மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்ற வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருப்பவருக்கு, ஓட்டுநர் -பழகுநர் உரிமம்கூட இல்லையென மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் கலாய்க்கிறாரே?
குஜராத்தில் முதலமைச்சர் என்ற டூவீலர் ஓட்டுநரை 2014-ல் இந்தியாவின் பிரதமர் என்ற கண்டெய்னர் லாரியை ஓட்ட வைக்கவில்லையா? பழகுநர் உரிமம் பெறுபவருக்கு செல்லும் இடமெல்லாம் வழியும் வரவேற்பும் கிடைக்கிறதே!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
கடன்பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதைத் தடுக்க, வங்கிகளிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவேண்டு மென்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் எத்தகையது?
வங்கிகள், மார்வாடிக் கடைகளல்ல, பாஸ்போர்ட்டை அடமானம் வைத்துதான் கடன் பெறவேண்டும் என்பதற்கு. இன்றைய நவீனத் தொழில்நுட்பங்களில் கடன் பெறுபவர்கள் ஃப்ளைட் டிக்கெட் எடுத்தாலே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், மத்திய அமைச்சரிடம் சொல்லிவிட்டுத்தான் வெளிநாடு கிளம்பினேன் என்கிற மோசடிப் பேர்வழிகள் உள்ளபோது பாஸ்போர்ட்டை வாங்க
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்ற வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருப்பவருக்கு, ஓட்டுநர் -பழகுநர் உரிமம்கூட இல்லையென மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் கலாய்க்கிறாரே?
குஜராத்தில் முதலமைச்சர் என்ற டூவீலர் ஓட்டுநரை 2014-ல் இந்தியாவின் பிரதமர் என்ற கண்டெய்னர் லாரியை ஓட்ட வைக்கவில்லையா? பழகுநர் உரிமம் பெறுபவருக்கு செல்லும் இடமெல்லாம் வழியும் வரவேற்பும் கிடைக்கிறதே!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
கடன்பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதைத் தடுக்க, வங்கிகளிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவேண்டு மென்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் எத்தகையது?
வங்கிகள், மார்வாடிக் கடைகளல்ல, பாஸ்போர்ட்டை அடமானம் வைத்துதான் கடன் பெறவேண்டும் என்பதற்கு. இன்றைய நவீனத் தொழில்நுட்பங்களில் கடன் பெறுபவர்கள் ஃப்ளைட் டிக்கெட் எடுத்தாலே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், மத்திய அமைச்சரிடம் சொல்லிவிட்டுத்தான் வெளிநாடு கிளம்பினேன் என்கிற மோசடிப் பேர்வழிகள் உள்ளபோது பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பதால் மட்டும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுத்திட முடியாது.
மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்.
ராகுல்காந்தி- நரேந்திர மோடி இரு வரும் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றால் வெற்றிவாய்ப்பு பிரகாசம்?
இருவர் தலைமையிலான கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைந்து, இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விட்டுக்கொடுத்து கன்னியாகுமரியில் நரேந்திர மோடியும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விட்டுக்கொடுத்து சிவகங்கையில் ராகுல்காந்தியும் களமிறங்கினால் சாத்தியமாகலாம். லேட்டஸ்ட் நிலவரத்தைப் பார்த் தால், துபாயில் உள்ள இந்தியர்கள் ஒரே தொகுதியில் வாக்களிக்கலாம் என்றால் ராகுல் பெரும் வெற்றி பெற்றுவிடுவார்போல!
பி. மணி, வெள்ளக்கோவில்.
டி.எம்.சௌந்தர்ராஜன்-பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன்-எஸ்.ஜானகி எந்த ஜோடியின் பாடல்கள் பெஸ்ட்?
தென்றல் -தேன் இரண்டுமே சிறப்பானது. இதில் எது பெஸ்ட் என்றால் அது அவரவர் விருப்பத்தையும் தேவையையும் பொறுத்தது. நீங்கள் தலைக்கு டை அடிக்க ஆரம்பித்திருந்தால் எஸ்.பி.பி.-ஜானகி டூயட் பெஸ்ட்டாகத் தெரியும். டை அடிக்க முடியாதபடி தலை வழுக்கையாகவோ -அல்லது டை அடிக்க விருப்பமின்றி முற்றிலும் நரைத்திருந்தாலோ டி.எம்.எஸ்.-பி.சுசீலா டூயட் பெஸ்ட்டாக இருக்கும். ஒரிஜினல் இளைஞர்கள் புதுப்புதுக் குரல்களை ரசிக்கிறார்கள்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
தாங்கள் நியமித்த ஆறுமுகசாமி கமிஷன் மீதே நம்பிக்கையில்லாமல் ஒருசில அமைச்சர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்களே?
அரசியல் பேரத்திற்காக அமைக்கப்பட்டது தான் கமிஷன். உண்மையிலேயே ஜெ. மரணத்தில் உள்ள மர்மங்களின் உண்மைகள் தெரியவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டி ருக்கவேண்டும். ஜெ., கடற்கரையில் புதைக்கப் பட்டார். அவருடைய மரணத்தின் மர்மங்களை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஆங்காங்கே புதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மங்கை, விஜயராகவபுரம்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் அலோக் வர்மாவை, சி.பி.ஐ.யிலிருந்து அலேக்காக தூக்கியிருக்கிறார்களே…?
அநியாயத்தைப் பகிரங்கமாக செய்வதற்குப் பெயர்தான் குஜராத் மாடல்.
________
காந்தி தேசம்
கதிரேசன், பேரணாம்பட்டு
இந்தியாவிலிருந்து பாகிஸ் தான் பிரிவதற்கு காந்திதான் காரணமாமே?
இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு காந்தி மட்டுமே காரணம் என்று சொல்வது போலத்தான், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காந்தி மீது மட்டும் பழிபோடுவதுமாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் கிழக்கே வங்காளத்திலும் மேற்கே பஞ்சாபிலும் மிக அதிக அளவில் முஸ் லிம்கள் இருந்தனர். இந்த இரு மாநிலங்கள் போக வடமாநிலங்களிலும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் தொகை என்பது குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே முஸ்லிம்களுக்கான உரிமைகள் குறித்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பின்னர், முஸ்லிம் லீக் என்ற கட்சி உருவானது. ஆனாலும், 1930கள் வரை தனி நாடு கோரிக்கை எழவில்லை. காந்தி தலைமையிலான சத்யாகிரகப் போராட்டங்கள் இந்து-முஸ்லிம் உள்ளிட்ட இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் விடுதலைக்கானதாக இருந்தாலும், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றின் போக்குகளும் அதன் விளைவுகளும் காங்கிரசில் இருந்த இந்து சனாதனிகளால் வேறு திசைக்கு மாற்றப்பட்டன. இதில் முஸ்லிம் லீக் தலைவரான முகமது அலி ஜின்னா அதிருப்தியடைந்தார். முஸ்லிம் லீக்கிற்குள்ளும் சர்ச்சைகள் இருந்தன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள இந்து மகாஜன சபை போன்ற வலதுசாரி அமைப்புகள் முயற்சி செய்தன. காந்திக்கும் ஜின்னாவுக்குமான முரண்பாடுகள் அதிகரித்தன. சுயாட்சிமிக்க சுதந்திர இந்தியாவை ஜின்னா எதிர்பார்த்தார். வலிமைமிக்க ஐக்கிய அரசு கொண்ட இந்தியா என்பது நேருவின் விருப்பம். முஸ்லிம்கள் பிரிந்துபோவதே நல்லது என்ற எண்ணம் பட்டேல் போன்றவர்களிடம் இருந் தது. இந்த நிலையில்தான், ஜின்னா முன்வைத்த தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அதிகரித்தது. அதனை பிரிட்டிஷ் அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா-பாகிஸ் தான் என இரு நாடுகளாகப் பிரித்து சுதந் தரம் வழங்கியது. காந்தியின் சொல்லுக்கு காங்கிரசும் தேசபக்தர்களும் கட்டுப்பட்டிருந்த காலத்தில், பாகிஸ்தான் குறித்த நிலைப் பாட்டில் காந்தியின் தடுமாற்றம், பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்பதாகத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.