"ஹலோ தலைவரே, திராவிட இயக்கங்களில் ஒன்றான ம.தி.மு.க.வில் கொஞ்சகாலமாக ஏற்பட்டிருந்த சலசலப்பு, இப்போது சரிசெய்யப் பட்டிருக்கிறது.''”
"ஆமாம்பா, ம.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டிருந்த மோதல் போக்கு எங்கேபோய் முடியுமோன்னு பலரும் கவலையோடு கவனித்துவந்த நிலையில், சுமுக முடிவு எட்டப்பட்டிருக்குதே!''”
"உண்மைதாங்க தலைவரே, அங்கே கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவோடு, சிறிதுகாலமாக ஏற்பட்டுவந்த மோதலால், அவரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று வைகோவின் மகனும் ம.தி.மு.க. வின் முதன்மைச் செயலாளருமான துரை. வைகோ, கடந்தவாரம் கலகக்கொடியை உயர்த்தி னார். அதற்கு வைகோ ஒத்துக்கொள்ளாத நிலை யில், தனது கட்சிப் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, ம.தி.மு.க.வை மல்லை சத்யா சிதைப்ப தாக மறைமுக அறிக்கையையும் வெளியிட்டார். சத்யாவோ, "நான் என்றைக்கும் வைகோவின் தொண்டனாகவே இருப்பேன்' என்று அந்த நிலையிலும் அறிவித்தார். இந்த நிலையில் 20ஆம் தேதி, ம.தி.மு.கவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ.''”
"ஆமாம்பா, தமிழக அரசியல் கட்சிகள் எல்லாமும் அதைக் கூர்ந்து கவனிச்சிதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில் பேசிய மா.செ.க்கள் அனைவரும், துரை வைகோ, தன் ராஜினாமாவைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினர். மல்லை சத்யாவோ, என்னை நீங்களே பதவியில் இருந்து நீக்கிவிடுங்கள். நான் தொண்டனாகவே தொடர் கிறேன் எனப் பேசினார். அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டம் அங்கே நிலவிய நிலையில், மதிய உணவு இடைவேளையின்போது. சாப்பாட்டு மேஜையில் வைத்து சத்யாவையும் துரையையும் இணக்கமாக் கும் வகையில் பேசி, சமாதானக் கொடியைப் பறக்கவிட்டாராம் வைகோ. தனது உடல் நிலையைச் சுட்டிக்காட்டி, கட்சியை வழி நடத்த உங்களை எல்லாம் நம்பியிருக்கிறேன் என்று, தழுதழுத்த குரலில் அவர் பேச, இருவரின் இதயமும் உருகிக் கரையத் தொடங்கியதாம். ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நீடித்தது. இதைத் தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் துரை.வைகோ. அவரும் சத்யாவும் அனைவரின் முன்பும் கைகுலுக்கிக் கொண்டு, உற் சாக அலையை அங்கே ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாக, ம.தி.மு.க.வின் சலசலப்பு சர
"ஹலோ தலைவரே, திராவிட இயக்கங்களில் ஒன்றான ம.தி.மு.க.வில் கொஞ்சகாலமாக ஏற்பட்டிருந்த சலசலப்பு, இப்போது சரிசெய்யப் பட்டிருக்கிறது.''”
"ஆமாம்பா, ம.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டிருந்த மோதல் போக்கு எங்கேபோய் முடியுமோன்னு பலரும் கவலையோடு கவனித்துவந்த நிலையில், சுமுக முடிவு எட்டப்பட்டிருக்குதே!''”
"உண்மைதாங்க தலைவரே, அங்கே கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவோடு, சிறிதுகாலமாக ஏற்பட்டுவந்த மோதலால், அவரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று வைகோவின் மகனும் ம.தி.மு.க. வின் முதன்மைச் செயலாளருமான துரை. வைகோ, கடந்தவாரம் கலகக்கொடியை உயர்த்தி னார். அதற்கு வைகோ ஒத்துக்கொள்ளாத நிலை யில், தனது கட்சிப் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, ம.தி.மு.க.வை மல்லை சத்யா சிதைப்ப தாக மறைமுக அறிக்கையையும் வெளியிட்டார். சத்யாவோ, "நான் என்றைக்கும் வைகோவின் தொண்டனாகவே இருப்பேன்' என்று அந்த நிலையிலும் அறிவித்தார். இந்த நிலையில் 20ஆம் தேதி, ம.தி.மு.கவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ.''”
"ஆமாம்பா, தமிழக அரசியல் கட்சிகள் எல்லாமும் அதைக் கூர்ந்து கவனிச்சிதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில் பேசிய மா.செ.க்கள் அனைவரும், துரை வைகோ, தன் ராஜினாமாவைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினர். மல்லை சத்யாவோ, என்னை நீங்களே பதவியில் இருந்து நீக்கிவிடுங்கள். நான் தொண்டனாகவே தொடர் கிறேன் எனப் பேசினார். அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டம் அங்கே நிலவிய நிலையில், மதிய உணவு இடைவேளையின்போது. சாப்பாட்டு மேஜையில் வைத்து சத்யாவையும் துரையையும் இணக்கமாக் கும் வகையில் பேசி, சமாதானக் கொடியைப் பறக்கவிட்டாராம் வைகோ. தனது உடல் நிலையைச் சுட்டிக்காட்டி, கட்சியை வழி நடத்த உங்களை எல்லாம் நம்பியிருக்கிறேன் என்று, தழுதழுத்த குரலில் அவர் பேச, இருவரின் இதயமும் உருகிக் கரையத் தொடங்கியதாம். ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நீடித்தது. இதைத் தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் துரை.வைகோ. அவரும் சத்யாவும் அனைவரின் முன்பும் கைகுலுக்கிக் கொண்டு, உற் சாக அலையை அங்கே ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாக, ம.தி.மு.க.வின் சலசலப்பு சரி செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 9 தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.''”
"நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியின் ஐ.டி. விங்க் கூட்டம் அவர்கள் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?''”
"த.வெ.க.வின் இந்த ஐ.டி. விங்க்கின் கூட்டம் விஜய் தலைமையில் நடப்பதாக இருந்தது. ஆனால், தான் நடித்துவரும் ’ஜனநாயகன்’ பட சூட்டிங்கை அவரால் கேன்சல் செய்ய முடியவில்லை. அதனால், சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடியே ஜூம் மீட்டிங் மூலம் கலந்துகொண்டு உரையாடுகிறேன் என்று விஜய் சொன்னதால், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை அதற்கேற்க நிர்வாகிகள் மாற்றி அமைத்த னர். கடைசியில் புஸ்ஸி ஆனந்தையும், ஆதவ் அர்ஜுனையும் அழைத்து, அந்தக் கூட்டத்துக்காக, வீடியோவில் பேசி ரெக்கார்டு செய்திருக்கிறேன். அதைக் கூட்டத்தில் போட்டுக்காட்டி, மேனேஜ் செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டாராம் விஜய். அவர் சொன்னபடியே அந்த உரையைக் கூட்டத்தில் ஒளிபரப்பினார்கள். தனது ரெக்கார்டிங் உரையில் நம்முடைய சோசியல் மீடியா படை, இந்தியாவிலேயே பெரிய படை. ஆக்கப்பூர்வமாகப் பேசுங்கள். உங்கள் பேச்சில் ஒழுக்கமும் கண்ணியமும் இருக்கவேண் டும். நீங்கள் த.வெ.க.வின் சமூக ஊடகப் படை வீரர்கள்’ என்று உற்சாகமூட்டும் வகையில் விஜய் சொல்ல, அது கூட்டத்தில் பங்கேற்றவர்களை ஓரளவு சமாதானப்படுத்தியிருக்கிறது. இருந்தும். ’இந்த உரையை அவரே எங்கள் மொபைலுக்கு அனுப்பி வைத்திருக்கலாமே’என்கிற ஆதங்கமும் அவர்களிடம் எழுந்ததாம்.''”
"தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு, மத்திய அமைச்சர் பதவி தரப்போகிறார்கள் என்று ஒரு செய்தி உலவுகிறதே?''”
"இது குறித்து டெல்லி தரப்பில் கேட்டால், அப்படியெல்லாம் பா.ஜ.க. தேசியத் தலைமைக்கு ஐடியா இல்லை என்கிறார்கள். கமலாலயத் தரப்போ ‘இப்படியொரு தகவலைப் பரப்புகிறவரே அந்த மாஜி நிர்வாகிதான். காரணம், அவர், மாநிலப் பொறுப்பில் இருந்தபோது, டெல்லியில் ’அதைச் செய்து தருகிறேன், இதைச் செய்து தருகிறேன்’ என்று ஏராளமானவர்களிடம், ஏகத்துக்கும் பணம் கறந்திருக்கிறார். அவர் மாநிலப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் பணம் கொடுத்தவர்கள் அதைத் திருப்பிக் கொடுக்குமாறு, கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், அவர்களைச் சமாளிக்கவே விரைவில், தான் மத்திய மந்திரி ஆகப்போகிறேன் என்றும், அப்படி ஆனதும் காரியத்தை முடித்துத் தருகிறேன் என்றும், சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்களை நம்பவைக்கத் தனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள் சிலர் மூலம், இந்தத் தகவலையும் அவ ரும், அவருக்கு கூடவே திரியும் அ.பி.ரெட்டியும் பரப்பிவருகிறார்கள் என்று, ரகசியத்தை அப்பட்டமாகப் போட்டுடைக் கிறார்கள்.''”
"அதே நேரம் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அ.தி.மு.க.வில் சிலரும் மத்திய மந்திரி பதவிக்கு அடிபோடுகிறார்களாமே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும், மாஜி மந்திரி சி.வி.சண்முகமும், மோடி அமைச்சரவையில் எங்களை அமைச்சராக்குங்கள் என்று எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம். ஏற்கனவே பா.ஜ.க.விடம் த.மா.கா. வாசனும், பா.ம.க. அன்புமணியும் அமைச்சர் பதவி கேட்டு தவமாய் தவமிருக்கும் நிலையில், தமிழகத்திற்கு எத்தனை அமைச்சர் பதவியை ஒதுக்குவது? என்று டெல்லி சலித்துக்கொள்வதோடு, அமைச்சர் பதவிக் கெல்லாம் இப்போது வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டதாம். இந்த நிலையில் தம்பி துரையின் நெருக்கடியைத் தாங்கமுடியாத எடப்பாடி, ’"என்ன வெளையாடுறீங்களா? இனி பா.ஜ.க. கூட்டணி பற்றியோ, மத்திய அமைச்சர் பதவி பற்றியோ என்னிடம் நீங்கள் பேசினால், நடப்பதே வேறு.’ என்று கறார்க் குரலில் எரிந்துவிழ... இதைத் தொடர்ந்து தம்பிதுரைக்கும் எடப்பாடிக்கும் உரசல் ஆரம்பித்திருக்கிறது என்கிறது அ.தி.மு.க. தரப்பு. இந்த நிலையிலும் சி.வி.சண்முகம், நப்பாசையோடு எடப்பாடியைச் சுற்றிவருகிறாராம்.''”
"பா.ஜ.க. தலைவர் நயினாரிடம் எடப்பாடி கோபத்தைக் கொட்டியிருக்கிறார் என்று தகவல் அடுபடுகிறதே?''”
"அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி உருவான நிலையில், கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டதாக பா.ஜ.க. செய்தியைப் பரப்பியது. ஆனால், எடப்பாடியோ, தேர்தல் கூட்டணி மட்டும்தான் போட்டிருக்கிறோம். கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். எனினும், பா.ஜ.க. தரப்பினர், கூட்டணி ஆட்சிப் பல்லவியையே பாடி வருவதோடு, ’எங்கள் துணை முதல்வரே’ என்று நயினாருக்கு போஸ்டர் அடித்து மகிழ்ந்தார்கள். நயினாரும் ஒருபடி மேலே சென்று, இலையின் மீது தாமரை மலரும் என்று, கூட்டணி ஆட்சியை உறுதிப்படுத்துவதுபோல் சொன்னார். இதையறிந்து ஏகத்துக்கும் டென்ஷனான எடப்பாடி, நயி னாரைத் தொடர்பு கொண்டு..’"நீங்கள் லாம் என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? கூட்டணி ஆட்சிக்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவே இல்லை. அதனால் அந்த மாதிரி பேசற தையும், துணை முதல்வரேன்னு போஸ்டர் ஒட்டிக் கிறதையும் கை விடுங்க'’என்று காச் மூச் என்று சவுண்ட்விட்டாராம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்குள் இப்போதே சச்சரவுகளா? என்று கேட்கிறார்கள், இரு தரப்புத் தொண்டர்களும்.''”
"எடப்பாடிக்கு எதிராகக் கொடி பிடிக்கத் தொடங்கிய மாஜி மந்திரி செங்கோட்டையன், இப்போது அவர் புகழைப் பாடுகிறாரே?''”
"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிராக முரண்டு பண்ணிவந்த செங்கோட்டையன், திடீரென கடந்த 18ஆம் தேதி, கோபிசெட்டிப் பாளையத்தில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் மைக் பிடித்து,’ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கடந்தமுறை சிறப்பான ஆட்சியை நடத்தினார் எடப்பாடி. 2026 தேர்தலிலும் அவர்தான் முதல்வராக அமர் வார்’ என்று புகழாரம் சூட்டி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார். அவரின் இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று, அவர் ஆதரவாளர்க ளிடமே நாம் விசாரித்த போது, ’செங்கோட்டையனைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுடன் கூட் டணி வைக்கவேண்டும் என்றும் சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட் டோரை அ.தி.மு.க.வில் இணைத் துக்கொள்ள வேண் டும் என்றும் கோரிக்கை வைத்துவந்தார். அவர் விரும்பியபடி பா.ஜ.க. வுடன் கூட்டணியை அமைத்துக்கொண்ட எடப்பாடி, அடுத்து, ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா வகையறாவை கட்சியில் இணைப்பதை விட, எல்லோரும் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதுபோல் திட்டமிடுவோம். இந்தத் திட்டத்தை அமித்ஷா விடமே நான் கூறி யிருக்கிறேன் என்று கூறி செங்கோட்டையனை யும் கூல்படுத்திவிட்டார். அதனால்தான் எடப் பாடிக்கு மறுபடியும் ஜே போடுகிறார் செங்ஸ் என்கிறார்கள்.''”
"பா.ஜ.க.வின் புதிய தலைவரான நயினாருக்கு அந்தக்கட்சியில் வரவேற்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டதே?''”
"கடந்த 17-ந் தேதி முதல் 20ஆம் தேதிவரை சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகிய 7 பெருங்கோட்டங்களில் நயினாருக்கு வரவேற்புப் பொதுக் கூட்டங்களை பா.ஜ.க.வினர் நடத்தினர். சென்னையில் நடந்த கூட்டத்தின்போது, கட்சியின் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டிருந்தனர். அங்கு பேசிய பா.ஜ.க.வின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், ’நயினார் தலைவராகத் தேர்வானதும் அவருக்கு முதல் வாழ்த்தைச் சொன்னவர் நம்முடைய முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின்தான். நெல்லையில் இருந்த நயினாரை தேடிப்பிடித்து அவர் வாழ்த்தைச் சொன்னார். அமைச்சர்களும் நயினாருக்கு வாழ்த்துச் சொல்வார்கள் எனப் பேசியது சோசியல் மீடியாக்களில் வைரலானது. ''”
"மதுரை மாநகர காவல்துறை ஆணை யரின் நடத்தையால், துறையின் பெண் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, மதுரை காவல் ஆணையர் லோகநாதன், துறையில் இருக்கும் பெண் அதிகாரிகளைக் கண்டால் எரிந்து விழுவதோடு, அவர்களைக் கறாராகவும் கெடுபிடியாகவும் நடத்துகிறாராம். அதேபோல் க்ரைம் மீட்டிங் நடக்கும்போது அவர்களை ஒருமையில் பேசுவதோடு, வயர்லெஸ் மைக்கிலும் அழைத்து அவர்களைத் திட்டுகிறாராம். இவரது இது போன்ற நடவடிக்கைகளால், மதுரையில் துணை ஆணையராகப் பணியாற்றிவந்த மதுகுமாரி ஐ.பி.எஸ், நான்கு மாதங்களுக்கு முன்பு, டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு போய்விட்டாராம். ’பெண்கள் முன்னேற்றத்தில் இன்றைய முதல்வர் அதிக அக்கறை காட்டிவரும் நிலையில், காவல்துறையில் உள்ள பெண்களுக்கு உற்சாகம் தராவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை கமிஷனர் இன்சல்ட் பண்ணாமல் இருந்தாலே போதும்’ என்கிறார்கள் மகளிர் காக்கிகள்.”
"நானும் ஒரு பெண் அதிகாரிக்கு நேர்ந்த அநீதி தொடர்பான தகவலைப் பகிர்ந்துக் கறேன். பொது நிகழ்ச்சிகளில் ஆபாசமாகவும் ஏடாகூடமாகவும் பேசி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் ’பொன்முடித்தனம்’ தி.மு.க.வில் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், அடாவடியாக மேடை ஏறிய, தி.மு.க. ஒ.செ. தமிழ்மணி, விழாவில் கலந்து கொண்ட சமூகநல அதிகாரி பகவதியை, ஒருமையில் பேசி மோசமாகத் திட்டித் தீர்க்க... இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் அதிகாரி, அங்கிருந்து உடனடி யாக டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு போய்விட்டாராம். கட்சியினரிடமே கமிஷன் வாங்குவது உள்ளிட்ட புகார்கள் ஏற்கனவே தமிழ்மணி மீது இருந்துவரும் நிலையில், அவரது இந்த அடாவடி அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.''”