"ஹலோ தலைவரே, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு தொடக்கம் ஜம்முன்னு ஆரம்பமாகியிருக்கே...''”
"ஆமாப்பா.. அவரோட நூற்றாண்டை தி.மு.க.வின் கிளைகள் தோறும் ஓராண்டுக்கு கொண்டாடணும்னு அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கு முன்னோட்டமா நூற் றாண்டு நாளான டிசம்பர் 19ந் தேதி, நந்தனத்தில் உள்ள அரசு கருவூல அலுவலகத்தில் பேராசிரியர் சிலையைத் திறந்து வைத்து, அந்த கட்டிடத்திற்கு அவர் பெயரைச் சூட்டி, அவரது நூல்களை நாட்டுடமையாக்கியிருக்காரே!''”
"தலைவரே.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லுக்கான ஃபீவர் ஆரம்பிச்சிடிச்சி. தேர்தலை பிப்ர வரியில் நடத்திடலாம்ன்னு தமிழக அரசு முடிவு செய்திருக்கு. 2022 ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி கூடுது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப் பினர்கள் இதில் பேசுவார்கள். இறுதியாக முதலமைச்சரின் பதிலுரை இடம்பெறும். அதிகபட்சம் இந்த கூட்டம் 4 அல்லது 5 நாட்கள் வரை நடக்கலாம்ன்னு பேரவை வட்டாரங்கள் சொல்லுது. அந்த வகையில், ஜனவரி 10-ந் தேதிக்குள் பேரவைக் கூட்டம் முடிந்ததும், அதற்கு மறுநாளே உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடலாம்னு மாநில தேர்தல் ஆணையம் யோசிக்கிதாம்.''”
"அதே சமயம், அரசுத் தரப்பிலிருந்து ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, பொங்கல் பண்டிகை முடிந்ததும், 15-ந் தேதிக்கு பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கலாம்னு அரசுத் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனை சொல்லப்பட்டி ருக்குதாம். அதாவது பொங்கல் பண்டிகை ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் வருது. அது முடிந்ததும் தேர்தலை அறிவிக்கலாம்ங்கிறது அரசுத் தரப்பின் எண்ணம். அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடக்கும் என்றும் சொல்கிறார் கள். இந்தமுறை பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை 3-ந் தேதியிலிருந்தே வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கு. கொரோனாப் பரவலைக் கருதி, ஒரேநேரத்தில் கூட்டம் அதிகம் சேராமல் இருக்கவே முன்கூட்டி இதை வழங்கப்போவதாக அரசு சொன்னாலும், தேர்தலை மையப்படுத்தியே முன்கூட்டி கொடுக்கப்படுகிறது என்ற பேச்சும் இருக்கிறது.''”
"18ந் தேதி நடந்த தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தல் பற்றித்தான் பேசப்பட்டதா?'' ”
"ஆமாங்க தலைவரே, மேயர்-சேர்மன் தேர்தலில் 100 சதவீத வெற்றியைக் குவித்தாக வேண்டும்கிற டார்கெட்டை ஸ்டாலின் நிர்ண யித்தார். தோழமைக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்து அந்தந்த மா.செ.க்கள், அவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், தோழமைக் கட்சிகளோ, அது பற்றி ஒருமுறை ஸ்டாலினிடம் உட்கார்ந்து பேசிவிட்டு, பிறகு தி.மு.க மா.செ.க்களிடம் பேசுகிறோம்னு சொல்லுது. அதாவது, குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையில் தங்களுக்கு சீட் ஒதுக்கப்படணும்னு அவர்கள் தரப்பு எதிர்பார்க்குது.''”
"கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்ப்பது வழக்கம்தானே?''”
"அந்த எதிர்பார்ப்பை நேரடியாக சொல்வதற்கோ, மற்ற கோரிக் கைகளை சொல்வதற்கோ கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலினிடம் விவாதிக்க காத்திருக்காங்க. இதுவரைக்கும் நேரம் கிடைக்கலையாம். தோழமைக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக 3 மாதத்திற்கு ஒருமுறையாவது அவர் சந்திக்கணும்னு ஆசைப்படறாங்க. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, கூட்டணிக் கட்சிகளிடம் ஸ்டாலின் எப்படி நடந்துகொண்டாரோ, அதேபோல இப்போதும் அவர் நடந்துக்கணும்னு எதிர்பார்க்கறாங்க.''”
"நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனா, சொந்தக் கட்சி நிர்வாகிகளே சந்திக்க முடியாத அளவுக்கு முதல்வர் பிஸியா இருக்காருன்னு அறிவாலயம் தரப்பு சொல்லுது.''”
"ஆமாங்க தலைவரே.. தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள் இருக்குது. இவற்றுக்கான மேயர் பதவிகளுக்கு நிற்க விரும்பும் வேட்பாளர் களிடம், நேர்காணல் நடத்துவது தி.மு.க.வின் வழக்கமாக இருந்தது. இந்த முறை கவுன்சிலர்களிலிருந்து மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதை முன்வைத்து, நேர்காணலைத் தவிர்த்துட்டாங்க. கவுன்சிலருக்கு விண்ணப்பித்திருப்பவர் களில் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை, மேலிடத்திற்கு கிடைத்துள்ள ரிப்போர்ட் அடிப்படையில் கட்சித் தலைமையே நேரடியாக மேயர் வேட்பாளர்களை அறிவிக்கலாம்னு எதிர்பார்ப்பு இருக்கு.''
"தி.மு.க அரசுக்கு எதிராக அ.தி.மு.க. நடத்திய முதல் ஆர்ப்பாட்டம் எப்படி?''
"தி.மு.க அரசுக்கு உளவுத்துறை கொடுத்த கணிப்பைவிட, அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் பல இடங்களிலும் அதிகளவில் கூட்டத்தோடு நடந்திருக்கு. ஓ.பி.எஸ், இ.பி.எஸ், சி.வி.சண்முகம் இவங்க மேலே, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதா போடப்பட்டிருக்கிற வழக்கில் ஒவ்வொரு இடத்திலும் 1000-க்கும் அதிகமான அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதிலிருந்தே, அ.தி.மு.க. மாஸ் காட்டியிருப் பதை தி.மு.க. அரசு கவனித்திருக்குது. ஆனாலும், இந்தக் கூட் டம் கூட்ட அ.தி.மு.க மாஜிகள் பகீரத முயற்சிகளை எடுத்தாங்க.''
"“ம்...''”
"அவங்களுக்கும் அரசியல் கள நிலவரம் தெரியும்ல... அதனாலதான், மாநகராட்சி-நகராட்சி தேர்தல் களத்தை எதிர்கொள்ளத் தயங்குறாங்க. அண்மையில் எடப்பாடியை சேலத்தில் சந்தித்த மாஜி மந்திரி உடுமலை ராதாகிருஷ்ணன், வருகிற நகர்ப்புற உள்ளட்சித் தேர்தலில் என்னால் முன்புபோல் வேலை பார்க்க முடியாது. கட்சிக்குள்ளும் வெளியிலிருந்தும் சில கத்திகள் என் தலைக்கு மேல் தொங்குது. அதனால், என்னை விட்ருங்கன்னு சொல்ல, இதைக்கேட்டு எடப்பாடி அப்செட் ஆயிட்டாராம். நாங்களும் எல்லாவற்றையும் சந்திச்சிக்கிட்டுத் தானே இருக்கோம்னு எடப்பாடி சொன்னபோது, உங்க கதை வேற, என் கதை வேறன்னு ஓப்பனாவே சொல்லிட்டாராம் ராதாகிருஷ்ணன்.''”
"கொங்கு மண்டல அ.தி.மு.க.வே அதிருதேப்பா?''”
"கொங்குமண்டலத்தில் கொடிகட்டிப் பறந்த மாஜிக்களான வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோ ரும் பழைய மாதிரி எங்களால் வேகமாக செயல்பட முடியாது. தி.மு.க. தரப்பு தீவிரமா, நமக்கு எதிராகக் களமிறங்கிக்கிட்டு இருக்குது. கட்சித் தொண்டர் களிடமும் உற்சாகமில்லை. பல ஊர்களில் கட்சித் தேர்தலில் நிற்கவே ஆள் இல்லைன்னு அவங்க வருத்தப்பட்டிருக்காங்க.''”
"சரிப்பா தி.மு.க.வைக் கண்டு சசிகலாவும் இப்ப பம்முறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கள் போக, மிச்ச சொச்ச சொத்துக்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் சசிகலா, ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதனால், தி.மு.க. அரசை விமர்சிக்க வேண்டாம் என்று தனக்கு நெருக்கமானவர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் அவர், ஜெயா டி.வி.யிலும் தி.மு.க. பற்றி அதிகம் கான்ட்ரவர்சி இடம்பெறக் கூடாது என்று கறாராகச் சொல்லியிருக்கிறாராம். குறிப்பாக தங்கள் மிடாஸ் மதுபான ஆலைக்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கும் அவர், டாஸ்மாக் நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பற்றி எந்த செய்தியும் தங்கள் சேனலில் வரக்கூடாது என்றும் கறார் காட்டுகிறாராம்.''”
"அகில இந்திய அளவில் ஒரு புதுக்கூட்டணி உருவாகுதே?''”
"ஆமாங்க தலைவரே, மோடி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் இல்லாமல், அகில இந்திய அளவில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியை, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முன்னெடுத்துக்கிட்டு இருக் கிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வரான ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் சந்தித்தார்.. அதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பதாகச் சொல்லப்படுது. இப்படி ஒரு முன் முயற்சியை எடுக்க பிரசாந்த் கிஷோரிடம் அசைன்மெண்ட் டைக் கொடுத்ததே திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிதானாம். இந்த நிலையில், இதன் அடுத்த கட்டமாக, ஜனவரியில் ஆன்மீகப் பயணமாகத் தமிழகம் வரும் மம்தா, சென்னையில் ஸ்டாலினை சந்திக்கப் போகிறாராம். அந்த சந்திப்பில் சில அர சியல் திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுக் கப்படும்னு சொல்லப்படுது. பினராய் விஜயனும் இது தொடர்பாக ஸ்டாலினை சந்திக்கிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். மாஜி மந்திரி தங்கமணியின் பினாமியான பள்ளிப்பாளையம் வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவர், அவருக்கு சொந்தமான சொத்தை தங்கமணி தரப்பிடமே விலை பேசினாராம். இதையறிந்து ஆத்திரமான தங்கமணி, எங்கிட்டயே இதை விற்கப் பாக்கறியா?ன்னு கேட்க, கோவிச்சிக்காதீங்க. ஒரு அவசரம் என்று அவர் நழுவினாராம். 900 சி’ வரை மாஜியின் சொத்துக்கள் இவரிடம் சிக்கியிருக்குதாம். இந்த நிலையில் வழக்கறிஞர் சந்திரசேகர் திடீரென மரணமடைய, தற்போது உளவுத்துறையும் விஜிலன்சும் இந்த மரணம் குறித்து தீவிரமா விசாரிக்குதாம்.''”