மிழக முதல்வரின் கடலூர் வருகையையடுத்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மேயர் சுந்தரி ராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன், மண்டல தலைவர் பிரசன்னா, கவுன்சிலர்கள் சுபாஷினி ராஜா ஆகியோர் வருகைதந்தனர். கமிஷனர் அனு மற்றும் அதிகாரிகள் தரப்பில் யாரும் வரவில்லை. இதனால் கோபமடைந்த மேயர் சுந்தரி ராஜா, "கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்ததன்பேரில்தான் நான் இங்கு வந்தேன். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை''’என்றார்.

Advertisment

c

நிகழ்ச்சி முடியும் தறுவாயில் மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் பாரதி மற்றும் சில அலுவலர்கள் அவசர, அவசரமாக ஓடிவந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதைக் கண்டு கோபமடைந்த மேயர், "மாநகராட்சி திட்டப் பணிகளை தொடங்கிவைக்க நேரம் ஒதுக்கி, என்னை இங்கு வரச் சொல்லிவிட்டு நீங்கள் யாரும் வரவில்லையே ஏன்?''’என்று கேள்வி யெழுப்பியதோடு, “"கடந்த சில நிகழ்ச்சிகளாக இதே போல்தான் நடந்துகொள்கிறீர்கள். பெண் என்பதால் மதிக்காமல், நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறீர்களா?''” என்று ஆவேசக் குரலில் பேசினார்.

Advertisment

கடலூர் மாநகராட்சியில் அடிக்கடி முட்டல் -மோதல்கள் நடக்கின்றன. என்னதான் நடக்கிறது மாநகராட்சியில் என்பது குறித்து கவுன்சிலர்களிடம் விசாரித்தோம்.

"கடலூர் மாநகராட்சி கமிஷனராக உள்ளவர் திருமதி அனு ஐ.ஏ.எஸ். இவர் நேர்மையாகச் செயல்படும் கமிஷனர். திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த முனைகிறார். இவர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமாரின் மனைவி. மேயருக்கும், கமிஷனருக்கும் சில விஷயங்களில் முரண்பாடு கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு மஞ்சக்குப்பம் மைதானத் தில் கட்டடப் பணி துவக்கும் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ளு மாறு வாட்ஸ்-அப் மூலம் மட்டுமே தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து சரியான தகவல் இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாகவே கமிஷனர் உட்பட அதிகாரிகள் அதில் கலந்துகொள்ளவில்லை'' என்கிறார்கள் சில கவுன்சிலர்கள்.

Advertisment

கடந்த செப்டம்பர் மாதம் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர்கள் தங்கள் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்த, காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அப்போது பாரூக் அலி என்ற கவுன்சிலரை ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கியதாகக் கூறி கவுன்சிலர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சில தி.மு.க. கவுன் சிலர்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே., கவுன்சிலர்கள், மேயர் இரு தரப்பையும் அழைத்துப் பேசி சமரசம் செய்துவைத்தார். சுந்தரி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கவுன்சிலர்களுக்கும் மேயருக்குமிடையே அவ்வப்போது சலசலப்பு இருந்துகொண்டே உள்ளது.

இதன் தொடர்ச்சியாக மஞ்சக்குப்பம் மைதான கட்டடம் கட்டுமானப் பணி துவக்க விழா நிகழ்ச்சிக்கு மறுநாள் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. கவுன்சிலர் சக்திவேல், "எனது வார்டு பகுதியில் திட்டப் பணிகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது எதற்கு இந்த தேவையற்ற கூட்டம்?''” என்று குரலெழுப் பினார்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா, "மேயருக்கு மரியாதை கொடுத்துப் பேசுங்கள். உங்கள் வார்டுக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை மட்டும்தான் பேசவேண்டும்''’என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

cc

உடனே சக்திவேல், "நீங்கள் மேயருக்கு ஜால்ரா அடிக்காதீர்கள்''’என்று கூற வாக்குவாதமாகி, சக்திவேல் வெளிநடப்பு செய்தார்.

தி.மு.க. கவுன்சிலர் நடராஜன் பேசும்போது, "மாநகராட்சியில் வரி வசூலில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் வரி கட்டுவதற்கு தாமதம் செய்பவர்கள் வீட்டின் முன்பு பள்ளம் தோண்டுவது, வீட்டின் முன்பு குப்பை கொட்டுவது, வீட்டு படிக்கட்டுகளை இடிப்பது என சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். அதைத் தடுக்கவேண்டும்'' என்று கூற... இதே கருத்தை வலியுறுத்தி பா.ம.க. சரவணன் போன்றவர்களும் குரல் கொடுத்தனர்.

மேயர் பதவிக்கு போட்டியிட்ட, கவுன்சிலர் கீதாகுணசேகர் பேசும்போது "கடலூர் மாநகரத்தில் புதிய பஸ்நிலையம் எங்கு அமைக்கப்படும் என்பதில் ஆண்டுக்கணக்கில் இழுபறியும் குழப்பமுமாக உள்ளது. இதை மேயர் தெளிவுபடுத்தவேண்டும்''’என்றார்.

அதற்குப் பதிலளித்த மேயர், "எம்.புதூர் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க, சென்னையிலிருந்து வந்த அதிகாரிகள் குழு ஆய்வுசெய்து பரிந்துரைத்துள்ளது''’என்றார்.

அப்போது துணைமேயர் தாமரைச் செல்வன், "எம்.புதூரில் பஸ் நிலையம் கொண்டுவருவதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. மாநகராட்சி பகுதிக்குள்தான் பஸ் நிலையம் கொண்டுவரவேண்டும்''’என்று தனது கருத்தை தெரிவித்தார்.

"மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, மேயர் தரப்பிலிருந்து செய்யவேண்டிய சலுகைகள் முறையாக போய்ச் சேரவில்லை. அதனால்தான் மாநகராட்சி கூட்டத்தில் காரசார மோதல், மறியல் பரபரப்பு நடக்கிறது' என்கிறார்கள் விவரமறிந்த மாநகர்வாசிகள்.

-எஸ்.பி.எஸ்.