Advertisment

மாவலி பதில்கள் 15.11.24

ss

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது என்கிறாரே செல்வப்பெருந்தகை?

காமராஜர் காங்கிரஸ் தலைவர்தான். அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. மற்றபடி அவர் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் இல்லை. எங்களைத் தவிர யாரும் சொந்தம் கொண்டாடமுடியாது என்று சொல்வதற்கு. பிற கட்சிக்காரர்களும் காமராஜரை சொந்தம் கொண்டாட முயன்றால், பெருமைப்படவேண்டுமே தவிர செல்வப் பெருந்தகை பதற்றப்படக்கூடாது.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

Advertisment

nn

சிறந்த திரைப்பட நடிகர், நாடக நடிகர், டப்பிங் கலைஞர் என்று பன்முக கலைஞராக விளங்கிய டெல்லி கணேஷின் மறைவு பற்றி?

Advertisment

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், நகைச்சுவை நடிகராகவும் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். நாடக உலகில் இவரது திறமையை அறிந்துதான் இயக்குநர் பாலச்சந்தர்,

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது என்கிறாரே செல்வப்பெருந்தகை?

காமராஜர் காங்கிரஸ் தலைவர்தான். அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. மற்றபடி அவர் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் இல்லை. எங்களைத் தவிர யாரும் சொந்தம் கொண்டாடமுடியாது என்று சொல்வதற்கு. பிற கட்சிக்காரர்களும் காமராஜரை சொந்தம் கொண்டாட முயன்றால், பெருமைப்படவேண்டுமே தவிர செல்வப் பெருந்தகை பதற்றப்படக்கூடாது.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

Advertisment

nn

சிறந்த திரைப்பட நடிகர், நாடக நடிகர், டப்பிங் கலைஞர் என்று பன்முக கலைஞராக விளங்கிய டெல்லி கணேஷின் மறைவு பற்றி?

Advertisment

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், நகைச்சுவை நடிகராகவும் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். நாடக உலகில் இவரது திறமையை அறிந்துதான் இயக்குநர் பாலச்சந்தர், தனது படங்களில் இவரைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டார். காலனுக்கு மனம்விட்டுச் சிரிக்கவேண்டிய தேவை வந்து, இவரை அழைத்துக்கொண்டான்போல!

ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்

2026-ல் பா.ம.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்கிறாரே, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்?

அதிருக்கட்டும், பா.ம.க.வை மக்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டுமென்றால், ஒன்று பா.ம.க. தனித்து தேர்தலில் களமிறங்கவேண்டும். இல்லை பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைக்கவேண் டும். இப்போதுவரை பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணி யிலா, தி.மு.க. கூட்டணியிலா, பா.ஜ.க. கூட்டணி யிலா என்ற கேள்விதான் மக்கள் மனதில் நிற் கிறது. அந்த நினைப்பை மாற்ற டாக்டர் ராம தாஸும் அன்புமணியும் என்ன செய்யப்போகிறார்கள்!

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

ஆஸ்திரேலியாவில், சிறுவர்கள் சமூக ஊடகம் பார்க்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து?

நல்ல முடிவுதான். நியாயமாகப் பார்த்தால் பெரியவர்களும்கூட ஒருநாளில் குறிப்பிட்ட மணி நேரம் தவிர சமூக ஊடகங்களிலோ, வலைத் தளங்களிலோ உலவத் தடை விதிக்கலாம். அப்படிச் செய்தால் பல்வேறு பிரச்சனைகள் தானாகவே தீரும்.

வாசுதேவன், பெங்களூரு

உணவை வீணடிப்பவர் கள், உணவு கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் குறித்து நினைத்துப் பார்ப்பார்களா?

உலக அளவில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவும், இந்திய அளவில் 78.2 மில்லியன் டன் உணவும் வீணாகிறது. இவற்றை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால் லட்சக் கணக்கானவர்கள் பசியாறமுடியும். 2016 முதலே உணவை வீணடிப்பதைத் தடுக்க பிரான்ஸ் நாடு சட்டமியற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. உணவகங்கள், மளிகைக் கடைகள் போன்றவை வீணாக் கும் உணவுகளை, அதற்கும் முன்பே தொண்டு நிறுவனங் களின் மூலம் வேலை யற்றவர்கள், வீடற்றவர் கள் ஆகியோருக்கு விநியோகித்து உணவு வீணாவதைத் தடுத்துவருகிறது. பிரான்ஸ் மட்டுமின்றி, வேறு சில நாடுகளும் உணவு வீணாவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றியுள்ளன. உணவை வீணாக்கும் நாடுகளில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள் எவை தெரியுமா? முதல் இடத்தில் சீனா, இரண்டாவது இடத்தில் இந்தியா. இந்த இரண்டு நாடுகள்தான் உலகிலேயே அதிக மக்கள் தொகை வைத்துள்ள நாடுகள்.

bb

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அணியும் ஆடையால் ஒருவர் சாதுவாக ஆகிவிடமுடியாது என்கிறாரே அகிலேஷ் யாதவ்..?

மாவலிக்கும் அகிலேஷ் யாதவுடன் உடன்பாடு தான். காவியுடை அணிந்து ஒரு மடத்தின் தலைவ ராக இருப்பவர் செய்யவேண்டிய நற்காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் அவர் செய்ததெல்லாம் புல்டோசர் மூலம் வீடு இடிப்புகள், சிறுபான்மையினருக்கு தொடர் நெருக்கடிகள், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சொந்தக் கட்சியினர்மீது நடவடிக்கை எடுக்காமல் விடுதல் போன்றவைதான். பிற கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களையும், அரசு ஊழியர்களையும் அலுவலகம், வீடு புகுந்து மிரட்டும் நிலையே உத்தரப்பிரதேசத்தில் நிலவுவதாக செய்திகள் வருகிறது. மொத்தத்தில் உத்தரப்பிரதேசத்தை பாகிஸ்தானுக்கு இணையாக வளர்த்து வைத்திருக்கிறார். இது சாதனையல்ல வேதனை. யோகி, சாதுவாகவும் சாதிக்கவில்லை. அரசியல்வாதியாகவும் சாதிக்கவில்லை.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றால், மணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் என்று சரத்பவார் கட்சி பிரச்சாரம் செய்திருக்கிறதே?

வேண்டாத வேலை! சரத் பவாருக்கு தாத்தா வயது ஆகிறது. ஏன் இந்த வேலை? தேர்தலில் கொடுக்க எத்தனையோ வாக்குறுதி கள் இருக்கிறது. வேறு உருப்படியான வாக் குறுதிகளைப் பரிசீலிக் கலாம்.

nkn151124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe