அ.யாழினிபர்வதம், சென்னை-78
பாராளுமன்றத்திற்குள் பணக்கட்டு எப்படி வந்தது?
இப்படி நீங்கள் பேசவேண்டும் என்பதற்காகத்தான் வந்தது. தவிரவும் அதானி, மணிப்பூர் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அவசியம் விவாதிக்கவேண்டிய விஷயங்களை விவாதிக்காமலே நாடாளுமன்றத்தை நடத்துவதை ஒரு பாணியாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க. மக்களையும் எதிர்க்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவே இந்த பணக்கட்டு கண்டுபிடிக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தி.மு.க. இருநூறு ப்ளஸ் வெற்றிபெறுமா?
அது அந்தக் கட்சித் தலைவர், தொண்டர்களின் கவலை. நமது கவலை இல்லை. எதிர்க்கட்சிகள் அடுத்தமுறை வெற்றி பெறுவதற் காக குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பி
அ.யாழினிபர்வதம், சென்னை-78
பாராளுமன்றத்திற்குள் பணக்கட்டு எப்படி வந்தது?
இப்படி நீங்கள் பேசவேண்டும் என்பதற்காகத்தான் வந்தது. தவிரவும் அதானி, மணிப்பூர் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அவசியம் விவாதிக்கவேண்டிய விஷயங்களை விவாதிக்காமலே நாடாளுமன்றத்தை நடத்துவதை ஒரு பாணியாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க. மக்களையும் எதிர்க்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவே இந்த பணக்கட்டு கண்டுபிடிக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தி.மு.க. இருநூறு ப்ளஸ் வெற்றிபெறுமா?
அது அந்தக் கட்சித் தலைவர், தொண்டர்களின் கவலை. நமது கவலை இல்லை. எதிர்க்கட்சிகள் அடுத்தமுறை வெற்றி பெறுவதற் காக குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித் திருக்கின்றன. நடப்பு கூட்டணியை உடைத்தால் ஆளுங்கட்சியைப் பலவீனப்படுத்திவிடலாம் என்ற வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. இதையெல்லாம் சமாளிக்க, தி.மு.க. எவ்வளவு புத்திக்கூர்மையுடன் செயல்படுகிறதோ... அவ்வளவு அதிகமாக சீட்டுகள் கிடைக்கும்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
குஜராத்தில் போலி நீதிமன்றம், போலி அரசு அலுவலகத்தைத் தொடர்ந்து தற்போது போலி மருத்துவ வாரியம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார்களாமே?
ஒருவேளை இதுதான் ஒரிஜினல் குஜராத் மாடல் போலிருக்கிறது. அதெல்லாம் போலி செய்திகள் என்று குஜராத் மாநில அரசு சொல்லாமலிருந்தால் சரிதான்.
தே,மாதவராஜ், கோயமுத்தூர்-45
சேற்றை வாரி வீசியது அமைச்சர் மீதா? அரசு மீதா?
வெள்ளத்தில் தத்தளித்து வீட்டில் நீர் நிறையும்போதும், வெள்ளநீரில் உடைமைகள், கால்நடைகள் அடித்துச்செல்லப்படும்போதும், உரிய உதவி தக்க நேரத்தில் வராதபோது மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பார்கள். அந்தக் கொந்தளிப்பு ஏதாவது ஒருவிதத்தில் வெளிப்படுவது இயல்புதான். ஆனால், சம்பந்தப்பட்டவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என தெரியவந்திருக்கிறது. இதுவரை பலமுறை சொந்தக் காரை எரித்துக்கொண்டு, தன் காரை இஸ்லாமியர் எரிக்க முயன்றதாக புகார் கொடுத்து அம்பலப்பட்டிருக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அதனால்தான் அந்தக் கோபம் இயல்பா, நடிப்பா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்
2026 தேர்தலில் தி.மு.க.வைவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகள் சிதறினால் நடிகர் விஜய் வாய்க்கு சர்க்கரை போடுவேன் என்கிறாரே நடிகர் கஸ்தூரி?
சமீபத்தில் வழக்கொன்றில் கைதாகாமலிருக்க ஊர் ஊராக ஓடி ஒளிந்து, கைதானதும், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையைக் காட்டி சிம்பதி அடிப்படையில் ஜாமீன் வாங்கியவர் அல்லவா! அந்த சந்தோஷம் வெளிப்படுகிறது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
கேரள மாநிலத்திற்கு வழங்கப்பட்ட பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 153 கோடியை, மீட்புப் பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்திய தற்காக மத்திய அரசு பிடித்தம் செய்திருக்கிறதே...?
அற்பத்தனம். ஏற்கெனவே மழை போன்ற பேரிடர்களுக்கு பா.ஜ.க. ஆட்சி செய்யும் வடமாநிலங்களுக்கு அளிக்கும் நிவாரணத் தொகைக்கும் பா.ஜ.க. ஆட்சியிலில்லாத தென் மாநிலங்களுக்கு அளிக்கும் நிவாரணத் தொகைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. லாப நோக்கமுள்ள வியாபார நிறுவனம்போல, ஒன்றிய அரசு நடந்துகொள்கிறது. கூடவே, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், தங்களுக்கு வாக்களிக்காத மாநிலங்களை பழி தீர்ப்பதைப் போலவும் இருக்கிறது இத்தகைய நடவடிக்கைகள்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
அரிட்டாபட்டி லிடங்ஸ்டன் சுரங்கம்?
உரிய முறையில் அறிவிப்பு செய்து, சுற்றுச்சூழல் தாக்கம் முதலியவற்றை மேற்கொண்டு, அது தொன்மையான சமணத்தலம் என்பதை கருத்தில் எடுத்துக்கொண்டு, சுற்றுவட்டார கிராம மக்களின் கருத்துகளைக் கேட்டு அனைத்தையும் முறைப்படி மேற்கொள்ளவேண்டும். மாறாக, ஒன்றிய அரசு, தாங்கள் அறிவிப்பு செய்தால், அப்பகுதி மக்கள் உடனடியாக இடங்களைக் காலிசெய்து கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கிறதுபோல. மாநில அரசுமே, பிரச்சினை பெரிதான பின்தான் சுரங்க உரிமத்தை ரத்துசெய்யக் கோரி சட்ட மன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.