எஸ். இளையவன், சென்னை
மேற்கு வங்கத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று மம்தா பானர்ஜி கூறிவருவது பற்றி...?
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கும், மேற்குவங்க பா.ஜ.க.வுக்கும் கடந்த பத்தாண்டுகளாகவே மோதல் ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு கோலோச்சிய கம்யூனிஸ்டுகள், காங்கிரஸைத் தாண்டி இரண்டாமிடத்துக்கு பா.ஜ.க. வந்துவிட்டது. அதனால் இருதரப்பிலும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் வாடிக்கையாகியிருக்கிறது. வாக்காளர்களை சி.ஆர்.பி.எப். வீரர்கள் துன்புறுத்துவதாக முன்பு மம்தா கூறியிருக்கிறார். சமீபத்தில் பங்களாதேஷ் நபர்களை ஊடுருவ எல்லைப் பாதுகாப்புப் படை அனுமதித்துவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் மீது பழிபோடப் பார்க்கிறது என கூறியிருக்கிறார். இரு தரப்புமே விடாக்கண்டன்... கொடாக்கண்டன் தரப்பு. அதனால் எளிதில் ஒரு முடிவுக்கு வருவது சிரமம். வழக்கமாக, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங
எஸ். இளையவன், சென்னை
மேற்கு வங்கத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று மம்தா பானர்ஜி கூறிவருவது பற்றி...?
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கும், மேற்குவங்க பா.ஜ.க.வுக்கும் கடந்த பத்தாண்டுகளாகவே மோதல் ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு கோலோச்சிய கம்யூனிஸ்டுகள், காங்கிரஸைத் தாண்டி இரண்டாமிடத்துக்கு பா.ஜ.க. வந்துவிட்டது. அதனால் இருதரப்பிலும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் வாடிக்கையாகியிருக்கிறது. வாக்காளர்களை சி.ஆர்.பி.எப். வீரர்கள் துன்புறுத்துவதாக முன்பு மம்தா கூறியிருக்கிறார். சமீபத்தில் பங்களாதேஷ் நபர்களை ஊடுருவ எல்லைப் பாதுகாப்புப் படை அனுமதித்துவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் மீது பழிபோடப் பார்க்கிறது என கூறியிருக்கிறார். இரு தரப்புமே விடாக்கண்டன்... கொடாக்கண்டன் தரப்பு. அதனால் எளிதில் ஒரு முடிவுக்கு வருவது சிரமம். வழக்கமாக, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங் களில்தான் ராணுவ வீரர்கள் குடிமக்களைத் துன்புறுத்துவதாகப் புகார் வரும். இப்போது அதைத்தாண்டி மேற்கு வங்கத்திலும் வந்திருக்கிறது. குற்றச் சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்தில் இது மோசமான முன்னுதாரணம்.
எச்.மோகன், மன்னார்குடி
தமிழ்நாட்டின் நிதி நிலை எப்போது சீராகும்?
செலவைவிட வரவு அதிகமாகும்போது. இந்தியாவே வரவைவிட அதிகமாக செலவு செய்யும்போது, அதன் மாநிலங்களில் ஒன்றான தமிழகம் மட்டும் எப்படி மாறுபட்டிருக்க முடியும்? அதோடு மத்தியிலிருக்கும் ஒன்றிய அரசு நியாயமான நிதிப் பகிர்வை மேற்கொண்டாலே தமிழக நிதி நிலைமை ஓரளவு மேம்பட்டுவிடும்.
மாடசாமி, மயிலாடுதுறை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எப்போது ஏலம் விடப்படும்?
ஏலம் விடப்படுவதற்கு தடையெதுவும் இல்லை. கிரண் எஸ்.ஜாவலி எனும் வழக்கறிஞர் மேற்பார்வையில் ஏலம் விடலாம் என கர்நாடக நீதிமன்றம், அரசு இரண்டும் தெரிவித்துவிட் டன. நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட சொத்துக்கள், நகைகள் அனைத்தையும் விற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்குக்கு ஆகிய செலவுக்கான தொகை யைக் கட்டிவிட்டு, மீதத்தை தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கலாம். அதை மேற்கொள்ளவிடாமல் எந்த சக்தி தடை போட்டுக்கொண்டிருக்கிறது என்பது மாவலிக்கும் தெரியவில்லை.
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
இப்போது காங்கிரஸிலிருப்பது போலி காந்திகள் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது எதனால்?
நேருவின் குடும்ப வாரிசுகளான இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா, சஞ்சய், மேனகா, வருண் அனைவருக்கும் காந்தி என்ற அடை மொழி வருவது தெரியும்தானே! பா.ஜ.க.வினர்தான் அசல் காந்தியையே மதித்ததில்லையே. பிறகெங்கே மற்ற காந்திகளை மதிக்கப்போகிறார்கள்.
ப.அகல்யா, திருநெல்வேலி
சீனாவில் நிறைய சிறைகள் கட்டப்பட்டுவருகிறதாமே?
கடந்த 2017 முதல் சீனா நிறைய சிறைகளைக் கட்டிவருகிறதாம். தற்போதுவரை 218 சிறைச்சாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாம். ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதாவோருக்காக இந்தச் சிறைகள் என்கிறார்கள். இனி தேர்தலே கிடையாது. இருக்கிற அதிபரே நிரந்தர அதிபர் என்ற ஜி ஷின்பிங்கின் அறிவிப்பைவிட பெரிய ஊழல் இருக்கிறதா என்ன?
வண்ணை கணேசன், கொளத்தூர்
ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து பா.ம.க.வுக்குக் கிடைத்த வெற்றியென்று அன்புமணி பெருமிதப்படுகிறாரே?
காக்கை உட்கார விழுந்த பனம்பழம் பழமொழி கேட்டிருக்கிறீர்கள் அல்லவா! அந்த பனம்பழங்களில் ஒன்றுதான் இதுவும்.
சிவா, கல்லிடைக்குறிச்சி
ரூபாய் நோட்டுகளில் எக்ஸ்பைரி தேதி அச்சடித்தால் எல்லா கள்ள நோட்டுகளும் தப்பமுடியாதே?
ரூபாய் நோட்டுகளில் எக்ஸ்பைரி தேதியை அரசாங்கம் அடித் தால், கள்ளநோட்டு அச்சடிக்கிறவர்களும் ஒரு தேதியை அச்சடிக்கப் போகிறார்கள். அதனால் எப்படி கள்ளநோட்டு ஒழியும்? மாறாக, வருடத்துக்கு ஒருமுறை தேதி காலாவதியான நோட்டுக்களை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்று டிமானிடைசேஷன் கொடுமையைத்தான் அனுபவிக்கவேண்டியிருக்கும்.
டேவிட். கே, நாகப்பட்டினம்
முதல்வரின் நிகழ்ச்சியில் கறுப்பு நிற ஷாலை வாங்கி வைத்துக்கொண்டு அனுமதித்திருக்கிறார்களே?
தமிழக ஆளுநரின் பட்டமளிப்பு விழா ஒன்றில் கறுப்பு உடை அணிந் தவர்கள் வலுக்கட்டாயமாகத் தடுக் கப்பட்டார்கள். பட்டமளிப்பு விழா நடக்கும் அரங்குக்குள்ளேயே அவர் கள் அனுமதிக்கப்படவில்லை. அது குறித்து தமிழகத்தில் விமர்சனம் எழுந்தது. இப்போது தமிழக காவல்துறை சென்னை எழும்பூரில் நடந்த சிந்து வெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கில், மாணவிகளின் துப்பட்டாக்களை வாங்கி வைத்துவிட்டு அனுமதித்திருக்கிறார்கள். விவகாரம் சர்ச்சையானதும் பொறுப்பை காவல்துறை ஏற்றிருக்கிறது. ஆளுநர் நிகழ்வில் நடந்தது தவறென்றால், முதல்வர் நிகழ்வில் நடந்ததும் தவறுதானே!