எம்.தமிழரசிமணி, வெள்ளக்கோவில்
மனதில் பட்ட எதையும் வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியை எப்போது ஆரம்பிக்கிறேன் என்பதை மட்டும் மக்களுக்கு சொல்ல மறுப்பதேன்?
அவர்தான், எம்.பி. தேர்தலுக்கு கட்சி தொடங்கப்போவதில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே... அதுமட்டுமின்றி, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனது மன்றம் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார். ரஜினி ஒருமுறை சொன்னால் நூறுமுறை சொன்னதற்கு சமம் என்பது அவரை அறிந்தவர்களுக்கும் விரும்புகிறவர்களுக்கு தெரியும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
பல ஆயிரம் கோடி செலவழித்து செவ்வாய் கிரகம், சந்திரமண்டலம் என ஆராய்ச்சி செய்வதால் என்ன லாபம்?
ஒவ்வொரு தேர்தலுக்கும்கூடத்தான் பல்லாயிரம் கோடி அரசுப் பணம் செலவிடப்படுகிறது. நாடும் மக்களும் என்ன பெரிய லாபத்தைக் கண்டார்கள்? ஆனால், ஒரு நாடு தொடர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொள்வதற்காகத் தேர்தலுக்கும் அறிவியலுக்கும் உடனடி பலன் கருதாமல் தன் சக்திக்கேற்ப செலவழிப்பது இயல்புதான். இறந்தபிறகு கிடைக்கப்போகும் இன்சூர
எம்.தமிழரசிமணி, வெள்ளக்கோவில்
மனதில் பட்ட எதையும் வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியை எப்போது ஆரம்பிக்கிறேன் என்பதை மட்டும் மக்களுக்கு சொல்ல மறுப்பதேன்?
அவர்தான், எம்.பி. தேர்தலுக்கு கட்சி தொடங்கப்போவதில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே... அதுமட்டுமின்றி, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனது மன்றம் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார். ரஜினி ஒருமுறை சொன்னால் நூறுமுறை சொன்னதற்கு சமம் என்பது அவரை அறிந்தவர்களுக்கும் விரும்புகிறவர்களுக்கு தெரியும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
பல ஆயிரம் கோடி செலவழித்து செவ்வாய் கிரகம், சந்திரமண்டலம் என ஆராய்ச்சி செய்வதால் என்ன லாபம்?
ஒவ்வொரு தேர்தலுக்கும்கூடத்தான் பல்லாயிரம் கோடி அரசுப் பணம் செலவிடப்படுகிறது. நாடும் மக்களும் என்ன பெரிய லாபத்தைக் கண்டார்கள்? ஆனால், ஒரு நாடு தொடர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொள்வதற்காகத் தேர்தலுக்கும் அறிவியலுக்கும் உடனடி பலன் கருதாமல் தன் சக்திக்கேற்ப செலவழிப்பது இயல்புதான். இறந்தபிறகு கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகையால் நமக்கென்ன லாபம் என்று நினைக்காமல் பிரிமியம் கட்டுகிறோமே அதைப்போல!
ஜி.வி.மனோ, தூத்துக்குடி
ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டங்களைக் கட்டாயமாக்கிய மோடி அரசு, அவற்றை நிரந்தரமாகக் கைவிடுமா?
அ.தி.முக.-பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்துள்ள பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் வைத்துள்ள கோரிக்கைகளில் ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதும் ஒன்று. திட்டத்தைக் கைவிடுகிறார்களா, கோரிக்கையைக் கைவிடுகிறார்களா என்பது போகப் போகத் தெரியும்.
எம்.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
மோடி, நரசிம்ம அவதாரம் எடுத்துள்ளார் என்கிறாரே ஓ.பி.எஸ்.?
அதுதான் ஏற்கனவே ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு, ஒக்கி-கஜா புயல் என தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடித்துவிட்டாரே.. அதற்கப்புறமும் நரசிம்ம அவதாரம் எடுத்து யார் குடலை கிழிக்கப் போகிறார் என்பதை ஓ.பி.எஸ். சொல்லியிருக்கலாம். இருந்தாலும், ஓ.பி.எஸ்.ஸே மிஞ்சும் வகையில், "ஜெயலலிதா எங்களுக்கு அம்மா... மோடி எங்களுக்கு டாடி'’என்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வார்த்தைகளை "மோடியா லேடியா' என சவால்விட்ட ஜெ.வின் ஆன்மாவே மன்னிக்காது.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
நிபந்தனை ஒன்றுதான் கூட்டணி தர்மமா?
நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் கூட்டணி தர்மம். நிராகரிக்கப்பட்டால் அதர்மம். நிபந்தனைகளை எதிரெதிர் கூட்டணிகளிடம் வைத்தாலும் தர்மம். அது அம்பலப்படுத்தப்பட்டால் அதர்மம்.
திராதி, துடியலூர்
8 மாதத்தில் 12ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாமே?
சாதனைதான்.. கண்டுபிடித்ததைக் கொண்டு வருவது எப்படி? வங்கிகளை ஏமாற்றிவிட்டு, லண்டனில் பதுங்கிய விஜய் மல்லையா, சட்டப்போராட்டத்துக்குப் பிறகும் இன்னும் இந்தியாவுக்கு வந்தபாடில்லை. இன்னொரு மோ(ச)டி ஆளான நீரவ் மோடி லண்டனில் புது பிசினஸே தொடங்கிவிட்டாராம்.
பிரதீபாஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
"1000+2000 என மூன்றாயிரம் கொடுத்துவிட்டோம். இனி நாற்பதும் நமதே' என்கிறாரே முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்?
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் கூட்டணியாக சேர்ந்தபிறகும் தாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை சொல்லமுடியவில்லை. அரசுப் பணத்திலிருந்து தேர்தலுக்குப் பணம் கொடுத்துள்ளோம் என்பதைத்தான் வெற்றிவாய்ப்பாகப் பார்க்கிறார்கள். நம்புங்கள்.. இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையம் சுயஅதிகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
_______________
காந்திதேசம்
ப.மூர்த்தி, பெங்களூரு
உலகில் பல்வேறு நாடுகளில் பாகுபாடு இல்லாமல் மகாத்மா காந்தி பாராட்டப்படும் நிலையில், பாரத நாட்டில் அவரைப் பாராட்டுவதற்கு பாகுபாடு ஏற்பட என்ன காரணம்?
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தும் அதன் நேச நாடுகளும் வெற்றி பெற்றபோது, உலகமே வின்ஸ்டன் சர்ச்சிலை பாராட்டியது. ஆனால், அதனைத் தொடர்ந்து நடந்த இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் சர்ச்சில் கட்சி தோல்வியடையும் வகையிலேயே அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். சோவியத் யூனியனை 5 ஆண்டு திட்டங்கள் மூலம் வலிமைமிகு வல்லரசாக்கியவர் ஜோசப் ஸ்டாலின். ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு அவர் மீதான விமர்சனங்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தே வெளிப்பட்டன. தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்குப் பாடுபட்டவர் நெல்சன் மண்டேலா. அவரது 27 ஆண்டுகால தனிமைச் சிறைவாழ்வையும் தியாகத்தையும் உலகம் போற்றியது. ஆனாலும் மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசையும் அதன் செயல்பாடுகளையும் அந்நாட்டில் விமர்சித்தவர்கள் இருக்கவே செய்தார்கள். அப்படித்தான், காந்தியின் அகிம்சை வழி சத்தியாகிரகப் போராட்டத்தை உலகின் பல நாடுகளும் பாராட்டினாலும் இந்தியாவில் மாறுபட்ட கருத்துகளும் வெளிப்படுகின்றன. பகத்சிங் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து காந்தி காட்டிய அமைதி, காங்கிரஸ் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டபோது காந்தியிடமிருந்து வெளிப்பட்ட எதிர்மறை எண்ணம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமை குறித்த விவகாரத்தில் காந்தியின் பிடிவாதத்தால் அம்பேத்கர் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல், வ.உ.சிதம்பரனாருக்காக காங்கிரஸ் திரட்டிய நிதி காந்தியின் கவனத்திற்கு சென்றும் வ.உ.சி. குடும்பத்திற்கு கிடைக்காமல் போனது உள்ளிட்டவை காந்தி மீதான விமர்சனங்களை வைத்து விவாதத்தை வளர்க்கின்றன. கருத்துரீதியான விமர்சனங்களும் அதற்கான பதில்களும் ஆரோக்கியமானவை. மாற்றுக் கருத்துக் கொண்டோரை போட்டுத் தள்ளுவது என்பதுதான் ஆபத்தானது.