வந்த செய்தி: மாஜி மந்திரியை சமாதானப்படுத்த, மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். முடிவு.

விசாரித்த உண்மை: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இணைப்புக்குப் பின் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார், ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரான ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன். எதிர்பார்த்தது நடக்காதது ஒருபுறம் என்றால், தூத்துக்குடியின் தற்போதைய மா.செ. சி.த.செல்லப்பாண்டியன். மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அடிக்கடி சண்முகநாதனை சீண்டி வம்பிழுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பார்த்தார் சண்முகநாதன், "மந்திரி பதவி தான் தரல, மா.செ. பதவியாவது கொடுங்க' என கொக்கி போட்டதும் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் ஓ.கே. சொல்லி விட்டனர். இதன்படி தூத்துக் குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந் தூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட் டத்திற்கு சண்முகநாதனை மா.செ.வாகவும் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜுவை மா.செ.வாகவும் போட தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். "செல்லப்பாண்டியனுக்கு வசமாக செக் வைத்துவிட்டார் சண்முகநாதன்'’ என்கிறார்கள் தூத்துக்குடி ர.ர.க்கள்.

-நாகேந்திரன்

news

Advertisment

வந்த செய்தி: திரு வண்ணாமலை கார்த்திகை தீப பாஸ் வழங்கும் விவகாரம். அறநிலையத்துறைக்கு கடிவாளம் போட்ட கலெக்டர்.

விசாரித்த உண்மை: ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் நடைபெறும் மகா கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, அறங்காவலர்கள், கோவில் உபயதாரர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு அண்ணாமலையார் கோவில் சார்பாக பாஸ்கள் வழங்கப்படும். தேவைக்கேற்றபடி 10 ஆயிரம், 20 ஆயிரம் என ரேட் வைத்தும் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறைக்கு பிரேக் போட்ட கலெக்டர் கந்தசாமி, இந்த முறை பாஸ்கள் வழங்கும் பொறுப்பை தானே நேரடியாக எடுத்துக் கொண்டார். இதனால் அப்செட்டான அறநிலையத்துறை அதிகாரிகள், துறையின் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் முறையிட்டதும், அங்கிருந்து வந்த சிபாரிசின்படி, கோவில் நிர்வாகத்துக்கு 100 பாஸ்கள் மட்டுமே வழங்கினாராம் கலெக்டர். பொதுமக்கள் மத்தியில் கலெக்டரின் செயலுக்கு வர வேற்பும் இந்து அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பும் இருக் கிறது.

Advertisment

-ராஜா

வந்த செய்தி: தி.மு.க. ஒ.செ.வின் வசூல்மேளா, கண்டுகொள்ளாத மா.செ. கடுகடுப்பில் பொதுமக்கள்.

விசாரித்த உண்மை: இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வைப் பொறுத்தவரையில் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஒ.செ.க்கள், ந.செ.க்கள், மாவட்ட பொறுப்பாளர் கே.முத்துராமலிங்கத்திற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. ஒத்து ழைக்கும் சில ஒ.செ.க்களில் நயினார்கோவில் ஒ.செ. சக்திதான் வசூல்மேளாவை கனஜோராக நடத்தி வருகிறார். பரமக்குடி தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக தி.மு.க.வின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுவதையொட்டி, மாவட்டத்தில் இருக்கும் முக்கிய மான பெட்ரோல் பங்குகள், செங்கல் சூளைகள், விவசாய அலுவலகங்கள் ஆகியவற்றில் பதினைந்து லட்சத்துக்கும் மேல் வசூல் நடத்தியிருக்கிறார். அதே போல் முரசொலி சந்தா என்ற பெயரிலும் வசூல் நடத்தியிருக் கிறார். இது பொதுமக்கள் மத்தியிலும் உ.பி.க்கள் மத்தியிலும் எதிர்விளைவை ஏற்படுத்தி யுள்ளது. ஆனால் ஒ.செ. சக்தியோ "மாவட்டப் பொறுப்பாளர் ஒப்புதலுடன்தான் கலெக்ஷன் பண்றேன்' என்கிறாராம்.

-பரமு

வந்த செய்தி: எம்.எல்.ஏ. விடுதி ஊழியர்களை ரூமில் அடைத்து மிரட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

விசாரித்த உண்மை: கூவத்தூர் முகாமிலிருந்து தப்பித்து காரிலேயே கோவைக்குச் சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சூலூர் எம்.எல். ஏ.கனகராஜ். அந்த கனகராஜ், கடந்த வாரம் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்தபோது, பாத்ரூமில் தண்ணீர் வராததால், லேசாக சுதி ஏத்திக் கொண்டு, விடுதி ஊழியர்களை கண்ட மேனிக்கு வசைபாடியிருக்கிறார். இருந்தாலும் சகித்துக் கொண்டு, வந்த மெட்ரோவாட்டர் ஏ.இ., பிளம்பர் மற்றும் உதவி யாளர்கள் எம்.எல்.ஏ.வின் அறைக்கு வந்துள்ளனர். "இவ்வளவு லேட்டா வர்ற அளவுக்கு திமிரா போச்சா?' எனச் சொல்லிக் கொண்டே, வந்த அத்தனை பேரையும் பாத்ரூமில் அடைத்து, வெளியில் தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்கள். ஊழியர்களின் கூச்சலை கேட்டு வந்த மற்ற ஊழியர்கள், கதவை உடைத்து, அவர்களை மீட்டிருக்கிறார்கள்.

-அரவிந்த்

richa

வந்த செய்தி: ""இப்படியெல்லாமா இருப்பார்கள்''’நொந்து புலம்பும் நடிகை.

விசாரித்த உண்மை: கவர்ச்சி அணுகுண்டு ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாராகிறது. இதில் ஷகீலாவாக பெங்களூரைச் சேர்ந்த இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். ஷகீலாவும் சத்தாவும் சென்னைக்கும் பெங்களூருக்கும் அடிக்கடி பறந்து நடிப்பு டிப்ஸ்களை பரிமாறிக் கொள்கிறார்கள். சில தினங்களுக்குமுன் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்தா, ""ஒரு படத்தில் டயலாக் பேசும் சீன் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும்போது, தொப்புள் தெரியுற மாதிரி பேன்ட்டை கீழே இறக்கிவிடச் சொன்னார் அந்தப் படத்தின் டைரக்டர். "இந்த சீனுக்கு எதுக்கு சார்'னு கேட்டா, "அது அப்படித்தான்மா' என்றார். இப்ப இருக்கும் டைரக்டர்களில் பாதிப்பேர் படம் எடுப்பதைத் தவிர, வேறு மாதிரியான வேலைகளை முடிப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருந்தா சினிமா உலகம் மீது மக்களுக்கு சந்தேகம்தான் இருக்கும். அதனால்தான் ஹீரோயின்கள் "மீ டூ'வைக் கிளப்பு கிறார்கள்’’ என ரொம்பவே நொந்து பேசினார் ரிச்சா சத்தா.

-பரமேஷ்