லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

கடைசி பந்தில் நடுவர் நோ-பாலைக் கவனிக்காததால் மும்பையிடம் தோற்றுவிட்டதே பெங்களூரு அணி?

கிரிக்கெட் நடுவர்கள் பல நேரங்களில் தேர்தல் ஆணையர்கள்போல ஆகிவிடுகிறார்கள்.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

Advertisment

தர்மபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைகளில் கெட்டுப்போன ரத்தம் செலுத்திய தால் 15 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந் துள்ளதாக தமிழகத்தைப் பதறவைக்கும் செய்தி வெளியாகி உள்ளதே?

உயர்சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை எனப் பெரிய பெரிய சாதனைகளைச் செய்வதில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவமனை களில் இரத்தம் செலுத்தும் நடவடிக்கை கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் கிருமி பரவுவதும், அவர் களின் உயிர் பறிக்கப்படுவதும் சுகா தாரத்துறையின் அலட்சியமான-மோச மான நிர்வாகத்தின் வெளிப்பாடு

n

Advertisment

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்

மோடியின் "மிஷன் சக்தி'’ஆபரேசன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கை கொடுக்குமா?

"பொருளாதார சக்தி, இளைஞர்கள் சக்தி, மகளிர் சக்தி, கிராம வாழ்வாதார சக்தி...' என இந்திய மண்ணில் இருந்த சக்திகளையெல்லாம் 5 ஆண்டுகளில் வீணடித்துவிட்டு, விண்ணில் நடத்திய மிஷன் சக்தி மூலம் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என மோடி நினைப்பதும், அதைச் சிலர் நம்புவதும் ஜனநாயகக் கேலிக் கூத்து. மிஷன் சக்தி நடவடிக் கையால் இந்தியா தகர்த்த செயற்கைக்கோளால் விண் வெளியில் குப்பை சேர்ந்திருப்ப தாக அமெரிக்கா குற்றம்சாட்டி யுள்ளது. மீண்டும் மோடியின் ஆட்சி அமைந்தால் "ஸ்வச் பாரத்' போல "ஸ்வச் ஆகாஷ்' என்ற திட்டத்துக்கு நிதி ஒதுக்கி கார்ப்பரேட்டுகள் மூலம் ஏப்பம்விடலாம்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரத் தொடக்கம் என எந்த நிகழ்வுக்கும் ஜெயலலிதா வின் சமாதிப்பக்கமே அம்மா வழி ஆட்சியாளர்கள் செல்லா தது ஏன்?

எஜமானியம்மாவுக்குப் பதில் எஜமானரய்யா கிடைத்து விட்டாரே! நேரடியாக ஆள் இருக்கும்போது சமாதி- ஆன்மா-ஆவி எதற்கு என நினைத்திருக்கலாம். அ.தி.மு.க. இடத்தை தி.மு.க. நிரப்புகிறதே, கலைஞர் நினைவிட அஞ்சலி கள் மூலமாக.

m

எம்.முகம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அழகிரி படம் பொறித்த டி-சர்ட் அணிந்துகொண்டு ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத் துக்கொண்ட இளைஞரின் புகைப்படத்தைப் பார்த்தீர்களா?

உடன்பிறந்த கலைஞரின் பிள்ளைகள் என்பதைவிட, கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற உணர்வே கட்சிக்குப் பலம் என்பதைக் காட்டுகிறது அந்தப் படம். தனிமனித விருப்புவெறுப்புகளைக் கடந்தது இயக்கத்தின் நெடும்பயணம்.

வி.கார்மேகம், தேவக்கோட்டை

தி.மு.க. தேர்தல் அறிக்கையின் மறுபிரதியா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?

மாநிலக் கட்சிகளின் குரலை தேசியக் கட்சிகள் தவிர்க்க முடி யாது என்பதன் அடையாளமே காங்கிரசின் தேர்தல் அறிக்கையும், நீட் தேர்வு-ஜி.எஸ்.டி. போன்றவற்றை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய முடியாத பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடும்.

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்

தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் கூட்டணி காணாமல் களம்கண்டிருந்தால் ஏனைய கட்சிகள் ஒன்றுகூடி அவற்றைக் கதறடித்திருக்குமா? திணறடித்திருக்குமா?

சிறிய கட்சிகளின் ஆதரவு பெரிய கழகங்களுக்குத் தேவை. பெரிய கழகங்களின் தயவு சிறிய கட்சிகளுக்குத் தேவை. இதுதான் தேர்தல் கள யதார்த்தம்.

_____________

காந்திதேசம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

காந்திஜி கோவிலுக்குப் போவாரா? அவர் அடிக்கடி செல்லும் கோவில் எது?

"கடவுள் உண்மை என்று கூறுவதைவிட உண்மையே கடவுள் என்று சொல்வதே சிறந்தது'’என்றவர் காந்தி. அந்த உண்மையான கடவுள், கோவில்களிலும் சிலை வழிபாடுகளிலும் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, "பெரும்பான்மை மக்களின் உணர்வையும் அவர்களின் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன்' என்றார். "புராண-இதிகாசங்களைப் படிப்பதைவிட அதன்படி நடப்பதில்தான் கடவுள் இருக்கிறார்' என்றவர் அவர். "உருவ வழிபாடாக இருந்தாலும், உருவமில்லா வழிபாடாக இருந்தாலும் உள்ளத்தில் தூய்மையும், உண்மையான பக்தியும் நிறைந்திருக்க வேண்டும்' என்பதை அடிக்கடி வலியுறுத்திய காந்தி, அப்படிப்பட்ட தன்மை இல்லாத வழிபாட்டுத் தலங்கள் குறித்து விமர்சனக் கருத்துகளையும் தெரிவித்துள்ளார். "ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆலயங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன். அதனால்தான் அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்டவன் இருப்பாரோ அப்படித்தான் இருப்பார் என்று நான் சொன்னேன். இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால், இந்துசமயத்தின் நலனுக்காகவாகிலும் என்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறவோ மாற்றவோ முடியாது'’என்று தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தின்போது ஆங்கில இதழான மெயில் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார் காந்தி. "கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவில்லை என்றாலும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். இந்த முயற்சியில் வெற்றிபெற உயிரையே தியாகம் செய்துவிட வேண்டியிருந்தால், அதைக் கொடுக்கவும் நான் தயார்'’என்பதே காந்தியின் கடவுள் கொள்கை.