த்தார் நாட்டில் நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 18வரை நடைபெற்ற 22வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு கோப்பையை வழங்கி நிறைவுபெற்றிருக்கிறது. இனி இதிலிருந்து சில முக்கிய நிகழ்வுகள்...

கடந்த உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் வென்ற பிரான்ஸ்... தனது கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வழங்கிவிட்டு, இரண்டாமிடத்துக்கு சென்றது. கடந்த உலகக்கோப்பையில் இரண்டாமிடத்தைப் பிடித்திருந்த குரோஷியா, இம்முறை மூன்றாமிடத்துக்குச் சென்றது.

உலகக்கோப்பையை நடத்திய கத்தார், தனது முதல் இரண்டு ஆட்டத்திலும் தோற்று வெளியேறியது. போட்டியை நடத்தும் நாட்டுக்கு, இரண்டாவது ஆட்டத்திலேயே தோல்வி உறுதியாவது இதுவே முதன்முறை.

* அர்ஜென்டினா, தனது முதல் ஆட்டத்திலேயே சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதன்பின்னர் தொடர்ந்து வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

Advertisment

ff

* கோப்பையை வெல்லுமென எதிர்பார்க் கப்பட்ட பிரேசில், காலிறுதியில் குரோஷியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது. நட்சத்திர வீரர் நெய்மர், தேம்பியழுதது சோகம்.

* நட்சத்திர வீரர் ரொனால்டோவால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் அணி, காலிறுதியில் மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. காலிறுதியில், முதல் பாதி முழுக்க ரொனால்டோவை களமிறக்காமல் அமர வைத்த மேலாளர் சாண்டோஸ், கடுமையாக விமர்சிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

* இறுதிப்போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின்மூலம், "அதிகப்படியான (6 வெற்றி) பெனால்ட்டி ஷூட் அவுட்களில் வென்ற அணி' என்ற பெருமையை அர்ஜென்டினா பெற்றது.

* உலகக்கோப்பை ஆட்டங்களில், 26வது ஆட்டத்தில் பங்கேற்றதன்மூலம், அதிக உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையை அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி பெற்றார்.

* பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பே, உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ஹாட்ரிக் கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது ஹாட்ரிக் சாதனையாக அமைந்தது. முன்னதாக, 1966ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக ஜியோஃப் ஹர்ஸ்ட் அடித் திருந்தார்.

* இறுதிப்போட்டி வரை மெஸ்ஸியும், எம்பாப்பேவும் 5 கோல்களை அடித்து முன்னிலையில், சம நிலையில் இருந்தனர். இறுதியாட்டத்தில் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்களை அடித்ததால், 8 கோல்களுடன் "தங்க ஷூ' விருதை வென்றார்.

* 2022 உலகக்கோப்பையில், 7 கோல்களை அடித்ததோடு, மூன்று கோலடிக்க உதவி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸிக்கு தங்கப்பந்து விருது கிடைத்தது. ஏற்கெனவே 2014ஆம் ஆண்டிலும், தங்கப்பந்து விருதினை மெஸ்ஸி வென்றிருந்தார். இதன்மூலம், இருமுறை தங்கப்பந்து விருதினை வென்ற ஒரே வீரர் என்ற பெருமை கிடைத்தது.

* நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் கோலடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். உலகக்கோப்பைக்கான 17 போட்டிகளில் வெற்றி பெற்றதன்மூலம், அதிக போட்டிகளில் வென்ற சாதனையை, ஜெர்மனி வீரர் க்ளோஸ் உடன் பகிர்ந்துகொள்கிறார் மெஸ்ஸி. உலகக்கோப்பைக்கான ஆட்டங்களில், 11 "மேன் ஆப் தி மேட்ச்' விருதுகளைப் பெற்றதிலும் உலக சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடி ஜெயித்து சாம்பியனாகக் கூடிய அணியை குரோ ஷியாவும், தோற்கக்கூடிய அணியை மொராக்காவும் முடிவு பண்ணுவதுதான் வரலாறாகியிருக்கிறது!

ஆம்... குரோஷியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற 1998, 2018, 2022 மூன்று முறையும் குரோஷியாவை வெளியேற்றிய அணியே சாம்பியன் ஆனது. 1998ல் அரையிறுதியில் பிரான்சிடம் குரோ ஷியா தோல்வியைச் சந்தித்தது. அந்த இறுதியாட்டத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு வந்த பிரேசிலுடன் மோதி பிரான்ஸ் சாம்பியனானது. குரேஷியா மூன்றாம் இடம் பிடித்தது. 2018ல் குரோஷியாவை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்று சாம்பியனானது. 2022ல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா தோல்வி யடைந்தது. இறுதி ஆட்டத்தில், தொடர்ந்து இரண்டாம் முறையாக பைனலுக்கு வந்த பிரான்சுடன் மோதி சாம்பியனானது. குரேஷியா மூன்றாம் இடம் பிடித்தது.

மொராக்கோ நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற 1986, 2022 ஆண்டுகளில், மொராக்கோவை வெளியேற்றிய அணியே இறுதி ஆட்டத்தில் தோற்றது. இருமுறையும் அர்ஜென்டினா சாம்பியன் ஆனது. 1986 உலகக் கோப்பை, நாக்அவுட் சுற்றில் ஜெர்மனியுடன் 1-0 என மொராக்கோ தோல்வி கண்டது. மொராக்கோவை வென்ற ஜெர்மனி, இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் ஆடி தோல்வி கண்டது. 2022 உலகக்கோப்பை, அரையிறுதியில் பிரான்சுடன் மோதி மொராக்கோ தோல்வி கண்டது. மொராக்கோவை வென்ற பிரான்ஸ், இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவுடன் ஆடி தோல்வி கண்டது.

Advertisment