வந்த செய்தி: தொடர்பு எல்லைக்கு அப்பால் செந்தில் பாலாஜி. தவிப்பில் தினகரன்.

senthilbalajiவிசாரித்த உண்மை: "18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்' என தினகரனிடம் வலியுறுத்தி வந்துள்ளார் செந்தில் பாலாஜி. தினகரன் கண்டுகொள்ளாததால் "தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் தானும் ஒருவனாகிவிட்டோமே' என்ற அப்செட் மூடில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த சில வாரங்களாக, தினகரன் மீது அதிருப்தி மூடுக்கு மாறிவிட்டாராம். வழக்குச் செலவு தொடர்பாக தினகரன் அளித்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படாததால் செ.பா. தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாராம். தினகரன் தனது ஆட்கள் சிலரை நேரடியாக கரூருக்கே அனுப்பி, செந்தில் பாலாஜியை சமாதானம் செய்துள்ளார்.

-இளையர்

வந்த செய்தி: எம்.பி. தேர்தலில் நிற்கச்சொன்னார் எடப்பாடி. மறுத்தார் மாஜி அமைச்சர்.

Advertisment

nsrinivasan

விசாரித்த உண்மை: தனது ஆட்சி மீதும், செயல்பாடுகள் மீதும் மக்களிடம் அதிருப்தி அலை பலமாக அடித்தாலும் தேர்தல் களத்தை எதிர்கொள்வது குறித்து பல தினுசாக யோசித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி. இதற்காக உளவுத்துறையினரிடம் அடிக்கடி ஆலோசிக்கிறார், அறிக்கைகளை கேட்டு வாங்குகிறார். அந்த வகையில், திண்டுக்கல் தொகுதியின் தற்போதைய எம்.பி.உதயகுமார் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கட்சியினரிடமும் மக்களிடமும் செல்வாக்குள்ள மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நிறுத்தினால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது’ என சமீபத்தில் உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதைப் பார்த்த எடப்பாடி, "தற்போதைய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடைஞ்சல் இருக்காது, நத்தத்தையும் திருப்திப்படுத்துன மாதிரி இருக்கும்' என்ற கணக்கில், "திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் நில்லுங்கள்'’என நத்தம் விஸ்வநாதனிடம் கூறியுள்ளார். இதுல ஏதோ சூட்சுமம் இருக்கு’’ என நினைத்த நத்தமோ, "எனக்கு மாநில அரசியல்தான்ணே சரிப்படும்'’’ எனக்கூறிவிட்டாராம்.

-சக்தி

Advertisment

வந்த செய்தி: சன்னி லியோனுக்கு சவால் விடும் சகோதரி நடிகை.

actress

விசாரித்த உண்மை: கனடாவில் ஃபோர்னோ ஃபிலிமால் புகழ் பெற்று இந்தி சினிமாக்களில் அதிரி புதிரியான கவர்ச்சிக் காட்சிகளில் கலக்கி எடுத்து, தமிழில் வி.சி.வடிவுடையான் டைரக்ஷனில் "வீரமாதேவி'’என்னும் வரலாற்றுப் படத்தில் ராணி வீரமாதேவியாக நடித்துவருகிறார் சன்னி லியோன். இப்போது அவரது சகோதரி உறவுமுறை கொண்ட, மியாராய் லியோன் என்பவர், நேரடியாகவே தமிழ் சினிமா களத்தில் குதித்துள்ளார். இந்த மியாராயும் ஹாலிவுட் ஏரியா ஃபோர்னோ ஃபிலிமின் சூப்பர் ஹீரோயின். இந்த ஃபோர்னோ ஹீரோயின்தான், தற்போது விமல்-ஆஷ்னா சவேரி ஜோடியில் ஏ.ஆர்.முகேஷ் டைரக்ஷனில் ரிலீசாகியுள்ள "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'’படத்தில் அறிமுகமாகியுள்ளார். "போதும் இதுக்குமேல வேணாம்...' எனச் சொல்லும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியிருக்காராம் மியாராய் லியோன்.

-பரமேஷ்

வந்த செய்தி: அவமதிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி. எடப்பாடியிடம் அமைச்சர்கள் கண்ணீர்ப் புலம்பல்.

