வந்த செய்தி: நக்கீரனில் வெளியான கவிப்பேரரசுவின் கவிதை தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விசாரித்த உண்மை: கலைஞர் மறைவை யொட்டி, "ஒரு நூற்றாண்டைப் புதைத்துவிட்டோம்’ என்ற தலைப்பில் நக்கீரனில் இரங்கல் கவிதை எழுதியிருந்தார் கவிப்பேரரசு. அதை மலையாளத்தில் கே.எஸ்.வெங்கடாசலம் மொழி பெயர்க்க, அது அங்குள்ள கம்யூனிஸ்ட் பத்திரிகையான "தேசாபிமானி'யில் வெளி யானது. இதேபோல் தெலுங் கில் பாஸ்கரனும், கன்னடத்தில் பேராசிரியர் மலர்விழியும் மொழிபெயர்த்திருக் கிறார்கள்.
-நாடன்
வந்த செய்தி: அ.தி.மு.கவின் "நமது அம்மா'’பத்திரிகைக்குப் போட்டியாக வருகிறது ‘எங்கள் தாய்’.
விசாரித்த உண்மை: போளூரைச் சேர்ந்த ஜெயகோவிந்தன் என்பவர் நடத்திவந்த "நமது அம்மா'’பத்திரிகையைக் கைப்பற்றி நடத்திவருகிறது எடப்பாடி தரப்பு. பத்திரிகையின் உரிமையை ஜெயகோவிந்தனிடமிருந்து வாங்கும்போது, அவரை இணைஆசிரியராக நியமிப்பதாக கொடுத்த வாக்குறுதியை எடப்பாடி தரப்பு மீறியதால், வருகிற 30-ஆம் தேதி எடப்பாடி நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நாளில் "எங்கள் தாய்'’பத்திரிகையை ஆரம்பிக்கப் போகிறாராம் ஜெயகோவிந்தன்.
-இளையர்
வந்த செய்தி: ஒத்துழைக்க மறுக்கும் தி.மு.க. முன்னாள் மா.செ. கலக்கத்தில் தற்போதைய மா.செ.
விசாரித்த உண்மை: எடப்பாடி அரசுக்கு எதிராக 18-ந் தேதி இராமநாத புரத்தில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில், மாஜி அமைச்சரும் மா.செ.வுமான சுப.தங்கவேலனை மேடைக்கு வருமாறு தற்போதைய மா.செ.வான கே.முத்துராம லிங்கம் அழைத்தார். சுப.த. மறுத்துவிட்டார். ஆனாலும் ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் கூட்டத்தைக் கூட்டி வெற்றிகரமாக நடத்திவிட்டார் முத்து ராமலிங்கம். சீனியர் உ.பி. ஒருவர் நம்மிடம், “""முத்துராமலிங்கத்தை மா.செ.வாக தலைமை நியமித்ததிலிருந்தே சுப.த. அப்செட் மூடில்தான் இருக்காரு. மாவட்டத்தில் இருக்கும் 18 ஒ.செ.க்களில் தங்கவேலனின் ஆதரவாளர்களான இராம்நாட் பிரபாகரன், கடலாடி ராஜசேகர், சாயல்குடி ஜெயபால், முதுகுளத்தூர் மேற்கு முத்துராமலிங்கம், கமுதி தெற்கு செந்தூர்பாண்டியன் ஆகிய 5 ஒ.செ.க்களும் முத்துராமலிங்கத்திற்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. எப்படியும் மா.செ.வை மாற்றியே தீருவது என்ற முடிவோடு இருக்கிறார் சுப.த. தலைமை என்ன செய்யப் போகிறதுன்னு காத்துக்கிட்டிருக்கோம்''’என்கிறார்.
-பரமு
வந்த செய்தி: கால்நடை மருத்துவரை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.
விசாரித்த உண்மை: விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கீழ்பாடி, வேலநந்தல் பகுதிகளில் தமிழக அரசின் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டப்படி பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்குத் தன்னை அழைக்காததால் தொகுதி எம்.எல்.ஏ.வான வசந்தன்கார்த்தி, அரசு கால்நடை மருத்துவர் முருகுவை செல்போனில் பிடித்து, ஆடு-மாடு திட்டத்தில் யார், யாருக்கு எவ்வளவு பங்கு என வறுத்தெடுத்துவிட்டாராம். டாக்டரோ, உண்மை நிலையை எடுத்துச் சொல்லியும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வின் கோபம் தணியவில்லை. "இவ்வளவு கோபப்பட்டால் ஆட்சியைப் பிடிப்பது எப்படி' என்கிறார்கள் உடன்பிறப்புகளே.
-எஸ்.பி.சேகர்
வந்த செய்தி: சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா பயணம். தள்ளிப் போகும் தே.மு.தி.க. மாநாடு.
விசாரித்த உண்மை: ஒரு மாதம் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, கலைஞர் மரணத்துக் குப் பின் தமிழகம் வந்தார் தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த். சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு விட்டு, வீட்டில் ஓய்வாக இருந்தார் கேப்டன். செப்டம்பரில் திருப்பூரில் தே.மு.தி.க. மாநில மாநாடு நடக்கவிருந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நலன் கருதி மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அக்டோபர் அல் லது நவம்பரில் விஜயகாந்த் மீண் டும் அமெரிக்கா செல்லவிருப்ப தால், கட்சியின் மாநாட்டை ஜனவரிக்கு ஒத்தி வைத்திருக்கிறார் கள்.
-ஜீவா
வந்த செய்தி: விக்ரமின் "சாமி-2', விஷாலின் "சண்டக்கோழி-2'’வில்லங்க சங்கதிகள்.
விசாரித்த உண்மை: விக்ரம்-டைரக்டர் ஹரி கூட்டணியில் உருவான "சாமி-2'வை தயாரித்திருப்பவர் ஷிபு தமீன்ஸ். ஆந்திரா, தெலங்கானா ரைட்சை வாங்கிய ஆரா சினிமாஸ் மகேஷுக்கும் ஷிபு தமீன்ஸ்க்கும் முட்டல் மோதலாகி வடபழனி போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து போனது. ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்ததால், செப்.21-ல் ரிலீஸ் என திடீர் முடிவு எடுக்கப்பட... சரியான ஒத்துழைப்பின்றி கிடைத்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்தனர். இது போல, தியேட்டர் அதிபர்களிடம் விஷால் தனது வழக்கத்திற்கேற்ப ஏடாகூடமாக பேசத் தொடங்கியதால், ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் "சண்டக் கோழி-2'விற்கு செக் வைக்கும் ஐடியாவில் இருக்கிறது தியேட்டர் அதி பர்கள் தரப்பு.
-பரமேஷ்