Advertisment

மாவலி பதில்கள்

mavalianswers

பி.மணி, வெள்ளக்கோவில்

தமது கட்சித் தலைவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினங்களில் மட்டும் தலைவர்களின் சிலைக்கும் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள். மற்ற தினங்களில் அவர்களை நினைத்தாவது பார்ப்பார்களா…?

Advertisment

தலைவர்களின் இறந்த காலத்தையே எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தால் எதிர்காலத்திற்கானவற்றை எப்படிப் பார்ப்பது?

Advertisment

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

"தி.மு.க.வில் அ.தி.மு.க.வினர்தான் உள்ளனர். தி.மு.க.வை நடத்திக் கொண்டிருப்பதே இங்கிருந்து சென்ற அ.தி.மு.க.வினர்தான்' என்ற தம்பிதுரையின் பேச்சு?

அறிஞர் அண்ணாதுரை உருவாக்கிய கட்சியின் இன்றைய நிலையை அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார் தம்பிதுரை. அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது வலிமையானது. தி.மு.க.வில் அமைச்சர்களாக இருந்தாலும், ஏன் முதலமைச்சராகவே இருந்தாலும் ஒரு மாவட்டத்தில் நிகழ்ச்சி என்றால் அந்த மாவட்டச் செயலாளரின் ஒப்புதல்படிதான் நடக்கவேண்டும் என்கிற மரபு உண்டு. அத்தகைய வலிமையான பதவியை த

பி.மணி, வெள்ளக்கோவில்

தமது கட்சித் தலைவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினங்களில் மட்டும் தலைவர்களின் சிலைக்கும் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள். மற்ற தினங்களில் அவர்களை நினைத்தாவது பார்ப்பார்களா…?

Advertisment

தலைவர்களின் இறந்த காலத்தையே எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தால் எதிர்காலத்திற்கானவற்றை எப்படிப் பார்ப்பது?

Advertisment

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

"தி.மு.க.வில் அ.தி.மு.க.வினர்தான் உள்ளனர். தி.மு.க.வை நடத்திக் கொண்டிருப்பதே இங்கிருந்து சென்ற அ.தி.மு.க.வினர்தான்' என்ற தம்பிதுரையின் பேச்சு?

அறிஞர் அண்ணாதுரை உருவாக்கிய கட்சியின் இன்றைய நிலையை அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார் தம்பிதுரை. அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது வலிமையானது. தி.மு.க.வில் அமைச்சர்களாக இருந்தாலும், ஏன் முதலமைச்சராகவே இருந்தாலும் ஒரு மாவட்டத்தில் நிகழ்ச்சி என்றால் அந்த மாவட்டச் செயலாளரின் ஒப்புதல்படிதான் நடக்கவேண்டும் என்கிற மரபு உண்டு. அத்தகைய வலிமையான பதவியை தி.மு.க.வுக்காகப் பாடுபட்டு, சிறை சென்று, அர்ப்பணிப்புடன் செயல்படும் கட்சியினருக்கே வழங்கியது தலைமை. கலைஞரின் கடைசிகாலத்திலும், மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றபிறகும் இந்த நிலைமை மாறிவிட்டது. இப்போது முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எ.வ.வேலு, சேகர்பாபு, செந்தில்பாலாஜி என அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்கள் தி.மு.க.வில் உடனடியாக மாவட்டச் செயலாளர்களானதுடன் தலைமையிடமும் அதிக நெருக்கமாகியிருக்கிறார்கள். இவர்களை எதிர்த்து அரசியல் செய்த அந்தந்த மாவட்ட அடிமட்ட தி.மு.க. தொண்டர்களோ, தலைமைக்குக் கட்டுப்பட்டு முன்னாள் எதிரிகளை இந்நாள் எஜமானர்களாக கருதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

"ஸ்டாலின் வளர்ப்புப் பிள்ளை -எடப்பாடி சுயம்புவாக வளர்ந்தவர்' என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகிறாரே?

ஜனநாயகத்தில் வளர்ப்புப் பிள்ளை, சொந்தப் பிள்ளை, தத்துப்பிள்ளை, சோதனைக் குழாய் பிள்ளை என்பதெல்லாம் முக்கியமில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெறப்போகிற பிள்ளை இவர்களில் யார் என்பதே முக்கியம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

பொதுமக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க இருக்கும் பா.ஜனதாவின் முயற்சி பலன் தருமா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. போன்றவற்றைக் கொண்டுவருவதற்கு முன்பு இந்தப் புத்தி பா.ஜ.க.வுக்கு வந்திருக்கலாம்.

பி.ஓம்பிரகாஷ், சென்னை-118.

இரவில் பேய், பூதம் வருவதுபோல் கெட்ட கனவு வருகிறதே தவிர ஒருநாள் கூட அரசியல்வாதிகள் ஏழை மக்களுக்கு நல்லது செய்வதுபோல் வருவதில்லையே ஏன்?

அது பகல்கனவாகிப் போனதால்!

mavalianswers

mavalianswers

தூயா, நெய்வேலி

மதுரையிலும் திருப்பூரிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் பாடப்படாததை, பக்கத்திலிருந்த முதல்வர் எடப்பாடியும் கண்டுகொள்ளவில்லையே?

தமிழ்த்தாய் வாழ்த்து மாநில உரிமை, தேசியகீதம் நாட்டின் பெருமை. அவற்றைத் தவிர்ப்பது என்பது மொழியையும் நாட்டையும் அவமானப்படுத்தும் செயலாகும். ஏற்கனவே, ஜெயலலிதாவும் அமைச்சரவையும் பதவியேற்றபோது, தேசியகீதத்தை சுருக்கமாகப் பாடி, கோரஸாகப் பதவிப்பிரமாணம் ஏற்றார்கள். அப்போது அரைகுறையாகத் தொடங்கிய அவமானகரம், இப்போது முழுமையாகத் தொடர்கிறது.

________

காந்தி தேசம்

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

சுப்பிரமணிய சிவாவுக்கு தொழுநோய் இருந்ததால்தான் அவரை மகாத்மா காந்தி சந்திக்க மறுத்துவிட்டாரென்பது உண்மையா?

காந்தி அத்தகைய பாகுபாடுகளைக் கடைப்பிடித்தவரல்லர். இந்திய சுதந்திரப் போராட்டத்தை காந்தி முன்னெடுப்பதற்கு முன்பாகவே வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார் போன்றவர்கள் பாலகங்காதர திலகரின் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றபோது அதனை ஆதரித்தவர்கள். சிறைக்கொடுமையினால் சிதம்பரனாரையும் சிவாவையும்போல கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் வேறு யாரும் இல்லை. செக்கிழுத்து-கல் உடைத்து உடல் நலிவுற்ற சிதம்பரனாரும், தொழுநோய்க்குள்ளான சிவாவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தன்மை மாறியிருந்தது. திலகரின் மறைவையடுத்து, தீவிரவாத செயல்பாடுகள் குறைவடைந்து, காந்தி தலைமையிலான அகிம்சைப் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்துவந்தது. திலகர் வழியில் செயல்பட்ட பாரதியாரும் "வாழ்க நீ எம்மான்'’ என்று காந்தியைப் பாடினார். சுப்பிரமணிய சிவாவும் "திலகர்-காந்தி தர்சனம்' என்று எழுதினார். எனினும் காந்திய வழியில் அவர் முழு ஈடுபாடு காட்டவில்லை.

காந்தியின் தமிழ்நாட்டு சீடர்களாக ராஜாஜி, சத்தியமூர்த்தி உள்ளிட்டோரே அப்போது முன்னிலை பெற்றிருந்தனர். அவர்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டுக்கு காந்தி வரும்போது சந்திப்புகள் நடைபெற்றன. நேரமின்மை காரணமாக, பாரதியுடனான முழுமையான சந்திப்புக்கு காந்தி இடம் தரவில்லை. சிறைப்பட்ட சிதம்பரனாருக்கு கட்சி சார்பில் திரட்டப்பட்ட உதவி நிதி, காந்திக்கு நினைவூட்டல் கடிதம் எழுதிய பிறகும் கிடைக்கவில்லை. தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணிய சிவா அதன்பிறகும் சென்னை மயிலாப்பூரில் வசித்தபடி கடற்கரையில் அடிக்கடி உரையாற்றினார். இருமுறை சிறை சென்றார். கடைசி காலத்தில் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் கட்டுவதில் ஆர்வம் காட்டினார். 1925-ல் அவர் மரணமடையும்வரை காந்தி வழியில் பயணிக்காததால், அந்தத் தரப்புடன் அவர் நெருங்கவில்லை.

nkn130219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe