Advertisment

மாவலி பதில்கள்

ss

எச்.மோகன், மன்னார்குடி

ஒருவர் அறிவாளியா... முட்டாளா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

அவருடன் பழகித்தான். கணிசமான காலம் பழகியும் ஒருவர் முட்டாளா, அறிவாளியா என ஒருவரால் தீர்மானிக்க முடியவில்லை எனில், தீர்மானிக்க முடியாதவர் முட்டாளாக இருக்கவேண்டும்.

Advertisment

cc

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

எல்லாமே கடவுள் செயல் என்று கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிடுகிறார்களே?

அது தட்டிக் கழிக்கும் செயல்தான். எல்லாம் அவன் செயல் என்று இருப்பதற்கு அசாதாரண மன வலிமையும் புரிதலும் வேண்டும். நடப்பது எதையும் மறுதலிக்காத மனப்பாங்கு வேண்டும். நாலைந்து நாள் பட்டினி இருக்கநேர்ந்தாலும், இன்றைக்கு அவன் கொடுத்தது பட்டினி மட்டும்தான் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். மாறாக, ஒரு செயலைச் செய்வதற்கான உழைப்பும் பொறும

எச்.மோகன், மன்னார்குடி

ஒருவர் அறிவாளியா... முட்டாளா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

அவருடன் பழகித்தான். கணிசமான காலம் பழகியும் ஒருவர் முட்டாளா, அறிவாளியா என ஒருவரால் தீர்மானிக்க முடியவில்லை எனில், தீர்மானிக்க முடியாதவர் முட்டாளாக இருக்கவேண்டும்.

Advertisment

cc

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

எல்லாமே கடவுள் செயல் என்று கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிடுகிறார்களே?

அது தட்டிக் கழிக்கும் செயல்தான். எல்லாம் அவன் செயல் என்று இருப்பதற்கு அசாதாரண மன வலிமையும் புரிதலும் வேண்டும். நடப்பது எதையும் மறுதலிக்காத மனப்பாங்கு வேண்டும். நாலைந்து நாள் பட்டினி இருக்கநேர்ந்தாலும், இன்றைக்கு அவன் கொடுத்தது பட்டினி மட்டும்தான் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். மாறாக, ஒரு செயலைச் செய்வதற்கான உழைப்பும் பொறுமையும் இல்லாத பலரும், தனக்கு அந்தச் செயலை செய்துமுடிக்கும் அறிவும் தெளிவும் இல்லையென்பதை ஒப்புக்கொள்வதற்குப் பதில் கடவுள் செயல் என்று பொறுப்பை ஷிப்ட் செய்வதற்கு கடவுளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

Advertisment

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

நானும் அமைச்சராக இருந்தவன்... இப்போது தகுதியில்லாத அமைச்சர்களை தமிழகம் பெற்றுள்ளது என்கிறாரே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

முன்னாள் அமைச்சர் அப்படியென்ன தகுதிகளைப் பெற்றிருந்தார், இப்போதிருக்கும் அமைச்சர்களிடம் அப்படியென்ன தகுதிகள் இல்லாமல் போய்விட்டது என்பதையும் அவர் விளக்கியிருக்கவேண்டியதுதானே. ஜெ.வின் கார் டயரே கூசும்படி குனிந்து வணங்குகிற தகுதியைச் சொல்கிறாரா, சிபாரிசுக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் என்றொரு புகார் எழுந்ததே, அந்தத் தகுதியைக் கூறுகிறாரா?

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஆணவக் கொலை வன்முறை அல்ல என்ற ரஞ்சித் கூறியிருப் பது வேதனையளிக்கிறது என்கிறாரே திருமாவளவன்...?

வேதனைப்படுவதை விட்டுவிட்டு இத்தகைய ஆணவக் கொலை வழக்குகளில் விரைவான நடவடிக்கைகள் எடுப்பதை உறுதிசெய்வதற் கும், தேவைப்பட்டால் தனிச் சட்டம் இயற்றவும் வேண்டிய வழிகளைப் பார்க்கலாம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். ஆணவக் கொலைகளில் ஈடுபட்டோரை சட்டமும் அரசும் எளிதில் விடாது என்று உறுதியானாலே, சம்பந்தப்பட்டவர்கள் தவறான நட வடிக்கைகளில் ஈடுபடத் துணியமாட்டார்கள். மனுவே சரணம் கச்சாமி என்பவர்களுடைய சமூகங்களும், மனு தளையில் நூற் றாண்டு காலமாய் கிடந்து இப்போதுதான் விடு தலையாகி வந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார்கள்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

நிதி திரட்ட வங்கிகள் புதுமையான வைப்புத் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என நிர்மலா கூறியிருக்கிறாரே?

அதற்கெல்லாம் முன்பாக, மக்களிடம் பணம் மிஞ்சுவதற்கு வழியில்லாமல் வரி விதிப்பதை நிறுத்தவேண்டும் என நிதியமைச்சரிடம் யாராவது விளக்கவேண்டும். அதேபோல வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைக்காமல் போனால், கடன் தொகையைக் கட்டத் தாமதமானால் அபராதம் மேல் அபராதம் விதிப்பதில் தளர்வுசெய்யவேண்டும். மூன்றாவதும் முக்கியமாகவும், வங்கியில் சேமிக்கும் பணத்துக்கான வட்டி சதவிகிதம், பணவீக்கத்தை ஈடுகட்டும் அளவுக் காகவாது புஷ்டியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் சோபிக்காமல் போனதற்கு காரணம் அரசியல் தலையீடுதானே..?

எந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நூற்றுக் கணக்கான பதக்கங்களை அள்ளிவந்தி ருக்கிறது? விரல்விட்டு எண்ணும் சில விளையாட்டுகளைத் தவிர இந்தியாவில் பிற விளையாட்டுகள் மீது ஆர்வம்காட்டப்படவில்லை. அதை மாற்றவும் அரசுகள் முயற்சி யெடுத்ததில்லை.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

இந்தியாவின் மொத்த ஜி.டி.பி.யில் அம்பானி குடும்பத்தின் சொத்து மட்டும் 10 சதவிகிதமாமே..?

அம்பானி போன்ற பெருந்தெய்வங்கள், அதற்கும் கீழேயிருக்கும் சிறு தெய்வங்கள், இந்தியாவின் மொத்த சொத்தில் 41 சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள, மிச்சமுள்ள 59 சதவிகிதம் சொத்து 138 கோடி இந்திய பொதுமக்களிடம் இருப்பதே அவர்களது கண்ணை உறுத்திக்கொண்டிருக்கும். சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து, மிஸ்டர் பொது ஜனத்துக்கு புதிதாக அவர்கள் வரி விதிப்பதற்கான ஆலோசனை சொல்லாமலிருந்தாலே புண்ணியம்தான்.

nkn170824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe