வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"மக்களுடன் கூட்டணி வைத் திருப்பதால் கட்சி களுடன் கூட்டணி தேவையில்லை' என்ற தினகரன் கருத்து?
கூட்டணி திராட் சைப் பழத்தை எட்டிப் பறிக்க முடியாவிட்டால் அது புளிக்கத்தான் செய்யும்.
அன்பு, விருதுநகர்
லஞ்சம் வாங்கு கிறவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதி பதிகளே சொல் கிறார்களே?
ஊழலும் லஞ்ச மும் எந்தளவு புரை யோடியிருக்கிறது என்பதன் வெளிப் பாடுதான் நீதிபதி களின் வார்த்தைகள். மற்றபடி, சட்டம் என்ன சொல்கிறது என்பதை அவர்கள் அறியாதவர்களல்லர். தூக்கில் போடுவது என முடிவாகிவிட்டால் அனைத்துத் துறைகளிலும் உள்ள பெருந்தலைகளில் மிஞ்சுபவர்கள் ஒரு சிலர்தான்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
மோடியுடன் ராகுல், ப்ரியங்காவை ஒப்பிடமுடியாது என்கிறதே சிவசேனா?
உண்மைதான்.. சிவசேனாவின் சாம்னா பத்திரிகை மோடியைப் பற்றி அண்மைக்காலத்தில் எழுதியவற்றைப் படித்தால் அவரளவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியவர்கள் என்று எவரையுமே ஒப்பிட முடியாதுதான்.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்
மானம் -வெட்கம் -சூடு -சொரணை போன்ற வார்த்தைகள் சமீபகாலமாக பிர பலமாகி இருக்கின் றனவே?
அரசியல் கூட் டணிகளுக்கு அவ சியமற்றவை குறித்து, தேர்தல் நேரத்தில் அதிகளவில் பேசப் படுவது வழக்கம்.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
பா.ஜ.க. உடன் கூடாநட்பு அ.தி. மு.க.வினருக்கு பாதிப்பு தானே?
அதிகாரம் எதுவுமில்லாத அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மன தளவில் பாதிப்பு. ஆட்சியைத் தொடர நினைப்பவர்களுக்கு நிம்மதி.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
தர்மயுத்தம் நடத்தி ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறிய ஓ.பி.எஸ்., விசாரணை ஆணையத்துக்கு பதில் அளிக் காமல் வாய்தா கேட்கும் மர்மம் என்ன?
ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந் தேதி விசாரணை ஆணையம் தனது அறிக்கையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் விசாரணைக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் என்ன என்பது அவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கும், அவரை முதல்வராக்கிய பொது மக்களுக்கும்தான் தெரியாது. மற்றபடி போயஸ்கார்டன், தலைமைச் செயலகம், ராஜ்பவன், டெல்லி நார்த் ப்ளாக் உள்ளிட்ட உயர்பீடங்களுக்கு ஜெயலலிதா வின் உடல்நிலையில் என்ன பாதிப்பு, எப்படி மரணம் நேர்ந்தது என்பது நன்றாகவே தெரியும். உண்மை அறிந்தவர்களில், ஜெ.வின் அமைச்சரவைப் பொறுப்புகளை கவனித்து வந்த ஓ.பி.எஸ்.ஸும் அடக்கம். அவர் நடத்திய தர்மயுத்தம், அதன்பின் சமாதியில் ஓங்கி அடித்து சசிகலா போட்ட சபதம் எல்லாமும் பக்கா அரசியல் ஸ்க்ரீன்ப்ளே.
மணி கண்ணன், மதுரை
இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்திக் காட்டியது மோடி அரசுக்கு பெருமை தானே?
ராணுவம் என்பது நாட் டைப் பாதுகாக்கும் அர்ப்பணிப்பு மிக்க வீரர்களின் படை. அதை வைத்து தனிப்பட்டவர்கள் இமேஜ் தேடிக்கொள்வது அவமானகரம்.
கௌசிக், திண்டுக்கல்
"பா.ஜ.க.வை தொடர்ந்து விமர்சிப்பேன்' என்று தம்பிதுரை சொன்னது நினைவிருக்கிறதா மாவலியாரே?
அரசியல்வாதிகளில் அத்வானிக்கு மட்டும்தான் செலக்டிவ் அம்னீஷியா இருக்க வேண்டுமா? நேற்று சொன்னதை இன்று மறந்து போகும் அந்த வியாதி தம்பிதுரைகளுக்கு இருக்கக் கூடாதா?
___________
காந்தி தேசம்
நித்திலா, தேவதானப்பட்டி
ஜெயலலிதா வாழ்க்கையைத் "தலைவி' என்ற தலைப்பில் திரைப்படமாக எடுப்பதுபோல, கஸ்தூரிபா காந்தியை "அன்னை' என்ற தலைப்பில் திரைப்படமாக எடுக்க முடியாதா?
திரைக்கதையைத் தெளிவாக அமைத்தால், கஸ்தூரிபா காந்தி பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எடுக்கலாம். காந்தியின் வாழ்க்கை- போராட்டம் குறித்து திரைப்படத்தில் சொல்லப்படாத நிகழ்வுகளே நிறைய உள்ளன. தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகப் போராட்டத்தை காந்தி நடத்தியபோது, அவருக்குத் துணையாக அங்கு வாழ்ந்த தமிழர்கள் நின்றனர். அவர்களில் அன்றைய தஞ்சை மாவட்டம் (தற்போது நாகை) தில்லையாடியைப் பூர்வீகமாகக் கொண்ட வள்ளியம்மை என்ற இளம்பெண் முக்கியமானவர். தென்னாப்பிரிக்கா வின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, 14 வயதிலேயே காந்தியின் வழியைப் பின்பற்றியவர்.
கறுப்பினத்தவர்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக தென்னாப்பிரிக்காவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய சட்டங்களையும், அவற்றால் அடிப்படை மனித உரிமைகள் பறிபோவதையும் எதிர்த்து காந்தி தொடங்கிய சத்யாகிரகத்தில் முழுமையாகப் பங்கேற்றவர் தில்லையாடி வள்ளியம்மை. காந்தியின் பிரச்சார நிகழ்ச்சிகளில் உடன் சென்றவர். சட்டத்தை எதிர்த்துப் போராடியதால் சிறு வயதிலேயே சிறையில் அடைக்கப்பட்டார். வள்ளி யம்மையின் அம்மாவும் சக பெண்களும் சிறை சென்றனர். "சிறு பெண்ணாக இருப்பதால், போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்கிறோம்' என்றது வெள்ளைக் கார அரசு. வள்ளியம்மை மறுத்துவிட்டார். சிறையில் அவரது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சிகிச்சை பலனில்லாத நிலையில் அவரை சிறை நிர்வாகம் விடுதலை செய்தது. மரணப் படுக்கையில் இருந்த தில்லையாடி வள்ளியம்மையை காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வள்ளியம்மை கலங்கவில்லை. உரிமைப் போராட்டத்திற்காக மீண்டும் சிறை சென்று உயிர் கொடுப்பதை பெருமையாகக் கருதினார். சத்யாகிரகப் போராட்டக் களத்தில் காந்தியின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய பெண் தியாகி வள்ளியம்மை. உறுதி தளராத அந்த உண் மையான வீரமங்கையின் வாழ்க்கை வரலாற்றை இந்திய-தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து திரைப்பட மாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.