மாவலி பதில்கள்

ss

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

ரஷிய அதிபர் புதினுக்கு இரண்டு மகன்கள் உண்டெனவும், அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளனர் எனவும் செய்தி வெளிவந்துள்ளதே?

புதினுக்கு இரு மகள்கள் உண்டு. மரியா வொரொன்ட்சோவா, கேடரினா டிகோனோவா. வெளியுலகுக்குத் தெரியாமல் புதினுக்கு, இவான், விளாடிமீர் என இரு மகன்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் கசிகின்றன. இவானின் தாய் முன்னாள் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா என்றும் தகவல்கள் வருகின்றன. மகன்கள் இரு வரும் ரகசிய விமானங்கள், கப்பல்களில் பயணிக் கின்றனர். பொதுமக்களின் கண்களில் படுவதே இல்லை என்றும், புதினின் மகன்கள் அவர்கள் என்பதற்கான எந்த ஆதாரப்பூர்வ ஆவணமும் இல்லையென்கின்றன தகவல்கள். இருவரும் பள்ளிக்கே சென்றதில்லையாம். மாறாக, ஆசிரியர் கள் மூலம் தனியாகப் பயி

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

ரஷிய அதிபர் புதினுக்கு இரண்டு மகன்கள் உண்டெனவும், அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளனர் எனவும் செய்தி வெளிவந்துள்ளதே?

புதினுக்கு இரு மகள்கள் உண்டு. மரியா வொரொன்ட்சோவா, கேடரினா டிகோனோவா. வெளியுலகுக்குத் தெரியாமல் புதினுக்கு, இவான், விளாடிமீர் என இரு மகன்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் கசிகின்றன. இவானின் தாய் முன்னாள் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா என்றும் தகவல்கள் வருகின்றன. மகன்கள் இரு வரும் ரகசிய விமானங்கள், கப்பல்களில் பயணிக் கின்றனர். பொதுமக்களின் கண்களில் படுவதே இல்லை என்றும், புதினின் மகன்கள் அவர்கள் என்பதற்கான எந்த ஆதாரப்பூர்வ ஆவணமும் இல்லையென்கின்றன தகவல்கள். இருவரும் பள்ளிக்கே சென்றதில்லையாம். மாறாக, ஆசிரியர் கள் மூலம் தனியாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்களாம். இத்தகைய தகவல்களை ஆமோதிக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

'கடவுள் உங்களை தண்டித்தார்' என வினேஷ்போகத் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியடைந்ததை விமர்சித்துள்ளாரே பிரிஜ்பூஷன்?

பிரிஜ்பூஷன் மல்யுத்த சம்மேளனத்துக்கு தலைவராகப் போட்டியிட முடியாமல் போனதை, அவரது பாலியல் குற்றங்களுக்காக கடவுள் தண்டித்தார் எனக் கூறமுடியுமா? இல்லை, இரு ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகளுக்காக இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி தராமல் கடவுள் தண்டித்தார் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா!

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

எதிர்பார்த்ததைவிட பாராலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளதே?

ss

இதுவரை கலந்துகொண்ட பாரா ஒலிம்பிக் போட்டிகளிலே, இந்தியாவின் செயல்திறன் சிறப்பாக வெளிப்பட்ட பாரா ஒலிம்பிக் போட்டி இதுதான். ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 6 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. மாறாக பாரா ஒலிம்பிக்கில் 29 பதக்கங்கள். தவிரவும் அவற்றில் 7 தங்கமும் அடக்கம். தமிழகத்தின் மாரியப்பன் இம்முறை வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்க வேட்டையில் சரிவு இருந்தாலும், தொடர்ச்சியாக மூன்று முறை பதக்கம் வெல்வது எளிதல்ல! மாரியப்பனுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்!

வாசுதேவன், பெங்களூரு

சில நடிகர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்களே..?

இந்தியச் சூழல் அப்படித்தான் போல! பாலிவுட்டில் இன்னும் அமிதாப்பே ரிட்டயர்ட் ஆகவில்லை. அடுத்தகட்டத்தில் ஷாருக், அமீர்கான் உள்ளிட்ட பலரும் தொடர்கிறார்கள். தமிழகத்தில் கமல், ரஜினி இன்னும் சூப்பர்ஸ்டார்களாக இருக்கிறார்கள். மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டியின் பிடி தளரவில்லை. ஆந்திராவில் பாலையா, நாகர்ஜூனா தொடர்கிறார்கள். ஹீரோயின்கள் விஷயத்தில் மட்டும் இந்திய ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

அ.யாழினிபர்வதம், சென்னை

இந்தியாவுக்குள் பல சிங்கப்பூர்களை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியது பற்றி?

மோடி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, கணக்கு வழக்கில்லாமல் புதிய இந்தியாக்களை உருவாக்கி அளித்துக் கொண்டிருந்தார். அதில் மோடிக்கே சமீபத்தில் சலிப்பு வந்து விட்டதுபோல! தற்போது இந்தியாவுக்குள் சிங்கப்பூர்களை உருவாக்கும் திட்டங்களைக் கையிலெடுத்திருக்கிறார். ஏற்கெனவே இருந்த இந்தியாவைத் திரும்பக் கொடுத்தால் பரவாயில்லை என மக்களில் பலரும் நினைக்கிறார்கள்!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

மாதந்தோறும் பணம் கொடுப் பதால் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது என்கிறாரே நிர்மலா சீதாராமன்?

வரிக்கு மேல் வரி விதிப்ப தால் மட்டும் இந்திய பொருளா தாரத்தை மேம்படுத்திவிட முடியுமா என்ன?

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநிலப் பாடத் திட்டத்தின் தரம் குறைவு என்கிறாரே கவர்னர் ரவி?

வழக்கமாக தேசிய பாடத் திட்டத்தின் உள்ளடக்கம், பாடத் திட்டங்கள் மாநில அரசின் பாடத் திட்டத்தைவிட விரிவானதுதான். ஆனால் தமிழக அரசின் கல்வித் திட்டமும் தேசிய பாடத்திட்டத் துக்கு இளைத்ததல்ல! பா.ஜ.க. அரசு வந்தபிறகு பாடத்திட்டங் களில் இந்துத்துவ அரசியலுக் கேற்ப பல்வேறு வெட்டுக்கள், இடைச்செருகல்கள், வரலாற்று முரண்கள் சேர்க்கப்படுகின்றன. மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்கவில்லையென்ற பொருமலில் சொல்லப்படும் வார்த்தைகள் அவை!

nkn140924
இதையும் படியுங்கள்
Subscribe