விசாரித்த உண்மை: கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய மூன்று துறைகளுக்கும் சேர்த்து முதன்மைச் செயலாளராக இருப்பவர் கோபால் ஐ.ஏ.எஸ். கால்நடைத் துறைக்கு newsஉடுமலை ராதாகிருஷ்ணன், பால்வளத்திற்கு ராஜேந்திர பாலாஜி, மீன்வளத்திற்கு ஜெயக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். மூன்று துறைகள் சம்பந்தப்பட்ட புகார் மனுக்களுடன், பொதுமக்கள் கோட்டைக்குச் செல்லும் போதெல்லாம் கோபால் ஐ.ஏ.எஸ்.சை சந்திக்கவே முடிவதில்லையாம். இதனால் வெறுத்துப்போன மக்கள், முதல்வரின் தனிப்பிரிவிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும் புகார் மனுக்களைக் கொடுத்துவிட்டு, புலம்பியபடியே செல்கின்றனராம். மூன்று அமைச்சர்களில் ஜெயக்குமார் சொல்வதைத்தான் ஓரளவு காது கொடுத்துக் கேட்பாராம் கோபால். மற்ற இரு அமைச்சர்கள் என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் அவமதிக்கும் பாணியிலேயே பேசுகிறாராம். இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் ராதாகிருஷ்ணனும் ராஜேந்திர பாலாஜியும் கண்ணீர்விட்டுப் புலம்பியிருக்கின்றனர்.

-செல்வன்

வந்த செய்தி: கட்சியில் இல்லாத பெண்ணுக்கு கட்சிப் பதவி -ஈரோடு தி.மு.க.வில் குமுறல்.

விசாரித்த உண்மை: ஈரோடு மாநகர மகளிர் அணி அமைப்பாளராக இருந்தவர் கனிமொழி நடராஜன். இவர் சமூக வலைத்தளங்களில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்ற புகாரில் சென்ற மாதம் தலைமை இவரை கட்சியிலிருந்து நீக்கியது. அந்த பொறுப்புக்கு லதா மகேஸ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.. கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் கொடுத்த சிபாரிசை ஏற்று மாவட்டச் செயலாளர் சு.முத்துச்சாமி லதாவை பரிந்துரை செய்ய... தலைமையும் லதாவை ஈரோடு மகளிர் அணி அமைப்பாளராக அறிவித்தது. ஆனால் "லதா இதுவரை தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது' என ஆதாரத்துடன் முத்துச்சாமியின் எதிர் கோஷ்டியான மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் அணி அம்பலப்படுத்தியது. அதை ஏற்றுக் கொண்ட மா.செ. முத்துச்சாமி, "நியமிக்கப்பட்ட மகளிர் அணி லதா இதுவரை கட்சியில் உறுப்பினர் இல்லை என்பது உண்மைதான். இவரை பதவியில் வைத்திருக்கலாமா? அல்லது பதவியிலிருந்து எடுக்கலாமா? என்பதை தலைமை அறிவிக்க வேண்டும்' என அறிவாலயத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதுதான் ஹைலைட்.

-அறிவு

வந்த செய்தி: ஜெயலலிதா பிறந்தநாளில் ம.தி.மு.க. கூட்டத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்தாராமே வைகோ?

விசாரித்த உண்மை: 1991-இல் பர்கூர் தொகுதியில் வெற்றிபெற்ற ஜெயலலிதா, இரண்டாவது தடவை 1996-இல் அதே தொகுதியில் போட்டியிட்டபோது, தி.மு.க. வேட்பாளர் சுகவனத்தைக் காட்டிலும் 8636 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவினார். கடந்த 5-ஆம் தேதி, இதுகுறித்து சாத்தூரில் நடந்த சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, ""பெரும் பண வெள்ளத்தை எதிர்த்து நிற்கவேண்டியிருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரமோ, ரெண்டாயிரமோ, ஐயாயிரமோ தரலாம். ஆனால், அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் சரி... பர்கூர் தொகுதியில் வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா அங்கு தோற்றுப்போனார்''’என்று தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு விலை பேசுவதைச் சாடினார்.

-சி.என்.இராமகிருஷ்ணன்