Advertisment

மாவலி பதில்கள் 06

mavalianswers

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"அரசியலில் ரவுடிகள் அதிகம்' என்கிறாரே கமல்ஹாசன்?

தலைவர்களின் பாதுகாப்புக்கு ரவுடிகள் இருந்த காலம் மாறி, ரவுடிகளே அந்தந்தப் பகுதிகளின் தலைவர்களாக மாறிவிட்ட காலம் இது. அரசியல் களத்திற்கு வந்தால் அதனை நேரடியாக எதிர்த்துதான் ஆகவேண்டும். டூப் போட முடியாது என்பதை ரிஸ்க் எடுக்கும் கலைஞரான கமல் அறிவார்.

Advertisment

மல்லிகா அன்பழகன், சென்னை-78

"பாய்ஸ்'’படம் பார்த்து அலறித்துடித்தது போய், அடல்ட் காமெடி படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

Advertisment

1960-களில் "இதழோடு இதழ் சேர்த்து விளையாடவோ' என "சந்திரரோதயம்' படத்தில் இடம்பெற்ற பாட்டு வரியை சென்சார் செய்தார்கள். 1980-களில் "புன்னகை மன்னன்' படத்தில் கமலும் ரேகாவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததை அதே சென்சாரில் அனுமதித்தார்கள். "பாய்ஸ்' படம் வந்தபோது முகம் சுளிக்க வைத்த அடல்ட் காமெடி, "இருட்டு அறையில் முரட்டு குத்து' வரும்போது ஹிட் ஆகிறது.

தாராலட்சுமி, வேலூ

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"அரசியலில் ரவுடிகள் அதிகம்' என்கிறாரே கமல்ஹாசன்?

தலைவர்களின் பாதுகாப்புக்கு ரவுடிகள் இருந்த காலம் மாறி, ரவுடிகளே அந்தந்தப் பகுதிகளின் தலைவர்களாக மாறிவிட்ட காலம் இது. அரசியல் களத்திற்கு வந்தால் அதனை நேரடியாக எதிர்த்துதான் ஆகவேண்டும். டூப் போட முடியாது என்பதை ரிஸ்க் எடுக்கும் கலைஞரான கமல் அறிவார்.

Advertisment

மல்லிகா அன்பழகன், சென்னை-78

"பாய்ஸ்'’படம் பார்த்து அலறித்துடித்தது போய், அடல்ட் காமெடி படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

Advertisment

1960-களில் "இதழோடு இதழ் சேர்த்து விளையாடவோ' என "சந்திரரோதயம்' படத்தில் இடம்பெற்ற பாட்டு வரியை சென்சார் செய்தார்கள். 1980-களில் "புன்னகை மன்னன்' படத்தில் கமலும் ரேகாவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததை அதே சென்சாரில் அனுமதித்தார்கள். "பாய்ஸ்' படம் வந்தபோது முகம் சுளிக்க வைத்த அடல்ட் காமெடி, "இருட்டு அறையில் முரட்டு குத்து' வரும்போது ஹிட் ஆகிறது.

தாராலட்சுமி, வேலூர்

டெண்டுல்கரின் நூறு சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 செஞ்சுரியும், ஒருநாள் போட்டிகளில் 39 செஞ்சுரியுமாக 64 சதங்களை அடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு 11 ஆண்டுகள் ஆகியுள்ளன. கிரிக்கெட் போன்ற விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் வேகம் மெல்ல மெல்லக் குறைவது வழக்கம். கிரிக்கெட்டின் ஈடுஇணையற்ற நட்சத்திரமான சச்சினே தனது 100-வது நூறு அடிப்பதற்காக எத்தனை போட்டிகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது இன்னமும் மறந்துபோகவில்லை. விராட்டின் வேகம் எப்படி என்று காத்திருப்போம்.

mavalianswers

நித்திலா, தேவதானப்பட்டி

தி.மு.க.வில் அன்றைய அறிஞர் அண்ணாவின் தம்பிகள் இன்றைய "உதய் அண்ணா'வின் தம்பிகள் -ஒப்பிடுக.

அறிஞர் அண்ணா அன்றைய தம்பிகளை வளர்த்தார். "உதய் அண்ணா'வை இன்றைய தம்பிகள் வளர்க்கிறார்கள். "மக்களிடம் செல்' என்று தம்பிகளிடம் சொன்னார் அறிஞர் அண்ணா. உதய் அண்ணாவை மக்களிடம் தம்பிகள் அழைத்துச் செல்கிறார்கள். அறிஞர் அண்ணா பொறுமையாக வியூகம் வகுத்து தி.மு.க.வை வெற்றிபெறச் செய்தார். உதய் அண்ணா திடுதிப்பென படு ஸ்பீடாக களமிறங்கியிருக்கிறார். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று அறிஞர் அண்ணா சொன்னார். உதய் அண்ணாவுக்கு மக்கள் என்ன சொல்லப்போகிறார்களோ?

mavalianswers

அன்பு, சாத்தூர்

நாடாளுமன்ற அவைகளில் காரசாரமாக விவாதிக்கும் எம்.பி.க்கள், வெளியிலும் முறைத்துக் கொண்டுதானே இருப்பார்கள்?

வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் தோழமை பாராட்டி அரசியல் நாகரிகத்தை பல தலைவர்கள் கடைப்பிடித்திருக்கின்றனர். மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று மதியம், மத்திய உணவுத்துறை அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் படேலின் வீட்டில் மதிய உணவுக்கான விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய அமைச்சர்கள், இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மேளமடித்து மகிழ்ந்தார். கனிமொழி, ஸ்மிருதி இரானி, சுப்ரியா சுலே, அனுப்ரியா படேல் போன்ற பெண் தலைவர்கள் ஒன்றுகூடி விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி, இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கின்றன.

மணி, மதுரை

"கலிங்கபட்டியில் வார்டு கவுன்சிலராகக் கூட வைகோவால் ஆகமுடியாது' என்கிறாரே ஹெச்.ராஜா?

சாரணர் இயக்கத் தேர்தலில் "மகத்தான சாதனை' படைத்தவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்?!?!.

______________

காந்தி தேசம்

அண்ணா அன்பழகன், சென்னை-78

காந்திக்கு ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயை பிடித்துப் போனது எப்படி? அவரது தாக்கம் காந்திக்கு எவ்வாறு உதவியது?

காந்தி லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்தபோதே அவருக்கு ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் மீது ஈர்ப்பு இருந்தது. தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகப் போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டபோது நிறைய புத்தகங்களை காந்தி படித்தார். அப்போது அவரை அதிகம் ஈர்த்தவர் டால்ஸ்டாய். குறிப்பாக, 'பட்ங் ந்ண்ய்ஞ்க்ர்ம் ர்ச் ஞ்ர்க் ண்ள் ஜ்ண்ற்ட்ண்ய் வர்ன்' என்ற புத்தகம் அவரை ரொம்பவே ஈர்த்தது. ஆ ப்ங்ற்ற்ங்ழ் ற்ர் ஐண்ய்க்ர்ர் என லண்டன் வாழ் இந்தியரான தாரக் நாத் தாஸ் என்பவருக்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதம் காந்தியை மிகவும் கவர்ந்தது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலை பெறுவதற்கான வழி குறித்து தாரக்நாத் தாஸ் எழுதிய கடிதத்திற்கு, "அன்புவழியில் பிரிட்டிஷாரை எதிர்கொள்வதே இந்தியர்களுக்கு விடுதலை தரும்' என டால்ஸ்டாய் பதில் அளித்திருந்தார்.

அகிம்சை வழியை வலியுறுத்திய டால்ஸ்டாய் போலவே காந்தியும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆதிக்கத்தை எதிர்த்து அதே பாதையில் பயணித்ததால், டால்ஸ்டாய்க்கு காந்தி எழுதிய கடிதங்களும் அதற்கு டால்ஸ்டாய் எழுதிய பதில்களும் அகிம்சை போராட்டத்தை முன்னெடுப்பதில் முக்கியத்துவம் பெற்றன. தென்னாப்பிரிக்காவில் "டால்ஸ்டாய் பண்ணை' என்ற பெயரில் காந்தி உருவாக்கிய ஆசிரமம் அவருடன் சத்யாகிரகத்தில் பங்கெடுத்தவர்களுக்கு மனவலிமையைத் தருவதாக இருந்தது. டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு' என்கிற புதினம் நிலவுடைமைச் சமுதாயத்தின் கொடுமைகளையும் அதற்கெதிரான அறவழித் தீர்வுகளையும் எடுத்துரைக்கும். காந்தியின் அகிம்சை போராட்டங்களுக்கு டால்ஸ்டாயின் தொடர்பு "புத்துயிர்'ப்பானது.

nkn060219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe