Advertisment

மாவலி பதில்கள் 07.09.24

ss

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

ஒரு கட்சியின் மூலதனம் என்பது தொண்டர்களோ, கட்டமைப்போ கிடையாது. பகைதான் அதற்கு மூலதனம். எதிரி இல்லையென்றால் வெற்றி கிடைக்காது என்கிறாரே கவிஞர் வைரமுத்து?

Advertisment

vv

கவிஞர் சொல்வதிலும் பொருள் இருக்கிறது. பகைவர்கள் இல்லாதபோது ஆபத்து அகன்றுவிடுகிறது. ஆபத்தில்லாத நேரத்தில், தலைமையின் குரலுக்கு எவரும் கட்டுப்படமாட்டார்கள். அதனால் எந்தக் கட்சி, நிரந்தரமான, தீவிரமான பகையை உருவாக்கி அளிக்கிறதோ அந்தக் கட்சி தொடர் வெற்றியைப் பெறும். வெறும் 14 சதவிகித முஸ்லிம்களால், 78 சத இந்துக்களுக்கு ஆபத்து என்று நம்பகமாகவும், தொடர்ந்தும் பிரச்சாரம் செய்ததால்தான் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க. என்றைக்கு அதன் பிரச்சாரத்தின் அர்த்தமின்மையை காங்கிரஸால் மக்களுக்கு உணர்த்தமுடிகிறதோ, மதத்துவேஷமே இந்தியர்களின் முன்னேற்றத்துக்குப

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

ஒரு கட்சியின் மூலதனம் என்பது தொண்டர்களோ, கட்டமைப்போ கிடையாது. பகைதான் அதற்கு மூலதனம். எதிரி இல்லையென்றால் வெற்றி கிடைக்காது என்கிறாரே கவிஞர் வைரமுத்து?

Advertisment

vv

கவிஞர் சொல்வதிலும் பொருள் இருக்கிறது. பகைவர்கள் இல்லாதபோது ஆபத்து அகன்றுவிடுகிறது. ஆபத்தில்லாத நேரத்தில், தலைமையின் குரலுக்கு எவரும் கட்டுப்படமாட்டார்கள். அதனால் எந்தக் கட்சி, நிரந்தரமான, தீவிரமான பகையை உருவாக்கி அளிக்கிறதோ அந்தக் கட்சி தொடர் வெற்றியைப் பெறும். வெறும் 14 சதவிகித முஸ்லிம்களால், 78 சத இந்துக்களுக்கு ஆபத்து என்று நம்பகமாகவும், தொடர்ந்தும் பிரச்சாரம் செய்ததால்தான் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க. என்றைக்கு அதன் பிரச்சாரத்தின் அர்த்தமின்மையை காங்கிரஸால் மக்களுக்கு உணர்த்தமுடிகிறதோ, மதத்துவேஷமே இந்தியர்களின் முன்னேற்றத்துக்குப் பகை என்பதை ஒட்டுமொத்த மக்களிடமும் காங்கிரஸ் எடுத்துச்செல்லமுடிகிறதோ அன்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமரமுடியும்.

வண்ணை கணேசன், கொளத்தூர்.

திருப்பதியில் லட்டு பிர சாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்று அதிரடியாக அறிவிக்கப் பட்டிருக்கிறதே?

Advertisment

தேவையில்லாத ஆணி. திருப்பதி லட்டை யாரும் வாங்கிக்கொண்டு வெளியில் விற்பனை செய்யப்போவதில்லை. கூட ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டுபோய் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பார்கள். முன்பாவது லட்டு உற்பத்தியில் மனிதர்கள் மட்டும் இருந்தார்கள். தேவையை நிறைவுசெய்ய முடியவில்லை. இப்போதெல்லாம் எந்திரங்கள் வந்துவிட்டன. தேவைக்கேற்ப உற்பத்தி செய்து, காசை வாங்கி கல்லாவில் போடுவதை விட்டுவிட்டு, ஆதார் அது இதுவென உதார் விடத் தேவையில்லை.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும்போது தவறிவிழுந்து இறந்தால் இழப்பீடு கோரமுடி யாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே?

இதில் இரண்டு கோணம் இருக்கிறது. ஒன்று, பஸ்ஸில் அத்தனை இடமிருக்க படிக்கட் டில் பயணம் செய்வது தேவை யற்ற அலட்சியம்தானே. அத னால் விபத்தைச் சந்தித்து இறந்தால் இழப்பீடு கிடையாது என்பதன் மூலம் படிக்கட்டு பய ணத்தைத் தவிர்க்க அறிவுறுத்து வது. இரண்டாவதாக, காலை யிலும் மாலையிலும் அலுவலக நேரத்தில் பல சமயங்களில் போதுமான பேருந்துகள் வருவதே கிடையாது. படிக்கட் டில் பயணம் செய்யமாட்டேன் என்றிருந்தால் பலரும் சரியான நேரம் வேலைக்கும் வரமுடியாது. பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்பமுடியும். வழக்கமாக படிக்கட்டில் பயணம் செய்பவர் கள் இந்தத் தீர்ப்பு குறித்து யோசிக்கவேண்டும். தவிர்க்க இயலாமல் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்காக, அரசு கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து யோசிக்கவேண்டும்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

பாலியல் சர்ச்சைகளில் சிக்கி மலையாளத் திரையுலகம் திணறிவருவது குறித்து?

ஒரு காலகட்டத்தில் மலை யாள ஸ்டார் நட்சத்திரங்கள் பாலியல் படங்களின் வசூலால், தங்கள் படத்துக்கு வசூலில்லாமல் போவதுகுறித்து திணறிவந்தார் கள். அவர்களது படத்துக்குத் தடைபோட்டார்கள். ஷகிலா போன்ற நடிகைகளை அடித்து விரட்டாத குறைதான். தற்போது பாலியல் சர்ச்சைகளில் சிக்கித் திணறுகிறார்கள். குழம்பிய குட்டைதான் தெளியும். இந்த சர்ச்சையால் மாறுதல் வந்தால் நல்லதுதான்!

வ.நடராஜன், கூடுவாஞ்சேரி

அரசு அலுவலகங்களில் லஞ் சம் வாங்கி எத்தனை பேர் அகப் பட்டாலும், மற்றவர் திருந்து வதாகத் தெரியவில்லையே?

தினசரிகளில் படிப்பதால், தொலைக்காட்சிகளில் பார்ப்ப தால் நிறைய பேர் அகப்படுவது போல் நமக்குத் தெரிகிறது. உண்மையில் லஞ்சம் வாங்குவது 100 பேர் என்றால் சிக்குவது 1 சத விகிதம் பேர்கூட இருக்கமாட் டார்கள். அவர்களும்கூட சில மாத சஸ்பெண்ட், ஒரு சம்பள உயர்வு நிறுத்தம் என்று தப்பித்து விடுவார்கள். தவிரவும், லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக் குப் பயந்து பல அதிகாரிகளும் தங்களுக்கு கீழ்மட்ட ஊழியர் களை லஞ்சத்தை வாங்கச் சொல்லி தப்பித்துவிடுகிறார் கள். லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறையே லஞ்சப் புகாரில் சிக்குவதால் மக்களும் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். லஞ்சம் கேட்பவர்கள் தைரிய மாகிவிடுகிறார்கள்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

நான்கு புதிய மந்திரங் களை மக்கள் சேவையின்போது அமைச்சரவை சகாக்கள் தவறா மல் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளாரே மோடி?

அறிவுரையெல்லாம் நன்றா கத்தான் இருக்கிறது. ஏனோ, இப்போது பாரதியின் நடிப்புச் சுதேசிகள் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி

!

nkn070924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe