எஸ்.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்
வருகிற எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களில் அவர்களின் மக்கள் நல செயல்பாடுகளின் அடிப்படையில் ஓரிருவர் தேறுவார்களா?
மக்கள் நல செயல்பாடு என்பது தேர்தல் நேரத்துப் பணப்பட்டுவாடாதானே!
பி.சாந்தா, மதுரை
விவசாயக் கடன் தள்ளுபடி, காங்கிரசின் ஏமாற்று வேலை என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு?
ஆதார் அட்டையை காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்துவிட்டு, இப்போது எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என்கிறது பா.ஜ.க. அரசு. ஜி.எஸ்.டி.யை முந்தைய ஆட்சியின்போது எதிர்த்துப் பேசியவர்தான் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி. இப்போது ஜி.எஸ்.டி.தான் நாட்டை நிமிர்த்தும் என்கிறார். விவசாயிகளுக்காக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க. வடித்த கண்ணீரைக் குடம் குடமாகப் பிடிக்கலாம். இப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாயக் கடன் ரத்து என்றதும் ஏமாற்று வேலை என்கிறார் மோடி. தனக்கு வந்தா ரத்தம். அடுத்தவருக்கென்றால்
எஸ்.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்
வருகிற எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களில் அவர்களின் மக்கள் நல செயல்பாடுகளின் அடிப்படையில் ஓரிருவர் தேறுவார்களா?
மக்கள் நல செயல்பாடு என்பது தேர்தல் நேரத்துப் பணப்பட்டுவாடாதானே!
பி.சாந்தா, மதுரை
விவசாயக் கடன் தள்ளுபடி, காங்கிரசின் ஏமாற்று வேலை என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு?
ஆதார் அட்டையை காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்துவிட்டு, இப்போது எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என்கிறது பா.ஜ.க. அரசு. ஜி.எஸ்.டி.யை முந்தைய ஆட்சியின்போது எதிர்த்துப் பேசியவர்தான் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி. இப்போது ஜி.எஸ்.டி.தான் நாட்டை நிமிர்த்தும் என்கிறார். விவசாயிகளுக்காக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க. வடித்த கண்ணீரைக் குடம் குடமாகப் பிடிக்கலாம். இப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாயக் கடன் ரத்து என்றதும் ஏமாற்று வேலை என்கிறார் மோடி. தனக்கு வந்தா ரத்தம். அடுத்தவருக்கென்றால் தக்காளி சட்னி.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
புதுக்கோட்டையில் டீக்கடைக்காரர் ஒருவர் புயலால் பாதிக்கப்பட்ட தன் வாடிக்கையாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது பற்றி?
இதென்ன பிரமாதம்.. முன்னாள் டீக்கடைக்காரர் ஆட்சியில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனே ரத்தாகிறதே!
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்கிறாரே?
பா.ஜ.க. ஆட்சியின் மதவெறிச் செயல்களைத் துணிச்சலாக எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பிரகாஷ்ராஜ். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையின்போது கருத்துரிமைக்காகக் களமிறங்கியவர். உரிமைக்கான செயல்பாடுகளுக்கும் தேர்தல் களத்திற்கும் வித்தியாசம் உள்ளது. "பெங்களூரு தொகுதியில் போட்டியிடுவேன்' என்கிற பிரகாஷ்ராஜ், குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி செய்தது போல பெரிய கட்சிகளின் ஆதரவுடன் களமிறங்க வேண்டும். இல்லையென்றால் ஒரு தேர்தல் முடிவால் அவருடைய உரிமைப் போராட்டக் குரல் நெரிக்கப்பட்டுவிடும் ஆபத்து உண்டு.
திராதி, துடியலூர், கோவை
சினிமா டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. 10% குறைக்கப்பட்டதன் பலன் ரசிகர்களுக்குக் கிடைக்குமா?
குறைவாகவோ -கூடுதலாகவோ-நியாயமாகவோ எந்தக் கட்டணத்திலேனும் டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரே பலன் -நல்ல படங்கள்.
நித்திலா, தேவதானப்பட்டி
ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறதே இந்திய கிரிக்கெட் அணி?
ஏறத்தாழ 70 ஆண்டுகால முயற்சி. பலமுறை படுதோல்வி. சிலமுறை நெருங்கி வந்து கைநழுவிய வெற்றி. அத்தனைக்கும் மருந்தாக அமைந்துள்ளது விராட் கோலி தலைமையிலான அணியின் வெற்றி. பேட்டிங், பவுலிங் இரண்டும் சிறப்பு. அதைவிட, சிறப்பான டீம் ஸ்பிரிட் என்கிற கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ளது இந்த மகத்தான வெற்றி.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"தி.மு.க.வைப் போன்று நாங்களும் மக்களை சந்தித்துப் பேசுவோம்' என்கிறாரே தமிழிசை?
நான்கரை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருப்பவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது பேச்சை அல்ல, செயலை!
____________
காந்தி தேசம்
மல்லிகா அன்பழகன், சென்னை-78
வடநாட்டில் எத்தனையோ ஏழைகளைப் பார்த்து வருத்தப்படாத காந்திஜி, மதுரையில் அரைப் பக்கிரியானது ஏன்?
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் வறுமையிலிருந்து பலரது வறுமை நிலை குறித்தும் உண்மையாகக் கவலை கொண்டவர் காந்தி. தேர்தல் அரசியலுக்காக 10% கோட்டா உருவாக்கி, 8 லட்ச ரூபாய் வருமானம் பெறும் ஏழைகளைக் கண்டுபிடிக்கும் வியூகமெல்லாம் அவருக்குத் தெரியாது. இந்தியாவில் அவர் நடத்திய முதல் சத்தியாகிரகப் போராட்டம் என்பது பீகார் மாநிலத்தில் உள்ள சம்பாரண் மாவட்டத்தில் ஏழை விவசாயிகளின் உரிமைகளுக்கானதாகும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் சிக்கியிருந்தவர்களுக்காக அந்தப் போராட்டத்தை நடத்திய காந்தி, அங்கிருந்த விவசாயப் பெண்களின் நிலையை தன் மனைவி கஸ்தூரிபா மூலம் அறிந்தார். மாற்றுத்துணிக்கே அவர்கள் தவிக்கிறார்கள் என அறிந்ததும், தனது உடையில் மாற்றம் செய்து, தோளில் அங்கவஸ்திரம் அணிவதைத் தவிர்த்தார். 1918-ல் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் போராட்டத்தின்போது, அவர்களின் நிலை அறிந்த காந்தி, தனது தலைப்பாகைத் துணியில் நாலு பேருக்கு உடை தைக்கலாம் எனக் கருதி, தலைப்பாகை அணிவதையும் தவிர்த்தார். 1921-ல் மதுரைக்கு ரயிலில் வந்தபோது, பயணிகள் பலரும் மில் துணிகளில் ஆடை தைத்திருப்பதை அறிந்து, கைத்தறி ஆடை குறித்து அவர்களிடம் வலியுறுத்தினார். கைத்தறி ஆடை விலை அதிகம் என்பதை அவர்கள் காந்தியிடம் கூறினர். வேட்டி, சட்டை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் எனத் தன்னுடைய உடைகள் இருந்ததையும் பெரும்பாலான மக்கள் மாற்று உடை இன்றித் தவிப்பதையும் உணர்ந்த காந்தி, மதுரைப் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு இடுப்பில் ஒரு வேட்டி, தோளில் ஒரு துண்டு என்ற எளிமைக்கு மாறினார். மக்கள் நிலைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டார் காந்தி. எனினும், மக்கள் நிலையை காலத்திற்கேற்ப மாற்றுவதும் உயர்த்துவதும்தான் நிரந்தர வளர்ச்சி.