மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆளும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டங் கள் அறிவித்தது. புதுக்கோட் டை மாவட்டத்தில் சனிக் கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விராலிமலை செக் போஸ்ட் அருகே மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி யன் தலைமையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்த அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், தலை மைக்கழக பேச்சாளர்கள் சோம.இளங்கோவன், அஞ்சுகம் பூபதி, இளம் சொற்பொழி வாளர் தமிழினியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதாக துண்டறிக்கையும் வெளி யிடப்பட்டிருந்தது. முதலமைச் சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சிறப்புரை யாளர்கள் படங்களும் இடம்பெற்றிருந்தன.
அதேநாளில் அமைச்சர் ரகுபதி மாவட்டச் செயலாள ராக உள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடந்த கண்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆளும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டங் கள் அறிவித்தது. புதுக்கோட் டை மாவட்டத்தில் சனிக் கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விராலிமலை செக் போஸ்ட் அருகே மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி யன் தலைமையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்த அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், தலை மைக்கழக பேச்சாளர்கள் சோம.இளங்கோவன், அஞ்சுகம் பூபதி, இளம் சொற்பொழி வாளர் தமிழினியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதாக துண்டறிக்கையும் வெளி யிடப்பட்டிருந்தது. முதலமைச் சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சிறப்புரை யாளர்கள் படங்களும் இடம்பெற்றிருந்தன.
அதேநாளில் அமைச்சர் ரகுபதி மாவட்டச் செயலாள ராக உள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மா.செ.வான அமைச்சர் ரகுபதி, பொன்னேரி சிவா, குடியாத்தம் புவியரசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த துண்டறிக்கையில், இதே தெற்கு மாவட்டத்திலுள்ள ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஆர்ப்பாட்டம் நடக்கும் அறந்தாங்கி நகரில் வசிப் பவருமான அமைச்சர் மெய்யநாதன் பெயரோ, படமோ இடம் பெறவில்லை. இதனால் அமைச்சர் மெய்யநாதன் ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் ஆதரவாளர்கள், "தொடர்ந்து தெற்கு மாவட்ட நிகழ்ச்சிகளில் எங்கள் அமைச்சர் மெய்யநாதனைப் புறக்கணித்துவருகின்றனர். சீனியரான மா.செ.வும், அமைச்சருமான ரகுபதி இதனை ஆமோதிக்கிறார். இதுவரை பொறுமையாக இருந்தோம். இனியும் பொறுமையாக இருக்க வேண்டியதில்லை. கட்சித் தலைமைக்கு இந்த துண்டறிக்கைகளுடன் புகார் கொடுப்போம்... கட்சி தலைமை நல்ல முடிவெடுக்கட்டும்''’என்றனர்.
மேலும், "அமைச்சர் ரகுபதி சீனியராக இருந்தாலும் தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் மெய்யநாதனைத் தான் மா.செ.வாக்க வேண்டும் என்று தலைவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். ஆனால் "சீனியரான நான் இருக்கும்போது மெய்யநாத னை மா.செ. ஆக்கினால் நல்லாயிருக்காது' என்று கட்சித் தலைமையிடம் பேசி மா.செ. பதவியை வாங்கி வந்த அமைச்சர் ரகுபதி, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆலங்குடி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வான மெய்யநாதன் பெயரை நீக்கிவிட்டு வேட் பாளர் பட்டியல் தயார் செய்து கொடுத்து, தலை மையிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். "அவர் ஜெயிக்க மாட்டார் என்று பெயரைச் சேர்க்க வில்லை' என்று ரகுபதி, கே.என். நேருவிடம் சொல்ல... "அவர் ஜெயிக்கிறார், தோற்கிறார் அதை கட்சி முடிவு செய்யும், சிட்டிங் எம்.எல்.ஏ. பெயரில்லாமல் எப்படி பட்டியல் தயார் செஞ்சீங்க. அவர் பெயரைச் சேர்த்து எழுதிக் கொடுங்க' என்று பேசிய பிறகு மெய்யநாதன் பெயரை சேர்த்துக் கொடுத் தார். தேர்தல் முடிவுகள் வந்தபோது மாவட்டத்திலேயே அதிக வாக்கு கள் வாங்கி வெற்றிபெற்றவர் மெய்யநாதன். ஆனால் ரகுபதி கடைசிச் சுற்றுவரை போராடி சில ஆயிரம் ஓட்டுகளில்தான் வெற்றி பெற்றார்.
மெய்யநாதன் அமைச்சரான பிறகும் அவருடன் இணக்கம் காட்டாமல் தொடர்ந்து புறக்கணித்துக்கொண்டேயிருக்கிறார். ரகுபதியின் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி என்றால், "அமைச்சர் ரகுபதி இல்லாமல் நான் வரமாட்டேன்' என்று மெய்யநாதன் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்கிறார். ஆனால் ரகுபதி, "எந்த நிகழ்ச்சியிலும் மெய்யநாதன் பெயரை போடக்கூடாது' என்று சொல்லி வைத்திருக்கிறார். அப்படித்தான் கடைசியாக நடந்த ஆர்ப்பாட்டத்திலும்கூட மெய்யநாதன் பெயரை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார்.
அதேபோல அமைச்சர் மெய்யநாதனின் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலம் அறிவொளி நகர் பழங்குடியினர் காலனி (நரிக்குறவர் காலனி), எல்.என்.புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டு கிராமத்திலுள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவர, வாகன வசதி வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத் திருந்தனர். நிச்சயம் ஏற்பாடு செய்வதாக சொன்ன அமைச்சர், இப்ப கல்வித் துறை மூலம் வேன் வசதி செய்து கொடுத்துள்ளார். புதன்கிழமை அதற்கான தொடக்கவிழா அறிவொளி நகரில் நடந்தது. இதில் இரு அமைச்சர்களும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொகுதி அமைச்சர் மெய்யநாதன் திடீரென பொறுப்பு மாவட்டமான மயிலாடுதுறைக்குச் செல்லவேண்டிய நிலையில்... "அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக்கூடாது. நான் வருகிறேன், நிகழ்ச்சியை நடத்தியே ஆகணும்' என்று அமைச்சர் ரகுபதி சொன்னதால், தொகுதி அமைச்சர் இல்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர், "பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவசரமாக மயி லாடுதுறை சென்றுவிட்டதால் அவரால் வரமுடியவில்லை' என்று சமாதானம் செய்து பேசிவிட்டுச் சென்றார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறோம். சரி செய்வதாக சொல்லிச்சென்றுள் ளார். இப்படியே தொடர்ந்து புறக்கணிப்பதால் வரும் தேர்தல்களில் பெரும் பாதிப்புதான் ஏற்படும் நிலை உள்ளது''’ என்றனர்.
தொடர்ந்து ஆளும் தி.மு.க. உட்கட்சிப் பூசல்களால் சிக்கித் தவிப்பதால் உ.பி.க்கள் உற்சாகமிழந்து காணப் படுகின்றனர். இதனால் தனித் தனி கோஷ்டிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.