மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
"முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க முயற்சிக்க வில்லை' என்று குற்றம்சாட்டுகிறாரே மோடி?
எல்லை தாண்டும் தீவிரவாதத்தை காங் கிரஸ் ஆட்சி ஒழிக்கவில்லை என்று குற்றம்சாட்டு கிற மோடி ஆட்சியில், உள்நாட்டில் இருப்பவர் களையெல்லாம் "ஆன்ட்டி-இந்தியன்' என முத்திரை குத்தி, தீவிரவாதிகளாக சித்தரிப் பதுடன், பிற மதத்தினரை "பாகிஸ்தானுக்கு ஓடு' என கொடூரமாகத் தாக்கும் சங்பரிவார தீவிரவாதிகளும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
"அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கே வெற்றி' என்று மதுரை ஆதீனம் முரசு கொட்டியிருப்பது பற்றி?
காவி கட்டியிருக்கிறாரே!
எம்.முகம்மது ரஃபீக் ரஷாதீ, விழுப்புரம்
உழைப்பு அடிமட்டத் தொண்டனுடையது, பதவி மட்டும் உயர்மட்டத் தலைவனுக்கா?
வேர்கள் வெளியே தெரிவதில்லை. பூக்கள் தலையில் சூடப்படுகின்றன. இந்த இயற்கை விதி, தேர்தல் அரசியலையும் விட்டுவைப்பதில்லை.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
மக்கள் மன அலையோடு சேரும் கூட்டணியாக எந்தக் கூட்டணி அமையும்?
முரண்படுகிறவர்களைக்கூட இழுத்துப் பிடித்து கூட்டணி யில் சேர்க்கிறது பா.ஜ.க. (எ.கா: உத்தவ் தாக்கரே, பிரஃபுல குமார் மகந்தா). பா.ஜ.க. ஆட்சியை அகற்றவேண்டும் என்பதில் உடன்படுகிறவர்கள்கூட காங்கிரசுடன் கூட்டணி சேராமல் முரண்படுகிறார்கள். (எ.கா: மாயாவதி, அகிலேஷ்யாதவ், மம்தா பானர்ஜி). இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவும் இந்தச் சூழலும், மாநிலக் கட்சிகளின் வலிமையும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்.
ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்
அயோத்தி பிரச்ச னைக்குத் தீர்வுகாண உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும் குழு தகுதியானதுதானா?
குழுவில் இருப்பவர்கள் மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே பெருமைக்குரிய தாக இருக்காது. ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல் லாவும், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சுவும் சட்டரீதி யாக இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்கப்போகி றார்கள், "பாபர் மசூதியை மீண்டும் கட்டினால் இந்தியா, சிரியாபோல கலவர பூமியாகிவிடும்' என்ற சாமியார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் எப்படி இந்த விவகாரத்தை அணுகுவார் என ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்?
புற்றுநோயுடன் போராடியபடி தன் மக்கள் பணியைத் தொடர்ந்தவரை, ரஃபேல் ரகசியங்கள் பற்றி முழுமையாகப் பேசமுடியாமல் இயற்கையின் தீர்ப்பும் செயற்கை சதிகளும் அமைந்துவிட்டன.
பா.சத்ரியன், பாகாநத்தம்
பொள்ளாச்சியில் நடந்த கொடூர சம்பவத் திற்கு ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்?
சங்கராச்சாரியார்கள் மீது எடுத்த நட வடிக்கை போலவும் இருக்கலாம். சந்திரலேகா மீது ஆசிட் வீசியதன் பின்னணியில் இருந்தவர்களை தப்பவிட்டது போலவும் இருக்கலாம். ஜெ.வின் மனநிலையையும் அரசியல் கணக்குகளையும் பொறுத்தே அவரது நடவடிக்கைகள் இருந்தன.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை - 6
மகாபாரதத்தில் பாண்டவர் கள்-கௌரவர்கள் இருவரில் யாரை மனதில் வைத்து வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது?
கௌரவர்களாக இருந்தாலும் பாண்டவர்களாக இருந்தாலும் குருசேத்திர யுத்தம் என்று வந்து விட்டால் ரத்த ருசி பார்க்காமல் விடப்போவதில்லை.
காந்திதேசம்
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
தியேட்டரில் அன்று காட்டப்பட்ட நியூஸ் ரீல்களில் காந்திஜி வேக வேகமாக நடப்பது ரொம்ப பிரபலம். கூட்டங்களில் பேசும்போது முன்னால் இருந்த கிராமஃபோன் சைஸ் மைக்குகள் ஓர் அதிசயம். அது பற்றி சொல்லுங்களேன்.
காந்தி தன்னுடைய வயதில் இருந்த பலரைக் காட்டிலும் வேகமாக நடக்கக்கூடியவர். அது அவரது மனதிடத்தின் வெளிப்பாடு. எனினும், அந்தக் காணொலிகளில் நாம் காண்கின்ற வேகம் என்பது, காந்தியின் வேகமல்ல. தொழில்நுட்பத்தின் தன்மை. பொதுவாக ஒரு நொடிக்கு 24 பிரேம்கள் என்பது திரைப்படக் காட்சிகளின் அளவு. இது குறைவாக இருந்தால், காட்சி வேகமாக செல்லும். 24 பிரேம்களுக்கு கூடுதலாக இருந்தால் காட்சி மெதுவாகச் செல்லும். திரைப்படங்களில் வரும் ஸ்லோமோஷன் காட்சிகள் கூடுதல் பிரேம்கள் கொண்டவை. காந்தியைப் படம் பிடித்த காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தை இன்றைய சூழலுக்கேற்ப மாற்றும்போது, அவரது இயல்பான வேக நடையையும்விட கூடுதலான வேகத்துடன் காட்சிகள் பதிவாகியிருக்கும். குறிப்பாக, உப்பு சத்யாகிரகம் தொடர்பான காணொலிகளில் இதைக் காணலாம்.
அந்தக் காலத்தில் திரைப்படங்களே அதுபோன்ற தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சார்லி சாப்ளின் நடித்த வசனமில்லா படங்களிலும், லாரல்-ஹார்டி இரட்டையர்கள் நடித்த வசனமில்லா படங்களிலும் இத்தகைய காட்சிகளைக் காணலாம். அது நகைச்சுவை உணர்வைக் கூடுதலாக்கும். சாப்ளினின்'THE GREAT DICTATOR' என்ற படம், நகைச்சுவையானது மட்டுமல்ல, ஹிட்லரின் அரசியலை பகடி செய்வதுமாகும். திரைப்படங்கள் வரலாற்றைப் பேசவும், வரலாற்றைத் திரைப்படமாக்கவும் இத்தகைய தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. அதுபோலத்தான் மைக்குகளின் தொழில்நுட்பமும் காலந்தோறும் மாறுகின்றன. மனிதக்குரலின் ஒலியை பெருங்கூட்டத்தாரிடம் பெருக்கித்தர அன்று கிராமஃபோன் சைஸில் இருந்த மைக்குகள் இன்று பட்டன் சைஸுக்கு வந்துவிட்டன. எல்லா காலத்தையும் பதிவு செய்வது வரலாற்றின் இயல்பு. எந்தக் காலத்திற்கு எது தேவை என்பதற்கேற்ப மாற்றம் செய்வது அறிவியலின் தன்மை.