மாவலி பதில்கள்

mavali

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

தேர்தல் அறிக்கை என்பது ஒருவித ஏமாற்று வேலைதானே?

ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். தங்கள் கையில் உள்ள வாக்குச்சீட்டு வலிமையானது என பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தினால், தேர்தல் அறிக்கை என்பது கட்டாயத் திட்டங்களாகின்ற காலம் கனியும்.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

"எங்களை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் தலையிலிருந்து விழும் முடிக்கு சமம்' என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜூ?

நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் பிரிந்தபோது ஜெயலலிதா என்ன சொன்னாரோ அதை அப்படியே சொல்லி, "ஜெ. வழியில் நடக்கிறோம்' எனக் காட்டியிருக்கிறார் செல்லூர் ராஜு. "அ.தி.மு.க.விலிருந்து பிரிந்தவர்கள் தலையிலிருந்து விழுந்த முடிக்கு சமம்' என அமைச்சர் சொல்ல... "அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்குப் பதில் கடலில் குதிப்பேன்' என்கிறார் டி.டி.வி.தினகரன்.

அ.யாழினி பர்வதம், சென்னை-78

மோடியை தாக்க ராகுல்காந்தி வெளியிடும

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

தேர்தல் அறிக்கை என்பது ஒருவித ஏமாற்று வேலைதானே?

ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். தங்கள் கையில் உள்ள வாக்குச்சீட்டு வலிமையானது என பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தினால், தேர்தல் அறிக்கை என்பது கட்டாயத் திட்டங்களாகின்ற காலம் கனியும்.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

"எங்களை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் தலையிலிருந்து விழும் முடிக்கு சமம்' என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜூ?

நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் பிரிந்தபோது ஜெயலலிதா என்ன சொன்னாரோ அதை அப்படியே சொல்லி, "ஜெ. வழியில் நடக்கிறோம்' எனக் காட்டியிருக்கிறார் செல்லூர் ராஜு. "அ.தி.மு.க.விலிருந்து பிரிந்தவர்கள் தலையிலிருந்து விழுந்த முடிக்கு சமம்' என அமைச்சர் சொல்ல... "அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்குப் பதில் கடலில் குதிப்பேன்' என்கிறார் டி.டி.வி.தினகரன்.

அ.யாழினி பர்வதம், சென்னை-78

மோடியை தாக்க ராகுல்காந்தி வெளியிடும் சில கருத்துகள் எதிரி பாகிஸ்தானுக்கு சாதகமாகிவிடுகிறதே?

"எதிரிகளை வீழ்த்திவிட்டோம்' என்கிறார் பிரதமர் மோடி. எப்படி வீழ்த்தினீர்கள் எனக் கேட்கிறார் ராகுல். சரியான பதிலோ புள்ளி விவரங்களோ வெளிப்படுவதில்லை. செயற்கைக் கோளை விண்வெளியில் சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றி பெற்றிருப்பது பற்றி தேர்தல் நேரத்தில், தனது ஆட்சியின் சாதனைபோல பெருமை பொங்க உரையாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. இத்தகைய முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதை விளக்குகின்றன செய்தித் தொகுப்புகள். எதிரி நாட்டைக் காட்டி தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் அரசியலை பிரதமர் மேற்கொள்ளும்போது அதே அரசியலை எதிர்க்கட்சிகளும் கையாள்கின்றன.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"கம்யூனிஸ்ட் கட்சிகளின் மோசமான மாதிரிதான் திரிணாமூல் காங்கிரஸ்' என்கிறாரே நிர்மலா சீதாராமன்?

மேற்குவங்கத்தில் (1977-2011) 34 ஆண்டுகள் நீடித்தது கம்யூனிஸ்ட் கொள்கை அடிப்படையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி. சிங்கூர்-நந்திகிராம் உள்ளிட்டவற்றில் அது மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியும் மம்தாவின் அரசியல் நிலைப்பாடுகளும் திரிணாமூல் காங்கிரசை தொடர்ச்சியாக இரண்டுமுறை ஆட்சியில் உட்கார வைத்தது. இடதுசாரி ஆட்சியும் சரி, மம்தா தலைமையிலான அரசும் சரி, பா.ஜ.க.வுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதால் நிர்மலா சீதாராமனுக்கு மோசமான மாதிரியாகத்தான் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. தெரிவதுபோல.

mavali

சி.கார்த்திகேயன், சாத்தூர்

பல கட்சிகளும் வாரிசு உறவுகளை தேர்தல் களத்தில் இறக்கியபோதும், தி.மு.க. மீதுதானே தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது?

தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க. இதில் முன்னோடி. இந்திய அளவில் காங்கிரஸ்தான் முன்னோடி. இரண்டிலும் தலைமைப் பொறுப்பில் தொடங்கி, வேட்பாளர்கள் வரை நேரடி வாரிசுகள் இருப்பதால் அதிகளவில் விமர்சனத்தை சந்திக்கின்றன. மற்ற கட்சிகளும் விதிவிலக்கல்ல என்பதை இந்தத் தேர்தல் களம் நிரூபித்துள்ளது. அதிலும் குறிப்பாக, குடும்ப-வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட அ.தி.மு.க. அம்பலப்பட்டுள்ளது.

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, தி.மு.க. தலைமையிலான கூட்டணி -இரண்டில் எது வெல்லும்?

கடைசிவரை மக்களைக் கவரத் தெரிந்த கூட்டணி எதுவோ, அதுவே!

____________

காந்திதேசம்

நித்திலா, தேவதானப்பட்டி

100 வயது வரை வாழமுடியும் என நம்பிய காந்தியடிகளை கோட்சே சுட்டுக்கொல்லாமல் இருந்திருந்தால் தன் ஆயுளில் சதம் அடித்திருப்பாரா?

காந்தி 80 ஆண்டுகள்வரை வாழ்ந்தார். உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இயற்கை வழி மருத்துவத்தை அவர் பெரிதும் கையாண்டார். மனது ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் அவருக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. ஆனால், வாழ்க்கைச் சூழல் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதற்கு காந்தியின் வாழ்க்கையிலேயே எடுத்துக்காட்டுகள் உண்டு.

காந்தியின் உடல்நிலை குறித்து அவரது 150-வது பிறந்தநாளை ஒட்டி விவரங்கள் வெளியாகியுள்ளன. இறப்புக்கு 10 ஆண்டுகள் முன்பு, 1939-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்படி 5 அடி 5 அங்குலம் உயரமும், 46.7 கிலோ எடையும் கொண்டிருந்த காந்திக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது எனத் தெரியவந்துள்ளது. 1919-ஆம் ஆண்டில் மூலநோய்க்கும், 1924-ல் குடல்வால் பிரச்சினைக்கும் அறுவை சிகிச்சைக்குள்ளாகியிருக்கிறார் காந்தி. 1925, 1936, 1944 என மூன்றுமுறை மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இவற்றிற்கெல்லாம் நவீன மருத்துவ சிகிச்சைகள்தான் அவருக்குக் கை கொடுத்துள்ளன. அவருக்கு எடுக்கப்பட்ட ஈ.சி.ஜி. பரிசோதனையில் இதயத் துடிப்பு சீராகவே இருந்துள்ளது. ரத்தஓட்டமும் இயல்பாக இருந்துள்ளது. ஒருநாளைக்கு சராசரியாக 18 கி.மீ. நடக்கும் வழக்கம் கொண்டவர் காந்தி. 1913 முதல் 1948 வரை அவர் நடந்திருப்பது 79 ஆயிரம் கிலோமீட்டர். உலகத்தை இரண்டுமுறை சுற்றி வருவதற்கு சமமானது இது என்கிறார்கள் மருத்துவர்கள். நடப்பது நடக்கட்டும் என நடந்திருக்கிறார் காந்தி. அவர் நினைத்த 100 வயது வாழ்வை நடக்கவிடாமல் முடித்துவிட்டான் கோட்சே.

nkn020419
இதையும் படியுங்கள்
Subscribe