Advertisment

கூலிப்படைச் சிறுவர்கள்! - ஆபத்தில் அலறும் ஆன்மீக நகரம்!

ss

ன்மீக நகரான திருவண்ணாமலையின் ஹார்ட் பீட் அண்மைக்காலமாகத் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருக்கிறது. காரணம், அங்கே நாளுக்கு நாள் க்ரைம் வைபவங்கள் பெருகிவரு கின்றன. அண்மையில் அரங்கேறிய ஒரு க்ரைம் சம்பவத்தைப் பார்ப்போம். திருவண்ணாமலை நகர தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர் வடக்குத் தெருவைச் சேர்ந்த உதய முத்து. ரியல் எஸ்டேட் தொழிலையும், கட்டிட ஒப்பந்தத் தொழிலையும் செய்து வந்தார். அதே வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். பைனான்ஸ், ரியல் எஸ்டேட் என இவரும் பண பலத்தோடு வலம் வந்தவர். நீண்ட வருடங்களாக எதிரும் புதிருமாக இருந்து வந்த இவர்கள் இருவரும், சில மாதங்களுக்கு முன்பு நட்பாகி கை குலுக்கிக்கொண்டனர்.

Advertisment

tt

அப்போது இவர்களிடம் ஒரு இடப்பிரச் சினை பஞ்சாயத்துக்கு வந்தது. அதாவது, அங்குள்ள சின்னக் கடைத்தெருவில் பாதி கட்டு மானத்தோடு கைவிடப் பட்ட ஒரு கட்டிடத்தை, அண்ணாமலையார் கோவி லில் தினக்கூலி பணியாளராக இருந்துவந்த தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த ஷ்யாம் என்பவர் பல லட்சங்கள் கொடுத்து வாங்கியிருந்தார். அது தொடர் பான பஞ்சாயத்துதான் இவர்களிடம் வந்தது.

ஷ்யாம் மீது பொற

ஷ்யாம் மீது பொறாமை உணர்ச்சி ஏற்பட்டதால், பஞ்சாயத்தின்போதே அவருக்கும் இந்த திடீர் நண்பர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட, அது கைகலப்பானது. இதைத் தொடர்ந்து உதயமுத்து, கிழக்கு காவல் நிலையம் சென்று ஷ்யாம் மீது புகார் தந்துள்ளார். இருவரும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், முக்கிய பிரமுகர் ஒருவர் தலையிட்டு, "வழக்கு வேண்டாம், பேசித் தீர்த்துக்குவாங்க'’என்று சொன்னதால் போலீஸ் சைலன்டானது.

Advertisment

இதற்கிடையே ஷ்யாம், உதயமுத்து ஆகிய இரண்டு கோஷ்டிக்கும் இடையே ஏரியாவில் பேனர் வைப்பதில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில், அக்டோபர் 30ஆம் தேதி இரவு, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே டாஸ்மாக் கடைக்கு நண்பர்களான உதயமுத்துவும் ராஜேஷும் சென்ற போது அவர்களின் டூவீலரை இரண்டு பேர் ஓடிவந்து உதைத்துத் தள்ள, அந்த நேரத்தில் ஒரு டூவீலரிலும் காரிலும் வந்த ஒரு கும்பல் அவர்களைக் குறிவைத்துப் பாய்ந்தது. அவர்களிடமிருந்து உதயமுத்துவும், ராஜேஷும் தப்பி ஓடத் தொடங்கினர். அந்தக் கும்பல் உதயமுத்துவை மட்டும் குறிவைத்து துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு எஸ்கேப்பாகிவிட்டது.

உயிருக்குப் போராடிய உதயமுத்துவை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 80 சதவிதம் வெட்டுக்காயங்கள் இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4ஆம் தேதி இரவு உதயமுத்து மரணமடைந்தார்.

இந்த விவகாரத்தில் ஷ்யாம், பிரவீன், பாலாஜி, அஷ்ரப், அருண் ஆகியோர் கைது செய் யப்பட்டனர். நவீன்குமார் பாண்டியன், பொற் குணத்தை சேர்ந்த சிலுக்கு என்ற நவீன்குமார் லோகநாதன் உட்பட இரண்டுபேர் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கூலிப் படையாக செயல்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

tmalai

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய ஏரியாவாசிகள்...

