அ.குணசேகரன், புவனகிரி

சாதிக் கட்சிகளுக்கு உள்ள மவுசு ஏன் தமிழகத்தில் சிறிய கட்சிகளுக்கு இல்லை?

பரந்துபட்ட அளவில் செல்வாக்கு இல்லாவிட்டாலும், தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் வெற்றி- தோல்வியை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன சாதிக்கட்சிகள். மாநிலம் முழுவதும் கிளைகள் இருந்தாலும் ஓட்டுகளை ஒருங்கிணைக்க முடியாமல் இருக்கின்றன சிறிய கட்சிகள். பா.ம.க. 7 தொகுதிகளும் ம.தி.மு.க. ஒரு தொகுதியும் பெறுவதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

bjp-mp-mla

Advertisment

பி.சாந்தா, மதுரை-14

உ.பி.யில் பா.ஜ.க. எம்.பியும் எம்.எல்.ஏ.வும் ஒருவரையொரு வர் செருப்பால் அடித்துக் கொண்டிருக்கிறார்களே?

கர்நாடகத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இணக்கமாக இருந்து சட்டமன்றத்திலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்தார்கள். தெற்கில் உள்ள இந்த ஒற்றுமை வடக்கில் இல்லை. கல்வெட்டில் பெயர் போடவில்லை என்ற பிரச் சினையால் கால்மாட்டில் இருந்ததைக் கழற்றி விளாசியிருக் கிறார்கள். என்னா அடி! ஊரெல்லாம் வீடியோவில் பார்க்கும் வகையில் அடித்துக் கொண்ட இவர்கள் மறுபடியும் மக்களிடம் வாக்கு கேட்கப் போகும்போது என்ன நடக்கிற தென்று பார்க்க வேண்டும்.

Advertisment

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

மருத்துவமனையிலிருந்த ஜெ. பழச்சாறு மட்டும்தான் அருந்தினார் என்றும் அமைச்சர் கள் -அரசு அதிகாரிகள்தான் 1 கோடியே 15 லட் சத்துக்கு உணவு சாப் பிட்டார்கள் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறதே?

ஆணைய விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்த ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது போலும். ஆனால், அமைச்சர் களும் கட்சி நிர்வாகிகளும், "அம்மா சாப்பிட்டார்' என்று சொன்ன அந்த இட்லியை மட்டும் யார் சாப்பிட்டார்கள் என்பது ஜெ. மரணம் போலவே மர்மமாக இருக்கிறது.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை

இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாட்டிற்கு வந்து மோடி பேசுவது எப்படி இருக்கிறது?

கட்டுமானப் பணி, ஓட்டல் வேலை, தனியார்- பன்னாட்டு வங்கிகள் எனத் தொடங்கி தற்போது மத்திய அரசின் ரயில்வே துறை வரை தமிழ்நாட்டில் நிறைந்திருக்கும் வடநாட்டு இளைஞர்களுக்கு கொடுக்கின்ற உத்தரவாதமாக இருக்குமோ!

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை

மக்கள் இயக்கத்தின் முன் னோடிகளாக உள்ள போராளி கள் திடீரென காணாமல் போவது பற்றி?

மக்களுக்காகப் போராடு பவர்கள் எப்போதும் கண்காணிப் புக்குரியவர்கள். சட்டரீதியாக அவர்கள் மீது நியாயமான நட வடிக்கை எடுக்க முடியாதபோது, தனி மனித விருப்பங்கள், செயல் பாடுகள், பலவீனங்கள் உள் ளிட்டவை அரசால் கண்காணிக் கப்படும். அவற்றைப் பொறியாக வைத்து, அதற்குள் சிக்கச் செய்து, காணாமல் போகவைப்பது ஆட்சித் திறனில் ஒரு வகை.

_____________

காந்தி தேசம்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

"இந்தியா விடுதலை பெற்றபின் மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடும்படி அறிவித்ததை ஏன் நிறைவேற்றறவில்லை' எனக் கேட்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி?

வெள்ளைக்காரர்களை எதிர்த்து சுதந்திரம் வாங்குவதற்காகப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சி என்பதே ஆலன் ஆக்டேவியன் ஹூயூம் என்ற வெள்ளைக் காரரால் 1885-ல் தொடங்கப்பட்ட கட்சிதான். ஆரம்பத்தில், அதன் நோக்கம் அரசுப் பதவிகளில் இந்தியர்களுக்கான உரிமை குறித்துப் பேசியது. திலகர் காலத்தில்தான் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை' என முழங்கியது. காந்தி தலைமைக்குப் பிறகு அது அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம் எனப் பல கட்டப் போராட்டங்களை நடத்தி, 1942-ல் "வெள்ளையனே வெளியறு' என முழுமையான சுதந்திர முழக்கத்தை முன்வைத்தது. அத்தகைய காங்கிரஸ் கட்சிக்குப் பலர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும், காந்தி சொல்வதைத்தான் தலைமை உள்பட அனைத்து மட்டமும் எதிரொலிக்கும். அது காந்திக்கு தரப்பட்ட மரியாதை. உள்பூசல்கள் என்பது இன்றைய காங்கிரஸ் போலவே அப்போதும் உண்டு.

சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து, நாட்டின் விடுதலைக்காக, தனக்குக் கட்டுப்பட்டு இருந்தவர்கள், சுதந்திர இந்தியாவில் அரசியல், பதவி, அதிகாரம் என வரும்போது அவரவர் விருப்பப்படியே செயல்படுவார்கள் என்பதையும், அதற்கு காங்கிரஸ் கட்சியைக் கருவியாக்கிக் கொள்வார்கள் என்பதையும் அறிந்திருந்த காந்தி அதனைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடவேண்டும் என்று சொன்னார். தனிப்பட்டவர்களின் தவறுகள் -முறைகேடுகள் ஆகியவை ஒரு மாபெரும் இயக்கத்தின் பெயரை சீரழித்துவிடக்கூடாது என்பதுதான் அவரது நோக்கம். அதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. பின்னாளில், காங்கிரஸ் பல பிரிவுகளாகப் பிரிந்தது... இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ்வரை. எல்லாமே சுய விருப்பு வெறுப்புகளினால் ஏற்பட்ட பிளவுகள்தான். காந்தி நினைத்தது போலவே, 1947-க்குப் பிறகு காங்கிரஸ் சிதைந்தது. ஆனால், இந்துத்வா கொள்கையாளர்களோ 1948-ல் காந்தியையே சிதைத்துவிட்டார்கள்.