தென்காசி, செங்கல் பட்டைத் தொடர்ந்து கும்பகோணம் விரை வில் புதிய மாவட்டமாக அறிவிக் கப்படுமென்ற முதலமைச்சர் பழனிச் சாமியின் சட்டமன்ற அறிவிப்பு மயிலாடுதுறை மக்களை போராட் டக்களத்திற்கு தள்ளியிருக்கிறது.
தமிழகத்தின் பெரிய மாவட்டங் களுள் ஒன்று நாகை. கொள்ளிடத்தில் துவங்கி கோடியக்கரை வரையில் நீண்டும், திருக்குவளை வரை அகண் டும் கிடக்கிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்து 1991-ம் ஆண்டு நாகை மாவட்டம் உதயமாகும்போது மயிலாடுதுறை உட்கோட்டத்தையும் உள்ளடக்கியே அமைத்தனர். அப் போதே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு பல கட்ட போராட்டங்கள் நடந்தன. இன்றுவரை அந்த போராட்டத்தை ஏதோ ஒரு வடிவத்தில், ஏதாவது ஒரு அமைப்பை முன்வைத்து நடத்திக்கோண்டே இருக்கின்றது.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டுமென தொடர்ந்து போராடிவரும் ஊடகவியலாளரும், காவிரி குழுமத்தின் தலைவருமான கோமல் அன்பரசன் கூறுகையில், ’""நாகை மாவட்டத்தில் உள்ள பெரிய வருவாய்க் கோட்டம் மயிலாடுதுறை. தற்போது பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. வெறும் 7 லட்சம் மக்கள் தொகை யைக் கொண்டுள்ள அரியலூரை தனி மாவட்டமாக்கிவிட்டனர். ஐந்தரை லட்சம் மக்களைக் கொண்ட பெரம்பலூரை தனி மாவட்டமாக்கிவிட்டனர். ஆனால் மயிலாடுதுறையை மாவட்டமாக்கத் தயங்குவது ஏனென்பது புரியவில்லை?
150 ஆண்டுகளாக மயிலாடுதுறை நகராட்சியாகவே இருக்கிறது. நாடாளுமன்ற தொகுதிவாரியாக மாவட்டங்களை உருவாக்குவதே நிர்வாகத்திற்கு உகந்தது என்பது மத்திய- மாநில அரசுகளின் கொள்கைமுடிவாக இருக்கும் போது நாடாளுமன்றத்தொகுதிக்கு தலைநகராக இருக்கும் மயிலாடுதுறையை அறிவிக்கத் தயங்குவது ஏனென புரிய வில்லை''’என்கிறார்.
சமூக ஆர்வலர்களுள் ஒருவரான அ.அப்பர்சுந்தரம், ""மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை நீண்ட காலமாக உள்ள நிலையில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட் டங்களை அறிவித்ததோடு, கும்பகோணம் மாவட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது மயிலாடுதுறை மக்களின் மனநிலையை மெல்ல மெல்ல மாற்றுவதற்கான அல்லது அக்கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சி. மயிலாடுதுறை முன் னாள் எம்.எல்.ஏ. பால.அருட் செல்வன் சட்ட மன்றத்தில் பல முறை இதுகுறித் துப் பேசியதோடு அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடமும் முறையிட்டுள்ளார். இப்பகுதியின் மூன்று சட்டப் பேரவை உறுப்பினர்களும் தேர்தல் அறிக்கையில் மயிலாடுதுறையை மாவட்டமாக்குவோமென கோரிக்கையை முதன்மையாக வைத்து வெற்றி பெற்றனர். மயிலாடுதுறை இல்லையென்றதும் சட்டமன்றத்தில் இவர்கள் எதிர்ப்பு தெரிவித் திருக்கவேண்டும், அதைவிடுத்து அமைதியாக இருந்து விட்டனர். மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து மயிலாடு துறை புதிய மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும். இல்லையென்றால் மக்கள் வரும் தேர்தல்களில் பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.
தனி மாவட்ட கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்திவரும் குழுவினர்களில் ஒருவரான வழக்கறிஞர் சிவச்சந்திரன் கூறுகை யில்,’’""கடந்த 18-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வந்துள்ளதாகவும், விரைவில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது'' எனக் கூறியுள்ளார்.
""இன்று, நேற்று அல்ல முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்; இல்லையென்றால் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்'' என்கிறார் உறுதியாக.
"மயிலாடுதுறை விஷயத்தில் ஏன் பாராமுகம்' என அனுபவத்தில் முதிர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். ""மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கும் எண்ணம் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கோ, ஆண்ட தி.மு.க. அரசுக்கோ கிடை யாது. அதிகாரிகளுக்கும் அந்த எண்ணம் வராது. நாகை மாவட்டத்தில் அதிகளவில் லாபம் ஈட்டிக்கொடுக்கும் கோட்டமாக இருப்பது மயிலாடுதுறை. அதை நாகையிலிருந்து பிரித்தால் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கிடைக்கும் கோடிக்கணக்கான வரவு போய் விடும்''’என்கிறார் நையாண்டியாக.
இந்நிலையில் ஜூலை 23 அன்று மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வழக் கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் முற்றுகையிட்டிருக்கின்றனர். வேலூர் தேர்தல் பணி காரணமாக எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் சென்றுவிட்டதால், அவரது அலுவலக வாசலில் தமது புகார் மனுவை ஒட்டிவிட்டுத் திரும்பினர்.
இது ஒருபுறமிருக்க... கும்பகோணம் பகுதி மக்களோ சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர். அதோடு லோக்கல் அமைச்சர் துரைக்கண்ணுவை சந்தித்து நன்றிகூறி சால்வை அணிவித்துள்ளனர்.
திருவாரூரிலிருந்து மன்னார்குடியைப் பிரித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாட்டை இணைத்து மன்னார்குடியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென காவிரி ரெங்கநாதன் தலைமையிலான முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் காமராஜை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன் விவகாரம், காவிரி விவகாரம், தண்ணீர் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளது எடப்பாடியின் புதிய மாவட்ட அறிவிப்பு விவகாரம்.
-க.செல்வகுமார்