மாவலி பதில்கள்

mavalianswers

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

சி.பி.ஐ. அதிகாரிகளுக்கே தலைமை நீதிபதி ‘நீதிமன்ற அவமதிப்பு’ குற்றத்திற்காக தண்டனை வழங்கியிருப்பது?

தன்னிச்சையாக செயல்படவேண்டிய சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., சி.ஏ.ஜி., சி.வி.சி. உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க.வின் கிளை அமைப்புகள் போல மாற்றியதுதான் மோடி அரசின் 5 ஆண்டு ஆட்சியின் சாதனை. அந்த சாதனைக்கு கிடைத் துள்ள சான்றிதழ்தான் சி.பி.ஐ. உயரதிகாரிக்கு உச்சநீதிமன்றம் விதித்த அபராதம்.

mavalianswers

பி.மணி, குப்பம், ஆந்திரா

சின்னதம்பி யானை தமிழக அரசுக்கு விளையாட்டைக் காட்டிவிட்டு, மக்களுக்கும் விளைநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதே?

சின்னதம்பி விளையாட்டும் காட்டவில்லை. வேண்டுமென்றே பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. சின்னதம்பி போன்ற யானைகளின் வாழ்விடங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் -கல்விக்குழுமங்கள் -கபட சாமியார்கள் ஆக்கிர மித்து தங்கள் சுகபோக வாழ்வுக்கான சொர்க்க புரிகளாக்கிவிட்டனர். அதற்கு மத்திய-மாநில ஆட்சியாளர்கள் வெகு

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

சி.பி.ஐ. அதிகாரிகளுக்கே தலைமை நீதிபதி ‘நீதிமன்ற அவமதிப்பு’ குற்றத்திற்காக தண்டனை வழங்கியிருப்பது?

தன்னிச்சையாக செயல்படவேண்டிய சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., சி.ஏ.ஜி., சி.வி.சி. உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க.வின் கிளை அமைப்புகள் போல மாற்றியதுதான் மோடி அரசின் 5 ஆண்டு ஆட்சியின் சாதனை. அந்த சாதனைக்கு கிடைத் துள்ள சான்றிதழ்தான் சி.பி.ஐ. உயரதிகாரிக்கு உச்சநீதிமன்றம் விதித்த அபராதம்.

mavalianswers

பி.மணி, குப்பம், ஆந்திரா

சின்னதம்பி யானை தமிழக அரசுக்கு விளையாட்டைக் காட்டிவிட்டு, மக்களுக்கும் விளைநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதே?

சின்னதம்பி விளையாட்டும் காட்டவில்லை. வேண்டுமென்றே பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. சின்னதம்பி போன்ற யானைகளின் வாழ்விடங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் -கல்விக்குழுமங்கள் -கபட சாமியார்கள் ஆக்கிர மித்து தங்கள் சுகபோக வாழ்வுக்கான சொர்க்க புரிகளாக்கிவிட்டனர். அதற்கு மத்திய-மாநில ஆட்சியாளர்கள் வெகுமதியுடன் அனுமதித்து விட்டனர். துறவு வேடம் போட்டு, அத்தனைக்கும் ஆசைப்படும் "ஆ'சாமிகளால், வாயில்லா ஜீவன்களான சின்னதம்பிகள் தங்கள் வாழ்வா தாரத்தை இழந்துவிட்டன. யானைப் பசிக்கு ஏது தீனி? அதனால்தான் விளைநிலங்களுக்கும் மனிதர்களின் வாழ்விடங்களுக்கும் வருகின்றன. அதிகாரத்திலிருந்து விரட்டப்படவேண்டிய ஆட்சியாளர்களும் மோசடிப் பேர்வழிகளும் சேர்ந்துகொண்டு, சின்னதம்பிகள் மீது பழிபோட்டு, கும்கியைக் கொண்டு விரட்டப் பார்க்கிறார்கள், கூண்டில் அடைக்கிறார்கள்.

திராதி, துடியலூர், கோவை

"ஏ.சி.யில் இருப்பவர்களுக்கு 6000 ரூபாயின் மதிப்பு தெரிய வாய்ப்பில்லை' என்று கிண்டல் செய்கிறாரே மோடி?

பத்து லட்ச ரூபாய்க்கு கோட்டு போட்டால் தான் 6000 ரூபாயின் மதிப்பு தெரியும் என்று சொல்கிறார் போலும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"பாரத ரத்னா', "பத்ம விருதுகள்' ஆகியவற்றைப் பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?

சொந்தப் பெயரேகூட போடாவிட்டாலும் பட்டத்தை போட்டே ஆக வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்கள் இந்த மண்ணில் அதிகம். உள்ளூரில் கொடுக்கின்ற பட்டத்தையோ அல்லது தனக்குத்தானே சூட்டிக்கொள்கிற பட்டத்தையோ பெரிதாக விளம்பரப்படுத்தும் நாட்டில், மத்திய அரசின் உயர்ந்த விருதைப் பெயருடன் சேர்க்கக்கூடாது என்றால் எத்தனை பேர் கேட்பார்கள்?

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, பா.ம.க.வும் நிழல் பட்ஜெட் தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறதே, ஏன்?

"ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறனற்ற நிஜ பட்ஜெட் கவனிக்கத் தவறியதை -புறக்கணித்ததை நாங்கள் கவனத்தில் கொண்டு இந்த நிழல் பட்ஜெட்டை மக்கள் நலன் மீதான அக்கறையுடன் தாக்கல் செய்கிறோம்' என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. பட்ஜெட்டுக்கான நிலைப்பாட்டை, தேர்தலுக்கான நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டால் கம்பெனி பொறுப்பல்ல.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, திருச்சி

ஓசூர்-நாகர்கோவில் இரண்டும் மாநகராட்சி என எடப்பாடி அரசால் அறிவிக்கப் பட்டுள்ளதே?

ஜெயலலிதா ஆட்சியில் மாநகராட்சி என அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர்-திண்டுக்கல் இரண்டையும் ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வரவும்.

__________

காந்தி தேசம்

அயன்புரம் த.சத்தியநாரா யணன், சென்னை-72

"வைஷ்ணவ ஜனதோ' என்ற பாடல் காந்திஜிக்கு பிடித்த பாடலா?

அரசாட்சியை இழந்தபோதும் உண்மை பேசிய அரிச்சந்திரனின் கதை, வயதான தாய்-தந்தையரை புண்ணிய தலங்களுக்கு சுமந்து சென்ற சிரவணன், ராமாயணக் காப்பிய நாயகன் இப்படிப் பலவும் காந்தியைக் கவர்ந்துள்ளன. அவரைக் கவர்ந்த முக்கியமான பாடல், குஜராத்தைச் சேர்ந்த நரசிம்ம மேத்தா எழுதிய "வைஷ்ணவ ஜனதோ' எனத் தொடங்கும் பாடலாகும். இதனைத் தமிழில் மொழிபெயர்த் திருக்கிறார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.

"வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின் வகுப்பேன் அதனைக் கேட்பீரே' என மொழிபெயர்த்துள்ள கவிஞர், "பிறருடைய துன்பம் தனதென எண்ணும் பெருங்குணம் கொண்டவனாக, விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலையுடன், ஆசைகளைத் துறந்தவராக, அந்நிய மாதரைத் தாயென நினைக்கும் குண முடையவராக இருத்தல் வேண்டும்' என்கிறார். "பொய் பேசக்கூடாது, ஊரார் சொத்தை தொடக் கூடாது. மனதிடமும் வைராக்கியமும், ராமர் பெயரைக் கேட்டால் மெய்மறந்து பரவசமடையும் தன்மையும் கொண்டிருத்தல் வேண்டும். கபடம், லோபம், காமம், குரோதம் இவற்றுக்கு இடங் கொடுக்காமல் திகழ்ந்தால், அவர்களின் வாரிசுகள் 76-ஆம் தலைமுறை வரையில் சுகமாக இருப்பார்கள். பிறவி எனும் கடலைக் கடந்து இறைவனின் திருவடியில் நிரந்தரமாகக் குடி யிருப்பார்கள்' என்பதே இந்தப் பாடலின் அர்த்தம். நாமக்கல் கவிஞர் இதனைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்கு முன்னரே, திருமதி. பண்டிதை அசலாம்பிகை என்பவர் எழுதிய "காந்தி புராணம்' என்ற வரலாற்று நூலிலும் வைஷ்ணவ ஜனதோ பாட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தனக்கு விருப்பமானவற்றை ஒரு மதத்தின் அடையாளமாக நினைக்காமல், பொதுவான நன்னெறியாகக் கருதும் காந்தி, இந்தப் பாடலையும் அப்படியே நினைத்தார். பிற மதங்களே கூடாது, ஒரு மதமே இருக்க வேண் டும் என்கிற வெறி வளரும் இன்றைய சூழலில், காந்தியின் கனவுகள் தகர்க்கப்படுகின்றன.

nkn230219
இதையும் படியுங்கள்
Subscribe