Advertisment

கட்சிக் கூட்டத்தில் கைகலப்பு! ப.சி.க்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு!

pc

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டாண்டுகள் இருந்தாலும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சியில் காங்கிரசின் நிர்வாகிகள் கூட்டத்தை அண்மையில் கூட்டியிருந்தார் ப.சிதம்பரம்.

Advertisment

அதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு, "மானாமதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகளை மொத்தமாக மாத்துங்க, யாருமே கட்சி வேலையை பார்க்கிறதேயில்லே'' என்றார். அதற்கு எதிராக குரல்கள் வந்தபோதும், ஆவேசம் காட்டினார் பாண்டிவேலு.

எரிச்சலடைந்த ப.சிதம்பரம்,”"உனக்கான நேரம் முடிஞ்சிடுச்சி. உட்கார். அடுத்தவங்க பேச ணும்'' என்றார். இதை ஏற்காத பாண்டிவேலு, "உங்களைப் பத்தி சோனியாவிடமும் ராகுலிடமும் சொல்லுவேன்''‘’என்று மல்லுக்கட்ட, இருவருக்கும் வார்த்தைகள் தடித்தன. ஒரு கட்டத்தில் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்த ப.சிதம்பரம், பாண்டிவேலுவிடம், "நீ போய் என் சீட்டுல உட்கார்ந்துகொண்டு கட்சியை நடத்து. நான் கீழே உட்கார்ந்துக்கிறேன்''’என கோபம் காட்டினார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு, பதட்டம் காரணமாக பாண்டிவேலுவை வெளியேற்றினார்கள் நிர்வாகிகள்.

cc

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னங்குடி ஊராட்சித் தேர்தல் தொடர்பாக தேவகோட்டையில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம்.

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராம சாமி, இவரது மகனும் திருவாடனை எம்.எல்.ஏ.வுமான கரு.மாணிக்கம், சிதம்பரத்தின் ஆதரவாளரும் காரைக்குடி எம்.எல்.ஏ.வுமான மாங்குடி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பெருந்தலைகளெல்லாம் கலந்து கொண்டன. இந்த கூட்டத்துக்கு கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளர் களை சிதம்பரம் தரப்பு முறை யாக அழைக்கவில்லை. ஆனாலும், அவர்க ளாகவே வந்தனர்.

கூட்டம் துவங் கியதும் கார்த்தி சிதம்பரத்திடம

கூட்டம் துவங் கியதும் கார்த்தி சிதம்பரத்திடம், "தேவகோட்டை யில் வட்டார தலைவர் உள்பட முக்கிய நிர்வாகிகளெல்லாம் இருக்கிறபோது, கட்சிக்கு சம்மந்தமில்லாத, பதவியிலில்லாத நபர்களை யெல்லாம் திரட்டி கூட்டம் நடத்துறீங்களே, இது சரியா?'' என்று ராமசாமி ஆதரவாளர்கள் கேட்க, ‘"அதையெல்லாம் பேச இது நேரமில்லே. பிறகு பேசிக்கலாம்''’ என கார்த்தி சொல்கிறார். அதை ஏற்காமல் ராமசாமி ஆட்கள் எதிர்ப்புக் காட்டினர்.

எம்.எல்.ஏ. மாங்குடியின் ஆட்கள் எழுந்து, "உங்க எம்.எல்.ஏ. (ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம்) தான் எங்க எம்.எல்.ஏ.வை (மாங்குடி) தோற்கடிக்க வேலை பார்த்தாரு'' என்று சொல்ல, அதை மறுத்து ராமசாமி ஆட்கள் குரல்கொடுக்க, இரு தரப்பின் ஆவேசத்தால் ரகளையானது.

pcc

அப்போது கே.ஆர்.ராமசாமியும் கார்த்தி சிதம்பரமும் இரு தரப்பையும் அமைதிப்படுத்த முயற்சித்தும் பலனில்லை. கூட்டத்தில் செருப்பு கள் பறந்தன. ஒருத்தருக்கொருத்தர் அடிக்கப் பாய்ந்தனர். இந்த களேபரத்தின் இடையில், எம்.எல்.ஏ. மாங்குடியின் உதவியாளர் மணியை நெருங்கி அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்த எம்.எல்.ஏ. கருமாணிக்கம், நீங்கதாண்டா என்னை தோற்கடிக்க வேலைப்பார்த்தீங்க என்று மாங்குடி மீதான கோபத்தை உதவியாளர் மீது காட்டினார்.

மாங்குடி ஆட்கள் கொந்தளிக்க, இரு தரப்பிலிருந்தும் நாற்காலி -செருப்பு வீச்சு நடந்தது. சிலருக்கு மண்டை உடைந்தது. கார்த்தி ஆதரவாளர்களை ராமசாமி ஆதர வாளர்கள் விரட்டியடிக்க, பெரிய ரத்தக்களரி யாக மாறிடுமோ என திகிலூட்டியது. தகவ லறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த போலீசார், கூட்டத்தைக் கலைத்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். ப.சி.க்கும் அவரது மகனுக் கும் எதிராக சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் மோதல் வெடிக்கத் துவங்கியிருப்பதை வெளிப்படுத்தும் இந்த மோதல்களை படம் பிடித்துள்ள கோஷ்டிகள், அதனை ஆங்கில சப்-டைட்டிலுடன் சோனியாவுக்கும் ராகுலுக்கும் அனுப்பி வைத்திருக்கின்றன.

ஆதரவாளர்களாக இருந்தவர்கள் ஏன் எதிர்த்து கச்சை கட்டுகிறார்கள் என தமிழக காங்கிர சின் பல்வேறு கோஷ்டிகளிடம் நாம் விசாரித்தபோது, ‘’சிவகங்கையின் எம்.பி.யாக ப.சி இருந்தார். அவருக்கு பின்பு அவரது மகன் இருக்கிறார். எம்.பி.யான பிறகு சிவகங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார் கார்த்தி. 2024 எம்.பி. தேர்தலில் மீண்டும் களமிறங்கும் திட்டத்துடன் அப்பாவும் மகனும் இறங்கிவிட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வருவதற்கு முயற்சித்து வருகிறார் கார்த்தி. அதற்கான காய்களையும் ப.சிதம்பரம் நகர்த்தி வருகிறார்.

தொகுதியும் கட்சித் தலைவர் பதவியும் தங்கள் சிதம்பரத்தின் ஆளுகைக்குள் சென்று விட்டால், சிவகங்கை மாவட்டத்தை மையமாக வைத்து அர சியல் செய்யும் முன்னாள் எம்.பி. சுதர்சனநாச்சியப் பன், சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்த கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட ஜாம்பவான்களின் ஆதிக்கம் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு விடும் என அவர்கள் தரப்பு கருதுகிறது. குறிப்பாக, ராமசாமியின் குடும்பம்தான் மூன்று தலைமுறையாக இங்கு கோலோச்சியிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியை மட்டும் தான் ஒதுக் கியது தி.மு.க. காரைக்குடியின் சிட்டிங் எம்.எல்.ஏ. வாக ராமசாமி இருந்ததினால், காரைக்குடியை தனக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தொகுதியை தனது மகன் கரு.மாணிக்கத்துக்கும் நான்தான் தி.மு.க.விடம் கேட்டு வாங்கினேன் என்று சொல்லி, அந்த 2 தொகுதிகளையும் யாரும் கேட்கக்கூடாது என சொன்னார் ராமசாமி.

pcc

சிதம்பரத்தால் மாநில தலைவராக்கப்பட்ட கே.எஸ்.அழகிரியும், சில கருத்து வேறுபாடுகளால் சிதம்பரத்துக்கு எதிராக நின்றார். கார்த்தி சிதம்பர மோ கே.ஆர்.ராமசாமிக்கு எதிராக நின்றார். தொடர்ச்சியான பஞ்சாயத்தில், திருவாடானை தொகுதி கே.ஆர்.ராமசாமி மகனுக்கு சென்றது. காரைக்குடியைத் தனது ஆதரவாளரான தேவக் கோட்டை யூனியன் முன்னாள் தலைவர் வேலுச் சாமிக்காக கே.ஆர்.ஆர். அழுத்தம் கொடுத்தார். அதை ஏற்காமல், மாங்குடிக்கு சீட் கிடைக்கச் செய்தது கார்த்தி தரப்பு. 6 மாசம் வரை த.மா.கா.வில் இருந்தவர் மாங்குடி. அவருக்கு சீட் தரணுமா? என எதிர்த்தனர். ஆனாலும், மாங்குடியே வேட்பாளரானார்.

அ.ம.மு.க. தரப்பில் கள்ளர் சமூகத்தை சேர்ந்த தேர்போகி நிறுத்தப்பட, அதனை ராமசாமி தரப்புதான் தினகரனிடம் வலியுறுத்தி களமிறக்கியதாகவும், மாங்குடிக்கு எதிராக வேலை பார்ப்பதாகவும் ப.சி. தரப்பு கடுப்பானது. காரைக்குடி தொகுதியில் ராமசாமி பட்டும்படா மல் வேலை செய்ய, திருவாடானையில் தனது மகனுக்காக பிரச்சாரம் செய்ய ப.சிதம்பரத்தை அழைக்கவே இல்லை ராமசாமி.

காரைக்குடியில் மாங்குடி ஜெயித்ததும் காரைக்குடி, தேவக்கோட்டை பகுதிகளில் ராமசாமிக்கான முக்கியத்துவத்தை கார்த்தியும் அவரது ஆதரவாளரான மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தியும் தரவில்லை. தங்கள் அரசியல் செல்வாக்கைக் காப்பாற்ற கே.ஆர்.ராமசாமி தரப்பு போராடுவதால், ப.சிதம்பரத்துக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் எதிராக மோதல்கள் வெடிக்கின்றன‘’என்று விரிவாக சுட்டிக்காட்டு கிறார்கள் காங்கிரசின் மற்ற கோஷ்டிகளின் ஆதரவாளர்கள். இந்த மோதல்கள் குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம்,’"கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான். இதெல் லாம் பெரிய விசயம் கிடையாது. சிந்தனையும் சுதந்திரமும் இல்லாத கட்சிகளில்தான் கோஷ்டி கள் இருக்காது. கருத்து வேறுபாடுகள் இல்லை யெனில் அது அரசியல் கட்சியே கிடையாது'' என இயல்பாகச் சொல்லி கடந்துவிட்டார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. மாங்குடியிடம் நாம் பேசியபோது,”"ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கூட்டம் நடப்பது வழக்கமானது. அன்றைக்கு எம்.பி.யும் (கார்த்தி), முன்னாள் எம்.எல்.ஏ.வும் (கே.ஆர்.ராமசாமி) வந்திருந்தனர். அவர்களை பார்க்க வந்த தொண்டர்கள் பேசும்போது ஒருவர் சொன்ன கருத்து இன்னொருவருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதனால் தகராறு ஏற்பட்டது. மற்றபடி கோஷ்டி பிரச்சனைகள் எதுவும் கிடையாது. எனது உதவியாளரை கருமாணிக்கம் அடித்து விட்டார்னு கேள்விப்பட்டு, உதவியாளரிடம் விசாரிச்சேன். ஆமாம்னு சொன்னார். எதற்கு அடிச்சாருன்னு எனக்குத் தெரியலை. ஆனாலும், அவரது ரேஞ்ச்சுக்கு இப்படி செய்திருக்கக்கூடாது''”என்றார் அழுத்தமாக.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியிடம் நாம் விசாரித்தபோது,” "சிவகங்கை மாவட்டத்தில் அனைவரையும் அரவணைத்துத்தான் தலைவர் சிதம்பரம் செல்கிறார். அவரிடம் கேள்வி எழுப்பிய நபரே (பாண்டிவேலு) சிதம்பரத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதனால் எங்க ளுக்குள் எந்த கோஷ்டி சிக்கலும் இல்லை''’என்கிறார்.

சுதர்சன நாச்சியப்பன் மகன் ஜெயசிம்மனிடம் இதுகுறித்து கேட்டபோது,‘’"சிவகங்கை மாவட்டத் தில் அதிருப்திகள் இருப்பது உண்மை. பொதுவாக, இப்படிப்பட்ட நிலையில், எல்லோரையும் அழைத்து பேசி சரி செய்ய வேண்டும். ஆனால், அதைச் செய்ய காங்கிரசில் யாரும் நினைப்பதில்லை. அதனால் மோதல்கள் ஏற்படுகின்றன. இதை ஜஸ்ட் லைக் தட் என்ற அளவில் பொறுப்பிலிருப்பவர்கள் கடந்து செல்வதால் காங்கிரஸ்தான் பலகீனமாகிறது''” என்கிறார் மிக இயல்பாக.

ப.சி. -கார்த்திக்கு எதிராக கே.ஆர்.ராமசாமி தரப்பு மேற்கொள்ளும் உள்கட்சி அரசியலுக்கு, சுதர்சனநாச்சியப்பன் போன்றவர்களும் கைகுலுக்க தயாராகியிருக்கிறார்கள். மேலும், ராமசாமியின் கள்ளர் சமூகத்தின் ஆதரவும் சேர, சிதம்பரத்திட மிருந்து சிவகங்கையை மீட்கும் அரசியல் மெல்ல மெல்ல உயிர்ப் பிடிக்கத் துவங்கியுள்ளது என்கிறார் கள் கதர்சட்டையினர்.

nkn081021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe