மாவலி பதில்கள்!

periyar

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்

விஜயகாந்தைச் சந்தித்த ஸ்டாலின் அரசியலும் பேசினார் என்று போட்டுக் கொடுத்து விட்டாரே பிரேமலதா?

அரசியல் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள ஆயுதம். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் தாக்கப்படலாம். போட்டுக் கொடுத்த பிரேமலதாவுக்கு, துரைமுருகன் சரியான நேரத்தில் ஆப்பு வைத்துவிட்டார்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

தமிழ்நாட்டை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்றவே பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று வைகைச்செல்வன் பேசியுள்ளாரே?

அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடமிருந்து எப்போது காப்பாற்றப் போகிறார்களாம்!

periyar

நித்திலா, தேவதானப்பட்டி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஒரு நாளிதழ் வெளியிடும் வாரப் புத்தகத்தின் கேள்வி-பதில் பகுதியில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதே?

நடுநிலை எனச் சொல்லிக்கொள்ளும் அந்த நூல் (புத்தகம்) முழுக்க முழுக்க சாதி-வருணாசிரமத்தின் வெளிப்பாடாக பதிவிடப்பட்டிருக்கிற கேள்வி-பதில் அது. தி.க.தலைவர் ஆசிரியர் வீரமணி, ஒரே ஒரு சாதியினரை மட்டும் விமர்சிக்கிறார் என்றும், அவர்கள் எந்தத்

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்

விஜயகாந்தைச் சந்தித்த ஸ்டாலின் அரசியலும் பேசினார் என்று போட்டுக் கொடுத்து விட்டாரே பிரேமலதா?

அரசியல் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள ஆயுதம். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் தாக்கப்படலாம். போட்டுக் கொடுத்த பிரேமலதாவுக்கு, துரைமுருகன் சரியான நேரத்தில் ஆப்பு வைத்துவிட்டார்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

தமிழ்நாட்டை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்றவே பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று வைகைச்செல்வன் பேசியுள்ளாரே?

அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடமிருந்து எப்போது காப்பாற்றப் போகிறார்களாம்!

periyar

நித்திலா, தேவதானப்பட்டி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஒரு நாளிதழ் வெளியிடும் வாரப் புத்தகத்தின் கேள்வி-பதில் பகுதியில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதே?

நடுநிலை எனச் சொல்லிக்கொள்ளும் அந்த நூல் (புத்தகம்) முழுக்க முழுக்க சாதி-வருணாசிரமத்தின் வெளிப்பாடாக பதிவிடப்பட்டிருக்கிற கேள்வி-பதில் அது. தி.க.தலைவர் ஆசிரியர் வீரமணி, ஒரே ஒரு சாதியினரை மட்டும் விமர்சிக்கிறார் என்றும், அவர்கள் எந்தத் தாக்குதலும் நடத்தமாட்டார்கள் என்பதால்தான் அவர்களை விமர்சிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த கேள்வி-பதிலில், அந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவும், ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டக் களத் தியாகமாகப் பார்க்கப்படும் ஆஷ் கொலையின் பின்னணியில் வருணாசிரம-சாதிப் பார்வை இருப்பதை அந்த நாளிதழ் தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தியிருப்பதுடன், தேசத்தந்தையைக் கொன்றதும் இதே சாதிமத வெறிதான் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆசிரியர் வீரமணிக்கு இத்தகைய கொலை மிரட்டல்கள் வருவது புதிதல்ல. அவர் இளம் வயதிலிருந்தே அவற்றை எதிர்கொண்டு இன்றும் கொள்கை உறுதி தளராமல் பெரியார் பாதையில் பயணிக்கிறார். அவரைக் குறி வைப்பதாக நினைத்து, வரலாற்றின் துப்பாக்கியை தங்கள் மார்புக்கு நேராகவே திருப்பியிருக்கிறார்கள் நூலோர்கள்.

அருங்கரை வாசன், மதியாக்கூடலூர்

கலைஞர், ஜெயலலிதா ஆகிய இருவரில் ஒருவர் உயிருடன் இருந்திருந்தாலும், இன்றைய தேர்தல் கூட்டணியில் மாற்றம் அமைந்திருக்குமா?

தேர்தலுக்குத் தேர்தல் மாற்றம் அடைவதற்குப் பெயர்தான் கூட்டணி. இதில் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

இன்றைய தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் ‘நடிகர் திலகம், புரட்சி நடிகர் பட்டங்கள் யாருக்கெல்லாம் பொருந்தும்?

நடந்ததை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழக்கம்போல பேசும் அரசியல்வாதிகள் எல்லோரும் "நடிகர் திலக'ங்கள். ஏமாந்து போய்விட்டோம் எனத் தெரிந்தும் எதிரணியை நோக்கி சவால் விடுபவர்கள் எல்லோரும் "புரட்சி நடிகர்'கள்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மார்ச்-8 மகளிர் தினத்திற்கு மாவலியாரின் வாழ்த்து என்ன?

மகளிர் தினம் என்பது போராடிப் பெற்ற உரிமை. அதன் நோக்கம் உரிய பலனைத் தரவேண்டும். கடுமையான விமர்சனங்களையும் அவச்சொற்களையும் கண்டு அஞ்சிடாமல் எதிர்கொண்டு, இலட்சியத்தைக் கட்டிக்காப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்பட்ட திராவிடர் கழகத் தலைவர் -பெரியாரின் வாழ்விணையர் மணியம்மையாரின் மனதிடம் பெண்களுக்குத் தேவை. மார்ச் 8 மகளிர் தினம். மார்ச் 10, மணியம்மையார் நூற்றாண்டு தொடக்கம்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்

கொள்கை வேறு -கூட்டணி வேறு விளக்க முடியுமா?

சொல்வது வேறு -செய்வது வேறு. குழப்பிக்கொண்டால் தேர்தலில் வெற்றி கிடைக்காது.

_____________

காந்தி தேசம்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

1947, ஆகஸ்டு 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய நிகழ்வில் காந்திஜி கலந்துகொள்ளாதது ஏன்?

இரண்டாம் உலகப்போர் முடிந்த வேகத்தில், இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 1947 ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் என்பதும் முன்கூட்டியே முடிவாகிவிட்டது. அதுவும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனி நாடுகளாக்கி, சுதந்திரம் என்ற முடிவினால் இரு பகுதிகளிலும் இருந்த இந்து-முஸ்லிம் மக்களிடையே பூசல்களும் மோதல்களும் வெடித்தன. குறிப்பாக, கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) பகுதியில் நடந்த மதவெறி உயிர்ப்பலிகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், நவகாளிக்கு செல்லும் யாத்திரைக்காக ஆகஸ்ட் 9-ந் தேதியே கொல்கத்தா சென்றுவிட்டார் காந்தி. அவருக்கு இந்தப் பிரிவினை சுதந்திரத்தில் உடன்பாடு இல்லை. அவருடன் "எல்லை காந்தி' எனப்பட்ட கான் அப்துல்கபார்கான் என்பவரும் உடனிருந்தார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதியான மியாபகன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஹைதிரி மன்சிலில் தங்கினார். பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி பலரையும் சந்தித்தார். அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதாக இந்துத்வா கும்பல் வெளியே நின்று எதிர்ப்பு முழக்கமிட்டது. நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 அன்று காந்தியின் மனநிலை இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தை வலியுறுத்தியது. இருவரும் இணக்கமில்லாத இருட்டில் இருக்கும்போது, விளக்கு ஏற்றுவதால் என்ன வெளிச்சம் ஏற்படப்போகிறது என நினைத்தார். சுதந்திர நாளன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை நேரு ஏற்ற, கொல்கத்தாவில் ராட்டை சுழற்றிக் கொண்டிருந்தார் காந்தி. அடுத்த 6 மாதங்களில் அவரது உயிரின் சுழற்சியையே துப்பாக்கித் தோட்டாவால் குடித்துவிட்டது மதவாதம்.

nkn120319
இதையும் படியுங்கள்
Subscribe