Advertisment

மாவலி பதில்கள்

dd

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றால் என்ன அர்த்தம்?

அவரின் அனுமதியின்றி, அவரே அறியாமல் பெறப்பட்டது என 2016-ல் நக்கீரன் சொன்னதை, 2019-ல் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என அர்த்தம்.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தேர்தல் அரசியல் சூதாட்டம், கிரிக்கெட் சூதாட்டம் என்ன வேறுபாடு?

கிரிக்கெட் சூதாட்டத்தில் விருப்பப்படுகிற ரசிகர்களும், சூதாட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கிற விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உள்ளிட்டோருமே பங்கேற்று பணத்தை முதலீடு செய்து லாப-நட்டம் அடைகிறார்கள். தேர்தல் அரசியல் சூதாட்டத்தில், கட்சிகள் மாறி மாறி லாப-நட்டம் பார்க்கும். பொதுமக்கள் சில ஆயிரங்கள் லாபத்திற்காக, ஜனநாயகம் எனும் பெருமுதலீட்டை இழக்கிறார்கள்.

a

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

"தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் குறித்து உலகிற்கு எடுத்துக் கூறுவதுதான் முதல் வேலை' என்கி

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றால் என்ன அர்த்தம்?

அவரின் அனுமதியின்றி, அவரே அறியாமல் பெறப்பட்டது என 2016-ல் நக்கீரன் சொன்னதை, 2019-ல் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என அர்த்தம்.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தேர்தல் அரசியல் சூதாட்டம், கிரிக்கெட் சூதாட்டம் என்ன வேறுபாடு?

கிரிக்கெட் சூதாட்டத்தில் விருப்பப்படுகிற ரசிகர்களும், சூதாட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கிற விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உள்ளிட்டோருமே பங்கேற்று பணத்தை முதலீடு செய்து லாப-நட்டம் அடைகிறார்கள். தேர்தல் அரசியல் சூதாட்டத்தில், கட்சிகள் மாறி மாறி லாப-நட்டம் பார்க்கும். பொதுமக்கள் சில ஆயிரங்கள் லாபத்திற்காக, ஜனநாயகம் எனும் பெருமுதலீட்டை இழக்கிறார்கள்.

a

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

"தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் குறித்து உலகிற்கு எடுத்துக் கூறுவதுதான் முதல் வேலை' என்கிறாரே ஸ்டாலின்?

கண்டுபிடிக்க வேண்டிய மர்மங்கள் நிறையவே உள்ளன. அணுஉலை எதிர்ப்பு முதல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு வரை களத்தில் நின்ற சமூக செயல்பாட்டாளர் முகிலன் திடீரென மாயமானதன் பின்னணி, அவர் எங்கே இருக்கிறார், அவர் மீது ராஜேஸ்வரி என்ற பெண் கொடுத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, அவற்றின் உண்மைத்தன்மை, ஆகியவை மக்களிடம் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே, நக்கீரன் ஏற்கனவே வெளியிட்டதுபோல, அ.தி.மு.க. அரசால் சிறைப்படுத்தப்பட்டு விடுதலையான மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சிறையில் விஷம் கலந்த உணவு தரப்பட்டதால், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் பற்றிய முழு விசா ரணையும் அவசியம்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

எப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

எப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். அதன்பிறகு, அப்படிப்பட்ட வர்களை வீழ்த்தும் சக்தி யாருக்கு இருக்கிறது, அது எந்தளவு பயன் தரும் என யோசியுங்கள். எதிர்க்க வேண்டியது யாரென்பதில் தெளிவாக இருந்தால் ஆதரிக்க வேண்டிய சக்தியை அடையாளம் காணலாம்.

பொன்னியம்மன்மேடு, வண்ணை கணேசன்

மோடிக்கும், அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று கூறி யிருக்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?

பாம்பின் கால் பாம்பறியும்.

அ.குணசேகரன், புவனகிரி

100% வாக்குப்பதிவு எப்போது சாத்தியம் ஆகும்?

வாக்காளர் பட்டியலில் போலிகள், இரண்டு முறை பெயர் பதிவானவர்கள், இறந்துபோனவர்கள் இவர்களெல்லாம் இல்லாதபோது, ஏறத்தாழ சாத்தியமாகும்.

எம்.ரம்யாமணி, வெள்ளக்கோவில்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா?

அது தேர்தலில் மட்டும் எதிரொலிக்க வேண்டிய பிரச்சினையல்ல. சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியிலும் எதிரொலிக்க வேண்டும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் கமல் மனம் தளராமல் இருப்பாரா?

டார்ச்லைட்டில் மக்கள் வாக்கு எனும் சார்ஜ் எந்தளவு உள்ளது என்பதைப் பொறுத்தது.

_______________

காந்தி தேசம்

ma

பி. மணி, வெள்ளக்கோவில்

பல தலைவர்களோடு சேர்ந்து போராடித்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கினார்கள். அவர்களை விட காந்தியை மட்டும் உயரத்தில் வைத்துப் பார்த்து, ரூபாய் நோட்டில் அவர் படத்தை அச்சடிப்பது ஏன்?

Advertisment

காந்திக்கு முன்பும் பின்பும் காங்கிரஸ் கட்சியிலேயே பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். காங்கிரஸைக் கடந்தும் பல கட்சிகள் இயங்கின. அன்னிபெசன்ட் அம்மையார் ஆரம்பித்த ஹோம்ரூல் இயக்கம், சித்தரஞ்சன் தாஸ்-மோதிலால் நேரு இருவரும் உருவாக்கிய சுயராஜ்ஜிய கட்சி ஆகியவை காங்கிரசின் துணை அமைப்புகள் போல செயல்பட்டன. காந்தியின் போக்குப் பிடிக்காமல் காங்கிரசிலிருந்து விலகிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். மாவீரன் பகத்சிங், இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் என்ற இடதுசாரி அமைப்பை நடத்தினார். பட்டியலின மக்களின் உரிமைகளை இந்து மதத்தில் இருந்து கொண்டு மீட்க முடியாது என்பதில் உறுதியாக இருந்து, காந்தியுடன் முரண்பட்ட அம்பேத்கர் அவர்கள் பட்டியல் இனக் கூட்டமைப்பை (இந்திய குடியரசு கட்சி) தொடங்கினார். காந்தியின் சீடராக இருந்து ஊர் ஊராகச் சென்று கதர் விற்ற பெரியார், பின்னர் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் கொள்கைகளுடன் முரண்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சுதந்திரப் போராட்டத்தில் மகத்தான தியாகம் செய்தது. பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்த ஜின்னாவின் முஸ்லிம் லீக்கைத் தவிர, மற்ற கட்சிகள் இந்திய எல்லைக்குள் தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடின. அதன் தலைவர்களும் தொண்டர்களும் காந்தியின் கொள்கை மீது முழு நம்பிக்கை கொண்டிருக்காவிட்டாலும், காந்தி ஒரு முக்கியமான தலைவர் என்பதை உணர்ந்திருந்தனர். மதிப்பளித்தனர். அவர் கடைப்பிடித்த சுதந்திரப் போராட்ட முறையின் வெற்றியும், அதன்பிறகு அவர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதும் காந்தியை இந்தியாவின் உலக அடையாளமாக்கியது. அந்த மதிப்பின் வெளிப்பாடுதான், ரூபாய் நோட்டிலும் காந்தியின் படம்.

nkn040519
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe