Advertisment

மாவலி பதில்கள்

ss

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

நல்ல எண்ணமுள்ள அனைவரும் இந்துக்களே என்கிறாரே மோகன் பகவத்?

அப்படி உலகில் குறிப்பிட்ட சமூகமோ, இனமோ ஒட்டுமொத்தமாக நல்லவர்களாகவோ, கெட்டவர் களாகவோ இருப்பதில்லை. யாராவது மௌலவி, நல்ல எண்ணம் உள்ள அனைவரும் முஸ்லிம்களே என்றால் பகவத் ஒப்புக்கொள்வாரா?

Advertisment

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

முதல்வரைச் சந்திக்கச் சென்ற திருமாவளவன் மிரட்டப்பட்டுள்ளார் என்று தமிழிசை கூறியுள்ளாரே?

Advertisment

எப்படி, மக்களவைத் தேர்தல் முடிந்து பா.ஜ. மா.த.வுக்கும், தமிழிசைக்கும் முட்டிக்கொண்டபோது, மேடையில் வைத்தே தமிழிசையை அமித்ஷா மிரட்டினாரே... அப்படியா?!

தே.அண்ணாதுரை, கம்பம்

வனவிலங்குகள் குறைந்துகொண்டே வருகிறதே?

வேறென்ன நடக்கும்! உலகமெங்கும் வனப் பகுதிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள நாடுகளால் அழிக் கப்பட்டு வேறு பயன்பாட்டுகளுக்காக எடுத்துக்கொள் ளப்படுகின்றன. மிச்சமிருக்கும் வனப்பகுதியி

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

நல்ல எண்ணமுள்ள அனைவரும் இந்துக்களே என்கிறாரே மோகன் பகவத்?

அப்படி உலகில் குறிப்பிட்ட சமூகமோ, இனமோ ஒட்டுமொத்தமாக நல்லவர்களாகவோ, கெட்டவர் களாகவோ இருப்பதில்லை. யாராவது மௌலவி, நல்ல எண்ணம் உள்ள அனைவரும் முஸ்லிம்களே என்றால் பகவத் ஒப்புக்கொள்வாரா?

Advertisment

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

முதல்வரைச் சந்திக்கச் சென்ற திருமாவளவன் மிரட்டப்பட்டுள்ளார் என்று தமிழிசை கூறியுள்ளாரே?

Advertisment

எப்படி, மக்களவைத் தேர்தல் முடிந்து பா.ஜ. மா.த.வுக்கும், தமிழிசைக்கும் முட்டிக்கொண்டபோது, மேடையில் வைத்தே தமிழிசையை அமித்ஷா மிரட்டினாரே... அப்படியா?!

தே.அண்ணாதுரை, கம்பம்

வனவிலங்குகள் குறைந்துகொண்டே வருகிறதே?

வேறென்ன நடக்கும்! உலகமெங்கும் வனப் பகுதிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள நாடுகளால் அழிக் கப்பட்டு வேறு பயன்பாட்டுகளுக்காக எடுத்துக்கொள் ளப்படுகின்றன. மிச்சமிருக்கும் வனப்பகுதியில் எஞ்சிய மிருகங்களும் தந்தம், இறைச்சி, தோல் எனப் பல்வேறு தேவைகளுக்காக வேட்டையாடப்படுகின் றன. காட்டின் விளிம்பில் குடியிருப்பை ஏற்படுத்தி மெல்ல மெல்ல விஸ்தரித்துக்கொண்டே போய், ஒரு நாள் அவை பயிரையோ, மக்களையோ சேதப்படுத் தும்போது, ஒட்டுமொத்த உலகமும் மனிதனின் வசிப் பிடத்தில் விலங்குகள் நுழைந்துவிட்டதாகத்தான் குறிப்பிடுகின்றன. விலங்கு களின் வசிப்பிடங்களை ஆக்கிரமித்து மனிதன் நுழைந்துவிட்டான் என்று குறிப்பிடுவதில்லை. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மனிதன் தன் தேவைக்காக வளர்க் கும் நாய், பூனை ஆடு, மாடு, பன்றி, முயல் போன்ற சில விலங்குகள் மட்டுமே உலகத்தில் எஞ்சும்!

குடந்தை பரிபூரணன், கும்பகோணம்

"தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பியதைவிட திருப்பதி லட்டு விவகாரம் பெரிதா?' என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளாரே!

திடீர் திடீரென தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு சீமான் அர்த்தமுள்ள கேள்விகளையும் எழுப்பிவிடுவார். கலப்படம், ஊழல் என்ற திசையில் போகவேண்டிய விவகாரத்தை இந்துத்துவ விவகாரமாகக் கொண்டுபோனதற்கான பலனை விரைவாகவோ, தாமதமாகவோ சந்திரபாபுநாயுடுவும், பவன்கல்யாணும் அனுபவிப்பார்கள்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

சனாதன தர்ம பாதுகாப்பு நல வாரியம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியது பற்றி?

vv

சனாதனம் என்பதற்கு நிலையானது, என்றும் நீடிக்கும் எனப் பொருள் சொன்னார்கள். அப்படி யெனில் வேலி போட்டு, ஆள் போட்டுக் காவல் காக்காவிட்டால் இந்தத் தர்மம் நீடிக்காது என அவர்கள் தெளிந்துவிட்டார்கள்போல!

ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்

துணைமுதல்வராக உதயநிதியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது 2026 தேர்தலில்தான் தெரியும் என்கிறாரே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா?

இருக்கட்டும், தேர்தல் அரசிய லில் தே.மு.தி.க.வின் தாக்கம் ஏதாவது எஞ்சியிருக்கிறதா என்பதும்கூட அதே தேர்தலில்தான் தெரியவரும்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை

பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப் படுவதால்தான் எல் லையில் துப்பாக் கிச்சூடு நடை பெறாமல் உள் ளது என்று கூறு கிறாரே அமித்ஷா?

நாம் அமித்ஷாவின் தோற்றத்தையும், தோரணை யையும் வைத்து அவரை சீரியஸான ஆள் என்று நினைக் கிறோம். மனிதர், நகைச்சுவைப் புலியாக இருப்பார் போலிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ராணுவ வீரர்கள், உயரதிகாரிகள் என 50 பேருக்கும் அதிக மாகப் பலியாகியுள்ளனர். பொதுமக்கள், போராளி கள், தீவிரவாதிகள் என பலியானவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் மரணக் கணக்கு இன்னும் உயரும்.

அ.யாழினிபர்வதம், சென்னை.

இலங்கை தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டி யிட்ட தலைவர்கள் எவரும் தமிழர்கள் நலன்சார்ந்த திட்டங்கள், வாக்குறுதிகள் எதுவும் வழங்காததை கவனித்தீர்களா?

தமிழர் பகுதிகளில் கணிசமாக இருக்கும் இலங் கைத் தமிழருக்கு வாக்குறுதி அளிக்கிறேன் என்று கிளம்பி, ஒட்டுமொத்த சிங்களர்களும் தம் கட்சிக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது என்று அவர்களுக்குத் தயக்கம் இருந்திருக்கும். தவிரவும், பக்கத்திலிருக்கும் இந்தியா பேருக்குத்தான். கேள்வி கேட்க ஏது மற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்னவோ! அதற்கேற்றாற்போல் தமிழக மீனவர்களை மொட்டையடித்தால்கூட, இந்திய அரசு வாயைப் பொத்திக்கொண்டு கம்மென்றுதானே இருக்கிறது. இலங்கைத் தமிழருக்காகவா வாதாட வரப் போகிறதென நினைத்திருக்கலாம்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

அறிவியல்- கணிதம்! இதில் எது முதலிடம்? எது இரண்டாவது இடம்?

அறிவியலும் கணிதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி. அதனால் முதலிடம், இரண்டாமிடம் எல்லாம் இல்லை. ஒருவேளை உங்களுக்கு அறி வியல் பிடிக்குமென்றால், அறிவியலை முதலிடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வேறெவருக்காவது கணக்குதான் ரொம்ப பிடிக்குமென்றால் அவர் கணக்கை முத லிடத்தில் வைத்துக் கொள்ளட்டும்.

nkn280924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe