திருவண்ணாமலை! திமிறும் தி.மு.க. -சைலண்ட் அ.தி.மு.க!
39 வார்டுகளைக் கொண்ட திருவண்ணா மலை நகராட்சியில் 37 வார்டுகளில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுகிறது. இங்கு 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் மறைந்த நகரமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான கராத்தே பாண்டு மனைவி ஹேமா பாண்டுவுக்கு மறைமுக ஆதரவாக, அந்த வார்டு ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதாக தி.மு.க. நிர்வாகிகளிடையே தொடக்கத்தில் புகைச்சல் எழுந்தது. இதுபோன்ற பிரச்சனை களால் சுணக்கம் காட்டிய தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர் எ.வ.வேலு தலையீட்டால் சுமூகமாகி, ஒருங்கிணைந்து களமாடத் தொடங்கியதால் தற்போது தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் முன்னணியில் இருக் கிறார்கள். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, கோஷ்டிப் பூசல் வேட்பாளர்களைப் பலவீனப்படுத்தியுள்ளது. மா.செ. அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ. உட்பட நிர்வாகிகள் யாரும் களத்தில் இறங்கவில்லை. ந.செ. ஜே.எஸ்., மற்ற வேட்பாளர்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது மகனை வெற்றி பெற வைப்பதில் மட்டும் தீவிரம் காட்டுகிறார் என்று ர.ர.க்கள் புலம்புகிறார்கள். இவற்றை யெல்லாம் மீறி, தனிப்பட்ட செல்வாக்கு + பணபலத்தால் பத்துக்கு மேற்பட்ட வார்டுகளில் தி.மு.க.வுக்கு கடும் போட்டியைத் தருகிறார்கள் அ.தி.மு.க. வேட்பாளர்கள். இங்கு சேர்மன் பதவி பொது பெண்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ந.செ கார்த்திவேல் மாறன் மனைவி நிர்மலா, அரசு பொது வழக்கறிஞர் சீனுவாசன் மனைவி ப்ரியா ஆகிய இருவரும் சேர்மன் பதவிக்கான போட்டியில் உள்ளனர். அ.தி.மு.க.வில் மெஜாரிட்டி வெற்றி பெறுவதில் உறுதியில்லாததால் சேர்மன் குறித்து ஆலோசனைகூட நடக்கவில்லை. ரிசல்ட் வரும்போது பார்த்துக்கொள்ளலாமென்று அ.தி.மு.க. சைலண்ட்டாக உள்ளது.
ஆரணி! அ.தி.மு.க.வுக்காக செலவழிக்கும் ஏ.சி.எஸ்!
பட்டுக்குப் பெயர்பெற்ற ஆரணி நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் காங்கிரஸ் 2, வி.சி.க. 1, ம.தி.மு.க. 3 போக மீதியிடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. ஆரணி எம்.எல்.ஏவாக சேவூர் ராமச்சந்திரன் இருப்பதால், நகராட்சியைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் அமைச்சர் எ.வ.வேலுவின் கண்டிப்பினால் கோஷ்டிப்பூசலை ஒதுக்கிவைத்துவிட்டு தி.மு.க. நிர்வாகிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 32வது வார்டில் ம.தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் கௌரியின் கணவர் அருண்மீது போதைப்பொருள் விற்பனையாளர் என்ற குற்றச்சாட்டு விழுந்திருப்பதால் கடுப்பில் உள்ளது தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் மகன் பாபு, சேர்மன் பதவியைக் குறிவைத்து 4வது வார்டில் கவுன்சிலர் வேட்பாளராக நின்றுள்ளார். அதே சேர்மன் பதவியைக் குறிவைத்து தி.மு.க. ந.செ. ஏ.சி.மணி, வார்டு மாறிவந்து 1வது வார்டில் போட்டியிடுகிறார். சேர்மன் கனவில் இருவருமே தாராளமாகச் செலவழிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் நகராட்சி சேர்மன் பதவியைப் பிடிப்ப தற்கு முன்னாள் அமைச் சரும், எம்.எல்.ஏ.வுமான சேவூர்.ராமச்சந்திரன், தனது பினாமியும் ஆதர வாளருமான ஆவின் மாவட்டத் துணைத்தலைவர் பாரி.பாபுவை 13-வது வார்டில் களமிறக்கியுள்ளார். எக்ஸ் சேர்மன் வி.பி.ராதாகிருஷ்ணன் தம்பி ராமகிருஷ்ணன், சேர்மன் பதவி... இல்லையென்றால் துணை சேர்மன் பதவி என்ற கணக்கில் காய் நகர்த்து கிறார். இதற்கிடையே, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.எஸ். தம்பி பாபுவும், துணை சேர்மன் பதவியைக் குறிவைத்து இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். இவர் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வன்னியர்கள் மிகுந்துள்ளதால் 15 வார்டுகளில் போட்டியிடும் பா.ம.க., இரு கட்சிகளின் வாக்குவங்கியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-து. ராஜா
________________________________________
தூத்துக்குடி! அமைச்சரால் பலிகடாவான தொண்டர்கள்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக, சுயேட்சையாக போட்டியிட்டவர்களை நீக்கி வருகின்றது தி.மு.க. தலைமை. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சியில் தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட 15 நபர்களை நீக்கியது தி.மு.க. தலைமை. ஆனால், "அவர்களை தூண்டிவிட்ட அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கட்சியிலிருந்து ஏன் நீக்கவில்லை.?' என கேள்வி எழுப்புகின்றனர் மாவட்ட தி.மு.க.வினர். 15 வார்டுகள் கொண்ட கயத்தாறு பேரூராட்சியில் கூட்டணிக் கட்சியான காங் கிரஸிற்கு 1 வார்டை பகிர்ந்தளித்தது போக, 1, 10, 11 மற்றும் 15-ஆவது வார்டு ஆகிய 4 வார்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட யாரும் முன் வரவில்லை என்பதால் 10 வார்டுகளில் மட்டும் தி.மு.க. போட்டியிடுகின்றது. இந்த பத்து வேட்பாளர்களும் அமைச்சர் கீதாஜீவனால் நேர்காணல் செய்யப்பட்ட கயத்தாறு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் அணியினர். இவர்கள் அனைவருக்கும் பி பார்ம் கொடுக்கப்பட்டு கட்சியின் அங்கீகார வேட்பாளர்களாகக் களமிறங்கிய நிலையில்... "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் என்பதால் தங்கள் தரப்பை புறக்கணிக்கிறார்கள், ஆதலால் நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்' என அறிவித்து அரிக்கேன் விளக்கு சின்னத்தில் அனைத்து வார்டுகளிலும் களமிறங்கினர், கயத்தாறு ஆவின் சொசைட்டி தலைவரான கோதண்டராமன் தரப்பினர். இது குறித்து அமைச்சர் கீதாஜீவன், "கயத்தாறு பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் நாங்கள்தான் உண்மையான தி.மு.க. என மாயை செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் உண்மையான தி.மு.க.வினர் இல்லை. கட்சி சின்னத்தில் போட்டி யிடுபவர்களுக்கு ஆதரவளியுங்கள்'' எனக் கேட்டுக்கொண்ட நிலையில், சுயேட்சையாக போட்டியிட்ட கயத்தாறு ஆவின் சொசைட்டி தலைவர் கோதண்ட ராமன் தரப்பினரை கட்சியினை விட்டு நீக்கியது தி.மு.க. தலைமை. அந்தவகையில் சுயேட்சையாக களம் கண்டாலும் கோதண்டராமன் தரப்பினரே கயத்தாறு பேரூராட்சித் தலைவர் பதவியை கைப் பற்றுவார்கள் என்கின்றனர் அப்பகுதி அரசியலை அறிந்தவர்கள். இதே வேளையில், "தற்பொழுது வரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சுயேட்சைகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றார்'' என கட்சித் தலைமையை உலுக்கி வருகின்றனர் மாவட்ட தி.மு.க.வினர்.
-நாகேந்திரன்
மயிலாடுதுறை! நீயா? நானா?
மயிலாடு துறையில் தேர்தல் சடுகுடு உச்சகட் டத்தில் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., என ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் கள் இங்கே கட்சி பலத்தோடும், பண பலத்தோடும் வரிந்துகட்டுகிறார்கள். இவர்களுக்கிடையில் ஒவ்வொரு கட்சியிலும் சீட்டு கிடைக்காதவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சையாக களமிறங்கி பீதியூட்டி வருகின்றனர். தி.மு.க.வைப் பொறுத்தவரை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனின் பேச்சைக் கூட கேட்காமல், நான் தான் சேர்மன் கேண்டிட்டேட் என்றபடி நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் இருபத்தி ஒன்னாவது வார்டில் போட்டியிடுகிறார். அதே வார்டில் அவரை எதிர்த்து அ.தி.மு.க. நகரச் செயலாளர் செந்தமிழன் குடைச்சல் கொடுத்துவருகிறார். இவர் அ.ம.மு.க.வில் பல காலம் இருந்து, பூம்புகார் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுவிட்டு, பவுன்ராஜ் மாவட்ட செயலாளர் ஆனதும் அ.தி.மு.க. பக்கம் தாவி, எஸ்.பி., ஏட்டு ஆன கதைபோ
திருவண்ணாமலை! திமிறும் தி.மு.க. -சைலண்ட் அ.தி.மு.க!
39 வார்டுகளைக் கொண்ட திருவண்ணா மலை நகராட்சியில் 37 வார்டுகளில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுகிறது. இங்கு 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் மறைந்த நகரமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான கராத்தே பாண்டு மனைவி ஹேமா பாண்டுவுக்கு மறைமுக ஆதரவாக, அந்த வார்டு ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதாக தி.மு.க. நிர்வாகிகளிடையே தொடக்கத்தில் புகைச்சல் எழுந்தது. இதுபோன்ற பிரச்சனை களால் சுணக்கம் காட்டிய தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர் எ.வ.வேலு தலையீட்டால் சுமூகமாகி, ஒருங்கிணைந்து களமாடத் தொடங்கியதால் தற்போது தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் முன்னணியில் இருக் கிறார்கள். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, கோஷ்டிப் பூசல் வேட்பாளர்களைப் பலவீனப்படுத்தியுள்ளது. மா.செ. அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ. உட்பட நிர்வாகிகள் யாரும் களத்தில் இறங்கவில்லை. ந.செ. ஜே.எஸ்., மற்ற வேட்பாளர்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது மகனை வெற்றி பெற வைப்பதில் மட்டும் தீவிரம் காட்டுகிறார் என்று ர.ர.க்கள் புலம்புகிறார்கள். இவற்றை யெல்லாம் மீறி, தனிப்பட்ட செல்வாக்கு + பணபலத்தால் பத்துக்கு மேற்பட்ட வார்டுகளில் தி.மு.க.வுக்கு கடும் போட்டியைத் தருகிறார்கள் அ.தி.மு.க. வேட்பாளர்கள். இங்கு சேர்மன் பதவி பொது பெண்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ந.செ கார்த்திவேல் மாறன் மனைவி நிர்மலா, அரசு பொது வழக்கறிஞர் சீனுவாசன் மனைவி ப்ரியா ஆகிய இருவரும் சேர்மன் பதவிக்கான போட்டியில் உள்ளனர். அ.தி.மு.க.வில் மெஜாரிட்டி வெற்றி பெறுவதில் உறுதியில்லாததால் சேர்மன் குறித்து ஆலோசனைகூட நடக்கவில்லை. ரிசல்ட் வரும்போது பார்த்துக்கொள்ளலாமென்று அ.தி.மு.க. சைலண்ட்டாக உள்ளது.
ஆரணி! அ.தி.மு.க.வுக்காக செலவழிக்கும் ஏ.சி.எஸ்!
பட்டுக்குப் பெயர்பெற்ற ஆரணி நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் காங்கிரஸ் 2, வி.சி.க. 1, ம.தி.மு.க. 3 போக மீதியிடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. ஆரணி எம்.எல்.ஏவாக சேவூர் ராமச்சந்திரன் இருப்பதால், நகராட்சியைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் அமைச்சர் எ.வ.வேலுவின் கண்டிப்பினால் கோஷ்டிப்பூசலை ஒதுக்கிவைத்துவிட்டு தி.மு.க. நிர்வாகிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 32வது வார்டில் ம.தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் கௌரியின் கணவர் அருண்மீது போதைப்பொருள் விற்பனையாளர் என்ற குற்றச்சாட்டு விழுந்திருப்பதால் கடுப்பில் உள்ளது தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் மகன் பாபு, சேர்மன் பதவியைக் குறிவைத்து 4வது வார்டில் கவுன்சிலர் வேட்பாளராக நின்றுள்ளார். அதே சேர்மன் பதவியைக் குறிவைத்து தி.மு.க. ந.செ. ஏ.சி.மணி, வார்டு மாறிவந்து 1வது வார்டில் போட்டியிடுகிறார். சேர்மன் கனவில் இருவருமே தாராளமாகச் செலவழிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் நகராட்சி சேர்மன் பதவியைப் பிடிப்ப தற்கு முன்னாள் அமைச் சரும், எம்.எல்.ஏ.வுமான சேவூர்.ராமச்சந்திரன், தனது பினாமியும் ஆதர வாளருமான ஆவின் மாவட்டத் துணைத்தலைவர் பாரி.பாபுவை 13-வது வார்டில் களமிறக்கியுள்ளார். எக்ஸ் சேர்மன் வி.பி.ராதாகிருஷ்ணன் தம்பி ராமகிருஷ்ணன், சேர்மன் பதவி... இல்லையென்றால் துணை சேர்மன் பதவி என்ற கணக்கில் காய் நகர்த்து கிறார். இதற்கிடையே, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.எஸ். தம்பி பாபுவும், துணை சேர்மன் பதவியைக் குறிவைத்து இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். இவர் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வன்னியர்கள் மிகுந்துள்ளதால் 15 வார்டுகளில் போட்டியிடும் பா.ம.க., இரு கட்சிகளின் வாக்குவங்கியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-து. ராஜா
________________________________________
தூத்துக்குடி! அமைச்சரால் பலிகடாவான தொண்டர்கள்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக, சுயேட்சையாக போட்டியிட்டவர்களை நீக்கி வருகின்றது தி.மு.க. தலைமை. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சியில் தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட 15 நபர்களை நீக்கியது தி.மு.க. தலைமை. ஆனால், "அவர்களை தூண்டிவிட்ட அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கட்சியிலிருந்து ஏன் நீக்கவில்லை.?' என கேள்வி எழுப்புகின்றனர் மாவட்ட தி.மு.க.வினர். 15 வார்டுகள் கொண்ட கயத்தாறு பேரூராட்சியில் கூட்டணிக் கட்சியான காங் கிரஸிற்கு 1 வார்டை பகிர்ந்தளித்தது போக, 1, 10, 11 மற்றும் 15-ஆவது வார்டு ஆகிய 4 வார்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட யாரும் முன் வரவில்லை என்பதால் 10 வார்டுகளில் மட்டும் தி.மு.க. போட்டியிடுகின்றது. இந்த பத்து வேட்பாளர்களும் அமைச்சர் கீதாஜீவனால் நேர்காணல் செய்யப்பட்ட கயத்தாறு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் அணியினர். இவர்கள் அனைவருக்கும் பி பார்ம் கொடுக்கப்பட்டு கட்சியின் அங்கீகார வேட்பாளர்களாகக் களமிறங்கிய நிலையில்... "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் என்பதால் தங்கள் தரப்பை புறக்கணிக்கிறார்கள், ஆதலால் நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்' என அறிவித்து அரிக்கேன் விளக்கு சின்னத்தில் அனைத்து வார்டுகளிலும் களமிறங்கினர், கயத்தாறு ஆவின் சொசைட்டி தலைவரான கோதண்டராமன் தரப்பினர். இது குறித்து அமைச்சர் கீதாஜீவன், "கயத்தாறு பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் நாங்கள்தான் உண்மையான தி.மு.க. என மாயை செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் உண்மையான தி.மு.க.வினர் இல்லை. கட்சி சின்னத்தில் போட்டி யிடுபவர்களுக்கு ஆதரவளியுங்கள்'' எனக் கேட்டுக்கொண்ட நிலையில், சுயேட்சையாக போட்டியிட்ட கயத்தாறு ஆவின் சொசைட்டி தலைவர் கோதண்ட ராமன் தரப்பினரை கட்சியினை விட்டு நீக்கியது தி.மு.க. தலைமை. அந்தவகையில் சுயேட்சையாக களம் கண்டாலும் கோதண்டராமன் தரப்பினரே கயத்தாறு பேரூராட்சித் தலைவர் பதவியை கைப் பற்றுவார்கள் என்கின்றனர் அப்பகுதி அரசியலை அறிந்தவர்கள். இதே வேளையில், "தற்பொழுது வரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சுயேட்சைகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றார்'' என கட்சித் தலைமையை உலுக்கி வருகின்றனர் மாவட்ட தி.மு.க.வினர்.
-நாகேந்திரன்
மயிலாடுதுறை! நீயா? நானா?
மயிலாடு துறையில் தேர்தல் சடுகுடு உச்சகட் டத்தில் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., என ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் கள் இங்கே கட்சி பலத்தோடும், பண பலத்தோடும் வரிந்துகட்டுகிறார்கள். இவர்களுக்கிடையில் ஒவ்வொரு கட்சியிலும் சீட்டு கிடைக்காதவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சையாக களமிறங்கி பீதியூட்டி வருகின்றனர். தி.மு.க.வைப் பொறுத்தவரை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனின் பேச்சைக் கூட கேட்காமல், நான் தான் சேர்மன் கேண்டிட்டேட் என்றபடி நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் இருபத்தி ஒன்னாவது வார்டில் போட்டியிடுகிறார். அதே வார்டில் அவரை எதிர்த்து அ.தி.மு.க. நகரச் செயலாளர் செந்தமிழன் குடைச்சல் கொடுத்துவருகிறார். இவர் அ.ம.மு.க.வில் பல காலம் இருந்து, பூம்புகார் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுவிட்டு, பவுன்ராஜ் மாவட்ட செயலாளர் ஆனதும் அ.தி.மு.க. பக்கம் தாவி, எஸ்.பி., ஏட்டு ஆன கதைபோல நகராட்சி வார்டில் போட்டியிடுவது அரசியல் சுவாரஸ்யம். இருபத்தி ஒன்பதாவது வார்டில் சீட் கேட்ட கட்சிப் பிரமுகர் ரஜினிக்கு, வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நினைத்த நகரம் குண்டாமணி, அந்த வார்டை சி.பி.எம். கட்சிக்கு ஒதுக்கினார். ஆனால் அவருக்காக பலரும் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதிக்க, விழி பிதுங்கிய தி.மு.க. தரப்பு வேறு வழியின்றி அவருக்கு சீட்டு கொடுத்தது. ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை வாபஸ் வாங்க வேண்டாம் என்று சொல்லி, மீண்டும் உள்ளடியில் ஈடுபட்டு வருகிறார்கள் அந்த தி.மு.க. புள்ளிகள். அதேபோல 36-வது வார்டு பட்டியல் சமூகத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் மறைந்த முன்னாள் நகர்மன்றத் துணை சேர்மனும், மாவட்ட துணைச் செயலாளரு மான சத்தியேந்திர னின் மனைவி தீபா சத்தியேந்திரனுக்கு சீட் கிடைக்கும் என்று கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், திடீரென சென்னையில் இருந்து களத்தில் குதித்திருக்கும் விஜியேந்திரன், ”எங்க அண்ணனின் வாரிசு நான் தான் “என்று சுயேச்சையாகக் களத்தை உழப்புகிறார்.. 9-ஆவது வார்டில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மைத்துனர் லிங்கராஜன் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை நகராட்சியில் சேர்மன் கனவில் நகர செயலாளர் குண்டாமணி, முன்னாள் நகர்மன்ற தலைவர் லிங்கராஜன், தொழில் அதிபரும் தி.மு.க. பிரமுகருமான ம.ரஜினி என நீயா? நானா? போட்டி நடக்கிறது. களம் உச்சகட்ட கொதிப்பில்.
-க.செல்வகுமார்
காரைக்குடி! சுயேட்சைகளின் ஆதரவில்...
