வாசுதேவன், பெங்களூரு

அன்று 25 வாரங்கள் ஓடிய படங்களுக்கு வெள்ளி விழா, இன்று 25 நாட்கள் ஓடும் படங்களுக்கு விழா ஒப்பிடுக?

அன்று சினிமாவைவிட பெரிய பொழுது போக்கில்லை. இன்று டி.வி. சீரியல்கள், ஓ.டி.டி., சமூக வலைத்தளங்கள் அத்தனையையும் தாண்டித் தான் சினிமாவுக்கு வரவேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சினிமா பார்த் துத் திரும்ப சராசரியாக 1500 ரூபாய் வேண்டும். பாட்ஷா, ஒரு தடவை சொல்றதே நூறு தடவை ஆகும்போது, இப்ப 25 நாள் ஓடினாலே வெள்ளி விழா கண்ட மாதிரிதான் என்று சினிமாக்காரர்களும் ஆட்ட விதியை மாற்றி விட்டார்கள். இன்னு மொரு பிரதான வித்தி யாசமும் இருக்கிறது. அன்றைக்கு படச் சுருளை நூறு பிரிண்ட் போட்டாலே அதிகம். இப்போது, தொழில் நுட்பத்தால் ஒரே நேரத்தில் 500, 600 திரையரங்குகளில் படம் ஓடும்படி செய்யமுடி கிறது.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ஜார்கண்ட் தேர் தலில் நாங்கள் வெற்றி பெற்றால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே?

2014 தேர்தலில் பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும்போது 400 ரூபாய்க்கு விற்ற கேஸ் சிலிண்டரை 200 ரூபாய்க்கு தருவோம் என்றும், 75 ரூபாய் விற்ற பெட்ரோலை 50 ரூபாய்க்குத் தருவோம் என்றும் பிரச்சாரம் செய்தார்கள். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்துவிட்டார் மோடி. மேற்சொன்ன இரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? இப்போது அமித்ஷாவின் வாக்குறுதி மட்டும் நிறைவேற்றித் தரப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது? அடுத்தபடி ஜார்கண்ட் மக்களுக்கு 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் தரமுடியுமென்றால், இந்தியா முழுவதுமுள்ள மக்களுக்கும் 500 ரூபாய்க்குத் தரமுடியும்தானே. பிறகேன் தர மறுக்கிறார்கள்!

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் துவங் கிய 93 வருடங்களில் ஒய்ட்வாஷ் தோல்வியே சந்தித்ததில்லை என்ற கௌரவ சாதனையை இந்தியா காற்றில் பறக்க விட்டுள்ளதே...?

டெஸ்ட் போட்டியை டி20 ஆட்ட பாணியிலேயே விளையாடி ஜெயிக்க நினைத்தால் அப்படித்தான்.

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

பொய், வஞ்சகம், போலித்தனம், கொள்ளை மற்றும் விளம்பரம் இவை ஐந்தும் மோடி அரசை விவரிக்கும் வார்த்தைகள் என்று கூறுகிறாரே மல்லிகார்ஜுன கார்கே?

அதெல்லாம் இருக்கட்டும். அவர்களது ஆயுதங்கள் என்னவென்று தெரிந்துவிட்டது. அவர்களை வீழ்த்துவதற்கான வியூகத்தை காங்கிரஸ் என்று வகுக்கப்போகிறது என கார்கே சொல்வாரா!

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

த.வெ.க.வின் தலைவர் விஜய்யை வம்புக்கிழுக்கிறாரா சீமான்?

அரசியலுக்கு வந்தபிறகு பிரதமர், முதல்வர்களின் தலையே தப்பாதபோது, புதிய கட்சித் தலைவருக்கு மட்டும் சலுகைகள் தரப்படுமா என்ன? சீமான், கோமான் அனைவரையும் சமாளிக்க விஜய்யும் அவரது கட்சித் தொண்டர்களும் பயிற்சியெடுத்துத்தான் ஆகவேண்டும்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

அதிர்ச்சி வைத்தியம் என்று எதைக் கூறுவீர்கள்?

விக்கல் வரும்போது, அது நிற்பதற்காகக் கூறும் நம்பகமான பொய்கள்கூட அதிர்ச்சி வைத்தியம்தான். அல்லது, நீங்கள் முதலீடு செய்த பைனான்ஸ் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு கைவிரித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாகச் செய்திகள் வருவதும் அதிர்ச்சி வைத்தியம்தான். நம் ஊரில் இரண்டாவது வகை அதிர்ச்சி வைத்தியத் துக்கு 10-ல் 3 பேர் பழக்கப்பட்டிருப்பார்கள்.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பம் தேவையென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியிருக்கிறாரே?

கோமியம், சாணம் இவற்றிலெல்லாம் மருத்துவ சக்தியிருக்கிறது. புற்றுநோயைக் கூட தீர்க்கும் என்று வாய் ஜாலமிடும் பா.ஜ.க. அமைச்சர்களைக் கண்டிக்கப் பயந்து, குடியரசுத் தலைவர் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறாரோ என்னவோ!

எம். ஜென்சி, வளசரவாக்கம்

ஒரு ஹாலிவுட் கிசுகிசு?

அமெரிக்கத் தேர்தலில் பியான்ஸ் நோயல்ஸ், டெய்லர் ஸ்விப்ட் போன்ற பிரபலங்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். மேகன் மார்க்கிள், கமலா ஆதரவாளர் என்றபோதும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்குக் காரணம் மேகனின் கணவர் இளவரசர் பிரின்ஸ் ஹாரிதான். இங்கி லாந்து இளவரசரான இவரோ, இவரது மனைவியோ யாரோ ஒருவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால், இங்கிலாந்திலுள்ள அரச குடும்பம் இவர்கள் மீது கோபப்படலாம் என்ற தயக்கத்தில்தான் மேகன் மார்க்கிள் சைலண்டாக இருந்துவிட்டாராம்.