திராதி, துடியலூர்
7 ஆண்டுகள், 8 ஆண்டுகளாக நடை பெறுவதாகக் கூறப்படும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரங்கள் நக்கீரன் போன்ற புலனாய்வு இதழ்களுக்கு இத்தனை ஆண்டுகளாகத் தெரியவில்லையா?
ஆளுங்கட்சியில் செல்வாக்குள்ள ஆட்கள் -அவர்களின் பிள்ளைகள் போடும் ஆட்டங்கள் குறித்து நக்கீரன் பலமுறை எழுதியுள்ளது. துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அதில் ஒரு பெண் பலியானதையும் மற்ற பெண்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதையும் அப்போதே வெளியிட்டு, அதில் உள்ள மர்மங்களையும் சுட்டிக்காட்டியது. நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல்துறை, அதிகாரத்திற்குப் பணிந்து நின்றதும், அதனால் அரசியல் அதிகார செல்வாக்கு மிக்கவர்கள் தொடர்ந்து போட்ட ஆட்டமும்தான் இளம் பெண்களின் மீதான பாலியல் வன்கொடூரம் தொடர்வதற்குக் காரணமாக இருந்துள்ளன.
அ.குணசேகரன், புவனகிரி
1996-ல் தேவகவுடாவுக்கு 10 மாதம் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்ததுபோல 2019 தேர்தல் முடிவுகள் அமைய வாய்ப்புள்ளதா?
எதிர்பாராமல் பிரதமரான

எதிர்பாராமல் பிரதமரானவர் தேவ கவுடா(1996) மட்டுமல்ல, மன்மோகன்சிங்கும்தான் (2004). 2019 தேர்தல் ஆளுங்கட்சிக்கு எதிரான தீர்ப்பாக அமைந்தால் அது 2004 போல நிலையான ஆட்சிக்கான தீர்ப்பாக அமைவதே நாட்டுக்கு நல்லது.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"எங்களிடம் வாரிசு அரசியல் நிச்சயம் இருக்காது' என்று அடித்துச் சொல்கிறாரே கமல்ஹாசன்?
வாரிசுகளை வலிந்து திணித்தாலும் அதை தேர்தல் களத்தில் மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்பது கமல்ஹாசனுக்குத் தெரியும். வாரிசு அரசியலைத் தவிர்க்கும் அவர், கொள்கை அரசியல் பற்றிக் கேட் டால் மட்டும் ஓராண்டாகத் தவிர்ப்பது ஏன் என்பதுதான் மர்மமாக உள்ளது.
பிரதீபாஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
கூட்டணிக்காக கதவுகளைத் திறந்து வைப்பது சரி... ஆனால், கதவுகளையே கழற்றி வைத்து விட்டதே அ.தி.மு.க.?
40 எம்.பி.க்களை விட 18 எம்.எல்.ஏக் களுக்கான இடைத் தேர்தல் மீதான பயம், எந்த சிறிய கட்சியையும் விட்டுவிடாமல் அணி சேர்க்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி யிருக்கிறது. இதில் டெல்லி எஜமானர்கள் சொன்னால், கதவைக் கழற்றி வைப்பதென்ன, வாசலையும்கூட இடித்துவிட அ.தி.மு.க. தலைமை ரெடி.
அறிவுத்தொகையன், திருலோக்கி
மாணவிகளை பாலியல் வன்கொடூரம் செய்த திருநாவுக் கரசுக்கு அக்கா- தங்கையே இல்லையா?
அக்கா-தங்கை இருக்கவேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. திருநாவுக்கரசுக்கும் அவன் கூட்டத்துக்கும் இதயம் என ஒன்று இருந்திருந்தாலே போதும். அதுவே இல்லை என்பதைத்தானே அந்தக் காணொலி கதறல்கள் காட்டுகின்றன. இதயம் இல்லா தவனை மனிதன் என்றே கருதமுடியாத போது, அவனுக்கு அக்கா, தங்கை, அம்மா, அத்தை, சித்தி என எத்தனை பெண் உறவு கள் இருந்தாலும், அதைவிட அதிகார பலத்தின் ஆதரவு இருந்ததால், மிருகங் களைவிட மோசமான இழிபிறவிகளாக செயல்பட்டிருக்கிறார்கள் திருநாவுக்கரசும் அவன் கூட்டத்தாரும்.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
ஒரு சீட்டு என்றாலும் அதைப் பவ்யமாகப் பெற்றுக்கொண்டு பண்பாடு காக்கும் கட்சி களும் இருக்கின்றனவே?
இன்றைய சூழலில், ஒரு சீட்டின் பின்னணியில் இருக்கும் வலிமையை அதனைப் பெற்ற கட்சிகளும் வழங்கிய தலைமையும் அறிந்திருப்பதால்!
______________
காந்தி தேசம்
நித்திலா, தேவதானப்பட்டி
நேருவை, மோடி தொடங்கி பா.ஜ.க.வினர் அனைவரும் தொடர்ந்து விமர்சிப்பது என்பது காந்திக்கு புகழ் சேர்க்கும் செயல் என எடுத்துக்கொள்ளலாமா?
காந்தியின் வாழ்க்கையை 1948-ல் முடித்தன இந்துத்வா சக்திகள். அந்த காந்தியால் இந்தியாவின் பிரதமராகத் தீர்மானிக்கப்பட்ட நேருவின் பெருமை யைச் சிதைத்துவிட வேண்டும் என பா.ஜ.க. தரப்பு இப்போது வரிந்துகட்டி செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவரல்லர். அவரது ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட தவறுகள் நிகழாமல் இல்லை. எனினும், இந்தியா சுதந்திரம் பெற்ற சிறிது காலத்தில் அதன் தன்னிறைவான வளர்ச்சிக்கும், உலகளாவிய அளவில் இந்தியாவை வலிமைமிக்க நாடாக நிறுத்துவதற்கும் நேரு மேற்கொண்ட பணிகளை வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது. வரலாற்றைத் திரித்து எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்ட வலதுசாரி இந்துத்வா சக்திகள், நேருவின் புகழை சீர்குலைக்க நினைக்கின்றன.
காஷ்மீர் பிரச்சினை, பாகிஸ்தானுடனான சிக்கல்கள், சீனாவுடனான எல்லைத் தகராறு இவை அனைத்துக்கும் நேருவே காரணம் என்பதாக மோடி தொடங்கி பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுகின்றனர். பா.ஜ.க.வுக்கு ‘"பப்பு'’ராகுல் காட்டியுள்ள தேர்தல் பயம் என்பது ராகுலின் கொள்ளுத்தாத்தா நேருவரை இழுக்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கியிருக்கிறது. சீனாவுடனான நேருவின் பஞ்சசீலக் கொள்கை, ஐ.நா. அவையில் சீனாவுக்கான நிரந்தர இடத்திற்கு நேரு காட்டிய ஆதரவு, காஷ்மீர் பிரச்சினையில் அன்றைய சூழலில் நேரு மேற்கொண்ட முடிவு அனைத்தையுமே வரலாற்றுப் பின்புலத்தோடு கவனிக்கவேண்டும். அமெரிக்கா- சோவியத் யூனியன் (ரஷ்யா) என இருபெரும் வல்லரசுகளுக்கு நடுவே அணிசேரா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியது ஒன்றே நேருவின் திறமைக்குச் சான்று. மாட்டுக்கறியா, ஆட்டுக்கறியா எனத் தெரியாமலே மனிதர்களை வெட்டிக் கூறு போடுவோருக்கு இத்தகைய பார்வை கிடையாது. நேருவை சிறுமைப்படுத்த நினைப் பதன் மூலம் அவர் பிரதமராவதற்கு முழு ஆதரவு தந்த, காந்தியைக் களங்கப் படுத்துவதே இதன் உள்நோக்கம் -உண்மை நோக்கம்.