எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தி.மு.க. கூட் டணியைக் "கலவரக் கூட்டணி' என்கிறாரே அமைச்சர் ஜெயக் குமார்?
தேர்தல் நெருங்க நெருங்க தமக்கு எதிரில் இருக்கும் கூட்டணியைப் பார்த் தால் மனதுக்குள் கலவரம் உண்டாவது அரசியல்வாதிகளின் இயல்புதானே!
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் செலவிட உள்ள பணத்தின் மதிப்பை வரிசைப்படுத்த முடி யுமா?
எம்.பி. தேர் தலில் போட்டியிடும் வேட்பாளரின் அதிகபட்ச செலவு வரம்பு, 70 லட்ச ரூபாய் என்கிறது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இதுபோல 20 மடங்குக்கு குறை யாமல் செலவு செய் தால்தான் போட்டிக் களத்தில் நிற்க முடியும் என்பதை எல்லாக் கட்சிகளும் உணர்ந் திருக்கின்றன. 70 கோடி வரை செலவு செய்கிறார்கள் என் கிறார் ச.ம.க. தலைவர் சரத்குமார். ஆட்சியில் இருக்கும் கட்சி, அரசுப் பணத்திலிருந்து மக்களின் அக்கவுண்ட் டுக்கு போட்ட பணம் கூட கணக்கில் வராத தேர்தல் செலவுதான். எதிர்க்கட்சி தன்னு டைய சேமிப்பைக் களமிறக்கும். கூட் டணிக் கட்சிகள், தங்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியின் தயவுடன் சொந்த நிதியையும் சேர்த்து செலவை எதிர்கொள்ளும். வாக்காளர்களுக்கான கடைசிநேர பட்டு வாடாவில் எந்தக் கட்சி முந்துகிறது என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு கட்சியின் செலவையும் வரிசைப்படுத்த முடியும்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
டி.டி.வி.தினகரன், சீமான், கமல்ஹாசன் இவர்கள் தனித் தனியாகப் போட்டி யிடுவது யாருக்கு லாபம் -யாருக்கு நட்டம்?
சீமானின் "நாம் தமிழர் கட்சி' மட்டுமே தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வரு கிறது. தினகரனின் அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ. போன்ற பொருத்த மான கூட்டணிக் கட்சி களைத் தேடுகிறது. கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு முயற்சித்து, தனித்துப் போட்டியிடும் நிலை நோக்கித் தள்ளப் பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளும் அதனால் பெரிய கட்சிகளின் வெற்றி-தோல்விகளில் ஏற்படும் மாற்றங்களும்தான் யாருக்கு லாபம்-யாருக்கு நட்டம் என்பதைத் தெளிவாக்கும்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"ஜெயலலிதாவைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத் திருப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்' என்று டி.டி.வி.தினகரன் சொல்கிறாரே?
"ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவர் தான் தினகரன்' என்கிறார்கள் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். அ.தி.மு.க.வினர். ஜெ.வையே எம்.ஜி.ஆருக்குத் துரோகம் செய்தவர் என்றுதான் அன்றைய ஜானகி அணியினர் கடுமையாக விமர்சனம் செய் தார்கள். "உதிர்ந்த ரோமம்' என்று ஒரு தரப்பும், "நீலி-வசந்தசேனை' என்று இன்னொரு தரப்பும், அதையெல்லாம் மீறிய அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் ஜெயலலிதா மீதான விமர் சனங்களும் 1989-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் வைக்கப்பட்டன. பிறகு அவர்களில் பலர் ஜெய லலிதாவிடமே வந்து சேர்ந்ததையும், அவர்களில் சிலருக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவி -சபாநாய கர் பதவிகளையே தந்திருக்கிறார் என்பதும் ஜெ. வுடன் அப்போது பயணித்த தினகரனுக்கும் தெரியும்.
வி.கார்மேகம், தேவகோட்டை
எம்.பி. தேர்தல் முடிவுகள் பற்றிக் கேட் டால், "பழைய மாதிரியேதான் இருக்கும்' என்கிறாரே மு.க.அழகிரி?
அழகிரி இப்போதும் பழையபடிதான் இருக் கிறார் என்பதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது. தி.மு.க.வின் தேர்தல் வியூகம் பழைய மாதிரியே இருக்கப் போகிறதா, காலத்தை உணர்ந்து செயல்படப்போகிறதா என்பதை ஸ்டாலின்தான் நிரூபிக்க வேண்டும்.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிக்கிடையே போட்டியிருந்தால் பொதுமக்கள்தான் நடுவரா?
நடுவர், மக்கள்தான். ஆனால் அண்மைக் காலமாக தீர்ப்பு என்பது, அதிகாரம் செலுத்தும் கட்சியைப் பொறுத்து இருக்கிறது.
___________
காந்திதேசம்
மல்லிகா அன்பழகன், சென்னை-78
அகிம்சையை வலியுறுத்தி அதன் வழியில் போராடிய காந்திஜிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது ஏன்? சர்வதேச விருதுகளோ, இந்தியாவில் டாக்டர் பட்டமோ கிடைத்துள்ளதா?
இந்தியாவில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு அவர் அதிகாரப் பதவிகளில் இருந்த அரசியல்வாதியோ -பணபலம் மிக்க தொழிலதிபரோ -நடிகரோ அல்ல. "சர்வதேச சிறந்த மனிதர்' போன்ற பட்டங்களைப் பெறுவதற்கான லாபியும் காந்திக்குத் தெரியாது. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசைப் பொறுத்த வரை காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1937-ஆம் ஆண்டு முதல் 5 முறை காந்தியின் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் அது அவருக்கு வழங்கப்படவில்லை. கடைசியாகப் பரிந்துரைக்கப்பட்டது, 1948-ஆம் ஆண்டு. ஆனால், விருது அறிவிப்பதற்கு முன்பே கோட்சேவால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். இறந்தவர்களுக்கு விருது கொடுப்பதில்லை என்பது நோபல் பரிசு கமிட்டியின் விதிமுறை. இதில் ஒரு சில நேரங்களில் விதிவிலக்கும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. (எனினும், இறந்த பிறகு ஒருவரது பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க முடியாது. இது தெரியாமல்தான், அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்ற மகத்தான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்) 1948-ல் காந்தி கொல்லப்பட்டதால் அவருக்கு கிடைக்க வேண்டிய அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காமல் போனது. எனினும், அந்த ஆண்டில் "அமைதிக்கான நோபல் பரிசைப் பெற, வாழும் நபர்களில் தகுதியான நபர்கள் யாரும் இல்லை' என தீர்மானித்து ஒருவருக்கும் அதனை வழங்கவில்லை நோபல் கமிட்டி. இது, விருதினைப் பெறாத நிலையிலும் காந்தியின் அகிம்சை முறை போராட்டத்துக்கு கிடைத்த மரியாதை. 1989-ல் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, அதனை "காந்திக்கு காணிக்கை' என் றார்.