எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கக்கூடாதென பிரதமர் மோடி கூறுவது பற்றி?

நாமும் அதைத்தான் சொல் கிறோம். மொழி அடிப்படையில் பிளவு களை உருவாக்கக்கூடாது என. நம்மை நோக்கிச் சொல்வதை, அவரது ஆட்சியிலுள்ள அமைச்சர்கள், அதிகாரி களை நோக்கிச் சொல்லியிருந்தால் பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

கடவுளே வந்தாலும் பெங்களூரூ டிராஃபிக்கை சரிசெய்ய முடியாது என்கிறாரே டி.கே.சிவக்குமார்?

முடியாதது என்று எதுவுமில்லை என்பதுதான் தன்னம் பிக்கையின் பாலபாடம். ஒரு மாநிலத்தின் துணை முதல்வரே இப்படிப் பேசினால் எப்படி? ஒன்று, இருக்கும் சாலையை வைத்துக்கொண்டே, மாற்று வசதிகள் மூலம் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கலாம். மெட்ரோ ரயில் வசதியைக் கொண்டுவருவது, பொதுப் போக்குவரத்தை அதிகளவு பயன்படுத்த ஊக்குவிப்பது போன்று. இல்லையா, மிக முக்கியமான சாலைகளை, தயவு தாட்சண்யம் பார்க்காமல் அகலப்படுத்தி போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கலாம். இப்படி முடியாது என்று சொல்லிக்கொண்டு பிரச்சனையை ஒத்திப்போடு பவர்களை மக்கள் விரும்புவதில்லை.

mm

கல்லிடை சிவா, கல்லிடைக்குறிச்சி.

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குனர், எலான் மஸ்கின் எந்த உத்தரவையும் பொருட்படுத்த வேண்டாம் என கூறியிருப்பது பற்றி?

Advertisment

சமீபத்தில் அமெரிக்க அரசின் செயல்திறன் அதிகரிப்புத் துறையின் தலைவராக எலான் மஸ்கை நியமித்தார் ட்ரம்ப். பதவிக்கு வந்த வேகத்தில் அமெரிக்க அரசுத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு மின்னஞ் சலைத் தட்டிவிட்டார் மஸ்க். அந்தந்த வாரம் ஊழியர்கள் செய்த வேலையின் சுருக்கத்தை தனக்கு பட்டியலிடவேண்டும். அப்படி பட்டியலிடா தவர்கள், பணி விலகல் கடிதம் கொடுத்ததாகப் பொருள்படும் என மிரட்டியிருந்தார். சமீபத்தில் எஃப்.பி.ஐ. யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் படேல் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றதும், ‘எஃப்.பி.ஐ.யில் இயக்குநர்தான் மற்ற ஊழியர்களின் வேலையை மதிப்பிடுபவர். அதனால், யாரும் மஸ்குக்கு தாங்கள் செய்த வேலைகுறித்து மின்னஞ்சல் அனுப்பத் தேவையில்லை’ என்று உத்தரவிட்டிருக் கிறார். சபாஷ் சரியான போட்டி!

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

ஒரு அரசியல்வாதி புதிய கட்சியைத் தொடங்கும்போது இல்லாத எதிர்பார்ப்பு ஒரு நடிகர் கட்சி தொடங்கும்போது மட்டும் அதிகமாவது ஏன்?

Advertisment

கட்சி தொடங்குவதோ அல்லது இருக்கும் கட்சியில் இணை வதோ அரசியல்வாதியின் தலைவிதி. ஆனால் நடிகர் கட்சி தொடங்குவது என்பது விதிவிலக்கு. கிளி பேசினால் ஆச்சரிய மில்லை. காகம் பேசினால் ஆச்சரியமல்லவா! அப்படித்தான்.

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை ஐந்தே நிமிடங்களில் நாங்கள் நினைத்தால் நீக்கமுடியும் என்ற ஹெச்.ராஜா வின் கூற்று ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறதே?

ஆங்கிலத்தில் வெர்பல் டயோரியா என்றொரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. வார்த்தை வாந்தி எனச் சொல்லலாம். மக்க ளில் பலர் தர்க்கப்பூர்வமாகப் பேசும்போது அலட்சியப்படுத்துகிறார் கள். யாராவது வார்த்தை வாந்தியெடுத்தால் அதைப் பார்த்து முகம்சுளிப்பதை விட்டுவிட்டு, ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

திருமணமே செய்து கொள்ளவேண்டாம் என்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்?

இவர்தான் சமீபத்தில் நாக்பூரில், குழந்தை பிறப்பு சதவிகிதம் குறைகிறது. குறைந்தபட்சம் 3 குழந்தைகளாவது பெற்றுக்கொள் ளுங்கள் என்றார். இப்போது திருமணமே வேண்டாம் என்கிறார். திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்வதை அவரது அமைப்பு அங்கீ கரிக்கிறதா என்பது தெரியவில்லையே.

க.பன்னீர்செல்வம், திண்டுக்கல்

பா.ஜ.க. ஆட்சியில் ஒன்று புள்ளி விவரமே இல்லையென்கிறார்கள், இல்லை நம்ப முடியாதபடிக்கு கணக்குச் சொல்கிறார்கள்... எதை நம்புவது?

அதை விடுங்கள். நான் வேறொரு புள்ளிவிவரம் சொல்கிறேன். பிரதமர் மோடியின் எக்ஸ் கணக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 105 மில்லியன் எனக் காட்டுகிறது. கிட் டத்தட்ட 10.5 கோடி பேர். இந்தியாவில் எக்ஸ் தள பயனாளர்களின் எண்ணிக் கையே 25.1 மில்லியன்தான். ஆக மீதமுள்ள 80 மில்லியன் ஃபாலோயர் கள் வெளிநாட்டிலிருந்தபடி மோடியைப் பின்தொடர்கிறார்கள் போலிருக்கிறது. பிரதமர் மோடிக்கு இந்தியாவுக்கு வெளியில்தான் ஃபாலோயர்கள் அதிகமென்பதால், வெளிநாட்டுத் தேர்தல்களில் போட்டியிட்டால்கூட ஜெயிப்பார் போலிருக்கிறது.