வந்த செய்தி: வசூலுக்குப் பிரேக் போடும் அதிகாரிகள். எடப்பாடியிடம் கண்ணீர் விட்ட வளர்மதி.

விசாரித்த உண்மை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக இருப்பவர் மாஜி மந்திரி வளர்மதி. ஆட்சி இருக்கும்வரை "எவ்வளவு முடியுமோ அவ்வளவு'’என்ற பாலிசியுடன் அனைவரும் இருப்பதால், பாடநூல் கழகத்திலும் தனது கைவரிசையைக் காட்ட களம் இறங்கி, டிரான்ஸ்பர், புரமோஷன் லிஸ்ட்டை ரெடி பண்ணினார் வளர்மதி. ஆனால் இந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனின் கீழ் இருக்கும் சில அதிகாரிகள், வளர்மதியின் வசூலுக்கு பிரேக் போட்டு விட்டனர். இதனால் நொந்து போய், எடப்பாடியைச் சந்தித்து கண்ணீர் விட்டிருக்கிறார் வளர்மதி.

-சஞ்சய்

வந்த செய்தி: விபச்சாரக் கும்பலோடு "லிங்க்'. எஸ்.ஐ.க்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.

Advertisment

விசாரித்த உண்மை: ஈரோடு வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, சித்தோடு ஏரியாக்களில் தனி வீடு எடுத்து பலான தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர் திலகவதி. தொழில்முறை சம்பந்தமாக ஒரு டி.எஸ்.பி., பல இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களுடன் திலகவதிக்கு "ஸ்ட்ராங் லிங்க்' உண்டு. ஆனால் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் திலகவதி மீது கேஸ் போட்டுவிட்டார். கேஸிலிருந்து விடுவிக்குமாறு இரண்டு எஸ்.ஐ.க்கள், ஒரு ஹெட்கான்ஸ்டபிளுடன் செல்போனில் குஜாலாக பேசியிருக்கிறார் திலகவதி. இந்தப் பேச்சுவார்த்தை விவரம் புதிதாக வந்த எஸ்.பி. சக்திகணேசனுக்குத் தெரிய வந்ததும், துறைரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளார். அவரது பரிந்துரையின் பேரில், சூரம்பட்டி எஸ்.ஐ. வரதராஜ், டவுன் எஸ்.ஐ. கோவிந்தராஜ், ஹெட்கான்ஸ்டபிள் வடிவேல் ஆகிய மூவரையும் மேற்கு மண்டல ஐ.ஜி. சஸ்பெண்ட் பண்ணியுள்ளார்.

-ஜீவாதங்கவேல்

news

Advertisment

வந்த செய்தி: "தாமதமாகவே வரும் மாநிலத் தலைவர்'’’-சுட்டிக்காட்டிய மாவட்டத் தலைவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ். இது காங்கிரஸ் கலாட்டா.

விசாரித்த உண்மை: மத்திய மோடி அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சாஸ்திரி பவன் எதிரே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டி ருந்ததால், கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் 9:45 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்கள். ஆனால் மாநிலத் தலைவர் சு.திருநாவுக் கரசரோ 12 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். அதனாலேயே மூன்று கோஷ்டிகளாகப் பிரிந்து ஆர்ப் பாட்டம் நடத்தினார்கள். இது குறித்து மீடியாக்களிடம் பேசிய தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், “இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, எந்த நிகழ்ச்சி என்றாலும் குறிப்பிட்ட நேரம் தாண்டி இரண்டு மணி நேரம், மூணு மணி நேரம் கழித்து வருவதுதான் திருநாவுக்கரசரின் வாடிக்கை. இதனால் தொண்டர் கள் ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். ஆகையால் இனிமேலா வது மாநிலத் தலைவர் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்''’என்றார். இதைப் பார்த்து டென்ஷனான திருநாவுக் கரசர், தியாகராஜனுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறார்.

-இளையர்

வந்த செய்தி: மாவட்ட கட்சி அலுவலகத்தை தனது பெயருக்கு மாற்ற முயற்சித்த தலைவருக்கு எதிராக போலீசில் புகார். இதுவும் காங்கிரஸ் ஏரியா கலாட்டாதான்.

விசாரித்த உண்மை: வேலூர் அண்ணா சாலையில், 1950-ல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் நிலம் வாங்கி, அதில் மாவட்ட கட்சி அலுவலகமும், முன் பகுதியில் சில கடைகளும் கட்டி வாடகைக்கு விட்டனர். இந்த சொத்தை பராமரிக்க, காமராஜர் அறக்கட்டளையை ஏற்படுத்தி ஒன்பதுபேரை உறுப்பினர்களாக நியமித்தது மாநிலத் தலைமை. இந்த ஒன்பதுபேரில் மூன்று பேர் இறந்துவிட, மூன்றுபேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். எஞ்சியிருந்த மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரனும் மற்ற இருவரும் த.மா.கா.வுக்குப் போய் விட்டனர். அதனால் கட்சி அலுவலகத்தையும் கடைகளையும் மாநகர காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் டீக்காராமன் நிர்வகிக்கத் தொடங்கினார். அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த 12 லட்சம், கடைகள் வாடகை மூலம் வந்த 8 லட்சம் திடீரென மாயமாகியுள்ளது. இது குறித்து நிர்வாகிகள் கேட்ட போது, சரியான பதில் சொல்ல வில்லையாம் டீக்காராமன். இப்போது 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த இடத்தை, டீக்காராமன் பெயருக்கு மாற்ற முயற்சி நடப்பதாக, வேலூர் மத்திய மாவட்டத் தலைவர் ஜோதி, மாநகர பொருளாளர் தேவேந் திரன் மற்றும் வாலாஜா அசேன், மோகன் ஆகியோர் போலீசில் புகார் கொடுத்துவிட்டனர். அகில இந்திய தலைவர் ராகுல் காந்திக்கும் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.

-து.ராஜா

வந்த செய்தி: உதயநிதி பெயரில் வசூல் செய்யவில்லை. மறுக்கிறார் தி.மு.க. ஒ.செ.

விசாரித்த உண்மை: அக்.27-30 தேதியிட்ட நக்கீரனில் கிணத்துக்கடவு கிழக்கு தி.மு.க. ஒ.செ. ஆ.துரை, உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டம் நடத்துவதாகச் சொல்லி 5 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக இதே பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. தேங்காய் மண்டியிலோ, தொழிற் சாலைகளிலோ ஒரு ரூபாய்கூட வசூல் செய்யவில்லை. 30 ஆண்டு கள் கட்சியில் இருக்கும் நான் சொந்தக் காசைத்தான் செல வழித்து வருகிறேன். எனது அரசியல் எதிரிகள், என்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்றும் துரையினுடைய விளக்கத்தில் மறுத்திருக்கிறார்.