ஆண்டுக்கு ரூ 25 கோடிக்கும் அதிகமாய் வருவாய் ஈட்டித் தரும் காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நடைபெறவிருக்கின்ற நகர்ப்புறத் தேர்தலில் காங்கிரஸிற்கு 9 வார்டுகளையும், சி.பி.ஐ., ம.தி. மு.க.விற்கு தலா 1 வார்டையும் பகிர்ந்தளித்த தி.மு.க., சேர்மன் பதவியைக் கைப்பற்ற 25 வார்டுகளில் போட்டியிடுகின்றது. "வேட்பாளர்களில் பாதிப்பேர் இப்போதே நான்தான் சேர்மன், துணை சேர்மன் என அடித்துக்கொள் கின்றனர். "எனக்கு ஆதரவு கொடுங்கள். ஆதரவு தரும் கவுன்சிலர் தலைக்கு ரூ 20 லட்சம் அல்லது யுனோவா கார் பரிசு' என பகிரங்கமாகவே அறிவித்து சேர்மன் ஆசையில் கனவு காண்கிறார் தி.மு.க. வேட்பாளர் ஒருவர். சேர்மன் கனவிலிருக்கும் தி.மு.க. வேட்பாளர் முத்துத்துரை ஹாட்பாக்ஸ் உள்ளிட்டவைகளை வாக்காளர் களுக்கு பரிசாக அளித்தாலும் வார்டு தனக்குதான் என முன்பே திட்டமிட்டு கடந்த நான்கு மாதங்களாக களத்தில் இறங்கி வேலைசெய்த தொ.மு.ச.வை சேர்ந்த சுப்பிரமணியன் அவருக்கு டப் கொடுக்கிறார். காரைக்குடி நகராட்சியில் 4-வது வார்டில் இந்துமதி, 5-வது வார்டில் சாந்தி, 6-வது வார்டில் மங்கையர்க்கரசி, 11-வது வார்டில் மெய்யர், 13-வது வார்டில் முகமது சித்திக் போன்ற சுயேட்சை வேட்பாளர்கள் எளிதாக வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் 21-வது வார்டில் ராணி ஜெய்த்துன், 30-வது வார்டில் விஜய் ரசிகர் மன்ற சதீஷ்குமார், 32-வது வார்டில் கனிமொழி ஆகிய சுயேட்சைகள் வெற்றிபெற கூடுதல் வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க. வசமாகும் ராமேஸ்வரம் நகராட்சி! குறிப்பெழுதிய உளவுத்துறை!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகளும், ராமேஸ்வரம் நகராட்சியும் அ.தி.மு.க. வசமாகும் என உளவுத்துறை குறிப்பெழுத திகிலில் உள்ளனர் தி.மு.க.வினர். தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் தங்கம் தென்னரசுவையும், ராமேஸ்வரம் நகராட்சிக்கான தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியையும் நியமித்தது தி.மு.க. அ.தி.மு.க.வோ ராமநாதபுரம் நகராட்சியின் முன்னாள் பொறுப்பு சேர்மனான கவிதாவை களமிறக்கியுள்ளது. இந்நிலையில் உளவுத்துறை குறிப்பொன்று தலைமைக்குச் சென்றுள்ளது. அந்த குறிப்பினால் அதிருப்தியடைந்த தலைமை மாவட்ட தி.மு.க.வினரை வறுத்தெடுக்க, மா.செ.-வும், தொகுதியின் ச.ம.உ.மான காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் மற்ற இடங்களுக்குச் செல்லாமல் ராமேஸ்வரத்திலேயே டேரா அடித்துள்ளார்.. மாவட்ட உளவுத்துறையால் மாநில தலைமைக்கு அனுப்பப்பட்ட உளவுத்துறை குறிப்பில், "மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர், அபிராமம், தொண்டி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி உள்ளிட்ட பேரூராட்சிகளை யும், நகராட்சிகளில் ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் பரமக்குடி ஆகியவற் றையும் தி.மு.க. தன் வசமாக்கும். மீதமுள்ள ராமேஸ்வர நகராட்சிகளில் தி.மு.க. தோல்வியுறும்'' என்றுள்ளதாம். மேலும் குறிப்பில், "ராமேஸ்வரம் நகராட்சியினைப் பொறுத்தவரை 5, 6, 7, 10, 16 ஆகிய வார்டுகளை அ.தி.மு.க. நிச்சயம் வெல்லும். 12, 17, 19 ஆகிய வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெறும். 1, 2, 3 ஆகிய வார்டுகளில் இழுபறியும், 4, 8, 11, 20 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க. வுடன் சுயேட்சையும் சமபலத்தில் வந்து இழுபறி நிலையை உண்டாக்கும். சி.பி.ஐ.க்கு கொடுத்த 9-வது வார்டினை தி.மு.க. பெற்று அங்கு ந.செ. போட்டியிடுவதால் அவருக்கு எதிரான உள்ளடி வேலைகளால் பின்தங்கி, இழுபறி நிலவும். 13, 14, 15, 18, 21 ஆகிய வார்டுகள் சம்பலத்திலோ இழுபறியாக வோ இருக்கும். தற்பொழுது கள நிலவரப்படி முன்னிலை வகிப்பது அ.தி.மு.க.வே.! ராமேஸ்வரம் நகராட்சி யைக் கைப்பற்ற அ.தி.மு.க.வுக்கு வாய்ப்புண்டு'' என விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது.
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்
உள்ளாட்சி தேர்தலில் திக்... திக்... ரவுடியிசம்!
உள்ளாட்சி தேர்தல் என்றாலே உள்ளடி வேலைகள் நிறைந்து காணப்படும், சொந்தக் கட்சிப்காரர்களே காலை வாரிவிடுவார்கள். இவற்றோடு ரவுடியிசமும் கலந்திருப்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் உஷ்ணமேற்றியுள்ளது. தேர்தல் களத்தில் ரவுடிகளின் தலையீட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் எப்போதுமே முதலிடம்தான். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல் ஆதாயக் கொலைகள் அரங்கேறின. தற்போது புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளைக் கொண்ட செங்கல்பட்டு நகராட்சி சேர்மன் பதவியைக் கைப்பற்ற தி.மு.க. தரப்பில் தேன்மொழி நரேந்திரன், அ.தி.மு.க. சார்பில் பானுப்ரியா செந்தில்குமார் ஆகியோர் ரேஸில் உள்ளனர், கடந்த 2010ம் ஆண்டில், அ.தி.மு.க. பிரமுகரும் பிரபல ரவுடியுமான குரங்கு குமாரை தி.மு.க.வைச் சேர்ந்த ரவிபிரகாஷ் ஆட்கள் வெட்டிக் கொலை செய்தனர், பின்னர் தி.மு.க. பிரமுகர் ரவிபிரகாஷையும் அவருக்கு உடந்தையாக இருந்த தே.மு.தி.க. பிரமுகர் சுரேஷையும் குரங்கு குமாரின் ஆட்கள் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த நிலையில், குரங்குகுமாரின் மருமகள் சிந்தியா சுரேஷ் வார்டு கவுன்சிலர்க்கு போட்டியிடுகிறார். மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. சம பலமாகப் போட்டியிடுகின்றன. கடந்த இரண்டு முறை நகர்மன்றத் தலைவராக இருந்த தி.மு.க.வின் மலர்விழி குமார் மீது அப்பகுதியில் அதிருப்தி நிலவுவதால் சற்று இழுபறி என்றே கூறலாம். அ.தி.மு.க. சார்பில் மோகனா சரவணன் கடும் போட்டியாளராகவுள்ளார். இதேபோல் அச்சிறுபாக்கம் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. அடுத்ததாக, ஸ்ரீபெருமத்தூர் பேரூராட்சிக் குட்பட்ட 15 வார்டுகளில் பெரும்பான்மையான வார்டுகளில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகின்றது. இந்த பேரூராட்சி யின்கீழ் பன்னாட்டு நிறுவனங்கள் பல உள்ளதால் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்கிராப் எடுப்பதில் முன்னுரிமை கிடைக்கும். அதில் பல கோடிகள் வருவாய் உள்ளதால் தாதாக் களின் தலையீடு அதிகமுள்ளது. ஸ்கிராப் எடுப்ப தில் ஏற்பட்ட போட்டியில் பல கொலைகள் ஏற் கனவே அரங் கேறியுள்ள நிலையில் எந்த வித அசாம்பாவித முமின்றி தேர்தல் முடிவடைய வேண்டுமென்று இப்பகுதி மக்கள் பதைபதைப்பி லுள்ளனர்.
-அரவிந்த்
வெற்றி முகத்தில் ஈஸ்வரி!
சென்னை மாநகராட்சி, 115 வார்டில் தி.மு.க. சார்பாகக் களமிறங்கியுள்ள ஈஸ்வரி, பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வெற்றிபெற்ற மகிழ்ச்சியோடு தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். அவரது மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணம், அந்த வார்டு, உதயநிதி ஸ்டாலினுக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை அள்ளிக் கொடுத்த தொகுதிக்குள் வருகிறது. அந்த வார்டில் மட்டுமே 15 ஆயிரம் வாக்குகளைப் பெறுவதற்காக உழைத்த வட்டச் செயலாளர் செந்தில், பகுதிச் செயலாளர் மதன் இருவருமே ஈஸ்வரிக்காக தீவிர வாக்குவேட்டையில் இருக்கிறார்கள். எதிர்த்தரப்பில் அ.தி.மு.க. சார்பில் முதலில், தோட்டம் சேகரின் மனைவி மலர்க் கொடியை வேட்பாளராக அறிவித்தனர். ஆனால் அவரது கணவரின் மீதுள்ள வழக்கு தனக்கு பிரச்சனையாகும் என்பதால் அதிலிருந்து விலகிக்கொண்டார். அதன்பின்னர் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவரை அ.தி.மு.க. களமிறக்கியது. இவர் வார்டுக்குள் அறிமுகமில்லாதவர் என்பது தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரிக்கு சாதகமாக இருப்பதால் தி.மு.க.வின் கோட்டையாக உள்ள பகுதியில் கூடுதல் உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் இருக் கிறார்.
-அருண்
தூத்துக்குடி! முக்கோண மோதல் !
தூத்துக்குடி மாநகராட்சியில் தி.மு.க.வின் மேயர் வேட்பாள ராகப் பேசப்படுகிற எக்ஸ் மா.செ. வும் மறைந்த பெரியசாமியின் மகனுமான ஜெகன் பெரியசாமி, 20-வது வார்டில் களமிறங்கியுள் ளார். மாவட்ட அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சிப் போரைச் சாதக மாக்கிக் கொண்ட ஜெகன், இங் குள்ள 60 வார்டுகளிலும், அ.தி.மு.க. வின் அதிருப்தியாளர்கள், செல்வாக் கான சுயேட்சைகள் என்று பட்டிய லிட்டு அவர்களைத் தன்வசப் படுத்தி தனக்கான ஆதரவை வலுப்படுத்தியுள்ளார். அவரவர் செல்வாக்கிற்கேற்ப வைட்டமின் சக்திகளைப் பயன்படுத்தி வளைத் திருக்கிறாராம். இதனால் பல வார்டு களில் அ.தி.மு.க.வினர் சைலண்ட் மோடுக்குச் சென்றுவிட்டதாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது. அதேவேளை, 59-வது வார் டில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் மேயர் வேட்பாளரான, அ.தி.மு.க. மா.செ. சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜாவும் சளைக்க வில்லையாம். கரன்சிகளைத் தண்ணீரைப்போல இறைத்து வரு கிறார். கோவில் கட்டித்தருகிறேன், பள்ளிக்கூடச் சுவரெழுப்புகிறேன் என்று ஏரியாவிலுள்ள பிரச்சினை களில் கண் பதிக்கும் ராஜா, தங்கம்மாள்புரத்தில் மக்களுக்குக் கோவில் கட்டித் தருகிறேன் என்று சொன்னதோடு, அதிரடியாக அங்கே அடிக்கல் நாட்டி, செங்கல் லோடுகளையும் இறக்கிவிட்டா ராம். சூரியனும் இலையும், இப்படி மோதிக்கொள்ள, சுயேட்சைகளை உசுப்பேற்றும் வேலையை ஓசை யின்றி செய்துவருகிறார் அ.தி.மு.க. மா.செ. சண்முகநாதனின் எதிர்த்தரப்பான செல்லப்பாண்டியன். தனது ஆதரவாளர்களுக்கு சீட் மறுக்கப்பட்ட ஆத்திரத்தில், இவரும் 60 வார்டுகளிலுள்ள சுயேட்சைகள் குறித்த விவரங்களைச் சேகரித்து, கொஞ்சம் செலவழித்து போட்டியிட்டால் வெற்றிவாய்ப்பை எட்டலாமென்ற அளவுக்கு செல்வாக்குள்ள 20 சுயேட்சைகளுக்கு, அவர்கள் வெற்றிக்கோட்டைத் தொடுவதற்காக இரண்டு, மூன்று 'எல்'கள் வரை செலவழித்து பூஸ்டர் டோஸ் போட்டுவருகிறாராம். இப்படி தனது விக்ரமாதித்த முயற்சியால் 20 சுயேட்சைகள் வரை கரையேறினாலே போதும். அவர்களை வைத்து மேயர் வேட்பாளரை உறுதிசெய்யும் பலம் கிடைத்து விடும். அதைவைத்து தனது உட்கட்சி அரசியல் வைரிக்கு அரசியல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் மும்முரத்தில் இருக்கிறார். இப்படி இவர் கணக்கெடுத்த சுயேட்சைகள் பட்டியலில் எதிர்த்தரப்பு வேட்பாளர்களாக, தி.மு.க.வின் கூட்டணிக்கட்சிகளான காங்கிரசின் 8 வார்டுகள், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க. தலா ஒரு வார்டு எனக் களம் காணும் 12 வார்டுகளும் அடக்கமாம். இப்படி, முக்கோண மோதலாக உருவாக்கியிருக்கும் இவரது உள்குத்து அரசியலால், மற்ற இரு கட்சியினரின் மேயர் கனவுகளும் இழுபறியாகும் வாய்ப்பிருப்ப தாக இரு கட்சித் தொண்டர்களும் கருதுகிறார்கள்.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்
சிவகாசி! தி.மு.க. - அ.தி.மு.க. மல்லுக்கட்டு!
கடந்த 32 ஆண்டுகளாக, தி.மு.க.வை வெறும் லேபிளாக வைத்திருந்து, சிவகாசியில் கட்சியை வளரவே விடாமல் செய்த நிர்வாகிகளின் சுயநல அரசியலை அறிந்து, களத்தில் நேரடியாகவே இறங்கி, சூழலுக்கேற்ற வியூகங்களை வகுத்திருக் கிறார், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு. சேர்மனாக இருந்த போது சிவகாசி நக ராட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஞானசேக ரனை காங்கிரஸின் கோஷ்டி அரசியல் ஓரம் கட்ட, தங்கம் தென்னரசு மூலம் தி.மு.க.வில் இணைந்து 40-வது வார்டில் போட்டியிடு கிறார். பெண் மேயர் என்ற ஒதுக்கீட்டால் துணை மேயரானாலே போதும் என்ற நிலைக்கு இறங்கிவந்துள்ள அவர், அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கடுமையாகப் போராடு கிறார். அ.தி.மு.க.வில், என் மனைவியே மேயர்’ என, 48 வார்டுகளிலும் தோராயமாக ரூ.4 லட் சம் வீதம் கரன்ஸி மழை பொழிந்து, மனைவி அழகு மயி லோடு வலம் வருகிறார், திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன் சக்திவேல். மேயர் கனவை ரகசியமாகப் பூட்டியே வைத்திருக்கிறார், 6-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளரான ஸ்ரீநிகா. ராஜேந் திரபாலாஜியின் மனதிலோ, ‘நான் சுட்டிக்காட்டும் பெண் கவுன்சிலரே மேயர்; 9-வது வார்டில் போட்டியிடும் என் மருமகன் வசந்தகுமாரே துணை மேயர்...’ என்றொரு கணக்கு ஓடுகிறது. ஆனாலும், திருத்தங்கல் அளவுக்கு சிவகாசியில் கட்சி ரீதியாக அ.தி.மு.க. வலுவாக இல்லை. தி.மு.க.வில், சாதிக்கு ஒருவர் மேயர் கனவில் மிதக்கின்றனர். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிவகாசி நகரச் செயலாளர் காளிராஜனின் மனைவி விக்னேஷ் பிரியா, நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த விருதுநகர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராமமூர்த்தியின் மனைவி ரேணுநித்திலா, நாடார் சமுதாயத்தவரான சங்கீதா எனக் கனவுப் பட்டியல் நீள்கிறது. அதேநேரத்தில், 40-வது வார்டில் ஞானசேகரன் வெற்றிபெற்றுவிடக் கூடாது, 33-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.வி. கார்த்திக்கை தோற்கடித்தே ஆகவேண்டும் என உள்ளடி வேலைகள் நிறைய நடக்கின்றன. தங்கள் கட்சியில் மேயரோ, துணை மேயரோ எந்தப் பதவிக்கு யார் வந்தாலும், நஷ்டம் தங்களுக்கே என்ற எதிர்காலக் கணக்கோடு, குழிபறிக்கும் வேலையைச் செய்வோரும் தி.மு.க.வில் மலிந்துள்ளனர். எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் நாடாரே மேயராக வேண்டும்’ எனத் தொழிலதிபர்கள் ஒரு புறம் காய்நகர்த்த, பணப்பட்டுவாடா செய்வதில் தி.மு.க.வோடு சரி மல்லுக்கு நிற்கிறது அ.தி.மு.க. ஓட்டுக்கு ரூ.500-லிருந்து ரூ.1500 வரை வாரியிறைக் கப்படுகிறது. பா.ஜ.க.வும் கூட ரூ.1000 வரை தரு கிறது. ஆளும்கட்சியாக இருந்தும், உளவுத்துறை மூலம் நிலவரம் அறிந்தும், கூட்டணியிலிருந்து சகலத்திலும் குளறுபடிகள் தொடர்வதால், சிவகாசியில் தி.மு.க. பின்தங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத் தில் நகராட்சிகள் தி.மு.க. வசமானாலும், சிவகாசி மாநகராட்சியையாவது கைப்பற்றியே ஆகவேண் டும் என்பதை மானப் பிரச்சனை யாகக் கருதி முனைப்பு காட்டுகிறது அ.தி.மு.க. ராஜேந்திரபாலாஜி மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் சிவ காசி தி.மு.க. எந்த அளவுக்கு உறுதியாக இருக்கப் போகிறதோ?
-ராம்கி
நெல்லை! சேம் சைடு கோலடித்த ஓ.பி.எஸ்!
நெல்லை மாநகராட்சியின் மேயர் பதவியைக் குறிவைத்து அடிக்க அசுரப் பாய்ச்சலிலிருக்கிறது தி.மு.க. நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளி லும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. வின் மாநகராட்சி நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்கள் படும் துயரங்களையும் முன் வைக்கின்றனர். அது அ.தி.மு.க.வுக்கு பெருத்த பின்னடைவாக உள்ளது. ரூ.76 கோடியில் அறிவிக்கப்பட்ட நெல்லை ஜங்ஷன் ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் நடைபெற்ற ஊழல், பல நூறு லோடு மணல் தோண் டப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவுக்கு கடத்தப்பட்டு பல நூறு கோடி கொள்ளைபோன விவகாரம் நீதிமன்றம் வரை போன சம்பவங்கள் நெல்லை மக்களால் மறக்க இயலாதவை. பாரம்பரியமான மார்க்கெட்டை இடித்துத் தள்ளிவிட்டு, புதிய மார்க்கெட் அமைக்காமல் போனது, பாளை பேருந்து நிலையத்தைச் சீரழித் தது, புதிய குடிநீர்க் குழாய் அமைப்பதாகக்கூறி தெருக்களைக் குதறிப் போட்டது என ஒவ்வொன் றாக தி.மு.க. வேட்பாளர்கள் எடுத்துக்கூறும்போது அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பது அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு நெருக்கடியாகிறது. அதுபோக, உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரமும், முதல்வர் ஸ்டாலின் குறுகிய காலத்தில் நிறை வேற்றியுள்ள மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட திட்டங்களும் தி.மு.க.வுக்கு வெகு வாகக் கைகொடுக்கிறது. மாநகராட்சியின் 60 வார்டுகளி லும் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தினாலும், வைட்டமின் "ப' விஷயத்தில் வீக்காகவே இருக்கின்ற னர். கட்சி மேலிடத்திலிருந்து கரன்சி வரும் என்று காத்திருந்தும் அதற்கான அசைவுகளே தென்பட வில்லை என்கிறார் இலைக் கட்சியின் மாநிலப் பொறுப்பிலிருக்கும் அந்த வி.வி.ஐ.பி. அ.தி.மு.க.வின் மேயர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட முன்னாள் துணை மேயரும், 30-வது வார்டில் மல்லுக்கு நிற்கும் ஜெகநாதன் என்ற கணேசன், தன் சொந்த பண பலத்தைக் கொண்டு கச்சை கட்டு கிறார். தன்னுடைய வார்டில் அள்ளிவிட்டவர், வார்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் அன்பளிப் பாக சேலையை வழங்கியிருக்கிறார். அத்துடன், அ.தி.மு.க. வேட்பாளர்களில் வெற்றிவாய்ப்புள்ள தாகக் கருதும் 42 வார்டுகளின் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவிற்காக ஒன்றரை ’எல்’முதல் இரண்டு ’எல்’வரை வைட்டமின் ’ப’வைப் பாய்ச்சியிருக்கிறாராம். இந்நிலையில், அ.தி.மு.க.வின் உள்ளாட்சித் தேர் தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பேசும்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்தைப் புகழ்ந்தவர், எடப்பாடி ஆட்சியைப் பற்றி புகழ்வதைத் தவிர்த்தார். அதோடு, தனது பேச்சின் இறுதியில், "பத்தாண்டு கால அவல ஆட்சியை எடை போட்டு எண்ணிப்பார்த்து யோசனை செய்து வாக்களியுங்கள்! நல்ல தீர்ப்பு கூறுங் கள்!" என்று, கடந்த பத்தாண்டு களாகத் ஆட்சி செய்தது தாங்கள் என்பதையே உணராதவராக, என்ன வென்றே புரியாமல் சேம் சைடு கோலடித்துவிட்டுச் சென்றிருப்பது ர.ர.க்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
-பி.சிவன்
படம்: ப.இராம்குமார்
கம்பு சுற்றும் வேட்பாளர்கள்! கம்பம் களம்!
கம்பம் நகராட்சியில் 32 வார்டுகள் இருப்பதால் அதை இரண்டாகப் பிரித்து இரண்டு நகரச் செயலாளர்களை ஆளுங்கட்சி நியமித்துள்ளது. இதில் வடக்குப் பகுதி நகரச் செயலாளராக துரை.நெப்போலியனும் தெற்குப்பகுதி நகரச் செயலாளராக சூரிய செல்வகுமாரும் இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரின் மனைவியரும் சேர்மன் பதவியைக் குறிவைத்துத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். 3 ஆவது வார்டில் துரை நெப்போலியன் மனைவி வனிதாவும், 18-வது வார்டில் சூரிய செல்வகுமார் மனைவி சுனோதாவும் களத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 32 வார்டுகளில் 2 வார்டு களைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியது போக, 30 வார்டுகளில் அ.தி.மு.க.வை எதிர்த்து ஆளுங்கட்சி வேட்பாளர்கள் களம் இறங்கி யிருக்கிறார்கள். இருப்பினும் நகர்மன்ற தலைவர் பதவியை யார் கைப்பற்றப்போகிறோம் என்ற என்ற கோதாவில் இரு ந.செ.க்களும் குதித்திருப்பதால், கட்சிக்குள்ளேயே இருவேறு அலைகள் சுழன்றடிக்கின்றன. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரும் நகரச் செயலாளருமான ஜெகதீஸின் ஆதரவாளர்கள் களத்தில் கலக்குகிறார்கள். இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சால் ஓரம்கட்டப்பட்ட முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஜக்கையன் தரப்பு, களத்த்தில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வரிந்துகட்டி நிற்கிறது. அதோடு சீட் கிடைக்காத கட்சிப் பொறுப்பாளர்கள் சிலரும், தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டாமல் பெயரளவிலேயே வலம் வருகிறார்கள். இதனால் எதிர்க்கட்சியின் தேர்தல் பணி பல வார்டுகளில் ’கொட்டாவி’ விடுகிறது. அதே நேரம், ஆளும் கட்சித் தரப்பில் அமைச்சர் ஐ.பி. வரிந்துகட்டி நிற்பதால், சூரியத்தரப்பு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இந்தத் தரப்பு முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளையும் திட்டங்களையும் கூறி வாக்காளர்களை வளைத்து வருகிறது. இப்போதைய நிலவரப்படி, கம்பம் நகராட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு, ஆளுங்கட்சிப் பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறது.
தி.மு.க. உள்ளடி! அ.தி.மு.க. ஸ்பீடு! போடி நிலவரம்!
முன்னாள் முதல்வரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ஓ.பி. எஸ்.சின் போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஆளும் கட்சியான தி.மு.க.வில் வேட்பாளர் தேர்விலேயே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. கட்சிக்காக உழைத்து வந்த கல்பனாவுக்கு 22 ஆவது வார்டில் போட்டி போட அனுமதி கொடுத்தும் கூட, அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் முனியம்மாள் திடீரென தி.மு.க.வில் ஐக்கியமானதால், அந்த வார்டை முனியம்மாவுக்கு ஒதுக்கி, வேட்புமனு தாக்கலையும் முடித்துவிட்டார்கள். இதையறிந்த ஓ.பி.எஸ், தி.மு.க.வுக்கு வந்த முனியம்மாளை தன் பக்கம் இழுத்துக் கொள்ள, அதன்பின் ஏற்கனவே அறிவித்த கல்பனாவை களத்தில் இறக்கினர். அதே போல் 27ஆவது வார்டை லதாவுக்கு ஒதுக்கியிருந்தும் கூட திடீரென அந்த வார்டை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு கொடுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா சுயேட்சையாக களம் இறங்கி இருக்கிறார். அதுபோல் சீட் கிடைக்காத அதிருப்தியில் 14-ஆவது வார்டில் ரகுநாத் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இப்படி பல வார்டுகளில் ஆளுங்கட்சித் தரப்பில் குளறுபடி மேளா நடக்க, தொண்டர்களோ தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள். இதற்கிடையே நகரச் செயலாளர் செல்வராஜுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் லடாயால், லட்சுமணன் ஆதரவு உ.பி.க்கள் வெகுவாகச் சோர்ந்து போயிருக்கிறார்கள். இதுபோன்ற சச்சரவுகளால் தி.மு.க.வின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ்., போடி நகரத்தைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்று, நேரடியாகவே களமிறங்கியிருக்கிறார். முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் வேலுமணி மற்றும் கலைவாணி சரண்யா உள்பட மகளிர் அணியினரில் உள்ள ஒருவரை நகர்மன்றத் தலைவராகக் கொண்டுவர நினைக்கிறார் ஓ.பி.எஸ். அவரது கரன்ஸியும் பரமபதம் விளையாடி வருகிறது. வெற்றி வாய்ப்பு இப்போதைய நிலவரப்படி... இப்படியும் அப்படியுமாக கடிகார பெண்டுலம் போல் ஆடிக்கொண்டு இருக்கிறது.
-சக்தி
எகிறிய ரேட்! சாத்தூர்
சாத்தூர் நகராட்சியில் பரபரப்பாகப் பேசப்படுவது வெறும் 303 வாக்காளர் களைக்கொண்ட 8-வது வார்டுதான். கை சின்னத்தில் ஜோதி நிவாஷும், இரட்டை இலையில் கிருஷ்ணனும் மோதிக் கொள்ளும் இந்த வார்டில், வாக்காளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், ஓட்டுக்கான ரேட்டை ரூ.1000-ல் ஆரம்பித்து ரூ.5000 வரை எகிறச் செய்து விட்டனர். சுயேச்சைகளும்கூட, நம்பிக்கையுடன் பணத்தை வாரியிறைக்கின்றனர். ‘பேச்செல் லாம் பெரிசா இருக்கு, கைக்கு முழுசா வரணும்ல..’ என்ற வாக்காளர்களின் முணு முணுப்பும் கேட்காமல் இல்லை. யாரை சேர்மனாக்குவது என்று ஆளும்கட்சிக்குள் நடக்கும் ரேஸில், தேவர் சமுதாயத்தவரான குருசாமி, நாடார் சமுதாயத்தவரான அசோகன் ஆகிய இருவரும் பேசப்படுகின்றனர். ஆனாலும், முன்னாள் நகர்மன்றத் தலைவரான குருசாமிக்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நகராட்சியில், தேர்தல் பணியில் அ.தி.மு.க. மிகவும் பின்தங்கியதற்கு காரணம் -கோஷ்டிகளாக பிரிந்து கிடப்பதுதான். அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேறு தங்கள் பங்கிற்கு வாக்குகளைப் பிரித்து, அ.தி.மு.க.வுக்கு குழிபறிக்கின்றனர். அ.தி.மு.க. நிர்வாகிகளோ, வாக்காளர்களோ, பணத்தை எதிர்பார்க்கும் சூழலில், விருதுநகர் கிழக்கு அ.தி.மு.க. மா.செ. ரவிச்சந்திரன் வெறும் கையோடு களத்துக்கு வருவதால் ஒரு பயனும் இல்லை என்று அக்கட்சி நிர்வாகிகளே புலம்பு கின்றனர். தேர்தல் களத்தில் தொடர்ந்து தி.மு.க. மட்டுமே ஏறு முகத்தில் இருக்கிறது.
-ராம்கி
கரூர்! பாய்ச்ச-ல் தி.மு.க.!
கரூர் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இரு கழகங்களின் முக்கிய நிர்வாகிகளும் தங்கள் மனைவி, மகள்களை தேர்தல் களத்தில் நிறுத்தியுள்ளனர். மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் 25 வார்டுகளை பெண்களுக்கும், 23 வார்டுகளை ஆண்களுக்கும் ஒதுக்கியுள்ளன. கூட்டணிக்கு 7 வார்டுகளை ஒதுக்கியதுபோக, 41 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. விருப்பமனு அளிக்க அ.தி.மு.க. அழைப்பு விடுத்தபோது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே வேட்பாளர்கள் விருப்பமனு அளித்துள்ளனர். தவிரவும், அ.தி.மு.க. பெண் வேட்பாளர்கள் பெருமளவில் கட்சிக்குள் அறிமுகம் இல்லாதவர்களாகவும், புதுமுகங்களாகவும் உள்ளனர். வெற்றியைக் குறித்த தயக்கம் கட்சிக்குள்ளேயே நிலவுவதால் வேட்பாளர்களைக் கட்டாயப்படுத்தி நிறுத்தியுள்ளதாக ர.ர.க்கள் கிசுகிசுக்கின்றனர். இந்த தயக்கமும் விலகலும் பிரச்சாரத்திலும் வெளிப்படுவதோடு, தேர்தல் முடிவுகளிலும் வெளிப்படக்கூடும் என்ற கவலை தீவிரத் தொண்டர்களிடம் எதிரொலிக்கிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தின்போது, "தேர்தலில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றால் 11.30-க்கு மாட்டுவண்டியில் வந்து மணல் அள்ளலாம் என்றார். அந்தப் பேச்சு எங்கே போச்சு'' என செந்தில்பாலாஜியை வாரியதோடு, நகைக்கடன், விவசாயக் கடன் ரத்து விவகாரங்களிலுள்ள பிரச்சனையையும், மகளிருக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கொடுக்காததையும் குறிவைத்து விமர்சித்தார். தி.மு.க.வைப் பொறுத்தவரை ஒன் மேன் ஆர்மியாக, அமைச்சர் செந்தில்பாலாஜி திகழ, அவரது மேற்பார்வையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கரூரில் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. ஒரு வார்டில் போட்டியின்றி வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. பெரிய அளவில் அதிருப்தி வேட்பாளர்கள் யாரும் களமிறங்காத நிலையில், நிச்சயம் தி.மு.க. கூட்டணி 40-க்கும் அதிகமான இடங்களை கைப் பற்றுமென உடன்பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர். உதயநிதியின் வருகையும் தொண்டர்களை முடுக்கிவிட்டுள்ளது. தி.மு.க. வடக்கு நகரச் செயலாளர் கணேசன் மனைவி கவிதா கணேசனுக்கு இந்த முறை மேயர் பதவி கிடைக்க கூடுதல் வாய்ப்பிருக்கிறது. அதேபோல் துணை மேயர் பதவிக்கு தாரணி சரவணன் பெயர் அடிபடுகிறது. இவர்கள் இருவரைத் தவிர, கரூர் கிழக்கு நகரச் செயலாளர் ராஜாவின் பெயர் மேயருக்கும், காங்கிரஸ் கட்சியின் ஸ்டீபன் பாபு பெயர் துணைமேயர் பொறுப்புக்கும் அடிபடுகிறது. எனினும், தனக்குப் போகத்தான் தானம் என்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கு துணைமேயர் பதவியை தாரைவார்ப்பது சாத்தியமில்லை என்பதே உடன்பிறப்புகள் பெரும் பாலானவர்களின் நம்பிக்கை. கூட்டணியில்லாத நிலையில் அ.தி.மு.க. 48 வார்டுகளிலும் களமிறங்கியுள்ளது. அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் சேர்மன் செல்வகுமார் பெயர் கரூர் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. ஓ.பி.எஸ். வருகைக்குப் பின்னும் அ.தி.மு.க. அணி பக்கம் பெரிய உற்சாகம் ஏதும் தொற்றிவிடவில்லை. தனித்துக் களமிறங்கியுள்ள பா.ஜ.க.வால் மொத்த வார்டுகளான 48 வார்டுகளுக்கும் ஆட்களைப் பிடிக்கமுடியாததால் 41 வார்டு களுக்கு மட்டுமே ஆட்களை நிறுத்தியிருக்கிறது. அண்ணாமலை உள்ளிட்டவர்கள் வந்து பிரச்சாரம் செய்து சென்றிருக்கிறார்கள். நம்பிக் கைமிகுந்த வார்டுகளை மட்டும் குறிவைத்து தீவிர பிரச்சாரம் நடக்கிறது. மற்றவர்களுக்கு போஸ்டர், பிரச்சாரச் செலவுகள் கட்சியால் கவனித்துக்கொள்ளப்படுகிறது. கடைசிக் கட்டத்தில் வேட்பாளர்கள் ஓட்டு அறுவடைக்காக கரன்ஸிப் பாசனத்தில் மும்முரமாகி வருகிறார்கள்.
-துரை.மகேஷ்
"எங்களுக்கும் குவாட்டர் வேணும்'' -கறார் காட்டும் பெண்கள்!
திருச்சி உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பா.ஜ.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என்று அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் மும்முரம் காட்டிவருகிறார்கள். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இருவேளை சாப்பாடுடன் பெண்களுக்கு பிரச்சாரக் கூலியாக ரூ 300 தருகின்றனர். ஆண்களுக்கும் அதேதான். ஆனால் போனசாக ஒரு குவாட்டர் உண்டு. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்ற மனநிலையில், தற்போது பெண்களும் தங்களுக்கு குவாட்டர் பாட்டில் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிச் செல்கிறார்களாம். சலுகை விலையில் விற்று அதையும் காசாக்கிக் கொள்கிறார்கள். ஒரு வேட்பாளருடன் 30 பேர் பெண்கள், ஆண்கள் என கலந்து செல்கின்றனர். அ.தி.மு.க. 200 ரூபாய் கொடுத்தால், தி.மு.க. 300 ரூபாயும், அ.தி.மு.க. 300 கொடுத்தால், தி.மு.க. 500 ரூபாய் என போட்டி போட்டுக் கொண்டு தருகின்றனர். வசதியான வேட்பாளர்கள் வீடு வீடாக நேரடியாகச் சென்று கேன்வாசிங் செய்ய 5 பேர் கொண்ட ஒரு டீமையும் அமைத்துக்கொள்கிறார்கள். ஆட்டோக்களில் முன்பதிவு செய்த ஒலிநாடாக்களை ஒலிபரப்பி பிரச்சாரம் செய்வதற்கு 1500 ரூபாய் தருகிறார்கள். ஜெயித்து வரும் வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களோ... இல்லையோ, தேர்தல்வரை ஒரு தற்காலிக வேலைவாய்ப்பு அமைவதுடன் 2 வேளை உணவு, உற்சாகத்துக்கு குவாட்டர் என தேர்தல் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர் திருச்சி பகுதி தொண்டர்களும், மக்களும்.