96 கவுன்சிலர்களின் ஆதரவுடன் கோவை மாநகராட்சியின் தி.மு.க. மேயராக பதவி வகித்து முழுதாக இரண்டு ஆண்டுகள்தான் கடந்திருக்கின்றது. அதற்குள் மேயரைச் சுற்றி ஓராயிரம் சர்ச்சைகள். நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றாயிற்று. மேயர் மாற்றம் எப்பொழுது? என கேள்விகள் வந்த நிலையில், "அடுத்த மேயர் நானே' என சமீப நாட்களில் மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர்களில் பலர் ஒருவருக்குத் தெரியாமல், ஒருவராக கோவையிலிருந்து சென்னைக்குப் படையெடுத்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யாராக இருக்கும்? என்ற நிலையில், மாநகர மா.செ. கார்த்தியின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, மீனாலோகு மற்றும் நிவேதா என பலரும் மேயர் கனவில் இருந்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவால் சத்தமில்லாமல் மேயரானர் 19-வது வார்டு கவுன்சிலரான கல்பனா ஆனந்தகுமார். அமைச்சர் செந்தில்பாலாஜி களத்திலிருக்கும்போது அடக்கி வாசித்த போட்டியாளர்கள், செந்தில்பாலாஜியின் சிறைவாசத்திற்கு பிறகு நேரடியாகவே மேயரை எதிர்க்க ஆரம்பித்ததும், போதாக்குறைக்கு மேயரே தனது அதிமேதாவிதனத்தைக் காண்பித்ததும் மாநகராட்சியை முடக்கிப்போட்டது. பாதிப்பு என்னவோ பொதுமக்களுக்குத்தான்.
பெயர், புகைப்படம் தவிர்த்த தி.மு.க. கவுன்சிலர் ஒருவரோ, ""மேயர் கல்ப

பெயர், புகைப்படம் தவிர்த்த தி.மு.க. கவுன்சிலர் ஒருவரோ, ""மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர் என மக்களின் பிரதிநிதிகள் யார் சென்று குறைகளை முன்வைத்தாலும் அமைச்சரைப் பாருங்கள் என ஒரு வருடமாக தட்டிக்கழித்து வந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்குப் பிறகுதான் மேயரின் உண்மையான சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. இதில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, கார்த்திக் ஆகியோர் மாமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போல பேச ஆரம்பித்தனர். மாமன்றத்தில் சலசலப்பிற்கு பஞ்சமில்லை. இதனால் கடுப்பான மேயர், மண்டலத் தலைவர்களை தன்னுடைய வழிக்குக் கொண்டுவர சில திட்டங்களைத் தீட்டினார்.
குறிப்பாக, மண்டலவாரியாக வரும் அனைத்து டெண்டர்களையும் மண்டல தலைவரே நேரடியாக வழங்கும் வழக்கம் இருந்துவந்தது. இதனை கையிலெடுத்து, மண்டல தலைவர்களின் கைகளை கட்டிப்போட அனைத்து டெண்டர்களும் மேயர் ஒப்புதல் மூலமாகவே வழங்கப்படும் என்ற தீர்மானத்தை அவசர அவசரமாக நிறைவேற்றினார். மேயரின் இந்த செயல்பாடு மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டுசென்றது. அதுமட்டுமின்றி மேயர், துணைமேயர் துணையுடன் ஒப்பந்த நிறுவனங்களை அழைத்து "எங்களைக் கேட்காமல் யாரும் டெண்டரில் பங்கேற்கக்கூடாது. அப்படிப் பங்கேற்றால் ஒப்பந்தப் பணி செய்யலாம், அதற்கான பில் பாஸ் ஆகாது' என மிரட்டல் விடுத்து, அதற்காக வாட்ஸ்ஆப் குழுவையும் ஆரம்பித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டார். இதுகுறித்து ஒப்பந்தக்காரர்கள் போர்க்கொடி தூக்க, ""எனக்காக கேட்கிறேனா? நகர்ப்புற அமைச்சர்தான் கேட்க கூறியிருக்கின்றார்'' என அவர்களின் வாயை அடைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் நேருவிற்கும், தலைமைக்கும் சென்றது. தேர்தல் முடியட்டும், சீர் செய்வோம் என்றிருக்கிறார்கள். அதற்காக காத்திருக்கின்றோம்'' என்கிறார் அவர்.
முன்னதாக, மத்திய மண்டலத் தலைவரான மீனா லோகுவோ, ""என்னுடைய மண்டலத்திலிருந்து அனுப்பப்படும் கோப்புக்களுக்கு கையெழுத்து இடுவதில்லை. உள்நோக்கத்துடன் நிறுத்திவைக்கின்றார் மேயர்"" என பகிரங்கமாக மாமன்றக் கூட்டத்திலேயே வாதிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல், 'மாநகராட்சி நிர்வாகத்தில் மா.செ.க்கள் தலையிட்டால் மேலிடத்தில் புகாரளித்துவிடுவேன் என மேயர் மிரட்டியதையும் குற்றச்சாட்டாக பகிர்கின்றனர்.
மாநில தலைமைக்கு அனுப்பபட்ட உளவுத்துறை அறிக்கையோ, ""நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகள். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்குப் பிறகு கோவை மாநகராட்சியில் எந்தவித பணிகளும் பெரிதாக நடக்கவில்லை. மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் மாநகராட்சியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அ.தி.மு.க. விசுவாசிகள். ஆளும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்விதமாக ஹோட்டல் கடைகள் முதல் நடைபாதை வியாபாரிகள் ஒரு நாளைக்கு இவ்வளவு கொடுக்கவேண்டும் என சிலர் மிரட்டி வசூல் செய்வது, குப்பையில் ஊழல், மாநகராட்சி சுகாதார பணிகள் நடை பெறுவதில்லை, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது இல்லை, அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை, அப்ரூவல் முதல் புதிய வரி மற்றும் பெயர் மாற்றம் என எது வந்தாலும் லஞ்சம், சரிவர சாலை வசதி இல்லை, பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறவில்லை, சுகாதார பணியாளர்கள் போராட்டம் என மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் மத்தியில் மாபெரும் அதிருப்தியை சந்தித்ததே வாக்கு வங்கி சரிவிற்கு காரணம்'' என்கின்றது.
இது இப்படியிருக்க, மேயர் மாற்றம் நிச்சயம் என கோவைக்கும் சென்னைக்குமாக படையெடுத்து வருகின்றனர் பல கவுன்சிலர்கள். குறிப்பாக மாநகர மா.செவாக இருக்கும் நா.கார்த்தி கடந்த வாரத்தில் சென்னைக்கு சென்று அமைச்சர்களை சந்தித்திருக்கின்றார். மத்திய மண்டல கிழக்குத் தலைவரான மீனா லோகுவும் சென்னை சென்று குறிப்பிட்ட அமைச்சர்களை சந்தித்துவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
""மா.செ. கார்த்திக்கிற்கு தன்னுடைய மனைவி இலக்குமி இளஞ்செல்வியை எப்பாடுபட்டாவது மேயர் நாற்காலியில் அமர்த்திப்பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை! இதற்காக எந்த அமைச்சர்களைப் பார்த்தாலும் அது குறித்து அவர் பேசாமல் இருந்தது இல்லை. கடந்த வாரத்தில்கூட சென்னைக்கு திங்கட்கிழமை புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவில் கோவை வந்தார். என்னவென்று கேட்டதற்கு, முப்பெரும்விழாவிற்கான கணக்கை ஒப்படைக்கப் போயிருந்தேன் என்றார். ஆனால் அதிகாரிகள் மத்தியில், விரைவில் மேயர் பதவி எங்களிடம்தான் இருக்கும். தொலைத்துவிடுவேன்'' என்றதாகவும் தகவல் உள்ளது.
மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகுவோ, ""சென்னைக்கு செவ்வாய் அன்று புறப்பட்டு சனிக்கிழமை திரும்பிவந்தார். ஆனால் இதுவரை எதற்காக சென்னை பயணம்? வாய் திறக்கவில்லை. இவர்கள்தான் இப்படியென்றால் 27-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபாலின் கணவரோ, ""சின்னவரை பார்த்துவிட்டு வந்துள்ளேன். நாங்கள்தான் அடுத்த மேயர்"" என கூறிவருவதும் வேடிக்கையானதே. சென்னைக்குச் சென்ற அனைவரும் மேயருக்கு எதிரான ஊழல் பைலைக் கொடுத்தனர் என்பது நிஜம். ஆனால் மேயர் மாற்றம் என்பது தலைமைக்கே தெரியும்'' என்கின்றார் மூத்த கவுன்சிலர் ஒருவர். உண்மைதானோ?