Advertisment

இளைய தலைமுறையை நாசம்பண்ணும் எம்.டி.எம்.ஏ. நைஜீரிய மாஃபியாக்கள் கைவரிசை!

ff

சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் கருநாகப்பள்ளி இன்ஸ் பெக்டர் போதகுமார் ரவுண்ட்ஸி லிருந்தபோது சாலையின் ஒதுக்குப் புறமான ஒரு கட்டடத்தில் நான்கு இளைஞர்கள் போதைக் கிறக்கத்தில் ஆடை கலைந்ததுகூடத் தெரியமால் ஒருவர்மேல் ஒருவர் கிடந்திருக் கின்றனர். அவர்களை அள்ளிக் கொண்டுவந்த இன்ஸ்பெக்டரும், போலீசாரும் அவர்களைச் சோதித்ததில் ஒரு கிராம் அளவு உப்பு போன்ற பாக்கெட் கிடைத்திருக்கிறது.

Advertisment

இளைஞர்களின் போதை இறங்கியபிறகு இன்ஸ்பெக்டர் அவர்களை விசாரித்திருக்கிறார். கல்லூரி மாணவர்களான அவர்கள், “"லோக்கல் ஏஜெண்ட் ஒருவனிட மிருந்து அரைகிராம் 2,500 ரூபாய் விலையில் வாங்கினோம். அந்தப் பொருளை நாக்கில் தொட்டுவைத்த 15 நிமிடங்களுக்குள்ளாக போதை ஏறிவிட்டது. எவ்வளவு நேரம் கிடந் தோம் எனத் தெரியாது''” என்றிருக் கிறார்கள். அவர்கள் மூலமாக, அவர்களுக்கு விற்பனை செய்த நபரை வளைத்த இன்ஸ்பெக்டர், அவனிட மிருந்து இரண்டு கிராம் அளவு போதைக் கரைசலையும் கைப்பற்றியிருக்கிறார்.

Ad

dd

பிடிபட்டவற்றை ஆய்வுக்காக அனுப்பிய இன்ஸ்பெக்டருக்கு, அவை மெத்திலீன் டையாக்சி மெத் அம்பீட்டமைன் என்கிற எம்.டி.எம்.ஏ. எனும் போதைப் பொருள் என்றும், நீண்ட நேரம் போதை தரக்கூடியது என்றும், கவனமாகக் கையாள வேண்டிய ரகம் என்றும் தெரிவிக்கப் பட்டது. உஷாரான இன்ஸ்பெக்டர், விற்பனை செய்தவர்களிடம் விசா ரணையை இறுக்க, "இந்தச் சரக்குகளை பெங்களூரிலிருக்கும் வெளிநாட்டவரான நைஜீரியாவைச் சேர்ந்தவரிடமிருந்து வாங்கினோம்' என்றிருக்கிறார்கள்.

பிடிபட்டவனுடன் பெங்களூர் சென்றவர், அவனைக் கொண்டே "5 கிராம் சரக்கு தேவை' என்று அந்த நைஜீரீய பார்ட்டியிடம் பேசவைத்து, குறிப்பிட்ட இடத்திற்கு சரக்குடன் வரச் சொல்ல, அமௌண்ட் அதிகம் கிடைக்கிறதே என்ற குஷியில் ஏஜெண்ட் குறிப்பிட்ட இடத்திற்கு சரக்குடன் வந்த நைஜீரிய நாட்டுக்காரனை கைதுசெய்து கேரளா திரும்பியிருக்கிறார் இன்ஸ்பெக்டர்.

விசாரணையில், நைஜீரியாக்காரர் பல விஷயங்களை வெளிப்படுத்தியது கண்டு அதிர்ந்துபோயிருக்கிறது போலீஸ் டீம்.

ff

போலீஸ் அதிகாரிகள், எம்.டி.எம்.ஏ. என்கிற இந்த போதைப் பொருளை அத்தனை எளிதாக அடை யாளம் கண்டுவிட முடியாது. சாதாரண மாக பவுடர் போன்று நைசாக இருந்தால் யாரும் எளிதில் சந்தேகப்பட்டு விடுவார்கள். ஆனால் இந்தச் சரக்கு ரெண்டுமில்லாமல் டாட்டா உப்பு போன்று நெருநெருவென்று இருப்பதால் இதனைக் கொண்டுவரும்போதோ, கடத்துகிறபோதோ வீட்டு மளிகைச் சாமான் போன்று கொண்டு வந்துவிடு கிறார்கள். நைஜீரியாக்காரர்களே இதன் மெயின் சப்ளையர்கள். சுமார் 500-க்கும் மேற்பட்ட நைஜீரியாக்காரர்கள் பெங்க ளூரு, தமிழ்நாட்டில் உள்ளனர்.

ஒரு கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ.வை இவர்கள் ரூ.800-க்கு விற்கிறார்கள். அதைக் கேரளாவிற்குள் கொண்டுவந்து அரை கிராம் ஐந்தாயிரம் விலையில் விற்பதால் ஒன்பதாயிரத் திற்கும் மேற்பட்ட லாபம் கிடைக்கிறது. இந்த நைஜீரியர்களின் டார்கெட்டே ஐ.டி., இன்ஜினியரிங், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மாணவ- மாணவிகளே. இதைத் தொட்டு நாக்கில் தடவினால் 20 நிமிடங்களில் போதை ஏறிவிடும். அந்த போதை ஆறு மணி நேரம் நீடிக்கும். ஒருவர் இதைப் பயன்படுத்தினால் தொடர்ந்து அதற்கு அடிமையாகி விடுவார்கள்.

வாங்குவதற்கு கையில் பணமில் லாதபோது, ஒரு கிராம் சரக்கைக் கொடுத்து விற்பனை செய்து அதன் லாபத்தில் சரக்கை யூஸ் பண்ணும்படி செய்து அவர்களையே விற்பனையாளராக்கி விடுகிறார்கள். கேரளாவின் கொல்லம், கோட்டயம், கொச்சி, எர்ணாகுளம், போன்ற பல மாவட்டங்களிலிருந்தும் பலர் பெங்களூர் சென்று நைஜீரியாக்காரர்களிடம் சரக்கை வாங்கிவந்து லாபம் பார்ப்பது மட்டுமல்ல, வளரும் இளைஞர்களையும் சீரழிக்கிறார்கள்.

ff

நைஜீரியாவி-ருந்து கடத்தப்படும் எம்.டி.எம்.ஏ. விமானங்களின் கார்கோ, கூரியர் மூலமாக பார்சல் சரக்குகளின் வழியே நுழைந்துவிடுகிறது. மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இந்தச் சரக்குடன் கெமிக்கல்களையும் சேர்த்து செறிவூட்டிவிடுகிறார்கள். உள்நாடுகளில் கூரியர், அரசின் ஸ்பீடு போஸ்ட் மூலமாகவும் கடத்தப்படுகிறது. கடந்தவாரம் கொல்லம் நகரின் விஜய் என்ற வாலிபரின் பெயரில் இந்தச் சரக்கு கூரியர் மூலம் வந்ததைக் கைப்பற்றி அவனை வளைத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனில் இன்ஸ்பெக்டர் போதகுமார் மட்டுமே ஏழரை லட்சம் மதிப்புள்ள 150 கிராம் எம்.டி.எம்.ஏ.வைக் கைப்பற்றியிருக்கிறார். கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்தின் கோவை, திருப்பூர், திருச்சி என்று ஊடுருவியிருக்கிறது.

சைக்கோ தன்மை, மூளை பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றை மட்டுப்படுத்தி உத்வேகப்படுத்தவும், சைக்கோ தெரபி சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்பட்ட இது, பின் கிளப் டான்ஸ், பார்ட்டிகள், மியூசிக் பார்ட்டிகளில் ஊக்க மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன் அமெரிக்காவும், கனடாவும் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கின்றன. அதில் சில கெமிக்கல்களை இணைத்து போதைக்காகப் பயன்படுத்திய தால் பல நாடுகள் அதைத் தடை செய்துவிட்டன. பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், ஆரம்பத்திலேயே இந்த போதைப்பொருட்களைத் தடை செய்யாவிட்டால், எதிர்காலத்தில் சிக்கலாகிவிடும்.

nkn100922
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe