என். இளங்கோவன், மயிலாடுதுறை.
கடந்த ஆண்டைவிட பா.ஜ.க.வுக்கு மூன்று மடங்கு அதிகமாக 2,244 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடையாகக் கிடைத்துள்ளதே?
மூன்று தேர்தல்களில் பா.ஜ.க.தானே வென்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அதனால் அதற்குத்தான் நிதி அதிகம் கிடைக்கும். கொடுக் காதவர்களையும் கொடுக்க வைக்கத்தான் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. இருக்கிறது. எதிர்க் கட்சிகளிடம் என்ன இருக்கிறது?
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
மன்மோகன் சிங் கௌரவமான இறுதிச் சடங்குக்குத் தகுதியானவர் -இந்த வெட்கக்கேடான காட்சிகளுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளாரே சசிகாந்த் செந்தில்...?
பஞ்சாப்காரர்கள் என்றாலே ஒன்றிய அரசுக்கு ஆகமாட்டேன் என்கிறது. பஞ்சாப் விவசாய சங்கங்களின் தலைவர் ஜக்சித்சிங் தலேவால். ஒருபக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து நெருக்கிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பஞ்சாபைச்
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
கடந்த ஆண்டைவிட பா.ஜ.க.வுக்கு மூன்று மடங்கு அதிகமாக 2,244 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடையாகக் கிடைத்துள்ளதே?
மூன்று தேர்தல்களில் பா.ஜ.க.தானே வென்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அதனால் அதற்குத்தான் நிதி அதிகம் கிடைக்கும். கொடுக் காதவர்களையும் கொடுக்க வைக்கத்தான் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. இருக்கிறது. எதிர்க் கட்சிகளிடம் என்ன இருக்கிறது?
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
மன்மோகன் சிங் கௌரவமான இறுதிச் சடங்குக்குத் தகுதியானவர் -இந்த வெட்கக்கேடான காட்சிகளுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளாரே சசிகாந்த் செந்தில்...?
பஞ்சாப்காரர்கள் என்றாலே ஒன்றிய அரசுக்கு ஆகமாட்டேன் என்கிறது. பஞ்சாப் விவசாய சங்கங்களின் தலைவர் ஜக்சித்சிங் தலேவால். ஒருபக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து நெருக்கிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு முன்னாள் பிரதமருக்கு, ஒன்றிய அரசு உரிய கௌரவத்தை அளித்து தனிப்பட்ட இடத்தில் எரியூட்டு வதற்கு அனுமதி மறுக்கிறது. எல்லா ஆணவங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு.
ஜி. அர்ஜுனன், செங்கல்பட்டு
அமித்ஷா பேச்சைக் கண்டித்து அனைத்து கட்சி களும் போராட்டம் என நேரத்தை வீணடிப்பது சரியா?
அவர்கள் என்ன களை பிடுங்கச் செல்கிறார் களா... செங்கல் சுமக்கப் போகிறார்களா... நேரம் வீணாவதாகச் சொல்வதற்கு. நாடாளுமன்றம் செல்லும் எம்.பி.க்களுக்கு முக்கிய வேலை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதும், ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் தான். முக்கிய மசோதாக்களை, கருத்துகளை விவா திக்கவே அனுமதிப்பதில்லை பா.ஜ.க. பிறகென்ன செய்ய? நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து போராட்டம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதை மக்களுக்கு உணர்த்துவதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி!
அன்னூரார், பொன்விழி
பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு யார்?
அதை நீங்களும் நானும் தீர்மானிக்கமுடியாது. ஆர்.எஸ்.எஸ்.தான் தீர்மானிக்கும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைமைக்கு நெருக்கமானவர்களைத் தெரியு மென்றால் கேட்டுப்பாருங்கள். சொல்லக்கூடும்!
வாசுதேவன், பெங்களூரு
வாஜ்பாய் நல்லவர் என ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி?
ஒருவரின் நினைவு தினத்தில் அவரைப் பற்றிய கேள்விகளுக்கு எதிர்மறையாகப் பதிலளித்துவிட முடியாது. ஒப்பீட்டு அளவில் அத்வானி, மோடிக்கு நல்லவர் என்று பதில் சொல்வதை வைத்து... அதை அப்படியே பொருள்கொண்டுவிடக் கூடாது.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லாத தால் தமிழக மக்களுக்கு சலுகைகள் கிடைக்காமல் இருப்பது ஸ்டாலினுக்குத் தெரியாதா?
மத்திய அரசு நினைப்பதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவதற்கு எதற்கு எதிர்க்கட்சிகள், தேர்தல், அரசியலமைப்புச் சட்டமெல்லாம். பேசாமல் ஒரே கட்சியை ஆட்சியிலமர்த்தி அதிபராக்கிவிட்டுப் போய்விடலாமே! தங்க ஊசி என்பதற்காக எடுத்துக் கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் அதற்கு எதிர்த்தரப்பு, மாற்றுப் பார்வைகள் கொண்ட ஒரு அணி வேண்டும். அதேபோல தங்களுக்கு எதிர்த்தரப்பு, எதிர்க்கருத்து கொண்ட கட்சி என்பதற்காக அதற்கு நிதி தரமாட்டேன், சலுகைகள் அளிக்கமாட்டேன் என்று சொல்வது நல்ல ஒன்றிய அரசாக இருக்கமுடியாது. தேவையான விஷயங்களில், தமிழக அரசு இணக்கமாகத்தான் செல்கிறது. எல்லாவற்றிலும் மத்திய அரசுக்கு இணங்கிச் செல்லவேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்!
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
ஆண் -பெண் இரு பாலினங்கள்தான், திருநங்கை பைத்தியக்காரத்தனத்தை ஒழிப்பேன் என்று ஆவேசமாகப் பேசியுள்ளாரே டிரம்ப்..?
அமெரிக்காவில் இருமுறைதான் அதிபராக முடியும். இது இரண்டாவது முறை. அடித்து ஆடிவிட்டுச் செல்லவேண்டும் என நினைப்பார் ட்ரம்ப். தவிரவும், அதிபர் என்பதாலே ஒருவர் புத்திக்கூர்மையுடையவராக இருந்துவிடமுடியாது. நிறைய விஷயங்களில் பிற்போக்கானவர்தான் ட்ரம்ப். அதனால் அவர் பேசுவதை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டுவிட வேண்டியதுதான்.
மா.கார்த்திக், கடையநல்லூர்
காதலுக்கு முன்... காதலுக்குப் பின்... என்ன வித்தியாசம்?
ஒரு அழகிய யுவதியிடம் காதலைத் தெரிவித் தான் ஒரு இளைஞன். “"உனக்காக உயிரையும்கூட கொடுப்பேன். அந்தளவுக்குப் பெரியது என் காதல், உலகில் எந்த சக்தியும் உன் மீதான என் காதலைத் தடுக்கமுடியாது'’ என அடுக்குமொழி வசனம் பேசி னான். அவனது தீவிரத்தைப் பார்த்துவிட்டு அவளும் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். விடைபெறும் போது அந்த யுவதி, "நாளைக்கு வருவாயா?'’ என கேட்டாள். அதற்கு அவன் சொன்னான்: “மழை பெய்யாமல் இருந்தால்...