"விரோதத்தில் இந்தக் கொலை நடந்தது ஒருப்புறம் என்றால், இதில் கூலிப்படையாக செயல்பட்டவர்கள் எல்லாம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான். திருட்டு, செயின் அறுப்பு, டூவீலர் திருட்டு என ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த டீமுக்கு லீடராக செயல்பட்டவன் அஷ்ரப். பணம் கொடுத்து யாரைப் போடச் சொல்றாங் களோ, அவங்களப் போடறோம் என வெளிப் படையாகவே அவன் சொன்னான். சின்னச் சின்ன குற்றமாகச் செய்தால் எப்போதுtt பெரிய ரவுடி யாகறது? என்று யோசித்துதான் இப்படிப்பட்ட க்ரைமில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரவீன் என்பவன், திருவண்ணாமலையில் எங்கு கட்டப்பஞ்சாயத்து நடந்தாலும் அதில் தனக்கு ஒரு பங்கு வந்துவிட வேண்டும் என மிரட்டி வந்துள்ளான். ஆளும்கட்சிப் பிரமுகர் டி.வி.எம் நேருவை நடுரோட்டில் இரவில் அடித்து மண்டையை உடைத்துவிட்டுச் சென்ற இந்தக் கும்பலை, இதுவரை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கரின் தந்தை ஆறுமுகம், பேருந்து நிலையம்அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்திருந்தார். கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்ற ஆறுமுகம் மற்றும் இளையமகன் விஸ்வநாதன் ஆகியோரை, கஞ்சா குடித்துக்கொண்டிருந்த பதின்ம வயது பொடி யன்கள் கொண்ட கும்பல் அடித்து மண்டையை உடைத்திருக்கிறது, தீபாவளியன்று இரவு ஓசிப் பட்டாசு கேட்ட ஒருவனை அடித்து விரட்டியதும், அவன் தன்னுடன் ஒரு கேங்கை அழைத்துவந்து பட்டாசுக் கடையில் வேலை செய்து கொண் டியிருந்த இரண்டு இளைஞர்களை அடித்து உதைக்க, அதில் ஒரு இளைஞர் சீரியஸான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். இதில் சிலரை கைது செய்தா லும் அவர்கள் சாதாரணமாக ஜாமீனில் வெளியே வந்துவிடுகின்றனர்''’என்று திகிலுடன் விவரித்ததோடு...

"இதுபோன்ற விவகாரங்கள் மீடியாவில் செய்தியாகிவிடக்கூடாது என மெனக்கெட்டு கிப்ட், சரக்கு என செலவிடும் காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகளைப் பிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவோ, புதிய குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கவோ முயற்சிப்பதில்லை''’என்கிறார்கள் ஆதங்கத்தோடு.

சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம்... "அண் மைக்காலமாக சிறுவர்களும் பொடியன்களும் குற்றச்செயல்களில் இங்கே அதிகம் ஈடுபடுகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட் களில், வெளி மாநிலங்களில் இருந்து நகரத்துக்கு வரும் வாகனங்களை மடக்கி, தனியே சட்ட விரோதமாக கட்டணம் வசூலிக்கிறது இந்த சிறுவர் கும்பல். தங்களது ஏரியாவில் உள்ள சாலையோர கடைகளில் மிரட்டி, மாமூல் வசூலித்து, கஞ்சா, மது என ஜாலியாக வலம் வருகின்றனர். இந்த வளரும் குற்றவாளிகள் ஏதாவது ஒரு அரசியல் கட்சி ஆதரவில் இருப்பதால் காவல்துறையினர் பெரிதாக கண்டுகொள்வதில்லை''’என்கிறார்கள் கவலையாய்.

திருவண்ணாமலையார்தான் இந்த ஊரைக் காப்பாற்றணும்!

nkn291123
இதையும் படியுங்கள்
Subscribe