மருத்துவக் கழிவுகளுடன் மருத்துவக்கல்லூரி! -புதுக்கோட்டை அவலம் !

ss

ந்தியாவின் முதல் பெண் மருத்துவரைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று பல வருட கோரிக்கையை ஏற்று கடந்த 2011-ல் அப்போதைய தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் புதுக்கோட்டையில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட அடிக்கல்நாட்டினார்.

தொடர்ந்து ஆட்சி மாற்றம் வந்து தாமதமாகி, மருத்துவக் கல்லூரி கோரிக்கைவைத்த தோழரும் சட்டமன்ற உறுப்பினருமான முத்துக் குமரன் மரணமடைந்த பின்தான் நிதி ஒதுக்கப் பட்டு, 2017 ஜூன் 6-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடியால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறந்துவைக்கப் பட்டது.

ss

இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி லிருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளை சுத்திகரித்து தண்ணீரை மறுபயன்பாட்டிற்கு கொடுக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டிருந்தது. ஆனால் 2018 நவம்பரில் வீசிய கஜா புயல், மாவட்டத்தையே புரட்டிப்போட்டதில் மருத்துக் கல்லூரிக்குள்ளும் பாதிப்பு ஏற்பட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளு

ந்தியாவின் முதல் பெண் மருத்துவரைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று பல வருட கோரிக்கையை ஏற்று கடந்த 2011-ல் அப்போதைய தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் புதுக்கோட்டையில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட அடிக்கல்நாட்டினார்.

தொடர்ந்து ஆட்சி மாற்றம் வந்து தாமதமாகி, மருத்துவக் கல்லூரி கோரிக்கைவைத்த தோழரும் சட்டமன்ற உறுப்பினருமான முத்துக் குமரன் மரணமடைந்த பின்தான் நிதி ஒதுக்கப் பட்டு, 2017 ஜூன் 6-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடியால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறந்துவைக்கப் பட்டது.

ss

இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி லிருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளை சுத்திகரித்து தண்ணீரை மறுபயன்பாட்டிற்கு கொடுக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டிருந்தது. ஆனால் 2018 நவம்பரில் வீசிய கஜா புயல், மாவட்டத்தையே புரட்டிப்போட்டதில் மருத்துக் கல்லூரிக்குள்ளும் பாதிப்பு ஏற்பட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளுடனான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கால்வாய் களில் மிதந்து அருகிலுள்ள ராஜாப்பட்டி, முள்ளூர் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களுக்குள் போய் அங்குள்ள நீர்நிலைகளை அசுத்தமாக்கியது.

இதனால் அந்தப் பகுதி மக்கள் கொதிப்படைந்தனர். குடிநீர் மாசுபட்டது, குளத்து நீர் உடலில் அரிப்பு ஏற்படுத்தியது. பல நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை மறுசீரமைப்பு செய்யக் கோரி மருத்துவக்கல்லூரி நிர்வாகமும், கிராம மக்களும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல முறை கோரிக்கைவைத்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. ஆட்சியாளர்களிட மும் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் பயனில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்திவந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் சான்று வழங்க மறுத்து வந்ததுடன், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. 10 மாதங்களாக மருத்துவக் கல்லூரி முதல்வர் வாய்தாவிற்கு ஆஜராகிவருகிறார்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி வட்டாரத் தில் கூறும்போது, "மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை தொடங்கும்போது நூற்றுக்கணக்கில் உள்நோயாளிகளும், ஒரு நாளைக்கு சில ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும் வந்துபோனார்கள். அப்போது அந்த சுத்திகரிப்பு நிலையம் போதுமான தாக இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு சுமார் 5000 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துù சல்கின்றனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சைகள் நடக்கின்றன. இப்படி அனைத்து கழிவுநீரும் வெளி யேற்றப்படுகிறது. இதனை சுத்தம்செய்ய பெரிய அளவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும் என்று நாங்கள் பொதுப்பணித்துறை கட்டுமானத்துறை யிடம் சொல்லிவிட்டோம். மருத்துவத் துறைக்கும் சொல்லியாச்சு. ஆனால் இன்னும் அமைக்கப்படல. இதனால சுற்றியுள்ள கிராம மக்கள் எங்களுக்கு எதிராகத் திரும்பி யுள்ளனர். இந்த சுகாதாரமற்ற நிலையால் நோய்கள் குணமடைவதில் தாமதம் ஏற்படுவதுடன் புதிய நோய்களும் ஏற்படுகிறது.

ss

இந்த நிலையில்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் சான்று கொடுக்கவில்லை. இதனால் மருத்துவமனையில் எத்தனையோ சிகிச்சைகளில் சாதனைகள் செய்தும்கூட அதற்கான சான்றுகளைப் பெறவோ புதிய துறைகளை வளர்க்கவோ தரச்சான்று பெற விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கிறோம். எதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் முதலில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் சான்று இருந்தால்தான் அடுத்த சான்றுக்கு விண்ணப்பிக்கமுடியும். ஒரு கட்டத்திற்குமேல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எங்கள்மீதே வழக்கு போட்டுவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் உள்ளது. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் பல ஆயிரம் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் பல புதிய மருத்துவத் துறைகளை தொடங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால நடப்பு நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது''’என்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவு செயற்பொறியாளர் (பொ) நாகவேல் நம்மிடம், “"கஜா புயலில் சுத்திகரிப்பு நிலையம் சேத மடைந்துவிட்டது. அதன்பிறகு நாங்களும் எஸ்டிமேட் போட்டு அரசுக்கு அனுப்பி யிருக்கிறோம். இன்னும் நிதி கிடைக்கவில்லை. நிதி கிடைத் ததும் உடனே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு விடும். தற்போது ரூ.3.62 கோடி திட்ட மதிப்பீடு அறிக்கை அனுப்பியிருக்கிறோம்''’என்றார்.

மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரியோ, "சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் செய்யவில்லை. அதனால்தான் துறைரீதியான நடவடிக்கையாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது வழக்கு போட்டிருக்கிறோம்''’என்றார்.

அப்பகுதி கிராம மக்களோ, “"ஒவ்வொரு நாளும் பல லட்சம் லிட்டர் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு ஊருக்குள் போய் அனைத்து நீர்நிலைகளை யும் நாசமாக்கிடுச்சு. கிணற்றுத் தண்ணிய குடிக்கமுடியல, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நகரிலுள்ள செப்டிக் டேங்கு களை எல்லாம் சுத்தம் பண்ணி அள்ளிவரும் கழிவுகளையும் இரவு நேரங்களில் எங்கள் பகுதிக்கு வரும் கால்வாய்களில் கொட்டிட்டுப் போயிடு றாங்க''’என்றனர் வேதனையாக.

புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜாவிடம் கேட்ட போது, “"அமைச்சரிடம் நிதி கேட்டிருக்கிறோம். இந்த வருடம் கிடைத்துவிடும். புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து விடலாம். விரைவில் இதற்கு ஒரு முடிவு கிடைத்துவிடும்'' ’என்றார்.

nkn120325
இதையும் படியுங்கள்
Subscribe