மாவலி பதில்கள் 08.02.25

ss

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

டெல்லியைக் குறித்து வெளிநாடுகளில் பேசுவதே இல்லை. வெட்கமாக இருக்கிறது என்கிறாரே ஜெய்சங்கர்?

நமக்குத்தான் மாநிலங்கள், முதல்வர்கள். இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு இந்தியா ஒற்றைத் தேசமாகத்தான் பொருள் படும். டெல்லியைக் குறித்து வெளிநாடுகளில் பேசவே இல்லையென்றால், அது இந்தியாவை ஆளும் பிரதமரின் தோல்வியென்றுதான் பொருட்படுத்திக்கொள்ளவேண்டும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

இறை வழிபாட்டு இடங்களில் கூட்ட நெரிசலில் இறப்பவர்கள் இறைவனிடம் செல்கிறார்கள் என்று ஒரு பொது வான கருத்து இருக்கிறதே?

யார் சொன் னது? எதிர்பாரா மல் இறப்பவர் களின் உறவினர் களைத் தேற்றுவதற்கு, துக்கம் விசாரிக்க வரு பவர்கள், ‘"உங்க அப்பாவை கடவுள் அழைச்சுக் கிட்டார்' எனச் சொல்வார்கள். அப்படியென் றால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மகா

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

டெல்லியைக் குறித்து வெளிநாடுகளில் பேசுவதே இல்லை. வெட்கமாக இருக்கிறது என்கிறாரே ஜெய்சங்கர்?

நமக்குத்தான் மாநிலங்கள், முதல்வர்கள். இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு இந்தியா ஒற்றைத் தேசமாகத்தான் பொருள் படும். டெல்லியைக் குறித்து வெளிநாடுகளில் பேசவே இல்லையென்றால், அது இந்தியாவை ஆளும் பிரதமரின் தோல்வியென்றுதான் பொருட்படுத்திக்கொள்ளவேண்டும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

இறை வழிபாட்டு இடங்களில் கூட்ட நெரிசலில் இறப்பவர்கள் இறைவனிடம் செல்கிறார்கள் என்று ஒரு பொது வான கருத்து இருக்கிறதே?

யார் சொன் னது? எதிர்பாரா மல் இறப்பவர் களின் உறவினர் களைத் தேற்றுவதற்கு, துக்கம் விசாரிக்க வரு பவர்கள், ‘"உங்க அப்பாவை கடவுள் அழைச்சுக் கிட்டார்' எனச் சொல்வார்கள். அப்படியென் றால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மகா கும்பமேளா நடத்தி, கூட்ட நெரிசலை உண்டாக்கி, இறைவனிடம் செல்ல விரும்புபவர் களை அனுப்பிவைத்துவிடலாமே! இத்தகைய நிகழ்வுகள் மாநில அரசின் நிர்வாக ஏற்பாட்டின் தோல்வி. அவர்களை உரியமுறையில் கேள்வி கேட்டால்தான் எதிர்காலத்திலாவது இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருக்கும்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் டாப்-10 பட்டி யலில் இந்தியா இடம் பெறவில்லையே..?

ஆமாம், அந்தப் பட்டிய லில் இந்தியா 12-ஆம் இடத்துக் குச் சென்றுள்ளது. முதல் பத்து இடங்களில் ஆறு இடங்களை ஆசிய நாடுகளும், 3 இடங் களை ஐரோப்பிய நாடுகளும், முதலிடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளது. உலகிலேயே அதிக ஜனத்தொகை, ஜி.டி.பி. மதிப்பீட்டில் 5-வது இடம், நான்காவது பெரிய ராணுவம் வைத்திருந்தாலும், எங்க கணக் கீடு வேறு விஷயங்களை வைத்து’ என்று இந்தியாவை 12-ஆம் இடத்துக்குத் தள்ளிவிட்டது ஃபோர்ப்ஸ். தலைமை, பொரு ளாதாரச் செல்வாக்கு, அரசியல் அதிகாரம், வலுவான சர்வதேச கூட்டுறவு, ராணுவ பலம் உள் ளிட்ட மதிப்பீடுகளை வைத்து நாடுகள் வரிசைப்படுத்தப்படு கின்றன. ஏற்கெனவே இந்த வருடம் இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிவருகிறது. கூடவே, மோடியின் தலை மைத்துவத்துக்கான மதிப்பும் சேர்ந்து இறங்குகிறதோ என்னவோ!

கல்லிடை சிவா, கல்லிடைக்குறிச்சி

"சிறைக் கைதிகளை வைத்து வேலை வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்' என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதே?

நல்ல நோக்கத்தில் எடுக் கப்பட்ட முடிவுதான். சிறைக் கைதிகளை சிறைத்துறை அதிகாரிகள் தங்களது சொந்த ஆதாயத்துக்கு, வீட்டு உபயோ கத்துக்குப் பயன்படுத்துவது தவறான அணுகுமுறை. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து அவர்களை வீட்டுக்கு அழைத் துச்சென்று வேலைவாங்குவதில் ரகசியம் பேணுவார்களே தவிர, உடனடியாக அந்தப் பழக்கத் தைக் கைவிடுவது அபூர்வ மாகத்தான் நடக்கும்.

சி.ராகுல், திண்டிவனம்

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கைவிலங்குடன் விமானத்தில் ஏற்றி அனுப்பியிருக்கிறதே அமெரிக்கா?

தவறான அணுகுமுறை. ஆனால் இதேபோல் கொலாம் பியாவைச் சேர்ந்தவர்களை கைவிலங்குடன் அனுப்புவதற்கு அந்நாட்டு அதிபர் கஸ்டவோ பெட்ரோ ஆட்சேபம் தெரி வித்த தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான சட்டவிரோதக் குடியேறிகள் அடையாளம் காணப்பட்டிருக் கிறார்களாம். அதில், 205 பேர் முதல் கட்டமாக, கைவிலங் குடன் விமானம் ஏற்றப்பட்டி ருக்கிறார்கள். ஆனால் 54 இஞ்ச் மார்புடையவரிட மிருந்து எந்த எதிர் வினையும் இல்லை.

க. சந்திரகுமார், சேலம்

காலக்கொடுமை என்றால் என்ன?

மத்தியப்பிரதேசத்தில் தன் இளைய மகனுடன் வசித்து வந்த ஒரு தந்தை இறந்து விட்டார். மகன் தன் அண்ண னுக்குத் தகவல் தெரிவித்து விட்டு இறுதிச் சடங்குகளுக்கு ஆயத்தமானார். நிறை போதையில் வந்த மூத்த மகன்... "நான்தான் மூத்தவன், அதனால் இறுதிச் சடங்குகளைச் செய் வேன்' என்றார். தம்பியோ, தந்தையைப் பார்த்துக் கொண்டது நான்தான். எனவே தானே இறுதிச் சடங்கு களைச் செய்வேன் என்றார். விவாதம் முற்றிய நிலையில், அண்ணன் "தந்தையின் உட லில் பாதியை வெட்டிக் கொடுங்கள். அதற்கு நான் இறுதிச் சடங்குகளை செய்துகொள்கிறேன்' என்றி ருக்கிறார். பிறகு அங்கிருந்த வர்கள் சமாதானப்படுத்தி அண்ணனை அங்கிருந்து அகற்றியிருக்கின்றனர்.

mm

ஆர்.சுரேஷ், செங்கோட்டை

டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ்ஸில் குகேஷை வீழ்த்தி பட்டம் வென்றிருக்கிறாரே பிரக்ஞானந்தா?

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்...… இல்லையில்லை, இந்தியாவிலே இருப்பது நமக்குப் பெருமைதானே!

nkn080225
இதையும் படியுங்கள்
Subscribe