எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
செந்தில் பாலாஜியை தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டது போல மு.க.அழகிரியையும் சேர்த்துக் கொள்ளுமா தி.மு.க. தலைமை?
"மு.க.ஸ்டாலினின் தலைமைப் பண்பு பிடித்ததால் தி.மு.க.வுக்கு வந்தேன்' என்கிறார் செந்தில்பாலாஜி. அழகிரி அப்படி சொல்வாரா?
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் 21. அவற்றில் 19 நட்டத்தில். 2 மட்டுமே லாபத்தில். வாராக்கடன் 13 லட்சம் கோடி ரூபாய். நம் தேசம் எதை நோக்கிச் செல்கிறது?
உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியா அதனை சமாளித்ததற்கு காரணம் பொதுத்துறை வங்கிகளும் -பொதுத்துறை நிறுவனங்களும்தான். ஆனாலும், பெருமுதலாளிகளான தனி நபர்களுக்கும் அவர்களின் நிறுவனங்களுக்குமே சாதகமாக செயல்படும் வகையில் பொதுத்துறை வங்கிகளில் அரசியல் ஆதிக்கம் திணிக்கப்படுவதால், இந்த பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. சீர்படுத்தவில்லையென்றால் பொருளாதாரம் சீழ் பிடித்துவிடும்.
மா.சந்திரசேகர்
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
செந்தில் பாலாஜியை தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டது போல மு.க.அழகிரியையும் சேர்த்துக் கொள்ளுமா தி.மு.க. தலைமை?
"மு.க.ஸ்டாலினின் தலைமைப் பண்பு பிடித்ததால் தி.மு.க.வுக்கு வந்தேன்' என்கிறார் செந்தில்பாலாஜி. அழகிரி அப்படி சொல்வாரா?
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் 21. அவற்றில் 19 நட்டத்தில். 2 மட்டுமே லாபத்தில். வாராக்கடன் 13 லட்சம் கோடி ரூபாய். நம் தேசம் எதை நோக்கிச் செல்கிறது?
உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியா அதனை சமாளித்ததற்கு காரணம் பொதுத்துறை வங்கிகளும் -பொதுத்துறை நிறுவனங்களும்தான். ஆனாலும், பெருமுதலாளிகளான தனி நபர்களுக்கும் அவர்களின் நிறுவனங்களுக்குமே சாதகமாக செயல்படும் வகையில் பொதுத்துறை வங்கிகளில் அரசியல் ஆதிக்கம் திணிக்கப்படுவதால், இந்த பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. சீர்படுத்தவில்லையென்றால் பொருளாதாரம் சீழ் பிடித்துவிடும்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்கிறாரே தம்பிதுரை?
அண்ணாதுரை முன்னெடுத்ததை தம்பிதுரை வழிமொழிகிறார். அவர் சொல்வதை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அவரது கட்சியினர் காது கொடுத்துக் கேட்கவேண்டும்.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர் சென்னை-118
கட்சியின் மாவட்ட -ஒன்றிய நிர்வாகிகளையும் சில தொண்டர்களையும் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு கலைஞர் இருந்ததுபோல, மற்றவர்கள் அப்படி இருந்தார்களா?
தொண்டனாக இருந்து களப்பணியாற்றி, ஊர் ஊராகச் சென்று கட்சி வளர்த்து, உள்ளடி அரசியல்களை எதிர்கொண்டு, அவற்றைத் தன் சாதுர்யத்தால் வென்று கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் கலைஞர். அவர் அளவுக்கு அனுபவம் பெறும்போதுதான் மற்றவர்களாலும் அப்படி பெயர் சொல்லி அழைக்க முடியும். அதனால்தான் கலைஞரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள்கூட அவரின் திறமையைப் புகழ்கின்றனர்.
கே.முரளி, விழுப்புரம்
காங்கிரஸ் கட்சியும் காவி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டதுபோலத் தெரிகிறதே?
தேர்தல் அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்றால் எல்லா வியூகமும் தேவைப்படும். கேரளாவில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடந்துசென்று ஓட்டுக் கேட்கும்போது, அவரை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் பணக்காரராக இருந்தாலும் நடந்து சென்றுதான் வாக்கு சேகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். பா.ஜ.க. செல்வாக்காக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டுமென்றால் கோயிலுக்குப் போய் வழிபடவேண்டும். "கோ சாலை அமைப்போம்' என வாக்குறுதி அளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே மென் இந்துத்வா மனநிலை கொண்ட கட்சிதான். காலப்போக்கில் அதன் மதச்சார்பற்ற தன்மை மேலோங்கியது. தற்போது பழைய பாதையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
சாமி, கடையநல்லூர்
ஜி.எஸ்.டி., டீமானிடைசேஷன், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சி.பி.ஐ.-ஆர்.பி.ஐ. உள்ளிட்ட நிர்வாகங்களில் தலையீடு என ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்யும் மோடி அரசு மீண்டும் ஆட்சியில் அமர்வது மக்கள் நலனுக்கு எதிரானதாகத்தானே அமையும்?
பதிலையே கேள்வியாக்கிவிட்ட பிறகு, மாவலி சொல்வதற்கு என்ன இருக்கிறது?
___________
காந்தி தேசம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
காந்திஜி தன் வாழ்நாளில் எத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்?
நடைப்பயணம் என்பதைவிட காந்தியின் சத்யாகிரகப் பயணம் என்பது பெரும்பாலும் ரயில் பயணம்தான். தென்னாப்பிரிக்காவில் பீட்டர் மேரிட்ஸ்பர்க் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து அவர் கீழே தள்ளிவிடப்பட்ட ரயில் பயணம் மிகவும் முக்கியமானது. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியபிறகு, 1915-ஆம் ஆண்டு இந்தியா முழுக்கப் பயணித்தார் காந்தி. அப்போது அவர் தேர்வு செய்ததும் ரயில் பயணத்தைத்தான்! ஆயிரக்கணக்கான மைல்கள் அவர் பயணித்தார். வழியெங்கும் மக்களை சந்தித்தார். பல கிராமப்புற பகுதிகளுக்கு நடந்து சென்றார். பிரிட்டிஷ்காரர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் நீள அகலத்தை பிரிட்டிஷ் ஆட்சியில் போடப்பட்ட ரயில் தண்டவாளம் மூலம் அளந்தார். இந்தியர்களின் மனநிலை, பன்முகத்தன்மை, பல்வேறு பண்பாடு எல்லாவற்றையும் அந்தப் பயணத்தில் உள்வாங்கிக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்திற்கு இந்த மக்களை அணிதிரட்டுவது எப்படி என்பதை காந்தியின் மனது கணக்கிட்டது. சாதி -மதம் -மொழி உள்ளிட்ட பேதங்களைக் கடந்து இந்தியர்களை அணிதிரட்டுவது பெரும் சவால் என்பது காந்திக்குத் தெரியும். அந்த சவாலை சாதனையாக்குவதில் அவர் உறுதியாக இருந்தார். 15 ஆண்டுகள் கழித்து 1930-ஆம் ஆண்டு மார்ச் 12-ல் தொடங்கி ஏப்ரல் 6 வரை 24 நாட்கள் நடத்திய உப்பு சத்யாகிரகப் போராட்டத்திற்கான தண்டி யாத்திரையில் காந்தியின் கணக்கு சரியாக அமைந்தது. ஒரு நாளைக்கு 10 மைல் என 24 நாட்களில் 240 மைல் நடைப்பயணத்தின்போது காந்தியையும் அவருடனான 80 பேரையும் வழியெங்கும் ஆண்களும் பெண்களுமாகப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வரவேற்றனர். வடக்கே தண்டி நோக்கி உப்பு சத்யாகிரகம் நடந்தபோது, தெற்கே வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் அதே போராட்டம் நடந்தது. மக்களை ஒருங்கிணைப்பதில் காந்தி பெற்ற வெற்றியை பிரிட்டிஷாருக்கு உணர வைத்தது அவரது உப்பு சத்யாகிரக நடைப்பயணம்.