மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
உ.பி. ஆக்ரா உதவி கமிஷனர் 33 வயதான சுகன்யா ஷர்மா, சுற்றுலா பயணிபோல ஆட்டோ வில் பயணித்து, பெண்களின் பாதுகாப்பு தொடர் பாக சோதனை செய்துள்ளாரே...?
நல்ல விஷயம்தான். ஆனால் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய மாநிலம். அதன் ஒவ் வொரு நகரத்திலும் உயர் போலீஸ் அதி காரிகள் இப்படி பயணித்து பாதுகாப்பு தொடர்பாக சோதனை செய்து கொண்டே இருக்கமுடியாது. அதைவிட எளிய வழி யொன்று இருக்கிறது. பாலியல் குற் றங்களில், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எத்தனை பிரபலமாக இருந்தாலும் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வாங்கித்தர உ.பி. போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தால், சில வருடங்களில் அதன் நிலைமை மாறும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் இருந்த ஒருவ ருக்கு உடனே மந்திரி ப
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
உ.பி. ஆக்ரா உதவி கமிஷனர் 33 வயதான சுகன்யா ஷர்மா, சுற்றுலா பயணிபோல ஆட்டோ வில் பயணித்து, பெண்களின் பாதுகாப்பு தொடர் பாக சோதனை செய்துள்ளாரே...?
நல்ல விஷயம்தான். ஆனால் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய மாநிலம். அதன் ஒவ் வொரு நகரத்திலும் உயர் போலீஸ் அதி காரிகள் இப்படி பயணித்து பாதுகாப்பு தொடர்பாக சோதனை செய்து கொண்டே இருக்கமுடியாது. அதைவிட எளிய வழி யொன்று இருக்கிறது. பாலியல் குற் றங்களில், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எத்தனை பிரபலமாக இருந்தாலும் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வாங்கித்தர உ.பி. போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தால், சில வருடங்களில் அதன் நிலைமை மாறும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் இருந்த ஒருவ ருக்கு உடனே மந்திரி பதவி வழங்க என்ன அவசரம்?
ஒருவேளை செந்தில்பாலாஜிக்கு மந்திரி பதவி வழங்கவில்லையென வையுங்கள். பார்த்தீர்களா, தி.மு.க.வுக்கே செந்தில்பாலாஜி மீது நம்பிக்கை யில்லை. அதனால்தான் அவருக்கு மந்திரி பதவி வழங்கவில்லையென எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும். சட்டம் மட்டுமல்ல, சமயங்களில் எதிர்க்கட்சிகளும் கழுதைபோலத்தான். முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்.
எஸ். அர்ஷத்ஃபயாஸ், குடியாத்தம்
விஜய் கட்சியைப் பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்கிறாரே மாஃபா பாண்டியராஜன்?
அப்ப அ.தி.மு.க.வைப் பார்த்து தி.மு.க. பயப்படவில்லையா! அ.தி. மு.க.வில் இருந்துகொண்டு புதிதாக உருவான கட்சியைப் பார்த்து பயப்படுவதாகச் சொல்கிறார். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாகச் செயல்படவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இல்லை, எதிர் காலத்துக்கு உதவும் என இப்போதே அங்கே துண்டுபோட்டு வைக்கிறாரா?
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
நான் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான் என கூகுளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத் திருப்பது குறித்து?
சமூக ஊடகங்களையும், தேடுபொறிகளையும் எந்த நாட்டில் இயல்பாய் விடுகிறார்கள் அரசியல்வாதி கள். கூகுள் தேடுபொறி, தங்கள் நாட்டின் ரகசியங் களுக்கு ஆபத்து என தன் சொந்த தேடுபொறியை உருவாக்கிக்கொண்டது சீனா. உண்மையில், சீனர் கள் எந்தத் தகவலைப் பார்க்கவேண்டும், எதைப் பார்க்கக்கூடாது எனக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் இந்தத் தடை. இந்தியாவிலும், சமூக ஊடகங்களை ஊன்றிக் கவனித்தால், அரசுக்கு எதிரான, அரசை விமர்சிக்கும் செய்திகள், பதிவுகள் அதிகம் பேரின் பார்வைகளைச் சென்றடையாமல் தடுக்கப்படுகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் உலகம் முழுவதுமே அரசியல்வாதிகள், தங்களுக்கு எதிரான செய்திகளைக் கட்டுக்குள் வைப்பதில் ஆர்வம்காட்டுகின்றனர். ட்ரம்ப் அதை பட்டவர்த்தன மாக வெளியில்காட்டிவிடுகிறார்.
ஆர். கார்த்திக், ஜோலார்பேட்டை
புழல் சிறையிலிருந்து விடுதலையான கையோடு அறிஞர் அண்ணா, கலைஞர் சிலை களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக் கிறாரே செந்தில்பாலாஜி?
இயல்பான மனிதர்களுக்கு சில சடங்கு சம்பிரதாயங்கள் இருப்பதுபோல, கட்சிகளுக்கும் சில சடங்கு சம்பிரதாயங்கள் உண்டு. அதை மேற்கொள் ளும்போது கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கும். ஒருவேளை செந்தில்பாலாஜிக்கு ஆன்மிக நம்பிக்கையிருந்தால், அடுத்தடுத்த நாட்களில் கோவிலுக்குப் போய் பூஜை செய்து தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் என்று வேண்டுதல் செய்வாராய்க்கூட இருக்கும்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
ஜெய்ப்பூரில் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை கோமியம் தெளித்து புனிதப்படுத்தியிருக்கிறதே பா.ஜ.க.?
நாம் என்ன செய்யமுடியும்? அவர்களுக்குச் சுரணை வேண்டும். கட்சி மாறுவதற்காக, தீட்டுப் பட்ட பொருளைப் போல கோமியத்தைத் தெளித்து கட்சிக்குள் இழுக்கிறார்களே, இந்த அவமானம் தேவையா என்று யோசிக்கவேண்டியது அந்த கவுன் சிலர்கள். சாணியைக் கரைத்து ஊற்றிக்கூட தீட்டுக் கழித்துக்கொள்ளுங்கள் ஆனால் கொடுக்கிற காசில் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்துவிடுங்கள் என்ற மனப்பான்மையில் இருக்கிறவர்களை எதுவும் செய்யமுடியாது.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
ஆம்னி பஸ்களை பலான லாட்ஜ்களாக பயன்படுத்திவருவது பற்றி?
போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவ, இத்தனை தூரம் யோசித்தவர் அந்த புத்திசாலித் தனத்தை தொழில் முனைவில் பயன்படுத்தியிருந்தால் எங்கோ போயிருப்பார். மாறாக, இப்படிப் பயன்படுத்தினால் காலத்துக்கும் பாலியல் புரோக்கராகத்தான் இருப்பார்.