட்டியலில் உள்ள அனைவரையும் கைதுசெய்து, மொத்த நெட்வொர்க்கையும் முடக்கிவிடவேண்டும் என்பதில் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக இருக்கிறது.

nkn080125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe