மாவலி பதில்கள்

ilayaraja

பி.சாந்தா, மதுரை-14

அரசியல்வாதிகளையும் அவர்களின் சுயநலத்தையும் அறியாமல் தமிழ்நாடு பலவற்றை இழந்துவிட்டது என்பதுதானே உண்மை?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வாக்களித்துதான் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் உண்மைதானே!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பேசியவர்களில் மிகச் சிறப்பாகப் பேசியவர் யார்?

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், மோடிக்கு எதிராக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய மு.க.ஸ்டாலினின் பேச்சு, இந்திய அரசியல் களத்தில் விவாதத்தை உருவாக்கும் அளவிற்கு சிறப்பானது என்றால், அதே விழாவில் கலைஞரின் கோபாலபுரம் வீடு, அதன் எளிமை, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்திய ராகுலின் பேச்சு மிகச்சிறப்பானது.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

அரசு மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது யாருடைய குற்றம்?

அவசர -அத்தியாவசிய -உயிர்காக்கும் சேவையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டிய அரசு மருத்துவர்

பி.சாந்தா, மதுரை-14

அரசியல்வாதிகளையும் அவர்களின் சுயநலத்தையும் அறியாமல் தமிழ்நாடு பலவற்றை இழந்துவிட்டது என்பதுதானே உண்மை?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வாக்களித்துதான் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் உண்மைதானே!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பேசியவர்களில் மிகச் சிறப்பாகப் பேசியவர் யார்?

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், மோடிக்கு எதிராக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய மு.க.ஸ்டாலினின் பேச்சு, இந்திய அரசியல் களத்தில் விவாதத்தை உருவாக்கும் அளவிற்கு சிறப்பானது என்றால், அதே விழாவில் கலைஞரின் கோபாலபுரம் வீடு, அதன் எளிமை, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்திய ராகுலின் பேச்சு மிகச்சிறப்பானது.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

அரசு மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது யாருடைய குற்றம்?

அவசர -அத்தியாவசிய -உயிர்காக்கும் சேவையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டிய அரசு மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்கவேண்டியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடையில் இருக்கிறது குற்றமும் தண்டனையும்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"தி.மு.க. பலவீனமாக உள்ளதால்தான் ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது' என்கிறாரே ஜெயக்குமார்?

பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. இழுத்து, ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், பதவி பறிபோன எம்.எல்.ஏ.தான் தி.மு.க பக்கம் தாவியிருக்கிறார். ஆனால், அவர்கூட அ.தி.மு.க.வுக்கு வரவில்லை என்பதை ஜெயக்குமார் உணர்ந்திருப்பார். பலவீனமாக உள்ள கட்சிதான், பிற கட்சி பிரமுகர்களை இழுக்கும் என்றால், ஜெயலலிதா, தனது ஆட்சியில் தே.மு.தி.க.வின் எம்.எல்.ஏ.க்களை இழுத்துக்கொண்டாரே, அந்தளவுக்கு பலவீனமாகவா இருந்தது ஜெ. தலைமையிலான அ.தி.மு.க.?

ilayaraja

கே.முரளி, விழுப்புரம்

பாடல்கள் எழுதியவர் யாரோ, பாடியவர் யாரோ, இசையமைத்த இளையராஜா மட்டும் "ராயல்டி' உரிமை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்?

திரைப்படப் பாடல்களின் அடிப்படை, மெட்டு. இசையமைப்பாளர் போடும் மெட்டுக்குத்தான் கவிஞர் எழுதுகிறார். பாடகர் பாடுகிறார். எனவே, "ராயல்டி' உரிமை இசையமைப்பாளரைச் சாரும். அதில் கவிஞர், பாடகர் ஆகியோருக்கும் பங்கு தரவேண்டியது நியாயம். தூர்தர்ஷன், ஆல் இண்டியா ரேடியோ போன்ற அரசு நிறுவன ஒளி-ஒலிபரப்புகளில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அத்துடன், "இசையமைப்பாளருக்கு சம்பளம் கொடுத்த தயாரிப்பாளருக்கு ராயல்டி உரிமையில்லையா' என்ற கேள்வியும் எழுகிறது. "ஒரு படத்தை டி.வி. சேனல்களுக்கு விற்பது, வேறு மொழியில் தயாரிக்க அனுமதிப்பது போன்றவற்றில் தயாரிப்பாளர்களே உரிமை பெறுகிறார்கள். இசையமைப்பாளர்களுக்கு ராயல்டி இல்லை. அதனால், இசைக்கான ராயல்டி இசையமைப்பாளருக்குத்தான்' என்கிறார் இளையராஜா.

கலை, விலையாகும்போது இத்தகைய சர்ச்சைகளுக்குப் பஞ்சமிருக்காது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"கூட்டாட்சி தத்துவத்தின்மீது அதிக நம்பிக்கைகொண்டவர் கருணாநிதி' என்று சந்திரபாபு நாயுடு புகழ்ந்து பேசியுள்ளாரே?

கூட்டாட்சி என்பது பல விழுதுகள் கொண்ட ஆலமரம். மத்திய அரசு என்கிற அந்த ஆலமரம், விழுதுகளுடன் அமைய வேண்டுமென்றால், மாநில சுயாட்சி என்ற வேர் பலமாக இருக்கவேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின்மீது கலைஞர் நம்பிக்கை கொண்டிருந்ததற்கு காரணம், மாநில சுயாட்சிக்கான போராளியாக அவர் இருந்ததுதான்.

_______________

காந்தி தேசம்

சுந்தரமூர்த்தி, திருவெண்ணெய்நல்லூர்

பிராமணர்களை உள்ளடக்கிய காந்தியின் சமத்துவப் பார்வைக்கும், பிராமணர்கள் ஆதிக்கத்துக்கு எதிரான திராவிட இயக்கத்தின் சமூக நீதிப் பார்வைக்கும் என்ன வித்தியாசம்?

"தமிழ்நாட்டில் காந்தி' என்கிற புத்தகம் இதற்கான விடையைத் தருகிறது. நீதிக்கட்சியும் அதன்பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டிருந்த காலம். அப்போது சென்னை வந்த காந்தியை நீதிக்கட்சித் தலைவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வமும், தமிழறிஞர் உமாமகேசுவரனாரும் சந்தித்து, “"தமிழ்நாட்டில் பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினை முற்றி வளர்ந்து தீவிரமாகிக் கொண்டிருக்கிறதே, அதனை நீங்கள் தலையிட்டு தீர்த்து வைத்தால் என்ன?'’என்று கேட்கிறார்கள். அப்போது காந்தி, "இதை என்னிடத்திலே நீண்ட காலத்திற்கு முன்பே ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (பெரியார்) வந்து சொன்னார். ஆனால், இப்போது முன்புபோல பிராமின்-பிராமணரல்லாதார் பிரச்சினை இல்லை. பிராமணர்கள் முன்புபோல இல்லை. இப்போது மாறிவிட்டார்கள்'’என்று சொல்லியிருக்கிறார்.

"எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?'’என ஏ.டி.பன்னீர்செல்வமும், உமாமகேசுவரனாரும் காந்தியிடம் கேட்க... அதற்கு அவர், “"முன்பெல்லாம் நான் மயிலாப்பூரில் சீனிவாச அய்யங்கார் வீட்டில் வந்து தங்கினால், என்னை திண்ணையில்தான் உட்கார வைப்பது வழக்கம். இப்போது நானும் என் மனைவி கஸ்தூரியும் அவர்கள் வீட்டு சமையலறை வரை போகிறோம்'’என்று பதிலளித்திருக்கிறார்.

வருணாசிரமத்தைப் போற்றியபடி சமத்துவத்தை காந்தி வலியுறுத்தியபோது, அவரிடமே பாகுபாடு காட்டியவர்கள், நீதிக்கட்சியும்-சுயமரியாதை இயக்கமும் வருணாசிரமத்துக்கு எதிராக சமூகநீதியை முன்வைத்தபோது காந்திக்கும் சேர்த்து நீதி கிடைத்திருப்பதை காந்தியின் வார்த்தைகளே எடுத்துக்காட்டுகின்றன.

nkn261218
இதையும் படியுங்கள்
Subscribe