Skip to main content

வந்த செய்தி! விசாரித்த உண்மை!

gkvasanவந்த செய்தி: ஜி.கே.வாசனுக்குத் தெரியாமல் மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி பேசிய கட்சி வி.ஐ.பி.க்கள். த.மா.கா.வில் கொதிப்பு.

விசாரித்த உண்மை:
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஆக. 30-ஆம் தேதி அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன். அதன் பின் செப். 02-ஆம் தேதி, த.மா.கா. பிரமுகர்களான கோவை தங்கம், விடியல் சேகர், பி.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் அறிவாலயத்தில் காத்திருந்து, ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அத்துடன் "96-ல் தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி வைத்து மாபெரும் வெற்றி பெற்றது. அதே போன்ற வெற்றிக் கூட்டணி மறுபடியும் உங்கள் தலைமையில் அமைய வேண்டும்'’என ஸ்டாலினிடம் கூறிவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட த.மா.கா.வின் மற்ற தலைவர்கள், "கட்சித் தலைமைக்குத் தெரியாமல் போனதே தப்பு... அதிலும் கூட்டணி பற்றிப் பேசியது அதைவிட பெரிய தப்பு'’என கொந்தளிக்கிறார்களாம்!

-சஞ்சய்வந்த செய்தி: கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கிய சி.பி.எம். எம்.பி. காம்ரேடுகள் முணுமுணுப்பு.tkrangarajan

விசாரித்த உண்மை:
சி.பி.எம். ராஜ்யசபா எம்.பி.யான டி.கே.ரங்கராஜன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கேரள வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கினார். இதுதான் காம்ரேடுகள் மத்தியில் முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்துக்காக செலவழிக்க வேண்டிய நிதியை, எதற்காக கேரள மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் காம்ரேடுகள் மத்தியில் மட்டுமல்ல, பிற கட்சித் தலைவர்கள் சிலரின் கேள்வி. இது தொடர்பாக நம்மிடம் பேசிய டி.கே.ஆரோ, ""இதுபோன்ற பேரிடர் காலங்களில், எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி உதவலாம்னு லோக்சபா சபாநாயகரும் ராஜ்யசபா துணைசபாநாயகரும் அறிவிப்பார்கள். இந்த நடைமுறையில் உள்ள வழக்கப்படி தான் நிதி ஒதுக்கியிருக்கிறேன்''’என்கிறார்.

-இளையர்

hanshika

வந்த செய்தி: சம்பளத்தைக் கேட்டதற்காக நடிகை ஹன்ஸிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்.

விசாரித்த உண்மை:
ஆரா சினிமாஸ் என்ற பேரில் சில பல படங்களை வினியோகம் செய்தவர் மகேஷ். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மகேஷின் தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பெரிய பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களே ததிங்கிணத்தோம் போடும் போது, மகேஷின் வளர்ச்சியில் பல ரகசியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் சினிமா புள்ளிகள். இந்த மகேஷ், முரளி மகன் அதர்வா-ஹன்ஸிகா ஜோடியை வைத்து முதல் தயாரிப்பாக "100' என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் ஹன்ஸிகாவுக்கு சம்பளமாக 75 லட்சம் பேசி 35 லட்சம் கொடுத்திருக்கிறார். பாதி படத்திற்குமேல் முடிந்துவிட்ட நிலையில் மீதி சம்பளத்தை ஹன்ஸிகா கேட்டபோது, 40 லட்சத்திற்கு 5 செக்குகளைக் கொடுத்திருக்கிறார் ரமேஷ். மூன்று நாட்கள் ஷூட்டிங் பெண்டிங் இருந்த நிலையில், மகேஷ் கொடுத்த செக்கை ஹன்ஸிகா பேங்கில் போட்டபோது, அது பவுன்ஸாகிவிட்டது. அமவுண்ட் க்ளியர் ஆனால்தான் ஷூட்டிங் வருவேன் எனச்சொன்ன ஹன்ஸிகா, நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துவிட்டார். இதனால் டென்ஷனான மகேஷ், "நான் நினைச்சா தமிழ் சினிமாவுலேயே நடிக்க முடியாது, மூஞ்சியில ஆசிட் அடிச்சிருவேன்'’என ஹன்ஸிகாவை ஃபோனில் மிரட்டியிருக்கிறார். இதனால் மிரண்டுபோன ஹன்ஸிகாவின் தாய் மோனா நடிகர் சங்க, தயாரிப்பாளர்கள் சங்க உதவியை மீண்டும் நாடியிருக்கிறார்.

-பரமேஷ்
sathyabama-mp


வந்த செய்தி: தீராத கோஷ்டி யுத்தம். எம்.பி. இல்ல திருமணத்திற்கு வராத இ.பி.எஸ். ஓடி வந்த ஓ.பி.எஸ்.

விசாரித்த உண்மை:
ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளராக இருக்கும் திருப்பூர் எம்.பி. சத்யபாமா, ஆக. 30-ஆம் தேதி தனது மகன் சத்யவசந்த் திருமணத்திற்காக முதல்வர் எடப்பாடியிடமும் துணை முதல்வர் பன்னீரிடமும் தேதி வாங்கியிருந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என சகலருக்கும் சந்தோஷமாக பத்திரிகை கொடுத்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கோயிலில் காலையில் திருமணம், மாலையில் வரவேற்பு என தடபுடலாக ஏற்பாடு செய்தார் சத்யபாமா. ஈரோடு மாவட்ட இ.பி.எஸ். கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் போட்ட ரெட் சிக்னலால், ஆக.29-ஆம் தேதியிலிருந்து செப்.02-ஆம் தேதி வரை சேலம் ஏரியாவில் இருந்தும் சத்யபாமா மகன் திருமணத்தில் எடப்பாடி கலந்து கொள்ளவில்லை. ஆனால் தேனியிலிருந்த ஓ.பி.எஸ்.ஸோ, கார் மூலமாகவே இரவு 10 மணிக்கு திருமண மண்டபத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்தியதால் ரொம்பவே நெகிழ்ந்து போனார் எம்.பி. சத்யபாமா. அந்த இரவு நேரத்திலும் ஓ.பி.எஸ்.ஸுக்காக, அமைச்சர்கள் செங்கோட்டையனும் கருப்பணனும் காத்திருந்தனர்.

-ஜீவா

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்